தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

கவிஞர் இரா  இரவி - நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sat Apr 01, 2023 3:33 pm

நாளும் ஒரு நற்சிந்தனை
நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானதி பதிப்பகம், 23. தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை-600 017.  பக்கங்கள் : 280 ; விலை : ரூ.300.
*****
நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். வழக்கறிஞராகத் தொடங்கி உச்சநீதிமன்ற நீதியரசர் வரை உயர்ந்தவர். நேர்மையானவர். காந்தியத்தை கடைபிடித்து காந்திய வழி நடப்பவர். ஒரு தீர்ப்பில் காந்தி அருங்காட்சியகம் சென்று சத்திய சோதனை நூல் படிக்க வலியுறுத்தியவர்.  மதுரை காலேஜ் ஹவுசில் நடந்த உலகத் திருக்குறள் பேரவையில் சிறப்புரையாற்றியவர். தெளிந்த நீரோடை போன்று உரை நிகழ்த்துபவர். மிகச்சிறந்த ஆளுமையாளர் எழுதி உள்ள வாழ்வியல் உணர்த்தும் அறநெறி போதிக்கும் அற்புத நூல் இது.
வானதி பதிப்பகம், பதிப்புச் செம்மல், மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் சிறப்பான பதிப்புரை வழங்கி உள்ளார். உச்சநீதிமன்ற நீதியரசராக இருக்கும் வெ.இராமசுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. உள்ளது உள்ளபடியே எழுதி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் வழக்கறிஞராக இருந்த போதிலிருந்து நீதிமன்றம் செல்வதற்கு நீதியரசர் இராம சுப்பிரமணியன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றதை மறக்காமல் எடுத்து இயம்பி நன்றியுடன் அணிந்துரை வழங்கி உள்ளார்.
நூலில் உள்ள எல்லாக் கருத்துக்களும் சிறந்தவை தான். கடைபிடித்தால் வாழ்க்கையில் சிறக்கலாம். உயரலாம். வாழ்வாங்கு வாழலாம். வாழ்க்கைக்குப் பயன்தரும் கருத்துக்களின் பொன்மொழிகளின் சுரங்கமாக உள்ளது. புகழ்பெற்ற அறிஞர்கள் சொன்னது, பேசியது, நூலாசிரியர் நீதியரசர் மேடையில் பேசியது என அனைத்தையும் தொகுத்து சிக்கனமான வரிகளுடன் தத்துவ விருந்தாக, துன்பம் நீக்கும் மருந்தாக, தன்னம்பிக்கை விதைக்கும் விதையாக வழங்கி உள்ளார்.
பதச்சோறாக நூலிலிருந்து சில வைர வரிகள் மட்டும் இங்கே மேற்கோள்களாக எழுதி உள்ளேன். படித்துப் பாருங்கள். நூலினை வாங்கி முழுமையாகப் படித்துப் பயன் பெறுங்கள்.
நம்மை விரும்புவோருக்காக வாழ வேண்டும்!
      நம்மை வெறுப்போருக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்!

என்ன வாழ்க்கை என்று விரக்தி அடையாமல் நம்மை விரும்புபவர்களுக்காக வாழ வேண்டும். நம்மை வெறுத்தவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உந்துசக்தி தரும் ஊட்டக்கருத்துக்களை நூல் முழுவதும் வழங்கி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்கள் ‘ஆயிரம் ஹைக்கூ’ என்று நூலிற்கு நீண்ட நெடிய மதிபுப்ரை வழங்கி என்னை மகிழ்வித்தார்கள்.  பரபரப்பான நீதியரசராக இருந்த போதும் நேரம் ஒதுக்கி மதிப்புரை அனுப்பி வைத்தார். பண்பாளர், நெறியாளர். எளிமையானவர், இனிமையானவர், இப்படி எழுதிக் கொண்டே செல்லலாம். மிகச்சிறந்த மாமனிதர் நூலாசிரியர்.
ஆரோக்கியத்திற்கு வழிகள் ஏழு!
1.[size=9]   எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது.[/size]
2.[size=9]   எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது.[/size]
3.[size=9]   எப்போதும் திருப்தியாக இருப்பது.[/size]
4.[size=9]   எப்போதும் புன்னகையோடு இருப்பது.[/size]
5.[size=9]   எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது.[/size]
6.[size=9]   எப்போதும் பணியில் ஈடுபடுவது[/size]
7.[size=9]   எப்போதும் பணிவாக இருப்பது.[/size]
இந்த ஏழு வழிகளை வாழ்க்கையில் கடைபிடித்தால் நோய் வராது, நலமான வாழ்க்கை வசமாகும். கவலை, சோகம் மறந்து புன்னகையுடன் மனமகிழ்ச்சியுடன் தொடர்ந்து செயல்பட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும் என்பதை கவிதை நடையில் தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் ரத்தினச் சுருக்கமாக உணர்த்தி உள்ளார்.
அறுபது சொல்வது அனுபவ நிஜம் - அதை
இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்

மூத்தோர் சொல் அமுதம் என்பதை அழகாக எழுதி உள்ளார். அனுபவம் மிக்கவர்களான அப்பா, தாத்தா சொல்வதை மகன், பேரன் என்ற இளைய தலைமுறையினர் கேட்டு நடந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை நன்கு உணர்த்தும் நற்கருத்து.
மரத்தின் பெருமை அதன் உயரத்தில் இல்லை
      அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது
      மலர்களின் பெருமை அதன் நிறத்தில் இல்லை
      அதன் மணத்தைப் பொறுத்தது
      மனிதனின் பெருமை அவனது பதவியைப் பொறுத்ததில்லை,
      அவன் செய்கிற தொண்டைப் பொறுத்தது!

பெரிய பதவியில் இருப்பது பெருமை அல்ல, அப்பதவியின் மூலம் எவ்வளவு தொண்டை செய்தோம் என்பதே முக்கியம் என்பதை பல உவமைகளுடன் எடுத்து இயம்பியது சிறப்பு.
இயலாமல் தோற்பது வேறு
      முயலாமல் தோற்பது வேறு
      இயலாமல் தோற்பது இழுக்கு
      முயலாமல் தோற்பது பேரிழுக்கு

முயற்சி திருவினையாக்கும் என்பதையும் முயலாமல் இருப்பது முட்டாள்தனம், இழுக்கு என்பதையும் குறைந்த சொற்களின் மூலம் நிறைந்த கருத்துக்களை வலியுறுத்தியது நன்று.
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது
      தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது

எதையும் முயல வேண்டும், முயன்று தோற்றால் வருந்தாதே, அனுபவமாக எடுத்துக்கொள். அடுத்த முறை வெற்றி காண்பதற்கான பயற்சியாக அனுபவமாக எடுத்துக்கொள் என்று ஆறுதலான வார்த்தைகளின் மூலம் தோல்வியால் துவண்ட நெஞ்சத்திற்கு மருந்து தடவுகிறார்.
அடிபடாத தங்கம் ஆபரணம் ஆவதில்லை
      துளை இடாத மூங்கில் புல்லாங்குழல் ஆவதில்லை
      உளி படாத கல் சிலை ஆவதில்லை
      சவால்கள் இல்லாத வாழ்க்கை சரித்திரம் ஆவதில்லை!

போராட்டம் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் போராடி வெல்ல வேண்டும். தோல்விக்கு துவளக் கூடாது. சவால்கள் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வென்று காட்டுவதே வாழ்க்கை என வலியுறுத்தியது சிறப்பு.
மலர்ந்த முகம் நந்தவனம்!
      மலர்ச்சி இல்லாத முகம் ஒரு மயானம்!

முகத்தை மலர்ச்சியாக புன்னகை ஏந்தியபடி இன்புற்று இருப்பது சிறப்பு. உம்மென்றும், உர் என்றும் சோம்பி இருப்பது நன்றன்று என்பதை மிக நுட்பமாக எழுதி உள்ளார். நந்தவனம் மயானம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஒரு நல்ல பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
      அருவியின் ஓசை! ஆற்றின் ஓட்டம்!
      அலைகடலின் தாளம்!

இவை மூன்றும் கலந்ததாக இருக்க வேண்டும்
நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்களின் உரையும் மேற்கண்டவாறு தான் இருக்கும். பேச்சாற்றலால் சிகரம் தொட்டவர், எழுத்தாற்றலாலும் சிகரம் தொட்டுள்ளார். படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் கவலை, விரக்தி வரும்போதெல்லாம் மறுவாசிப்பு செய்து மனதை செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் சிறந்த நூல் இது. படிக்க, பாதுகாக்க பயன்படும் பண்பு வளர்க்கும் பண்பாளர் நூல். பாராட்டுகள், வாழ்த்துகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி.
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum