தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரூ .6.50 பயணச்சீட்டு
4 posters
Page 1 of 1
ரூ .6.50 பயணச்சீட்டு
ரூ .6.50 பயணச்சீட்டு
நான் போகிற வண்டி திருவொற்றியூர் ல இருந்து அம்பத்தூர் போய் கிட்டு இருந்தது ''(34)
டிக்கெட் எடுத்து நானும் ஜன்னலோர சீட்ல வழக்கம் போல அமர்ந்திருப்பேன் ,அதே நேரம் ,அதே பேருந்து
என்பதனால் அதே இருக்கையும் கூட !!,பஸ்ல கூட்டம் அதிகமாகுற நேரத்துல யாராவது ''வயசானவங்க
வந்தா அவங்களுக்கு!'' என் சீட்ட கொடுத்துடுவேன் ,நான் கொஞ்ச நேரம் நின்னுகிட்டு வருவேன்
,எப்படியும் நான் இறங்குவதற்கு முன்னாடியே அவங்க இறங்கிடுவாங்க அதனால ..சில சமயம்
திருவொற்றியூர் வரைக்கும் நின்னுகிட்டே வந்திருக்கேன் ,
போகும் போது இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் நாவல்தான் எனக்கு பொழுது போக்கே ஒரு நாளைக்கு
ஒரு நாவல முடிச்சிடுவேன் ,போகும் போது பாதி ''அத்தியாயத்தையும் வரும் போது மீதி
அத்தியாயத்தையும்'' ,நின்னு கிட்டு வரும் போது கொஞ்சம் கஷ்டம் தான் அத்தியாயமெல்லாம் .
சில சமயம் சீட் ,கிடைச்சும் டிரைவர் ,கண்டக்டர் வர நேரம் ஆகும் பொழுது ,பஸ்சுக்குள்ள பாப்கார்ன்
,வேருகடலை,வியாபாரம் லாம் நடக்கும் , ''வேருகல்லேய்ய்..''ன்னு ராகமா இழுக்கும் போது ஒரு
மாதிரியா இருக்கும்.சில சமயம் இஞ்சி மரப்பா வியாபாரம் கூட நடக்கும் ஆள் குள்ளமா இருப்பாரு பாவம்
,கத்தி கத்தி வியாபாரம் பண்ற தொண்ட வலிக்கு அவர்க்கே சரியா இருக்கும்'' இஞ்சிமரப்பா.!''
அன்னைக்கு பஸ் ல கூட்டம் ங்கறதால படில நின்னுகிட்டு இருந்தேன் ,கூடவே ரெண்டு ஸ்கூல் பசங்க
தொங்கிகிட்டு இருந்தாங்க ,வழியில ஒரு போஸ்டர் ல வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும்
விழான்னு தெரிய .அதுல ஒருத்தன் டேய் !குமாரு அங்க பாருடா !டிவி தராங்கலாம்ல'' ன்னு சொல்ல
.டேய்
நிறுத்துடா!!'' அவங்க பாக்கெட் ல இருந்தா எடுத்து தராங்க'' எல்லாம் நம்ம பணம் டா ,டிவி கொடுத்தா
கேபிளும் ,கரண்ட்டு பில்லும் யார் கட்டுவா,அவங்க கட்டுவாங்களா ?எனக்கு லேசா சிரிப்பு கூடவே அந்த
போஸ்டரையும் பார்த்தேன் ,,எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிதான் இருக்குல ...!!
ஒருநாள் நான் என் சீட்ல உட்கார்ந்துகிட்டு இருந்தேன் ,எனக்கு முன்னாடி இருந்த சீட்ல ரெண்டு
பொண்ணுங்க ,மூணு பசங்க உட்காந்துகிட்டு இருந்தாங்க ,கால் செண்டர் ஊழியர்கள் போல ..முன்தினம்
நடந்த கிரிகெட்ட பத்தி பேசிகிட்டு இருந்தாங்க ,இந்தியா மேட்ச் தான் இந்தியா வின் பண்ணிடுச்சுங்க
அதுல ,ஒட்டு மொத்த ஹைலைட்ட்டே டெலிகாஸ்ட் ஆகிட்டு இருந்தது ஆங்கிலத்தில் ,
முன்பக்க படி ஏறி வந்த ஒரு யாசிக்கும் சிறுமி அழுக்கான ஆடையோடு அவர்கள் பக்கம் போய் அக்கா !!''
!!,அண்ணா !!ன்னு அழைக்க அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை அவளை'' ,தலையை
கோதிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து மூணு ரூபாய் கொடுத்தேன் ,ஆமாங்க ஒரு டீ வாங்கணும்னா
கூட இப்ப மூணு ரூபா தேவை படுதுல அதான் .
யாசிக்கும் போது கூட தமிழ் மொழி அழகுதான்ல .....
ஒருநாள் பாப்கார்ன் விக்குறவரு பஸ் இறங்கி போகும் பொழுது ஒரு பாக்கெட் கீழ விழுந்துடுச்சி ,அதை
எடுத்து அவர்கிட்ட கொடுக்கும் பொழுது ரொம்ப நன்றி தம்பின்னு சொன்னாரு ,'',இருக்கட்டும்னே ''!!நீங்க
இதுல அஞ்சு பாக்கெட் வித்தாதான் இந்த பாக்கெட் லாபம் பாக்க முடியும் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்,
மறுபடியும் அவர் நன்றி சொன்னார் ,நான் சிரிச்சிகிட்டே தலையை ஆட்டிகிட்டு வந்து என் சீட்ல
உட்காந்துகிட்டேன் ,ஒரு நாள் நான் வேகமா போன பஸ்ஸ பிடிக்கும் போது என் மணிபர்ஸ் கீழ
விழுந்துடுச்சு அதை ஒருத்தர் எடுத்து கொடுத்தார் அப்ப நான் சொன்ன நன்றி என் முன்பக்கம் போய்கிட்டு
இருந்த வண்டி கண்ணாடில தெரிந்தது ,இப்படி சின்ன சின்ன உதவிகளிலும் ,நன்றிகளிலும் தான் மனித
வாழ்க்கை சின்ன சின்ன சுவாரஸ்யத்தை இழக்காமலே இருக்கிறது ,எனக்கும் அப்படித்தான் தெரிகிறது .
அண்ணா நகரை தாண்டி போய்கிட்டு இருந்த பேருந்து வழியில ஒரு அம்மா ,தன்னோட மகனோட
,பஸ்ஸ நிறுத்த கை அசைச்சாங்க,டிரைவர் நிறுத்தாமலே சென்று விட்டார் ,மற்றொரு நாள் கீழ்
பாக்கத்தில் ஒருத்தர் பஸ்ஸ நிறுத்த கை அசைக்க நிறுத்தி விட்டார் டிரைவர் அவர்க்கு இவர்
தோஸ்த்தாம் அதனால நிறுத்தி இருக்காரு ,எல்லாரையும் ஏன் நம்ம வீட்ல ஒருத்தரா
நினைகிறதில்லை,?''
நாவல்ல ஒரு அத்தியாயம் முடிஞ்சிடுச்சி ..
ஒருநாள் சுவர்ள்ள போஸ்டர் ஒட்டிகிட்டு இருந்தான் சிறுவன் ,சிக்னல் என்பதால் நீண்ட நேரம் அவனை
என்னால் பார்க்க முடிந்தது ,பசையை எடுத்து லாவகமாக தடவி புரட்டி ஒட்டிக்கொண்டு இருந்தான்
போஸ்டர் ல இருந்தது ''குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாடாம்'' ,அந்த போஸ்டர் ல இருந்த
தலைவருக்கு
சிரிக்க மட்டுமே நேரம் இருந்தது ,பேப்பர் போடுற பையன்,போஸ்டர் ஓட்டுற பையன் களெல்லாம் படிச்சி
இருக்கணும்ன்னு அவசியமில்லையே !!,,நொந்து கொண்டேன் நான் .
அன்னைக்கு கைல சூட் கேசட ஒரு ஆள் வாசலிலுருந்து தெருவில் விழுகிறார் ,பின்னாடியே வீட்டின்
முதலாளியும் வருகிறார் ,உள்ளே விற்பனைக்கு வந்த பிரதிநிதி விரட்டி அடிக்க படுகிறார் ,வெளியே
இருந்த பலகையில் 'Beware Of Dog'என்பதற்கு பதிலாக 'Beware Of Men''என இருந்திருக்கலாம் ,
''மனிதன் நோக மனிதன் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டாகும்'' ன்னு சொன்னாரு பாரதி ,இப்ப அதுதான்
நடந்துகிட்டு இருக்கு ,அதுதானே ?ஆமாமா!'' அதுதான் நடந்துகிட்டு இருக்கு,
சிறு மன வருத்ததோடு அதை நான் பார்த்து கொண்டிருந்தேன் .நான் இறங்கும் இடமும் வந்து விட்டது
,நாவலும் எல்லா அத்தியாயங்களும் முடிந்து விட்டது ,நான் வீடு அருகில் வந்து விட்டேன் ,மரத்தில்
இருந்த'' பறவை ஒன்று தன் குஞ்சுகளுக்கு பாஷை கற்று கொடுத்து கொண்டிருக்கிறது,''பக்கத்து வீட்டு
தபால் பெட்டி ஒன்று'' தகவலுக்காக காத்து கொண்டிருக்கிறது'' ,,
வாசல் வந்தடைந்த நான் பாக்கெட்டில் இருந்த பயண சீட்டை எடுத்து கீழே எறிகையில் இரண்டு மூன்று
அலையலையாய் ஏதோ சொல்ல வந்து தரையை சென்றடைந்தது ..''
''மனிதனை மதிக்க கற்று கொள் ''என்பதாக கூட அது இருக்கலாம்'' .
முற்றும் -பா ;சண்முகம்

shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: ரூ .6.50 பயணச்சீட்டு
இப்படி சின்ன சின்ன உதவிகளிலும் ,நன்றிகளிலும் தான் மனித வாழ்க்கை சின்ன சின்ன சுவாரஸ்யத்தை இழக்காமலே இருக்கிறது..
//'மனிதனை மதிக்க கற்று கொள் ''// இன்று மனிதன் மனிதனாக மதிக்கப் படும் நிலை விரல் விட்டு எண்ணீ பார்க்கும் நிலையில் தான் இருக்கிறது..
அதில் உங்கள் உதவி, மற்றும் உங்கள் செயல்பாடுகள் அனைத்துமே.. இப்படியும் மனித நேயத்துடன் வாழ்கிறாரே என்று எனக்கும் சந்தோஷமே.. நமது தோட்டத்துக்கும் பெருமையே..
உறவுகளே.. நாமும் மனிதனை மதிக்க கற்றுக் கொள்வோம்.. நாம் மனிதனை மதித்தால் தான் நமக்கு மதிப்பு தானாக வரும்..

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரூ .6.50 பயணச்சீட்டு
//இப்படி சின்ன சின்ன உதவிகளிலும் ,நன்றிகளிலும் தான் மனித வாழ்க்கை சின்ன சின்ன சுவாரஸ்யத்தை இழக்காமலே இருக்கிறது..
//
//
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ரூ .6.50 பயணச்சீட்டு
சரியான வரிகள் ... வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum