தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நடப்பது நன்மைக்கே
3 posters
Page 1 of 1
நடப்பது நன்மைக்கே
அண்மைக்காலமாகநகர்ப்புற மக்களிடம் மட்டுமன்றி கிராமப்புற மக்களிடம்கூட ஒரு பழக்கம் பரவத் தொடங்கியிருக்கிறது.
அது, "வாக்கிங்" எனப்படும் நடைப்பயிற்சிப்பழக்கம் பழக்கம்.
நம் முன்னோர்கள்நாள் முழுதும் பல்வேறு வேலைகளையும் அவர்கள் கையாலேயே நடத்தினர்.
இதில், ஆண்கள், பெண்கள் என்ற விதிவிலக்கிருந்ததில்லை.
பெண்கள் கோலம்போடுதல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், துணிதுவைத்தல், கால்நடைகளைப் பராமரித்தல், சமைத்தல் என இயந்திரங்களின் உதவியின்றியே அனைத்துப் பணிகளையும் செய்தனர்.
விவசாயம்உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட ஆண்களும் முடிந்தவரை பணிகளுக்காகஇயந்திரங்களைச் சார்ந்திருக்கவில்லை.
ஆனால், நடப்புலகிலோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
பெரும்பான்மையானமக்களிடம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரில் நூறு சதவிகிதம் பேருக்கும் உடல்உழைப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் அலுவலகநேரம்போக மீதிப் பொழுதுகளையும் அமர்ந்தபடியேதான் கழிக்க வேண்டிய நிலைக்குஉள்ளாகியுள்ளனர். சும்மாயிருக்கும் பொழுதுகளே அதிகமாகிவிட்டதால் உடலில் பல்வேறுநோய்களின் ஆட்சிதான் நடக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளுடன் இப்படி காலார நடப்பதும்
அவசியமாகிறது.
ஆனால், அதையும்கூடப் பொருள்படுத்தாமல் சிலர், "நடப்பதுநடக்கட்டும். நடப்பது நம்ம கையிலா இருக்கு?" எனக் கூறுவதைக்கேட்கலாம்.
வாய்வுப்பிடியில் சிக்கியவர்களுக்கு குனிதலோ, நிமிர்தலோஇயலாது.
அதேபோலத்தான்வ(அ)சதியின் பிடியில் சிக்கியோரும். அவர்களால் குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க இயலாமல் போகிறது. எதற்கெடுத்தாலும் பிறரைச் சார்ந்தேஅவர்களின் பணி நடக்கிறது. இயற்கையான விஷயங்களைக் கைவிட்டு செயற்கைக்குமாறுவதால்தான் நிலைமை "அன்ன நடை கற்கப்போய் தன் நடையும்
இழந்தாற்போல்"ஆகிவிடுகிறது.
நடப்பது மிகவும்நல்ல பயிற்சிதான்.
அதிகாலை மற்றும்அந்திப் பொழுதுகளில் நடப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பல நன்மைகள் நடக்கின்றன.ஆயினும் அந்தியைவிட அதிகாலைப் பொழுதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
பல்வேறுதொலைக்காட்சிகளின் நேரலைகளிலும் வரும் மருத்துவர்கள்முதல் நூற்றுக்கணக்கில் பீஸ்கொடுப்பதற்காக மணிக்கணக்கில் நாம் காத்துக் கிடந்து பார்க்கும் உள்ளூர்மருத்துவர்கள்வரை, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்களால்பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கும் முதல்அறிவுரை காலார நடக்க வேண்டும் என்பதுதான்.
குறைந்த உழைப்பு, பெருங்குடலும் சிறுகுடலும் திணறத்திணற மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கசாப்பாடு, இடையிடையே காபி, டீ, இத்யாதி பானங்கள், நொறுக்குத்தீனிகள் என சில காலம்வரை பொழுதுகள்சுகமாய் நடக்கின்றன. பின்னர், கொழுப்பு, சர்க்கரை, அழுத்தம் உள்ளிட்டவை கூடியும்,குறைந்தும் போவதால்பல்வேறு சிறப்பு மருத்துவர்களைத் தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
பத்து மாதம் ஆனபின்னும் நடக்காத தங்கள் குழந்தையை நடநட என பெற்றோர் உற்சாகப்படுத்துவர். ஆனால்அதே பெற்றோர், அக் குழந்தை மூன்று, நான்கு வயதை நெருங்கும்போதோ,"அங்க இங்க நடக்காம ஒருஇடத்தில உட்கார்" எனக் கண்டிப்பதையும் காணலாம்.
விளைவு, மாலை முழுதும் விளையாட்டு என்பதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டிய குழந்தை, அதைக் கைவிட்டு தொலைக்காட்சி முன்போ, கணினி முன்போஅமர்ந்து, அசையும் காட்சிகளை அசையாமல் பார்க்கத்தொடங்குகிறது.
இதனால், அவர்கள் வளர்ந்த பின்னர்,"தெருமுனையிலிருக்கும்கடைக்கு ஒரு நடை சென்று வா" என்றால்கூட பெரும்பாலானோரின் கண்கள் முதலில்தேடுவது இரு சக்கர வாகன சாவியாகத்தானிருக்கும்.
தாத்தா, பாட்டிகள் சொன்னபடி நடப்பதைக் கைவிட்டு, அவர்களின்கைகளைப் பிடித்தபடி நடப்பதையும்கூட பழம் பேஷன் என இன்றைய தலைமுறை கேலி செய்யும்காலமாகிவிட்டது.
சாய்வு நாற்காலி, நொறுக்குத்தீனி சகிதமாய் குடும்பத் தலைவிகள் சீரியல்களில் நடப்பதையும், குடும்பத் தலைவர்கள் ஒருநாள் போட்டி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் உலகின்எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கிரிக்கெட்டையும் மணிக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ பார்க்கப் பழகிவிடுகின்றனர். அவர்களைப் பார்த்துப் பழகும்குழந்தைகள் பிற்காலத்தில் அவர்களைப்போலத்தானே நடக்கும்?
கிராமப்புறங்களில்பல மைல் தொலைவு நடந்து தண்ணீர் பிடித்த காலங்கள் மலையேறிவிட்டன.நகர்ப்புறங்களிலும் அப்படித்தான். ஆனால் சில பகுதிகளில் குழாய்களில் வாரக்கணக்கில்தண்ணீர் வராதபோது, திடீரென லாரித் தண்ணீர் விநியோகிக்கப்படும்.
தண்ணீர் லாரிசப்தம் கேட்டதுமே, எல்லோருக்கும் முன்னதாகப் பிடிக்க வேண்டும்என்ற பரபரப்பில் ஆறேழு குடங்களை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு ஓட்ட நடையா, நடையோட்டமா என திகைக்க வைக்கும் விதத்தில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியநிலை ஏற்படும். இதனால் பெண்களுக்கும் (சில இடங்களில் ஆண்களுக்கும்) சிறிது நேரம்பரபரப்பாய் வேலை நடந்த திருப்தி. இப்படி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறைதண்ணீர் பிடிப்பதால் உடற்பயிற்சிக் கூடத்துக்கென தனியாய் நடக்க வேண்டியஅவசியமில்லை. இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தான் பைக்கோ, காரோ வைத்திருப்பதற்காக,"ஒரு சைக்கிள்கூட இல்லையா, எங்க போனாலும் நடந்தா போறீங்க?"என பக்கத்துவீட்டுக்காரரை வேற்றுலக ஜந்துவைப் பார்ப்பதைப்போல ஏளனமாய் கேட்பதும், பார்ப்பதும் சிலரது குணம்.
ஆனால் அந்த நபர்பெருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு காலை, மாலை வேளைகளில்
மூசுமூசெனஇறைத்தபடி நடக்க முடியாமல் நடந்துபோவதையும், நடக்கப்போவதையும்பார்க்க, எப்போதுமே நடந்துபோகும் பக்கத்துவீட்டுக்காரருக்கு பாவமாகத்தானிருக்கும்.
எது எப்படியோ, என்றும், எங்கும், எப்போதும்"நடப்பது" நன்மைக்கே என நினைத்தால் எல்லாம் நன்மையாகத்தான் நடக்கும்என்பதில் சந்தேகமில்லை.
நன்றி:- தினமணி

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நடப்பது நன்மைக்கே
மிகவும் பயனுள்ள பதிவைத்தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நடப்பது நன்மைக்கே
அருமையான பதிவுக்கு நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நடப்பது எல்லாம் நன்மைக்கே
» நடப்பது எல்லாம் நன்மைக்கே!
» நடப்பதெல்லாம் நன்மைக்கே..!
» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum