தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மார்க்கம் மிக மிக எளிதானது
Page 1 of 1
மார்க்கம் மிக மிக எளிதானது
இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)
அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத்தில் எந்தவித
சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றான். மனித சமுதாயம் மிகவும்
சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான அல்லாஹ் வழங்கி
இருக்கின்றான். இஸ்லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமையான தொழுகை, நோன்பு,
ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நின்று கொண்டு தொழ
இயலாதவர்கள் உட்கார்ந்து தொழட்டும்; உட்கார்ந்து தொழ இயலாதவர்கள்
படுத்துக்கொண்டு தொழட்டும் என்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே
போன்று மனித இயற்கைக்கு மாற்றமாக எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்குக்
கற்றுதரவில்லை. உதாரணமாக ரமழான் மாதத்தில் நோன்பு நோர்க்க இயலாத அளவிற்கு
நோய் வாய்ப்பட்டவர்கள் ரமழான் அல்லாத மாதங்களில் நோன்பு நோற்கவேண்டும்
என்று அல்லாஹ் 2:185 வசனத்தில் கூறுகின்றான். அதே போன்று மனித சக்திக்கு
அப்பாற்பட்ட எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்கு கட்டாயக் கடமையாக்கவில்லை
(உ.தா.எ) வசதி வாய்ப்பு பெற்றவர்கள்தான் ஹஜ் செய்ய வேண்டும்; ஜகாத்
கொடுக்கவேண்டும். இப்படி உயர்வான மிகவும் சுலபமான இஸ்லாத்தை ஏற்றுள்ள
முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை பின்பற்றுவதில் மிகவும் கஷ்டப்படக்
கூடியவர்களாக இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
ஒரு வயதான பெண்மணி என்னிடம் சொன்னார்கள்.
எனது கணவர் இறந்த உடன் என்னை வானத்தைப் பார்க்கக் கூடாது; பூமியைப் பார்க்க
கூடாது என்றும், இதுதான் இத்தாவின் முறை என்றும் சொன்னார்கள். அப்பொழுது
நினைத்தேன் மனிதனின் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயத்தை எல்லாம் மார்க்கம் சொல்லி
இருக்குமா? என்று, அதற்கு நான் சொன்னேன் நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணிக்கு
இத்தாவுடைய நேரத்தில் வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதி வழங்கி
இருக்கின்றார்கள். இவை எல்லாம் நாமாக இஸ்லாத்தின் பேரில் கஷ்டத்தை
ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமோ
மனித நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தையோ மனிதனுக்கு கஷ்டமான ஒரு
விசயத்தையோ மார்க்கமாக ஒரு போதும் எடுத்தியம்பவில்லை.
இப்படி இஸ்லாம் முஸ்லிம்கள் மத்தியில்
கடின மானதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களின் அறியாமையா? அல்லது மார்க்க
அறிஞர்கள் தமது கடமையினை மறந்ததினாலா என்றால், முஸ்லிம்கள் அறியாமையிலும்
இருக்கின்றார்கள்; மார்க்க அறிஞர்கள் தமது கடமையை முறையாகச் செய்யாமல்
இருக்கின்றார்கள். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்று எதற்கெல்லாம் சொல்லமுடியும் என்பது கூட தெரியாமல் தான்
இருக்கின்றார்கள்.
இன்று முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தில்
தெளிவு பெற்று குர்ஆனில் உள்ளவைகளையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி
முறைகளையும் எடுத்துச் சொல்லும் போது முஸ்லிம்கள் ஓர் ஆச்சரியமான
கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள். இஸ்லாம் என்று எதனைச் சொல்ல முடியுமோ
அதை காஃபிர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் ஓர் ஆச்சரியமான
கண்ணோட்டத்தில் பார்த்தாக அல்லாஹ் 50:2 வசனத்தில் கூறுகின்றான். காஃபிர்கள்
இஸ்லாத்தினை ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்ப்பதிலாவது அர்த்தம்
இருக்கின்றது. இஸ்லாத்தை தங்களது மார்க்கமாக ஏற்றுள்ள முஸ்லிம் இஸ்லாத்தை
ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள் என்றால் முஸ்லிம் சமுதாயம்
உண்மையிலேயே அறியாமையில் தான் இருக்கின்றது.
இப்படி இஸ்லாத்தில் அடிப்படையே தெரியாமல்
இருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் தர்ஹாவிற்கு செல்லாதே, மெளலூது ஓதாதே,
தாயத்து தட்டு, ஃபாத்திஹா போன்ற சடங்குகளை செய்யாதே என்று சொன்னால்,
சொல்பவர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரையினைக் குத்த முயற்சிப்பார்களே தவிர
சொல்வதை செவி சாய்க்க மாட்டார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கை போன்றுதான்.
இப்படி எதனையும் சிந்திக்காமல் இருக்கக் கூடிய சமுதாயத்திற்கு மத்தியில்
நாம் என்ன செய்வது என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதற்குக் காரணம்
என்ன? நமது சமுதாயத்தில் எங்கே கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து
அந்த தவறினை நிவர்த்தி செய்தால் நமது சமுதாயம் இஸ்லாத்தை தெளிவாக புரிந்து
கொள்ளும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான்
உங்களிடம் இரண்டைவிட்டு செல்கின்றேன்; அந்த இரண்டையும் பற்றிப்
பிடித்திடிருக்கும் காலம் எல்லாம் நீங்கள் ஒருபோதும் வழிதவறவே மாட்டீர்கள்;
ஒன்று அல்குர்ஆன், இரண்டு எனது சுன்னத்தான வழிமுறை. அறிவிப்பாளர்
மாலிக்பின் அனஸ்(ரழி) நூல்: முஅத்தா 1599
நமது சமுதாயம் வழிகெட்டு, நெறிகெட்டு
சடங்குகளிலும் சம்பிர தாயங்களிலும் மூட – பழக்க வழக்கங்களிலும், வெட்டி
அனாச்சாரங்களிலும் மூழ்கியிருப்பவதற்குக் காரணம் எதைப் பின்பற்றினால்
வழிதவற மாட்டார்களோ அதைப் புறகணித்துவிட்டு மனித சொந்த அபிப்பிராயங்களையும்
மனித கற்பனைகளையம் பின்பற்றியதன் விளைவு, முஸ்லிம் சமுதாயம் இன்று
வழிகேட்டின் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.
நமது சமுதாயம் குர்ஆனையும் நபி(ஸல்)
அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்களாக உருவாக
வேண்டும் என்று ஆசைபடுவதற்கு முன்னால் தமது குடும்பத்தினர்களையும்
உறவினர்களையும் நண்பர்களையும் குர்ஆனையும் ஹதீஸ் கிரந்தங்களையும்
படிப்பதற்கு ஆர்வம் ஊட்டவேண்டும். வாங்கிப் படிக்க வசதி இல்லாதவர்களுக்கு
வசதி உள்ளவர்கள் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யவேண்டும். நமது
சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைபாடுகளை கண்டு நான் மிகவும் கவலை
அடைகிறேன். நமது சகோதரர்களோடு ஏகத்துவ கொள்கை நின்றுவிட்டதே ஒழிய, அவர்களது
குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் சென்றடைந்ததாகத்
தெரியவில்லை. அல்லாஹ் திருமறையில் 26:214 வசனத்தில் நபியை பார்த்து
கட்டளையிடுகின்றான். நபி(ஸல்) அவர்களுக்கு சத்திய இஸ்லாம் கிடைத்த
மாத்திரத்தில் அவர்கள் முதலில் அழைப்புப் பணி செய்தது தமது
குடும்பத்தினர்களிடத்திலும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மார்க்கம் மிக மிக எளிதானது
அல்லாஹ் திருமறையில் 33:21 வசனத்தில்
கூறுகின்றான். உங்களுக்கு அழகிய முன்மாதிரி உங்கள் நபியிடத்தில்
இருக்கின்றது. நாமும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு இந்த வசனத்தை எடுத்துச்
சொல்கின்றோம். அந்த முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் செய்த செயலை எத்தனை
பேர் செய்து இருக்கின்றோம் என்பதை இஸ்லாமிய சகோதரர்களே சற்று சிந்தித்துப்
பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,
முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக
இருக்க, அந்த கடமையை மறந்தவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்
அல்லாதவர்களுக்குத்தான் இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல இயலவில்லை. தெளிவான
மார்க்கம் இருந்தும் முஸ்லிம் சமுதாயம் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும்
வெட்டி அனாச்சாரங்களிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மூழ்கி இஸ்லாமிய
வளர்ச்சிக்கு முஸ்லிம் சமுதாயமே ஒரு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்களே
அவர்களையாவது சீர்திருத்த முயற்சி செய்தோமா? சமுதாயத்தை விடுங்கள் உங்களது
குடும்பத்தினர்களையும் உங்களது உறவினர்களையும் சீர்த்திருத்தினீர்களா?
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும்
சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய மார்க்க அறிஞர்கள், மார்க்கத்திற்கு
நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள்
மீண்டும் மீண்டும் அறியாமை என்னும் இருளுக்குத்தான் கொண்டு சென்றார்களே
தவிர, இஸ்லாம் என்னும் வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது இருக்கட்டும்,
காண்பிக்கக் கூட முயற்சி செய்யவில்லை. திருமறை குர்ஆனில் 2:257 வசனத்தில்
பக்கம் கொண்டுவர நாடுகின்றான். ஷைத்தானோ மனிதர்களை வெளிச்சத்திலிருந்து
இருளின் பக்கம் கொண்டு செல்ல நாடுவதாக” அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான்.
எந்த இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ் மனிதர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வர
நாடுகின்றானோ அந்த சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்ட
ஆலிம்கள் ஷைத்தானின் நோக்கத்தினை நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பதை
நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது. ஆலிம்களை இப்படி விமர்சனம் செய்கின்றேனே
என்று ஒன்றும் நினைக்க வேண்டாம். இவர்களை விமர்சனம் செய்வது இந்த
கட்டுரையின் நோக்கம் அல்ல.(சிறிதளவு கூட இஸ்லாமிய எழுச்சியில்,
மலர்ச்சியில், வளர்ச்சியில், அக்கறை ஆர்வம் அற்றவர்களாக தாமும் செய்யாமல்,
செய்பவனையும் செய்யவிடாமல், மேய்கின்ற மாட்டை கெடுக்கின்ற மிதங்கொண்ட
மாடுகளை போன்று இஸ்லாமிய வளர்ச்சியினை தடுக்கின்றார்களே என்ற ஆத்திரம்தான்.
இவர்களை விமர்சிப்பதில் குர்ஆனின் 2:159 வசனப்படி தவரொன்றுமில்லை. இவர்களை
இனம் காட்டினால் தான் இருக்கின்ற இளைய தலைமுறை இஸ்லாத்தின் உண்மை நிலையினை
உணர்ந்து உருவாகும்.)
தமிழகத்தில் உள்ள பெருவாரியான பள்ளிகளில்
ஜமாஅத்துல் உலமா சபையினை சார்ந்தவர்கள்தான் இமாமாகப் பணி புரிகின்றார்கள்.
இவர்கள் எல்லாம் ஒரு கூட்டம் “குர்ஆனில் உள்ளவற்றை நாம் மக்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, ஒவ்வொரு
பள்ளியிலும் மார்க்க பிரச்சாரம் செய்தார்கள் என்றால் நமது சமுதாயத்தினை
ஓரளவாவது வழிகேட்டிலிருந்து மீட்க முடியும் என்பது திண்ணம். ஆனால் இவர்கள்
இதனை செய்யமாட்டார்கள். இமாமத் செய்யும் ஊரில் உள்ள நாட்டாண்மைகளுக்கும்
பெரியவர்களுக்கும் மார்க்கத்தை வளைத்து கொடுக்க வேண்டும் என்று
வேண்டுமானால் தீர்மானங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்படுவார்களே தவிர
சத்தியத்தினை எடுத்துச் சொல்லமாட்டார்கள். யூதர்களோடு யாரையாவது ஒப்பிட்டு
ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் நமது ஆலிம்களை யூதர்களோடு ஒப்பிட்டு
எழுதலாம். இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் குணாதிசியங்களில் யூதர்களோடு
ஒத்தவர்களாகவே இருக்கின்றார்கள். அல்லாஹ் திருமறையில் 2:146 வசனத்தில்
யூதர்கள் குர்ஆனை இறைவேதம் என்பதை அறிவார்கள் எப்படி என்றால் தன்னுடைய
குழந்தையை அறிவது போன்று; இருந்தும் மறைப்பார்கள் என்று கூறுகின்றான்.
யூதர்களைப் போன்று ஆலிம்களும் குர்ஆனை அறிவார்கள்; இருந்தும் உலகில்
கிடைக்க கூடிய ஒரு சில சுகபோகத்திற்காகவும் உலக ஆதாயத்திற்காகவும் குர்ஆனை
மக்கள் மத்தியில் மறைப்பார்கள்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இப்படிப்பட்டவர்கள் நமது சமுதாயத்தை சீர்திருத்தி விடுவார்கள் என்று நாம்
நினைப்பது கானல் நீரே. மார்க்கத்தின் உண்மை நிலையை உணர்ந்த நாம் – அறிந்த
நாம் உண்மையான உணர்வுகளோடும் ஆர்வத்தோடும் அல்லாஹ்விற்காக என்ற
எண்ணத்தோடும் செயல்பட முயற்சி செய்யாதவரை அறியாமையில் மக்கள் இருந்து
கொண்டுதான் இருப்பார்கள். ஒருபகுதியில் மக்கள் வழிகேட்டில்
இருக்கின்றார்கள் என்றால் அங்கு இதன் அடிப்படையில் செயல்பட ஆள் இல்லை
என்றுதான் சொல்லவேண்டும். அறிந்தவர்கள் செம்மையாக செயல்படாதவரை அறியாமை
என்னும் இருள் நீங்காது. இது நான் அனுபவப்பூர்வமாக கண்ட ஒன்று. அல்லாஹ்
நமக்கு குர்ஆனையும், ஹதீஸையும் படிப்பதற்கு உதவி புரிந்தான். அல்லாஹ்வின்
வாக்கினை மக்கள் மத்தியில் நிலை நாட்டுவதற்காக நாம் அனைவரும் அல்குர்ஆனின்
அடிப்படையில் செயல்பட முன் வரவேண்டும்; இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வுடைய சன்மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 42:13)
H.நூருல் அமீன், ALAIN.UAE

Similar topics
» மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1)
» அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?
» ஆன்மிகம் என்பது ஆண்டவனின் அருள் பெறுவதற்கான மார்க்கம்…
» இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum