தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பழைமை என்றும் பேணப்பட வேண்டியது [justify]
4 posters
Page 1 of 1
பழைமை என்றும் பேணப்பட வேண்டியது [justify]
பழைமை என்றும் பேணப்பட வேண்டியது
ஊமை உலகத்தில் முதன்முதல் உதித்த மொழி, உலகெங்கும் பரந்த இன்று வாழும் மொழி எங்கள் தாய்மொழி. இத்தமிழ் காலத்துக்குக் காலம் பல மாறுபாடுகள் கண்டு இன்று மக்கள் மனங்களில் நிறைந்து நிற்கின்றது. ஆன்றோர் கைகளில் தவழ்ந்த செந்தமிழ் இன்று சாதாரண மக்களும் ஆளக்கூடிய எளிமை பெற்று வளம் பெற்று நிற்பது சிறப்பே ஆகும்.
அன்று தொட்டு இன்று வரை தோன்றிய இலக்கியங்களில் இலயித்திருக்கும் நாம், ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய இலக்கியங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடும் போதே அவ்வவ் காலங்களில் தமிழிலுள்ள சிறப்புக்களைக் அறியக்கூடியதாக இருக்கின்றது. இலக்கியம் என்னும் போது, உணர்ச்சிகளுக்கு எழுத்தாளர் கொடுக்கின்ற வடிவமே இலக்கியம் ஆகும். அது உயிருள்ளது. அது வாழ்வுள்ளது. எந்த விதிகளும் இலக்கியத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது. உள்ளத்திலிந்து உணர்ச்சிப் பிரவாகம் நீரோடையாக வெளிப்படுத்தப்படல் வேண்டும். தொல்காப்பியர் கூறிய வெண்பா இலக்கணத்தை வள்ளுவர் மீறாமல் இருந்திருப்பாரேயானால், இக்குறள் வெண்பா வடிவத்தை அவர் கையாண்டிருக்க முடியாது. நாமும் குறள் இன்பத்தை இரசித்திருக்க முடியாது. காப்பிய விதிமுறைகளைக் கெட்டியாகப் பிடித்திருப்பாரேயானால், மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தையும், குயில்பாட்டையும் எமக்கு அளித்திருக்க முடியாது. அதன் சுவையையும் நாம் பருகியிருக்க முடியாது. எனவே விதிமுறைகளைத் தாண்டி உருப்பெறுவதே இலக்கியம் காலத்துக்குக் காலம் புதுவடிவம் பெற்று உலகு வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதே இலக்கியம்.
இவ் இலக்கியங்கள் எளிமைப்படுத்தப்படுவது சிறப்பைத் தந்த போதிலும் பழைய தமிழ் இலக்கியங்களை எடுத்து நோக்குவோமேயானால், சிறந்த தமிழ் அறிவு பெற்ற புலவர்கள் வாழ்ந்த காலப்பகுதியை நாம் இழந்துவிட்டோம். அவர்களால் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களை நாம் இழத்தல் கூடாது. அன்று தமிழ் வடிவங்களில் ஆழமும் அழகும் விஞ்சியிருந்தன. கடினமான வரிகளாயினும் கருத்தைக் கவருகின்ற வரிகளாகக் காணப்பட்டன. சாதாரண நெற்களஞ்சியம் ஒன்றைக் கண்ணுற்ற காளமேகப் புலவர், இதற்கு முன் போர்க்களத்திலே கண்ட யானையை அக்கணம் நினைக்கின்றார். சட்டென கவிமழை கொட்டுகிறது.
''வாரிக் களத்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செங்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்''
வைக்கோலும் யானையும் ஒன்றெனப் பாடுகின்றார். இரு பொருள் ஒரு பாடலாக அமைந்திருக்கின்றது.
வைக்கோல்
வாரிக்களத்தடிக்கும் - வயலில் இருந்து கொண்டு வந்து ஓங்கி அடிப்பார்கள்.
வந்துபின் கோட்டை புகும் - வைக்கோல் திரிக்கப்பட்டு, நெற்களஞ்சியத்தைப் பாதுகாக்க
கோட்டையாகும்.
போரிற் சிறந்து பொலிவாகும்- போர் போலக் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகளுக்கிடையே பொலிவோடு
திகழும்.
யானையாகப் பாடும் போது
வாரிக் களத்தடிக்கும் - யானை போர்க்களத்திலே எதிரியைத் தன் தும்பிக்கையால் ஓங்கி
அடிக்கும்.
வந்து பின் கோட்டை புகும் - போர் முடிந்த பின் கோட்டையின் உள்ளே புகுந்துவிடும்.
போரிற் சிறந்து பொலிவாகும் - போரிலே மற்றைய படைகளை விடப் பொலிவாகத் தோற்றம் பெறும்.
எத்தனை சிறப்பு. ஒப்புமையின் ஒப்பில்லாச் சிறப்பை நாம் சுவைக்காமல் இருக்க முடியுமா? எடுத்துப் பகராமல்த்தான் இருக்க முடியுமா?
இவ்வாறே ஒளவையின் ஒரு பாடலையும் சுவைக்காக நோக்குவோம்.
' வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கு மொவ்வொன் றெளிது''
தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திக்கூடு இவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல், எப்பேற்பட்டவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். அவர்களுக்கு அது எளிமையானது. எனவே நான்தான் திறமைசாலி என்று ஆணவம் யாரும் கொள்ளக் கூடாது. இவ்வரிகளை ஒளவை எவ்வளவு அழகாக ஆழமாக எடுத்துக் காட்டியிருக்கின்றார். இப்பாடலை இரசித்து இன்புறாமல் நாம் இருக்க முடியுமா?
எனவே கம்பராக இருக்கட்டும். இளங்கோவாய் இருக்கட்டும், பாரதியாய் இருக்கட்டும். படைக்கப்படும் இலக்கியங்கள் அனைத்தும் இரசிக்கப்பட வேண்டியவையே. ஆய்வுக்காய் கையாளப்பட வேண்டியவையே ஆகும். புரியாது என்று நாம் ஒதுக்கி விட்டோமேயானால், இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் திருக்குறளையும் ஒதுக்கவே வேண்டும். பாட்டன் மரபணுக்களைத் தாங்கி நிற்கும் எங்களையும் ஒதுக்கவே வேண்டும். எங்களால் படைக்கப்படும் இலக்கியங்களும் நாளை, மீட்கப்படாது ஒதுக்கப்பட வேண்டியதாகவே இருக்கும்.
' பழைமை என்றும் பேணப்பட வேண்டியது – என்றும்
போற்றப்பட வேண்டியது''

kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பழைமை என்றும் பேணப்பட வேண்டியது [justify]
''வாரிக் களத்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செங்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்''
ஹை இந்த பாட்டு நான் ஸ்கூல்ல படிசிருக்கேன்...
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செங்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்''
ஹை இந்த பாட்டு நான் ஸ்கூல்ல படிசிருக்கேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பழைமை என்றும் பேணப்பட வேண்டியது [justify]
தேவையான நல்ல பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழர்கள் மத்தியில் தீட்டு என்றும் துடக்கு என்றும் விலக்கி வைக்கும் நாட்கள் பல
» 12 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈரானிய நகரம்
» யோசிக்க வேண்டியது
» யோசிக்க வேண்டியது
» கோலம்போடும் முன் கவனிக்க வேண்டியது
» 12 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈரானிய நகரம்
» யோசிக்க வேண்டியது
» யோசிக்க வேண்டியது
» கோலம்போடும் முன் கவனிக்க வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum