தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பும் பண்பும்

Go down

அன்பும் பண்பும் Empty அன்பும் பண்பும்

Post by VenkatachalamSubramanian Thu Jan 20, 2011 3:33 pm

Reload Original PagePrint PageEmail Page
Tamil Heritage Foundation Blog Hub
Anbum paNbum

திரு நாகேந்திர ராவ் திண்டுக்கல் சத்திரம் தெருவில் குடியிருந்தார். அவர் தாலுகா வினியோக தாசில்தாராகப் பணியாற்றினார். ஒவ்வொரு ரேஷன் கடையும் உயர்தரத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. வணிகர்கள் விழிபுடன் பணி செய்தனர்.நீண்ட வரிசையில் ஒருவராக அவர் வந்து நுகர்வோரைப் போன்று ஒரு கையில் பொருள்கள் வாங்குவதற்கு பையும், மண்ணெண்ணை வாங்குவதற்கு ஒரு டப்பாவும் வைத்துக்கொண்டு இயல்பாக நிற்பார் .

திடீரென்று. வரிசையில் செல்லும் போது ஓரிருவர் தெரிந்தவர்கள் இருந்தால் கூட மௌனம் காப்பார்.சிம்ம சொப்பனம்.நிர்வாகம் அருமையாகத் தெளிவாக இயல்பாக விருப்பு வெறுப்பு இன்றி இனிமையாக நடக்கும்..

ஒருநாள் அலுவலக நிமித்தம் அவசரக் கையொப்பம் வேண்டி அவருடைய இலத்திற்குச் சென்றிருந்தேன்.

அவரது துணைவியாரிடம் அவர் ஏதோ புகார், யாரைப் பற்றியோ சற்றே உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். சுற்றுச் சுவர் வாயிலில் நுழையும் போது என் செவிகளுக்கு அவருடைய குரல் கேட்டது. வாயிற்கதவு தாளிடாமல் இருந்தது.

"இங்கே பாரடி! இந்தச் சுட்டிப் பயல் பண்ணுகிற சேட்டையை! நான் எழுதிக் கொண்டிருக்கும் காங்கர் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான் பாரேன். அதை கொஞ்சம் வாங்கித் தாயேன்! முக்கியமான பாண்டு அது! " என்றார்.

அவர் துணைவியார், "டேய்! இங்கே வந்து நீ அந்தக் கடுதாசியை என்னிடம் கொடுத்துவிடு! ராஜா இல்லையா! என் கண்ணு! செல்லம் இல்லையா!" என்று கொஞ்சிக் கெஞ்சிக் கேட்டார்

நான் நினைத்தேன்," யாராவது பெண் வயிற்றுப் பேரன் வந்து விளையாடிக் !கொண்டிருக்கிறான்/ கொண்டிருக்கிறாள்!" சற்று தாமதமாக அழைப்பொலி கொடுக்கலாம் என்று நினைத்துக் கொடிருந்தபோது வாயிற் கதவு திறந்தது. துணைவியார் வெளியே வந்தார்.

"அம்மா! சார் இருக்காங்களா? சுப்பிரமணியன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்" என்றேன். அவர் கதவை மேலும் திறக்கவும், தரையில் காலை மடித்து சப்பளம் இட்டு உட்கார்ந்து கர்ணம் டெஸ்க் ஒன்றில் அலுவலகக் கோப்புகளை வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்த திரு நாகேந்ர ராவ் டி.எஸ்.ஓ. (Taluk supply officer )அவர்களை முழுமையாகப் பார்த்தேன்..

அங்கே பேரனோ பேர்த்தியோ இல்லை. சரி உள்ளே சென்று பின்பக்கம் விளையாடக் குழந்தை சென்றிருக்கலாம் என்று அனுமானித்தேன்.. அதற்குள் அந்த அம்மா ஒரு டப்பாவை உயர்மான சேந்தியிலிருந்து எடுத்தார்.

திடீரென்று ஒரு அணில் அவரது புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு அவரது இடுப்பு வரை வந்து ஒரு துள்ளுத் துள்ளி அவருடைய வலது கையில் வைத்திருந்த பாதாம் பருப்பைப் பிடிங்கிக் கொண்டு கீழே குதித்தது. அவருடைய காலின் இடது பக்கத்தில் அந்த பசுமையான வண்ணத்தில் காங்கர் கடுதாசி தரையில் கிடந்தது.அந்தக் கடுதாசியை எடுத்து தாசில்தாரிடம் கொடுத்தார்.

என்னை வாவென்று சொல்லிவிட்டு தரையில் அவருடன் உட்காரச்சொன்னார். உட்கார்ந்தேன். நான் கொண்டுபோயிருந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார். அந்த அணில் அவருடைய முதுகு வழியே ஏறி பளபளக்கும் அவருடைய வழுக்கைத் தலையில் அமர்ந்து கொண்டு என்னை பார்த்து உருட்டி விழித்தது.

ஏய்! இவனைக் கூப்பிடு!" என்றார்.." ராகவா! வா!" அந்த அம்மை அழைக்கவும் வாலைத் தூக்கிக் கொண்டு கீழே குதித்து சமையலறைக்குள் புகுந்தது. கையில் அவர் ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்து கோப்பின் மீது உட்கார்ந்து கொண்டு முன்கால்களில் அந்தக் கொட்டையைவைத்து தின்ன ஆரம்பித்தது.

"சுப்பிரமணியத்துக்கு அழகு காட்டு!" என்றார். அந்த அணில் இரண்டு காதுகளையும் செங்குத்தாக விரைப்பாக வைத்துக் கொண்டு வாயின் முன்பற்களைக் கொண்டு"வவ்வவே" காட்டிவிட்டு ஓடியது.

வெளியே பாயும் புலியாயும் இல்லத்தில் பசும் வெண்ணை போல் மிருதுவாகவும் வாழ்கிறார்.

பறவையோ! பாம்போ! புலியோ சிங்கமோ! அவையும் அன்பிற்குக் கட்டுப்படுகின்றன. மனிதனுக்கு மட்டும் சந்தேகம்! சந்தேகம் ஒரு குடிலின் வாயில் வழி நுழைந்த அக்கணமே நிம்மதி சாளரத்தின் வழி வெளியேறுகிறது.

ஓம்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன்
avatar
VenkatachalamSubramanian
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 13
Join date : 18/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum