தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சென்றவன் எங்கே? உயிர் வாடுது இங்கே - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
3 posters
Page 1 of 1
சென்றவன் எங்கே? உயிர் வாடுது இங்கே - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
வள்ளி - அவள் பெயர்!
வளவன் - அவன் பெயர்!
ஒருவரை ஒருவர் கணடனர்; காதலித்தனர்; ஊரார் கண்ணில் படாமல் பகல் பொழுதுகளில் சந்தித்துப் பரவசம் அடைந்தனர். ஊரார் கண் உறங்கும் பொழுதுகளில் இணைந்து இன்பம் துய்த்தனர்.
காலம் கடந்தது. வளவனுக்குச் சிந்தனை ஒன்று பிறந்தது. காதல் வாழ்க்கையை - களவு வாழ்க்கை எத்தனை நாளுக்குத்தான் இப்படியே நடத்துவது? காதலித்துக் களிப்பூட்டும் கன்னி வள்ளியை ஊரார் அறியக் கைப்பிடித்து, மணம் முடித்து வாழ வேண்டும் என்று துடித்தான்.
ஆனால்..............? தடை! தடை!
என்ன தடை?
பெற்றோரா? இல்லை!
மற்றோரா? இல்லை!
பின் என்ன தடை?
பொருள்! பொருள்!
ஆம்!
இனிமையுடன் இல்லறத்தை நடத்த வேண்டுமானால் இன்றியமையாதது பொருள் அல்லவா!
எனவே, ஒரு முடிவுக்கு வந்தான். தலைவி வள்ளியைச் சந்தித்தான். அழகு ஒழுகும் அவள் முகத்தை அள்ளி அள்ளிப் பருகினான் கண்களாலே.
“ஏன் அத்தான் இந்தப் புதுமை? என்றைக்கும் இல்லாததாய் இன்றைக்கு ஒரு மாதிரியாய்ப் பார்க்கிறீர்கள்? ஏன் ஒரு மாதிரியாகத் துடிதுடிக்கிறீர்கள்? எதற்காக நெஞ்சம் படபடக்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றாள் வள்ளி.
“வள்ளி! அள்ளி உன்னை அணைத்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால்........... அதற்கு முடியாது போலிருக்கிறது...........!” என்று சொல்லி முடிப்பதற்குள்
“ஆ............! அத்தான்! என்ன சொல்கிறீர்கள்?”
“பதறாதே நிரந்தரமாய் அல்ல! தற்காலிகமாய்! சிறிது காலத்திற்கு நாம் பிரிந்திருக்க வேண்டும்!”
“என்ன அத்தான் கூறுகிறீர்கள்? எப்படி என்னால் பிரிந்திருக்க முடியும்?”
“நல்லதொரு வாழ்வை நாம் அடைய வேண்டுமதனால் இன்னல் சிறிது ஏற்கத்தானே வேண்டும்!”
“ஏன் அத்தான் இப்படிக் கலங்க வைக்கிறீர்கள்? நடக்கப் போவதைத் தான் நன்கு விளக்கமாகக் கூறுங்களேன்!”
“ஆம் வள்ளி! நம் காதல் ஈடேற வேண்டுமானால் நம் திருமணம் நடந்தேற வேண்டுமானால் பொருள் வேண்டும். நம் இன வழக்கப்படி போருள் திரட்டி, அதைக் கொண்டே மணம் முடிக்க வேண்டும். அப்பொருளைத் திரட்டவே அன்பே உன்னைப் பிரிந்து அயலூர் செல்ல முடிவு செய்துள்ளேன்” என்றான்.
அரைகுறை மனதுடன் அவளும் ஒப்புக் கொண்டாள். வளவன் புறப்பட்டுச் சென்றான்.
-----------------
காலம் கடந்தது!
அவன் திரும்பி வருவதாகக் குறித்துக் கூறிய காலமும் வந்தது. அவள், தினந்தோறும் தெருவையே நோக்கியவளாய் இருந்தாள். கணப் பொழுதும் வாசலிலேயே கண் வைத்தவளாய் இருந்தாள்.
குறித்த காலமும் கடந்து விட்டது!
அவளோ, உறங்குவது இல்லை; உண்பது இல்லை; ஒரு பொழுதும் தன்னை ஒப்பனை செய்து கொள்ளவும் இல்லை.
இதனால், உடல் மெலிந்தாள்; உள்ளம் நலிந்தாள்; கலை இழந்த கோவில் போல் காட்சி தந்தாள்.
அவளது கோலம் கண்ட தோழி,
“ஐய்யோ! இவளை நான் எப்படித் தேற்றுவேன்? அவனுடைய சிறு பிரிவையும் தாங்க மாட்டாளே! அவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறாளே! இவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவேன்?” என்று செய்வது அறியாமல் அங்கலாய்த்தவளாய் வள்ளி அருகே போய் நின்றாள்.
அன்புத் தோழி அருகே வந்து நிற்பதை அறிந்த வள்ளி, அவளிடம் எதுவும் பேச விரும்பவில்லை. தன் துயர் கண்டும் தோழி வாளாவிருக்கிறாளே என்ற சினம் அவளுக்கு. எனவே அவளிடம் நேரடியாகப் பேசாது, ஊராரைப் பழிப்பதுபோல் தனக்குத்தானே பேசித் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறாள் - மறைமுகமாகத் தோழியைச் சாடுகிறாள்.
ஐயோ! வாடைக்காற்று வீசுகிறதே! வலிமையாக வீசுகிறதே! சுழன்று சுழன்று வீசுகிறதே! உடல் எல்லாம் நடுங்கும்படி மிக மிக வருத்துகிறதே! இந்த வாடைக் காற்று எப்படிப்பட்டது? சேர்ந்திருப்போர்க்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடியது - மனந்திருப்போர்க்குத் துன்பத்தைத் தரக்கூடியது.
இப்படிப்பட்ட துன்பகரமான நேரத்தில் என்னைப் பற்றி நினைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைப் பற்றி யாருக்கு என்ன கவலை?
ஊரே இனிமையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் மட்டும் துயிலாமல் துவண்டு கொண்டிருக்கிறேன். யார்க்கு இது புரியும்.
என் துன்பத்தை ஆற்றிக் கொள்ளும் வழி அறியாமல் தவிக்கிறேன். என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை. ஆறுதல் சொல்லி அவலம் போக்குவார் யாரும் இல்லை. நான் மட்டும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் என்ன செய்வேன்? எந்நிலையை யாரிடம் போய்ச் சொல்வேன்? அதைக் கேட்பதற்குத்தான் யார் இருக்கிறார்கள்? யாரும் இல்லையே! அதற்காக நான் எதன் மீதிலாவது தலையை முட்டிக் கொள்ளவா?
என் நிலைக் கண்டு, இரக்கம் கொண்டு ஆறுதலும் தேறுதலும் கூறத் துணையாய் இருக்க யாருமே இல்லையே! அதற்காக நான் பிறரைத் தாக்கவா?
அல்லது என் நிலைக்காக நானே வருந்தி ஓவென்று ஓலமிட்டு அலறவா?
என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறேன், புரியாமல் துடிக்கிறேனே!” என்று தனக்குத்தானே புலம்புகிறாள்.
தலைவியின் கூற்றிலிருந்து, உளவியல் முறைப்படி ஆராய்ந்தால், சினமுற்றோர் மேற்கொள்ளக்கூடிய மூன்று வேறுபட்ட நிலைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவை:
1) முட்டுதல் - கையறு நிலை
2) தாக்குதல் - சினத்தின் வெளிப்பாடு
3) கூவுதல் - பிறர் கவனத்தை ஈர்த்தல்
“என் தலைவிதி இது என்று என்னையே நொந்துகொண்டு எதிலேனும் முட்டிக் கொள்வேனோ?
என் நிலை கண்டும், இரக்கிம் கொள்ளாமல் வாளாவிருப்போரைத் தாக்கிச் செயற்பட வைப்பேனா? அழுது கூவி என் துயர் அவர் நெஞ்சில் தைக்குமாறு - பதியுமாறு குறிப்பாக உணர்த்துவேனா?”
என்ற தலைவியின் உரையிலிருந்து மேற்குறிக்கப்பட்ட மூன்று நிலைகளையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்
ஓரென் யானுமோர் வற்றி மேலிட்டு
அது ஒல்லெனக் கூவுவேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோயறியாது துஞ்சம் ஊர்க்கே
குறுந்தொகை 28
எழுத்து : டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 558286.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்றவன் எங்கே? உயிர் வாடுது இங்கே - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
இலக்கிய நயமுள்ள அழகிய கட்டுரைத்தொகுப்பு மிக்க நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சென்றவன் எங்கே? உயிர் வாடுது இங்கே - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
குறுந்தொகை விளக்க நல்ல சிறுகதை வாசித்தேன்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கார்கால நினைவுகள் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» பொங்கல் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» அதுவரை பொறுத்திரு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» தொடர்கின்ற பயணம்! - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum