தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் மன்னார் அமுதனின் "அக்குரோனி" க்கு வாழ்த்து - வித்யாசாகர்!

Go down

கவிஞர் மன்னார் அமுதனின் "அக்குரோனி" க்கு வாழ்த்து - வித்யாசாகர்! Empty கவிஞர் மன்னார் அமுதனின் "அக்குரோனி" க்கு வாழ்த்து - வித்யாசாகர்!

Post by பட்டாம்பூச்சி Thu Feb 03, 2011 3:39 pm

கவிஞர் மன்னார் அமுதனின் "அக்குரோனி" க்கு வாழ்த்து - வித்யாசாகர்! 36056_444848277667_555502667_5111018_1453682_n
ஈழத்துப் பா'வீரன் கவிஞர் மன்னார் அமுதன்

என்றோ எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும் - பிச்சைக்காரி

"பாவம்,
தின்னட்டும்"

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டு வைத்ததை தின்று
மீந்ததை ஈந்து -
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் அவள் பின்செல்லும்
இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில் -
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்

எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும்,
குரல் கொடுத்தவனும்!!

ஒரு பானை சோற்றிற்கு ஒரு பானை சோறு பதம் என்பார்கள். அதற்கு தகுந்தாற்போல் சமூகப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும், உறவுகளின் பரிவும் ஒருங்கே நிறைந்த கவிஞர் மன்னார் அமுதனின் வர இருக்கும் 'அக்குரோனி' எனும் கவிதைத் தொகுப்பின் ஒரு ஒற்றைக் கவிதை தான் இது.

அமிழ்தங்கள் கொஞ்சமே தரப்படுகின்றன
வாழ்வின் ரசனைகளும்
வெள்ளை சிரிப்பும்
விழா நாட்களும்
உண்மை அன்பும்
ஓட்டத்திற்கும் உழைப்பிற்கும் கிடைக்கும் அங்கீகாரமும்
கலைஞனின் கவிஞனின் வெற்றியும் போல் -
இவரின் இக் கவிதையினை படிக்கையில், இங்கே பகிர்கையில்
எண்ணிக் கொண்டேன் -
அமிழ்தங்கள் கொஞ்சமே கொடுக்கப் படுகின்றன!

உண்மையில், ஒரு சக மனிதனுக்கு இந்த கவிதைக்கான கோபம் வந்துவிடுமெனில்; அந்த இலை வீசுபவனும், குரல் கொடுப்பவனும் - பின்னாளிலாவது; இல்லாமல் போவான்.

அதிலும், கவிதைகள் தான் அர்த்தத்திலும், சமூக அக்கரையிலும் மின்னுகிறதெனில்; புத்தகத்தின் வடிவமைப்பு கூட 'பார்க்கையில் கண்களை கொள்ளை கொண்டு போவதோடு நில்லாமல்; கவிதைக்கான அர்த்தத்திற்கும் சாட்சியாகி நிற்கிறது.

ஒரு புத்தகம் பிரசுரிப்பதென்பது ஒரு மலர் மலர்வதற்கு சமம். அந்த மலர் மலர்வதற்கு நட்பு, உழைப்பு, அறிவு, சிந்தனை, மொழி ஆளுமை அல்லது மொழியுணர்வு, முயற்சி, நம்பிக்கை, பணம் என நிறைய இதழ்கள் தேவை படுகின்றன. அத்தனையும் கிடைக்கப் பெற்று -

எழில்மிகு படைப்பாகவும், அருமை சொல்வளம் கையாளப் பட்டும், இலக்கிய சாரம் நிறைந்தும், சமுகச் சீர்முறை சார்ந்த, பல பயன் நிறைந்த படைப்புக்களின் தொகுப்பு இந்த 'அக்குரோனி' என்பதை சொல்லி, தமிழுலகின் தரமான இடத்தை, அங்கீகாரத்தை அடையட்டும் கவிஞர் மன்னார் அமுதன் என்று வாழ்த்தியும் பாராட்டியும் இச் சிறு பா'மாலையால் போற்றுகிறேன்!

எளிமை முகம் கொண்டு உலகை ஆளும் கவி
நடையில் ரசனை கூட்டி சமுகம் திருத்தும் கவி
தமிழின் காதல் கோடி வார்த்தையில் வார்த்த கவி
தரணி புகழை தள்ளி; தரணி வாழ எழுதும் கவி!

அன்பு பண்பு அடக்கம் எல்லாம் உள்ள கவி
ஆணி அடித்தாற் போல் வரியை செதுக்கும் கவி
நல்லதை சொல்லி சொல்லி நாளும் எழுதும் கவி
உள்ளத்து உணர்வுகளுக்கு எழுத்தில்; ஆபரனமிட்ட கவி!

பல பெருமை மிகுந்த கவி; புலமை நிறைந்த கவி;
மண்ணின் மணக்கும் கவி; மன்னார் அமுதனின்
'அக்குரோனி' எனும் இப்படைப்பு தமிழுலகின் தரமான
அங்கிகாரம் பெற உளமாற வாழ்த்துகிறேன்!!
--------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து - வித்யாசாகர்!!
» புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன் முத்து விழா வாழ்த்து மடல்! கவிஞர் இரா .இரவி !
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
» கை‌‌க்கு எ‌ட்டியது வா‌ய்‌க்கு எ‌ட்ட‌வி‌ல்லையே!
» வெள்ளத்தால் மன்னார் கடும் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum