தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

3 posters

Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:00 pm

ஜலாலுதீன் முகமது அக்பர் (Jalaluddin Muhammad Akbar, உருது:جلال الدین محمد اکبر, Jalāl ud-Dīn Moḥammad Akbar), அல்லது பேரரசர் அக்பர் (Akbar-e-Azam) (அக்டோபர் 15, 1542 – அக்டோபர் 12, 1605) என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் . இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன. பேரரசர் வலிமையான ராஜ்புத் இனத்தாருடன், அவர்களின் இனத்தை சேர்ந்த ராஜ்புத்தின் குழுவான இளவரசிகளை மணந்து , நட்பை பலப்படுத்தினார்.


அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன் பலரும் புகழும் கட்டங்களை கட்டுவித்தார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் .அக்பர் மத சம்பந்தமான வாதங்களை முஸ்லிம் அறிஞர்களுக்கும் மற்றும் மதத்தினருக்கும் சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் , இடையே நடத்தினார் . கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் இருந்து வந்த யேசுசபைக் கிறித்தவ மதத்தினருடனும், முஸ்லிம் மத அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:02 pm

அக்பர் எனும் பெயர்

பிறந்த போது அக்பர் பதுருதின் மொகம்மத் அக்பர் என அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் பௌர்ணமி நாள் அன்று இரவில் பிறந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார். பத்ரு (முழு நிலவு என்று பொருள்) ஹுமாயுன் காபூலைத் தனது வசம் கொண்டு வந்த பிறகு அக்பரின் பிறந்த தேதியும், பிறந்த போது வைக்கப்பட்ட பெயரும் மாற்றி வைக்கப்பட்டது. பெயரானது தீய சக்திகளை துரத்தி அடிக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டது. அக்பர் என்றால் "மிகப் பெரிய" என்று பொருள். உண்மையில் அக்பர் என்ற பெயர், அவருடைய தாய் வழித் தாத்தாவான சாகித் அலி அக்பர் ஜமி என்பவருடைய பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:04 pm

இளமை காலம்

மாமன்னர் அக்பர் அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் உமாயூன் மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.


உமாயூன் பாஸ்துன் (ஆப்கன்) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். உமாயூனும் மனைவியும் பாரசீகத்துக்குச் சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது. இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் கலைகள், கட்டடக்கலை, இசை, இலக்கியம், காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.


இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முகலாயப் பேரரசை மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார். அக்பர் ஷாஹன்ஷா (பாரசீக மொழியில் இதற்கு "அரசருக்கு அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார். அக்பர் காலத்தில் கட்டப்பட்ட மசூதியையும் , அவர் இறை வணக்கம் செய்த இடத்தையும் இன்றளவும் காண முடியும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by வ.வனிதா Tue Jan 11, 2011 12:30 pm

உண்மையில் சாதனை படைத்த வீரர் அக்பர். பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு திகழ்ந்து நமக்கெல்லாம் முன்னோடியாய் இருக்கிறார்! பகிர்வுக்கு நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by கவிக்காதலன் Tue Jan 11, 2011 11:38 pm

அக்பர் பற்றி தெர்ந்துகொள்ள முடிந்தது.. நன்றி...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 12, 2011 8:53 am

நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum