தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாத்திக வாதம்
+2
சிசு
வ.வனிதா
6 posters
Page 1 of 1
நாத்திக வாதம்
நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்து விட்டது.
நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்பு கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே எனக்கே வெட்க்கமாகதான் இருக்கிறது
கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கும் உயிரோடு இருப்பானானால் "இல்லை" என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்.
அவரவரும் பெற வேண்டிய தண்டனையைப் பெற்று போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லுபடியாகாமல், விலையாகாமல் கிடக்கின்றன.
நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை.
நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால் அவர்களது எழுத்துக்கள் காலத்தால் செத்து விட்டன.
தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம். ஆனால் அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனது தான் ஆச்சரியம்.
இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம்; அதுதான் நடக்கக் கூடியது.
மேலை நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்து கிறிஸ்துவம் போர் புரிந்தது.
இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது.
இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். அது யாரையும் எதிர்த்து போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளை செய்துக் கொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும்.
அப்படி இந்து மதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது.
காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை. அவ்வளவுதான்.
பல்லாயிரம் ஆண்டுக் காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்து விட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்ததுதான் மிச்சமே தவிர, மலை மலையாகவே நிற்கிறது.
பழைய திராவிடர் கழக செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்க பிரதட்சணம் வருவதை நான் பார்க்கிறேன்.
இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் தவறுகளுக்கு எதிராக போர் புரிந்தார்களே தவிர, இறைவனே இல்லை என்ற வாதத்தில் அவர்கள் உறுதியாக இல்லை. அவர்களுக்குள்ளாகவே சலனமும், சபலமும் இருந்தன. ஒரு துளி நீரில் இவ்வளவு பெரிய உடம்பு முளைத்தெழுவதும் ஒரு சிறு காற்றில் அது உலாவிக் கொண்டிருப்பதும், ஒரு பொறி நெருப்பில் அது அழிந்து விடுவதும் ஏதோ ஒரு சக்தியின் இயக்கம் என்பதை அவர்களும் மறுக்க இயலவில்லை.
இறைவனது இயக்கம் இல்லை என்றால் காலங்களும், பருவங்களும் ஏது?
சந்திர கதி, சூரிய கதி ஏது?
நாத்திகன் இதை நம்பாமல் இல்லை. இதை எதிர்ப்பதன் மூலம் புரட்சிக்காரன் என்று பெயர் வாங்க விரும்பினான். நம்புகிற மக்களிடம் பணம் வாங்க விரும்பினான்.
என்னுடைய நண்பர் ஒருவர், அந்த கட்சிகளில் மிகப் பெரிய தலைவர். ஒரு கோவிலுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
நான் அவரைக் கேட்டப் போது "ஏதோ ஒரு பொருளை மட்டுமே கொடுத்ததாக " கூறினார். கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி ஜாதகம் எழுதி வாங்கி வருகிறார். ஆனாலும் மேடைகளில் அவர் இங்கர்சால் ஆகிறார்.
கடவுளை அதிகமாக கேலி செய்த இன்னொரு நண்பர். அவர் ஒரு நடிகர். சமீபத்தில் திருப்பதிக்குப் போய் வந்து "ஏதோ ஒரு சக்தி இருக்கு! இருக்கு!!" என்கிறார்.
மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாதிகர்கலானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். 'கருப்பு சட்டைக்காரன்' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டவன்.
எல்லாம் ஒரு சில ஆண்டுகளே!
நாத்திகனாக இருக்கும் வரையில் எதைப் பற்றியும் அதிகமாக பாட முடியவில்லையே ஏன்?
நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு?
ஆத்திக உள்ளம் வந்த பிற்ப்பாடு தான் ஆயிரக்கணக்கானப் பாடல்கள் பிறந்தன.
கடல் போல் பரந்து விரிந்து நிற்ப்பது கடவுள் தன்மை.
நீந்த தெரிந்தவன் அந்த கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம் தான்.
நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும் போது , "நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன்" என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை.
பாசறையில் எப்படி புடம் போடுவதோ எனக்கும் புரியவில்லை.
எல்லாம் போலித்தனம்! அபத்தம்!
"கண்ணதாசன் எழுதுகிற அளவுக்கு நம்மால் எழுத முடியவில்லையே " என்று ஆதங்கப்படுகிறார்கள்
நான் எழுதுகிற அளவுக்கு அவர்கள் எழுத வேண்டுமானால், முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
வேத, உபநிஷத, இதிகாச புராணங்களைப் படிக்க வேண்டும்.
வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் பலிக்க மாட்டா.
மீண்டும் சொல்கிறேன் நம்முடைய பல்லாண்டு கால மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர்.
திருமணத்திற்கு என்று அவர்கள் சில சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவை ஒன்றும் பார்ப்பன சடங்குகள் அல்ல.
அவை பார்ப்பன சடங்குகள் ஆனால் சிலப்பதிகாரமும் பார்பன காவியமாக வேண்டும்.
அந்த சடங்குகளில் இருந்து மாறுப்பட்டு சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் நாத்திகர்கள் ஒரு கோமாளிக் கூத்தை ஏற்ப்படுதினார்கள்.
ஆடு, மாடுகள் குட்டிச் சுவர்களுக்கிடையே கூடிக்கொள்கிற மாதிரி, அது ஒரு திருமண முறை.
தலைவர் முன்னிலையில் மாலை மாற்றுவதாம்! தாலியும் கிடையாதாம்!
மாலையைக் கழற்றிய உடனேயே மணப் பந்தமும் அகன்று விடுமே?
நாத்திகன் சடங்குகளை மட்டுமல்ல; மாதரார் கற்ப்பையும் மதித்ததில்லை.
"கற்பு என்ன கற்பு! ஒருத்திக்கு ஒருவன் என்பதே முட்டாள்தனம்!" என்று பேசியவர் பெரியார்.
ஆகவே, நாகரீக உலகத்தில் ஒரு காட்டுமிராண்டி தர்மத்தை உருவாக்க வந்தவர்களே, நாத்திகர்கள்.
சில சுய மரியாதை திருமணங்களுக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன்.
தாலி அறுப்பதைப் பற்றியும், விதவையாவதைப் பற்றியும் சீர்திருத்தவாதிகள் பேசுவார்கள்.
சாதாரண மனித நாகரீகத்துக்கு ஒத்து வராத மடத்தனம் இது என்பது, அவர்களுக்கு மறந்தே போய் விட்டது.
எங்களூரில்" நாத்திகனை நம்பி வீட்டுக்குள் விடாதே " என்பார்கள்.
"அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன். யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்" என்பார்கள்.
தெய்வத்திற்கு பயப்படாதவன் வேறு எந்த நியாத்துக்குப் பயப்படுவான்?
பழைய காலங்களில் எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தது.
இப்போதோ, கழுதை கட்டிலில் படுத்திருக்கிறது. யானை தொட்டிலில் தூங்க ஆசைப் படுகிறது; பூனை புல்லால்குழல் வாசிக்க விரும்புகிறது; புள்ளி மான் உப்புக்கண்டமாகிறது.
நாகரீகத்திலேயே தர்மம் தடம் புரளுமானால், நாத்திகத்தின் விளைவு என்ன?
என்க்கு தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தம தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தார்கள்.
அக்கிரமக்காரர்கள் மட்டுமே தான் அனுபவித்தார்கள்.
பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன் ஆத்திகன்.
மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
தாய்க்கும், தாரத்திற்க்கும் பேதம் தெரிந்தவன் ஆத்திகன்.
எதுவும் தாரம் தான் என்று கருதுகிறவன் நாத்திகன்.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன் ஆத்திகன்.
அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன் நாத்திகன்.
ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து, தெய்வமாகச் சாகிறான்.
நாத்திகன் மனிதன் போல காட்சியளித்து , மிருகமாகச் சாகிறான்.
உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.
பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது.
கவிபேரரசு கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் (ஒன்பதாம் பாகத்திலிருந்து)
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாத்திக வாதம்
நல்ல பகிர்வு வனிதா...
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணதாசன் எழுதியது, இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருத்தமாய் நிலைத்து இருக்கிறது. அவருடைய பாடல்களைப் போலவே...
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணதாசன் எழுதியது, இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருத்தமாய் நிலைத்து இருக்கிறது. அவருடைய பாடல்களைப் போலவே...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நாத்திக வாதம்
பகிர்வுக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாத்திக வாதம்
பொய் ஒரு போதும் நிலைத்தது இல்லை தோழி பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நாத்திக வாதம்
ஆக,கணவனை இழந்த மனைவி மகிழ்ச்சியையும் இழக்க வேண்டும்
முண்டச்சி ஆக வேண்டும் மூலையில் உட்காரவேண்டும். ஆனால்
மனைவியை இழந்த கணவன் கட்டப்பாடின்றி கவலையும் இன்றி மருமணம் கொள்ளலாம்.
என்ன தங்களது பகுத்தறிவு
நீரெல்லாம் நாத்திகராய் ஏன் இருந்தீர்?
“சட்டம் இதுவென்றால் அது இரு பாலருக்கும் பொதுவாகட்டும்” என்றானே ஒருவன் அதன் அர்த்தம் அறிவீரோ
“கடவுள் இல்லை” என்ற கொள்கை மக்களை ஏமாற்ற அல்ல.
மக்களை மூடர்களாக்கிவரும் மூடநம்பிக்கைகளையும்,சாதி,மத வெறிகளையும் ஒழித்து சமத்துவத்தை வளர்க்க பகுத்தறிவுடன் தோற்றுவிக்கப்பட்டது.
ஏனெனில் மதத்தின் பிறப்பிடம் கடவுள்.
மதம் மனிதனை நெறிப்படுத்த தோற்றுவிக்கப்பட்டது
இப்போது அதுவே மனிதனை வெறிச்செயலில் ஈடுபட வைக்கிறது.
நாத்திகத்தின் கொள்கைகளை படிக்காமல் நீங்கள் நாத்திகர் என்று உங்களை எண்ணியுள்ளீர்.
திராவிடர் கழக செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்க பிரதட்சணம் வருகிறார்கள் என்றால் நீங்கள் ஏன் உங்கள் கொள்கைகளை மாற்றுகின்றீர்.
என்று திராவிடர் கழகம் அரசியல் ஆரம்பித்ததோ அன்றே அதன் கொள்கைகள் ஏப்பம் விடப்பட்டுவிட்டன.
இன்று பணமும் பதவியும் தான் அதன் கொள்கை. குழம்பாதீர்
"அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன். யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்"
ஆமமாம் அய்யா ஆமமாம் உங்களை போன்று கலாச்சாரத்துடன் ராஞ்சிதாவை அழைத்து அறிவியல்,ஆன்மீக,துறவு ஆராய்ச்சிகள் செய்ய தெரியாது எங்களுக்கு,எங்களுக்கு அந்த அளவு உணர்ச்சிகளும் கிடையாது.
எனக்கொரு ஐயம் நீங்கள் இருப்பதாக சொல்லும் கடவுள் தான் எதிலும் இருப்பாரே பின்னர் மனித மலத்தை திருநீராக பூசி மகிழுங்கள் பார்களாம்.
அதுவும் புணிதம் புண்ணியம்.
ஒன்றை உணருங்கள் நாத்திகம் பணத்தை சார்ந்ததில்லை பகுத்தறிவு சார்ந்தது
நன்றி
நந்து- புதிய மொட்டு
- Posts : 2
Points : 4
Join date : 15/04/2012
Age : 32
Location : திருப்பூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நாத்திக நண்பர் / maamathayaanai
» வாதம்..???????????
» வாதம்
» வக்கீல் வாதம்
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
» வாதம்..???????????
» வாதம்
» வக்கீல் வாதம்
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum