தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பக்க விளைவுகள்
2 posters
Page 1 of 1
பக்க விளைவுகள்
- கே.பி.ஜனார்த்தனன்
குடும்ப நல கோர்ட்டிலிருந்து வெளியே வந்தனர் அப் பாவும், மகளும். ஒரு பிரைவேட் ஸ்கூலில் வாத்தியார் வேலை பார்க்கும் மத்தியரால் முடிகிற, அதிகபட்ச அளவுக்கு தன் மகள் கல் யாணத்தை நடத்தி வைத்தார் ராமனாதன்.
ஆனால், இந்தத் திருப் பத்தை எதிர்பார்க்கவில்லை; யமுனாவும் தான். அந்தச் சிறிய வீட்டில் கணவனுடன் நுழைந்தபோது, மனம் நிறைய நம்பிக்கை...
ஆரம்ப மாதங்களில் அன்பாகவே இருந்தான் ரகுபதி. அப் புறம், அரசல் புரசலாக காதில் விழுந்த சேதிகள்...
ஆபீசில், யாரோ ஒரு பெண் ணுடன் அன்யோன்யம்; சேர்ந்து சுற்றுகிறான். கேட்ட போது, "அது என் சொந்த விஷயம்...' என்று அலட்சியமாக பதில் வந்தது.
வாதாடினாள்; கெஞ்சினாள்; அதட்டினாள்; பலனில்லை. லேசாய் ஆரம்பித்த பிரச்னை பெரிதாகி, விட முடியாது என்றபோது விசுவரூபமெடுத்தது...
ஒரு நாள், "இது என் காதலி...' என்று, அந்த பெண்ணை அழைத்து வந்து வீட்டில் நிறுத்தியதும், அவளுக்கு வேறு வழியில்லாது போய் விட்டது. மறுநாளே குழந்தையுடன் தன் வீட்டிற்கு வந்து விட்டாள். ரகுபதியின் பெற்றோரிடம் பேசிப் பார்த் தார் ராமனாதன்.
"வீட்டைவிட்டு எப்படி அவள் சொல்லாமல், கொள்ளாமல் போகலாம்? முதல்லே அதுக்கு மன்னிப்பு கேட்டால் தான், வீட்டு வாசப்படி மிதிக்கலாம். ஆம்பளைன்னா கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப் பான். உங்க பொண்ணு தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்...'
"அப்படி ஒரு இல்லற வாழ்க்கை எனக்குத் தேவையே இல்லைப்பா!' உறுதியாகச் சொல்லி விட்டாள் யமுனா. அவள் எடுத்த முடிவில் தவறேதும் தோன்றவில்லை இவருக்கு. டயரியில் குறித்துக் கொண்ட ஏற்பாடுகள் செய்தாயிற்று. கொடுத்த சீர் செனத்திகள் வாங்கியாயிற்று; ரேஷன் கார்டில் அவள் பெயரை அங்கே நீக்கி, மறுபடி இங்கே சேர்த்தாயிற்று; அவளுடைய துணிமணி, புத்தகங்கள் ஒன்றுவிடாமல் கொண்டு வந்தாயிற்று. ஒவ்வொன்றாக முடித்து வரும்போது தான், அந்த விஷயம் குறுக்கிட்டது...
மேஜை மேலிருந்த அந்தக் கடிதம்... பாலிடெக்னிக் முகவரி கவர் மீது, அனுப்புனர் இடத்தில் பளிச்சிட்டது.
ஓ, இது! இதை மறந்து விட்டோமே... யந்திரமாக விரல்கள் கவரைப் பிரித்தன.
கிருஷ்ணமூர்த்தி; நாலாவது செமெஸ்டர். மெஸ் பில் 820 ரூபாய்; கூடவே, பரீட்சைக் கட்டணம் சேர்த்து மொத்தம் ஆயிரத்து ஐநூறு. ஒரு வாரத்திற்குள் கட்ட வேண்டும்.
நாலாவது செமெஸ்டர், ஜனவரி மாதம். இன்னும் 13 மாதங்கள். அப்புறம் மூன்று வருடம் பி.இ., படிப்பு. எவ் வளவு சந்தோஷமாக அன்று அவர் ஏற்றுக்கொண்டார்... இன்று... அந்த பில் அவரைப் பார்த்துச் சிரித்தது; அனிச் சையாக கை அதைக் கசக்கிற்று. இனி எதற்கு அதைக் கட்ட வேண் டும்... எப்படியோ தொலையட்டும்...
மாப்பிள்ளை ரகுபதியின் சித்தப்பா சீதாராமனின் மகன் தான் இந்த கிருஷ்ணமூர்த்தி. கல்யாணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் சின்ன, சின்ன குறைகளை பூதாகாரமாக்கி, கல்யாணமே நின்றுவிடப் பார்த்தபோது, இந்த சீதாராமன் தான் தலையிட்டு, அவர் களை அமைதிப்படுத்தினார். திருமணம் முடிந்து ஒரு வருடம் போல ஆகியிருக்கும்... அப்போது தான் அந்த செய்தி வந்தது... "சீதாராமன் திடீர் மரணம்...'
அவர் வீட்டுக்கு விரைந்தார். வெறிச்சென்றிருந்தது வீடு; சொந்தம், நட்பு யார் தலையும் தென்படவில்லை.
"என்னம்மா இது?' சோகத் தில் அமர்ந்திருந்த சீதாராமன் மனைவியிடம் கேட்டார்.
"பிரச்னை உள்ள குடும்பம் நிர்க்கதி. இருக்கிறவரை எல்லாருக்கும் உதவியா, அனுசரணையா ஓடிட்டிருந்தார். எங் களுக்குத்தான் எதுவும் சேர்த்து வைக்காம... உதவி செய்யறவங்களும், உதவி வாங்கறவங் களும் என்னிக்குமே வேறே, வேறே ஜாதி தானே... எல்லாரும் கூட்டமாகவே வந்து கூட்டமாகவே போயிட்டாங்க, வேறெ தையும் கண்டுக்காம...'
கண் கலங்கிற்று; கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒரே பையன் கிருஷ்ணமூர்த்தியின் பாலிடெக்னிக் படிப்பு பாதியில் நிற்கிறது. அடுத்த மாத செலவுக்குக் கூட காசில்லை.
"எங்கேயாவது வீட்டு வேலை செய்து, சாப்பாட்டுப் பிரச்னையை சரி பண்ணிடுவேன். ஆனா, நல்லா படிக்கிற பையன்; இவன் எதிர்காலம் தான் பாழாகிவிட்டது. மனசு கேக்கலே...' என்றாள் சுமதி.
கொஞ்ச நேரம் யோசித்தார்; முடிவெடுத்தார்.
"நான் பாத்துக்கறேம்மா. உன் புருஷன் நினைச்ச மாதிரியே இவனை பாலிடெக்னிக் முடிக்க வெச்சு, இன்ஜினியரிங்கும் படிக்க வெக்கிறது என் பொறுப்பு!' என்றார்.
கடந்த பன்னிரண்டு மாதமாக அதை செவ்வனே செய்து வந்தார். கல்யாணக் கடன் களுக்கான மாதத் தவணைகள், வட்டி எல்லாம் போக சொற்பமே கைக்குக் கிடைத்தபோதும், விடாப்பிடியாக எப் படியோ உதவி வந்தார்.
இனி?
இப்ப நாமே நிர்க்கதி. இனி யமுனாவின் வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவளுக்கு, குழந்தைக்கு என்று வரிசையாக செலவு காத் திருக்கையில்... மாதம் எழுநூறு, எண்ணூறு இனி எடுக்க முடியுமா... சான்சே இல்லை.
எல்லா உறவும் அறுந்த பின், இந்த ஒட்டுறவு எதுக்கு... அவங்க தொடர்பே இனி வேண் டாம் என்று தீர்மானித்தாயிற்று. இந்த உதவி மட்டும் ஏன் தொடர வேண்டும்... நிறுத்த வேண்டியதுதான், யோசிக்க என்ன இருக்கிறது... கடிதம் மெல்லக் கையில் கசங்கியபோது கதவை யாரோ தட்டினர்.
சீதாராமனின் மனைவி சுமதி.
வாங்கம்மா. இப்பதான் உங்களைப்பத்தி நினைச்சிட்டிருந்தேன்... எங்கே ஆரம் பித்து, எப்படி விஷயத்தை சொல்வது... தயங்கினார்.
யமுனா எங்கே?
கோவிலுக்குப் போயிருக்கா; உட்காருங்க.
எல்லாம் கேள்விப்பட் டேங்க. மனசே வெடிச்சிரும் போல இருந்தது. எங்க பையன் இப்படிப் பண்ணுவான்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலே. உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?
விடுங்க.
எப்படி மனசு கேக்கும்? அங்கேதான் ஓடி, ஓடிப் போனேன்; பேசவே விடமாட்டேங்கிறாங்க. இருந்தாலும், முடிஞ்சவரை வாதாடிப் பார்த்தேன்; காதிலே ஏறலே. யமுனாவுக்குத்தான் நீங்க திடம் சொல்லணும். என்ன பண்றதுன்னே தெரியலே. நல்லவங் களுக்கு சோதனை வரும்பாங்க; ஆனா, நல்லவங்களுக்கு மட் டும் தான் சோதனை வரும்ங்கிறதை எந்த விதத்திலும் ஜீரணிக்க முடியலே.
எங்களால முடியுது; எங்க கர்ம வினைன்னு எடுத்துக் கிட்டதால. தண்ணீர் குடிங்க; காபி தயார் பண்றேன். யமுனா இப்ப வந்துருவா.
இல்லைங்க. நான் இன் னொரு சமயம் வந்து மருமகளைப் பார்க்கிறேன். அவளுக்கு நிறைய ஆறுதல், தைரியம் சொல்லணும். எங்க உறவு ரத்தாகலே...
எழுந்தாள்.
இந்தாங்க, என்றொரு கவரை நீட்டினாள்.
என்ன இது?
கிருஷ்ணமூர்த்திக்கு நீங்க போன மாசம் அனுப்பின டிராப்ட். இன்னும் கணக்கில போடலே. இனிமே இதை நாங்க வாங்கறது சரியா இருக் காது. இதுவரை நீங்க செய்த உதவி, நாங்க திருப்பிச் செய்து சரி பண்ண முடியாத பெரிய தியாகம். அதுக்கு எங்க நன்றி, கரம் கூப்பினாள்.
ஈகரை தமிழ் களஞ்சியம்
User avatar
eegarai
Posts: 102
Joined: Fri Feb 20, 2009 8:25 pm
Location: மலேசியா
* Website
Top
Re: பக்க விளைவுகள்
Postby eegarai » Fri Mar 20, 2009 12:12 am
இதை எதிர்பார்க்கவில்லை அவர்; கண்ணில் திகைப்பு.
ஆமாங்க. இந்த இக் கட்டான நிலையில நாங்க உங்களுக்கு செய்யக்கூடியது இது ஒண்ணு தான்; அதை மனப் பூர்வமா செய்யறேன். எங்க உறவுப்பையன் இப்படி நடந்துக் கிட்டதுக்காக நிச்சயம் நாங்க இந்த கஷ்டத்தை ஏத்து அனுபவிக்கணும்ன்னு முடிவு பண் ணிட்டேன்.
தெளிவா யோசிச்சு எடுத்த முடிவு இது. ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்வாங்க. என்ன ஒரு பொறுப்பில்லாம நடந்துக் கிட்டாங்க! அதன் விளைவுகள் சாதாரணமா... அதெல்லாம் நீங்க அனுபவிக்கிறீங்க. பக்க விளைவா இதை நானும் அனுபவிச்சிட்டுப் போறேன்.
கிருஷ்ணமூர்த்தியோட படிப்பு...
ஒரு பொண்ணோட வாழ்க் கையே பாதிப்புக்குள்ளாயிடுச்சு. என் பையன் படிப்பு நின்னு போனா ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது. அவனை ஒரு கடையில வேலைக்குச் சேர்த்துக்கக் கேட்டிருக்கேன்.
மேஜை மீது கவரை வைத் தாள்; அவரை வணங்கினாள்; புறப்பட்டாள்.
நில்லுங்கம்மா... என் றார் ராமனாதன். அவர் மனம் வேகமாக இயங்கிற்று.
"என்ன காரியம் செய்ய இருந்தோம்!'
நானும் இதைப்பத்தி யோசிச்சுட்டேன். அந்த நிமிஷத்தை - அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ கிருஷ்ணமூர்த்தியோட படிப்பு செலவை நான் முழுசா ஏத்துக்கறேன்னு சொன்ன நிமிஷத்தை - அப்படியே திரும்ப நினைவில் கொண்டு வந்து பார்த்தேன். மாப்பிள்ளை ரகுபதியோட சித் தப்பா மகன்ங்கிறதால நான் அன்னிக்கு அதை செய்யலே...
எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல மனுஷன் - உங்க கணவரைத்தான் சொல்றேன்... அவரோட குடும்பம் கஷ்டப்படுது, நம்மால முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்யணும்ன்னு தீர் மானிச்சுத்தான் அப்படி சொன் னேன். இன்னிக்கு ரகுபதி இப் படி பண்ணிட்டதால... அந்தத் தகுதியை நீங்க இழந்துரலை... அந்தப் பொறுப்பை நானும் விட்டுற முடியாது...
எனக்குத் தெரியும்... ரகுபதிக்கு நீங்க உறவா இல்லேன் னாலும் நான் இதை பண்ணியிருப்பேன். உங்களைப் போல ஒரு நல்லவங்களுக்கு உதவி செய்ய, எங்களுக்கு ஒரு சந் தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததுதான் இந்த விஷயத்துக்கும், ரகுபதிக்கும் உள்ள ஒரே சம் பந்தம். என் பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதில எங்களுக்குக் கிடைச்ச ஒரே நல்ல விஷயமா இதை நான் எடுத்துக்கறேன்...
ஐயா... ரகுபதியோட சித் திங்கற நிலையில இருந்து நாங்க வாங்கிட்டிருந்த உதவியை அவன், இவளை தள்ளி வெச்ச பிறகு எப்படிய்யா வாங்க முடியும்?
பாருங்கம்மா... அவங்களுக்கும், எங்களுக்குமான உறவு சம்பிரதாயம்ங்கிற கயிற் றால கட்டப்பட்டது; எப்ப வேணும்னாலும் அறுந்திடலாம்... உங்களுக்கும், எங்களுக்குமான உறவு, மனித நேயம்ங்கிற கம்பியால கட்டப் பட்டது; என்றைக்கும் அப்படியே, உறுதியா நிற்பது.
எப்படி என்னை மட்டும் நம்பி என் பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேனோ, அதே மாதிரி, என்னை மட்டும் நம் பித்தான் கிருஷ்ணமூர்த்தியோட பொறுப்பை எடுத்துக்கிட் டேன்... தெளிவா யோசிச்சுத் தான் இதை சொல்றேன்.
என் பொண்ணு அங்க நல்லபடியா இருக்கும்போது, வாழறது மட்டுமில்லே வாழ்க் கைங்கிறது; இதுபோல அன் போட உதவி பண்றபோது, வாழறதும் வாழ்க்கை தான். அதை இழந்திட்டோம்; இதையாவது வாழ அனுமதிக்க மாட் டீங்களாம்மா?
ஐயா! என்றபடி, மேஜை மேலிருந்த அந்தக் கவரை எடுத் துக் கைகளில் இறுக்கமாய் பொத்தி, கரம் கூப்பினாள் சுமதி.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பக்க விளைவுகள்
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, தவறுவது சகஜம் தான் ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை திருத்திக்கொள்வதே இயல்பு
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» எஸ்.எம்.எஸ். - ஒரு பக்க கதை
» ஓசி - ஒரு பக்க கதை
» ஐ...ஒரு பக்க கதை
» வலி - ஒரு பக்க கதை
» ஓடி வா - ஒரு பக்க கதை
» ஓசி - ஒரு பக்க கதை
» ஐ...ஒரு பக்க கதை
» வலி - ஒரு பக்க கதை
» ஓடி வா - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum