தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புலம்பெயர் தமிழர்களையும், துடிப்பான இளைஞர்களையும் உள்வாங்கி செயற்படுக! தமிழ் தலைமைக்கு மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் ஆலோசனை
Page 1 of 1
புலம்பெயர் தமிழர்களையும், துடிப்பான இளைஞர்களையும் உள்வாங்கி செயற்படுக! தமிழ் தலைமைக்கு மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் ஆலோசனை
புலம்பெயர் தமிழர்களை எமக்கு ஆதரவாக தாயகத்தில் திரட்டுகின்றமை, துடிப்பான இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்குகின்றமை ஆகிய இரு பிரதான நடவடிக்கைகள் மூலமாகவே தமிழரின் ஜனநாயக போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று 31 வருட கால அனுபவம் கொண்ட பத்திரிகைத் துறை ஜாம்பவானும்,உதயன் - சுடரொளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியருமான என்.வித்தியாதரன் தெரிவித்தார்.
அவர் தமிழ் சி.என்.என் இற்கு இன்று வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு
”தமிழ் சமுதாயம் மிகவும் பின்னடைந்த நிலையிலே இன்று இருக்கின்றது. நாங்கள் எமது கௌரவ வாழ்வுக்காக, நீதிக்காக, சுதந்திரத்துக்காக இவ்வளவு காலமும் போராடி வந்திருக்கின்றோம். இப்போராட்டம் மூன்று தசாபத காலம் அகிம்சை வழியிலும், அடுத்த மூன்று தசாப்த காலம் ஆயுத மற்றும் அகிம்சை முறையிலும் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இப்போராட்டம் இலங்கை அரசினால் ஓரளவு அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கின்றது.
அவர் தமிழ் சி.என்.என் இற்கு இன்று வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு
”தமிழ் சமுதாயம் மிகவும் பின்னடைந்த நிலையிலே இன்று இருக்கின்றது. நாங்கள் எமது கௌரவ வாழ்வுக்காக, நீதிக்காக, சுதந்திரத்துக்காக இவ்வளவு காலமும் போராடி வந்திருக்கின்றோம். இப்போராட்டம் மூன்று தசாபத காலம் அகிம்சை வழியிலும், அடுத்த மூன்று தசாப்த காலம் ஆயுத மற்றும் அகிம்சை முறையிலும் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இப்போராட்டம் இலங்கை அரசினால் ஓரளவு அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் தாயகத்திலே இருக்கின்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது ஒரு முக்கியமான விடயம். அப்படி ஒன்றுபட்டாலும் கூட இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற ஜனநாயக கட்டமைப்பின் வலு மிகவும் சொற்பமானதாகவே இருக்கும். எனவே இந்த ஜனநாயக வலுவை மாத்திரம் வைத்துக் கொண்டு போராடுகின்றமை மிகவும் நெருக்கடியானதாகவே இருக்கும்.
எனவே இன்னொரு பலத்தை நாம் நிச்சயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எங்களது உறவுகளின் வலிமையே அது. புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் இருக்கின்ற ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து செயற்படுகின்றபோது எமது போராட்டம் செயல் திறன் மிக்கதாகவும், வீரியமானதாகவும் பரிணாமம் பெறும் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால் இன்று தாயகத்தில் இருக்கின்ற ஜனநாயக சக்திகள் ஒரு பாதையிலும், புலத்தில் இருக்கின்ற எமது உறவுகள் இன்னொரு வழியிலும் செல்கின்றன என்றே எனக்குப் படுகின்றது. நாங்கள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டிய காலம் இது. இந்த ஐக்கியத்துக்கு தாயகத்தில் இருக்கின்ற மக்கள் புலத்தை நோக்கி வர முடியாது. ஆனால் புலத்தில் இருக்கின்ற மக்களில் பெரும்பகுதியினர் தாயகத்துக்கு வர முடியும். ஏற்கனவே புலத்தில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. நான் அவற்றை குறை கூற வரவில்லை. ஆனாலும் அவற்றில் கூட புலம்பெயர் சமூகத்தின் முழுமையான பங்குபற்றுதல் இல்லை என்பதே உண்மை.
புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களில் 80-90 சதவீதமான தமிழர்கள் தாயகத்துக்கு வரக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் தாயகத்துக்கு வந்து, தாயகத்தில் இருக்கின்ற ஜனநாயக கட்டமைப்புக்களைப் பலப்படுத்த வேண்டும். புலத்தில் அவர்கள் இருக்கலாம். ஆனால் ஜனநாயக வழியிலான செயற்பாடுகளை தாயகத்தில் அவர்களால் செய்ய முடியும். புலத்தில் இருக்கின்ற அமைப்புக்களும், தாயகத்தில் இருக்கின்ற ஜனநாயக அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய வலையில் ஜனநாயக கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இந்நிலை உருவாகின்றபோது எமது போராட்டம் வீறு பெறக் கூடிய வாய்ப்பு உருவாகும் என்று நான் நம்புகின்றேன். ஆக்கபூர்வமான, வீரியமான, முழுத் தீவிரமான அரசியல் போக்கு தாயகத்தில் இல்லை என்கிற மனக் குறை புலத்தில் உள்ள மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்து உள்ளது. தாயகத்தில் உள்ள கட்டமைப்புக்களோடு சேர்ந்து செயற்பட வேண்டும் என்கிற பேரவாவும், விருப்பமும் புலம்பெயர் உறவுகளுக்கு உண்டு.
ஆனால்அவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய முயற்சிகள் தாயகத்தில் இருந்து வெளிப்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது.இரு தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றமைக்கு தாயகத்தில் இருந்து கரங்கள் புலம்பெயர் உறவுகளை நோக்கி முதலில் நீளுதல் வேண்டும்.
அக்கரங்களைப் பற்றிக் கொள்ள புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றார்கள். இதன் மூலம் ஆக்கபூர்வமான திசையை நோக்கி எமது அரசியலை நகர்த்த முடியும். ஆயுதரீதியான இராணுவ போராட்டம் என்பது வேறு. அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டம் என்பது வேறு.
அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இளைஞர் சக்திகளை உள்வாங்கி மிகவும் தீவிரமாக செயற்படுவது. ஆனால் எமது தலைமைகள் இன்னமும் இதில் சிரத்தை காட்டாமல் உள்ளன. எந்தப் போராட்ட சக்தியும் அதன் இலக்கை அடைந்து விடும் என்று முன்னரே உறுதியாக கூறிவிட முடியாதுதான். ஆனால் நாம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த வகையில் எமது போராட்டத்தை இன்றைய சூழலில் முன்னெடுக்க வேண்டிய சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை நலிவு படுத்தாமலும், மலினப்படுத்தாமலும் அதற்கு நாம் எவ்வாறு ஊக்க சக்தியாகவும், உந்து சக்தியாகவும் இருக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். எனவே இயன்றவரை கூட்டமைப்பின் ஊடாக எங்களது முயற்சிகளை எடுக்கின்றமைதான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலிலே தமிழ் காங்கிரஸ் எடுத்த முடிவு தவறானது என நினைக்கின்றேன். போராட்டத்தை நடத்தும்போது நாம் சிதறி விடக் கூடாது. கூட்டமைப்பின் ஊடாக செயற்படுகின்றமைக்கு எங்களால் இயன்றளவு முயற்சிக்க வேண்டும். தாயகத்தில் கூட்டமைப்பு அதன் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். கிராமங்கள், வட்டாரங்கள் தோறும் கிளைகளை நிறுவ வேண்டும். மக்கள் இயக்க மாறுதல் வேண்டும். புலத்திலும் இதே போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
புலத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். சிலரால் வேறு அரசியல் காரணங்களுக்காக தாயகத்துக்கு வந்து இவற்றில் பங்கெடுக்க முடியாமல் போகலாம்.ஆனால் தாயகத்தில் இருக்கின்ற ஜனநாயக சக்திகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஏனைய பெரும்பாலானோர் மேற்கொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தாயகத்துக்கு வர முடியும். நாட்டில் இடம்பெறுகின்ற விடயங்களில் பங்குபற்ற முடியும். கூட்டமைப்புத் தலைவர்களையும், கிளைகளையும் நேரடியாக வந்து ஊக்கப்படுத்த முடியும். அவற்றைச் செய்யும்படிதான் எமது புலம்பெயர் உறவுகளைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இளைஞர்களைக் களத்துக்குக் கொண்டு வராமல், புலம்பெயர் சக்திகளை எங்களுக்கு ஆதரவாகத் தாயகத்தில் திரட்டாமல் எமது போராட்டத்தை உத்வேகத்துடன் முன்னெடுக்க முடியாது என்பதைக் கூட்டமைப்புப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பு இது சம்பந்தமாக விரைந்து தீர்மானிக்கக வேண்டும். ஆனால் கூட்டமைப்பு இவ்விடயத்தில் தொடர்ந்தும் தவறு செய்யுமாக இருந்தால் மாற்று வழிகள் பற்றிச் சிந்திக்கப்படுதல் வேண்டும். கூட்டமைப்பில் வலுவான தலைமைப் பீடம் வேண்டும்.
அத்தலைமைப்பீடத்தில் கொள்கைகளையும், முடிவுகளையும் எடுக்கக் கூடிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.வெறுமனே, ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு மாவட்டத்தில் அல்லது ஒரு தொகுதியில் அற்பசொற்ப வாக்குகளோடு நாடாளுமன்றத்துக்கு வருபவர்கள் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைமையையும், போக்கையும் தீர்மானிப்பவர்களாக மாறக் கூடிய பேராபத்து ஏற்பட்டு விடக் கூடாது. மாறாக ஐக்கியப்பட்ட தமிழர் தாயகத்தில் எல்லாத் தமிழர்களாலும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைமையில் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ஆனால் யதார்த்தத்தில் அத்தகைய நிலைமை இன்று இல்லை. தனிப்பட்ட நபர்களின் அரசியல் செல்வாக்குகளையும், பதவிகளையும் தக்க வைத்துக் கொள்கின்றமைக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்கு உரியது.
புலம் பெயர் தமிழர்களின் வலிமையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தக் கூடிய நிலையிலே தலைமைகள் இருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இல்லாதவர்கள் புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கும் தீர்மானத்துக்கு போய் விடக் கூடாது. அதை நாம் அனுமதிக்கவும் முடியாது. ஆதரவு அரசியலால் ஏற்கனவே பலர் சிங்களத்துக்குள் அடங்கிப் போய் விட்டார்கள். அந்த ஆபத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆதரவு அரசியல் அற்ப, சொற்ப உதவுகளைப் பெற உதவக் கூடும். ஆனால் தமிழினத்தில் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் அமுக்கி விடக் கூடிய ஆபத்தை அது கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை அவரின் அரசியல் நேர்மையீனத்தையே பிரதிபலிக்கின்றது. அவர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் பல பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னராக இருந்த நிலைமைகள் பற்றியவை.
எனவே அவர் கூட்டமைப்பில் தேர்தல் கேட்டிருக்கக் கூடாது. அதற்கான அருகதை அவருக்கு கிடையாது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றமை அவருடைய நேர்மையீனத்தையும், துரோகத்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இவர் போன்ற துரோகிகளை களத்தில் கொண்டு வருகின்றமைக்கு இடம் அளித்த எமது அரசியல் வெற்றிடங்கள், எமது அரசியல் தலைமைகளுடைய தவறுகள் உண்மையாக வேதனைக்கு உரியவை.
31 வருடங்கள் பத்திரிகைத் துறையில் நான் பணியாற்றி இருக்கின்றேன். நெஞ்சுக்கு நீதியாகவும், நியாயமாகவும் செயற்படக் கூடிய நிலைமை அக்காலப் பகுதியில் இருந்தது. போராட்டத்தில் பத்திரிகைத் துறை மூலமான எனது பங்களிப்பு வேறு எவருக்கும் குறைந்த அளவில் இருக்கவே இல்லை.
சுடர் ஒளி-உதயன் பத்திரிகைகளின் ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு எனது சிந்தனைக்கும், மனச் சாட்சிக்கும் நியாயமாக செயற்பட முடியாது என்கிற நிலைப்பாடு எனக்கு ஏற்பட்டபோதுதான் நான் விலகிக் கொண்டேன். மனச் சாட்சிக்கு விரோதமான சில விடயங்களுக்கு என்னால் துணை போக முடியவில்லை. ஆனால் எனது மக்களை விட்டும், போராட்டத்தில் இருந்தும் நான் வெளியே வந்து விடவில்லை.
எனது பங்களிப்புக்கள் வேறு வழியில் தொடரும். நேரடியாக அரசியல் ரீதியாகவோ, அல்லது வழிகாட்டல் ரீதியாகவோ எனது பங்களிப்பு தொடரும். அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இல்லை.நான் பத்திரிகைத் துறையை விட்டு வெளியே வந்து விட்ட நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட கூட்டமைப்பு ஒரு சந்தர்ப்பம் தருமானால் அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாகத் தேர்தலில் நிற்கவே மாட்டேன்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்செகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துகின்ற முடிவை இலங்கை அரசியல் எடுத்திருந்தது.அதிலே எவ்வாறு இராஜதந்திரமாக நடந்து தமிழர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்? என்பதில்தான் தமிழ் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு இருந்தது. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண, மலையக மக்கள் அத்தேர்தல் மூலம் தமிழர்களின் ஐக்கியத்தை சர்வதேசத்துக்கும் பறைசாற்றினர். இது சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் கொடுத்த அங்கீகாரம் அல்ல. சிங்கள ஆட்சி பீடத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் காட்டிய ஐக்கியமே ஆகும்.”
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை
» காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum