தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

Go down

காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம் Empty காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 09, 2010 2:50 pm

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் ‘மே’ மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம்.
ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூர்ரி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய அம்மானில் நின்றுக் கொண்டு எட்டுத்திக்கும் ஒலிஎழுப்பி ‘இதோ ஒரு தமிழன் பேசுகிறான்.

“வணக்கம்!
என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.
தென்னிந்திய தமிழ்நாட்டின் சென்னையின் ஒரு ஓரப்பகுதியான மாதவரமென்ற கிராமம் எனது சொந்த ஊர்.

மன ஆராய்ச்சியில் ‘ஆய்வியியல்’ முடித்து காற்றின் ஓசை யென்ற தலைப்பில் நானெழுதிய என் முதல் புத்தகம் தான் என் முதல் அடையாளம்!

உளவியல் சிந்தனை, இறைமையின் ஆழம், வாழ்க்கை தத்துவம் போன்றவைகள் பற்றி கருத்து பரிமாறி, மேடையில் பேசி புத்தகங்கள் எழுதி.. எழுதி.. எழுதி.. இன்று இதோ ஜோர்டானின் தலைநகர் கைதட்டியழைக்க இங்கு உங்கள் முன் வணக்கம் தெரிவித்து நிற்கிறேன்” என்று கைகூப்பி மாலன் ஆங்கிலத்தில் பேசி நிறுத்த, அரங்கம் தன மெச்சலை கைதட்டலால் காண்பித்து.

ஜோர்டானின் தலைநகரில் ஒரு தமிழன் நின்று பேசுவதை கேட்க இத்தனை அந்நிய மக்கள் கூடி நிற்பதை அமைதியாய் கண்டு, குறிப்பெடுத்துக் கொண்டது காற்றும்!

‘மனிதமும் மேன்மையும்’ என்ற சேவை மையமொன்று சில நாடுகளை தேர்ந்தெடுத்து புதிய புதிய மக்களை சந்தித்து கருத்து பரிமாறி பிரசங்கம் செய்து மனிதம் வளர்க்க மாலனை தேர்ந்தெடுத்துள்ளது.

மாலன் நிறைய பேசுகிறார். நிறைய பேசுகிறார். அரங்கம் அமைதியாய் அவர் பேச்சிக்கு கட்டுண்டு கைகட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. முடிவில்…

“ஒரு காற்றின் அசைவுகளுக்கு இடையே எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் போதிந்திருக்கிறதோ; காற்றிடம் சற்று காது கொடுத்துக் கேட்டேன்- ‘வரலாறுகள் அத்தனையும் யாரோ ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும்- அந்த ஒரு நொடியில் உச்சரித்த வார்த்தையில் தான் புரட்டிப் போடப் பட்டுள்ளது. வரலாறுகள் குவிகின்றன.. வார்த்தைகள் குவிகின்றன.. காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது, தன் அசைவுகளின் அத்தனை இடுக்கிலும் காற்று இன்றும் எப்போதும் ஒவ்வொரு வரலாறினை சொல்லிக் கொண்டே தான் நகர்கிறது.

உண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது காற்று, காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.. காற்றில்லையேல் உயிரில்லை, காற்றில்லையேல் உயிரினங்களில்லை, காற்றில்லையேல் அண்டசராசரமும் கூட இல்லாது போயிருக்கலாம், அண்டசராசரத்தின் சூழ்சுமத்தில் காற்றிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அந்த காற்றிடம் உற்று கேளுங்கள். காற்றுக்கு காது கொடுங்கள். காற்றிடம் கேள்வி கேளுங்கள். அமைதியாய் அமர்ந்து எல்லாம் மறந்து கண்மூடி காற்றின் ஆழம் வரை மனக்கண் கொண்டு காற்றினை பாருங்கள். காதுகளின் துவாரம் வழியே காற்றினை மட்டும் உள்வாங்கி உலகம் அத்தனையும் மறந்து, காற்றினை.. சுவாசத்தை.. மட்டும் உற்றுப் பாருங்கள். கவனியுங்கள்.

சுவாசத்தை கவனிக்கையில், எல்லாம் மறக்கையில் சுவாசத்தை மட்டும் நினைக்கையில் சுவாசத்தின் வழியே காற்றின் குரல் கேட்கும். காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும். உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றென தோன்றும், எல்லாமுமாய் கலந்த ஒரு நிம்மதி பெருமூச்சி ஓம்.. ஓம்..ஓமென உள்ளே ரீங்காரமிட- அமைதியாய் அமைதியாய் அந்த ஆனந்தத்தை ரசிக்கத் துவங்குங்கள்.

ரசிக்க ரசிக்க, மெல்ல மெல்ல நாம் தெளிந்து வருவதையும் வாழ்வில் வென்று வருவதையும் ஊர் பேச ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் அமருங்கள். காற்றிடம் பேசுங்கள். காற்று பேசும். நிறைய பேசும். பேச பேச காற்றின்.. சுவாசத்தின் அடி ஆழம் புரிந்துவிடும். அது புரியும்போது மனசு தானாகவே அமைதியாகும். அந்த அமைதியில் தினமும் மூழ்க மூழ்க.. உலகின் அத்தனை ரகசியங்களும் புரிந்துவிடும். அந்த அமைதியை அடையும் வழி தான் தியானம்.

தியானம் செய்யுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள். காலையும் மாலையும் தியானம் செய்யுங்கள். அரைமணி நேரமாவது தினமும் அமைதியில் ஆழ்ந்திருக்க ஆழ்ந்திருக்க வெகுவிரைவில் தியானம் கைகூடும். தியானம் கைகூடினால் வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாய் நமக்குச் சொல்லித் தரும், உலகின் அத்தனை சூழ்சுமத்தையும் சொல்லும் தியானம்.

வாழ்வின் சூழ்சுமத்தின் முடிச்சிகளில் தான் வெற்றித் தோல்விகளின் வரலாறுகள் பொதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை நமக்கெல்லாம் எடுத்துச் சொல்லி வாழ்வின் சூழ்சுமத்தைப் புரிய வைக்கத் தான் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.

காற்றை உள்ளிழுக்கையில், சுவாசம் காற்றிலிருந்து தான் உயிர்பெருகிறதென புரிகையில், காற்றும் சுவாசமும் ஒன்றென உணர்கையில்.. ‘அண்ட சராசரமும் நிறைந்த காற்று நம் சுவாசமாய் மாருமிடத்தில் தான் – காற்றிற்கும் சுவாசத்திற்குமிடையே தான் கடவுலெங்கோ இருக்கிறாரென புரிந்துவிடும்.

ஆக, ‘காற்றிற்கும் – சுவாசத்திற்கும்’ ‘அண்ட சராசரத்திற்கும் – நமக்கும்’ இடையே இருக்கும் கடவுளை உணர.., புரிய.., காற்றின் சுவாசமாய் ஒன்றி கரைய ‘மனிதன் கடவுளாக’ தியானம் ஒரு நல்ல ஆயுதமென்று” மாலன் பேசி முடித்து நிறுத்த..,

மனதில் இத்தனை நேரம் தாங்கியிருந்த அமைதியை மீறி ஜோர்டானின் மக்கள் கைதட்டி மகிழ்ந்து பிரியாவிடை கொடுத்து விமான நிலையம் வரை வந்து அவரை வழியனுப்பி வைக்க……..,

‘இதோ மாலனின் விமானம் ஜோர்டானிலிருந்து ஏமன் நாட்டிற்குப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

————————————————————————————————–
காற்றின் பயணமின்னும் தொடரும்…
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum