தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏழைகளுக்கு உதவவா உரிமம் அளித்தார் இராசா?
Page 1 of 1

“இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான்” என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இவ்வாறு கூறியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. “செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று டெல்லிச் சிறையில் வாடும் இராசாவிற்கு உண்டு” என்று பொருந்தாத புகழ் சூட்டி, இராசாவை தொடாமலேயே உச்சி மோந்துள்ளார் கருணாநிதி.
‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எதையுத் திரிப்பார்கள்’ என்ற சமீபகால பழமொழிக்கு இணங்க, எதிரில் கூடியிருக்கும் தன் கட்சித் தொண்டர்களின் சிந்தையறிந்து சிறப்பாக, உருக்கமாக பேசியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இதெல்லாம் வாய் வந்த கலை. ஓராண்டா, ஈராண்டா... 70ஆண்டுக்கால அரசியல் அனுபவமல்லவா?
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்து, அதனால் அத்துறைக்கு இராசா ஏற்படுத்திய இழப்பு 1.76 இலட்சம் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.
“இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரே ஒருவர் மட்டுமே செய்துவிட முடியுமா?” என்று கேட்டு நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டின் முதல்வர், இந்த முறைகேட்டால் எந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றார்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், கடந்த புதன்கிழமை கைது செய்த முன்னாள் அமைச்சர் இராசாவையும், அவரோடு கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரையும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தியது.
அப்போது, இராசா உள்ளிட்ட அந்த மூவர் மீது உள்ள வழக்கு என்ன என்பதை நீதிபதி ஓ.பி.சைனிக்கு எடுத்துரைத்த ம.பு.க. வழக்குரைஞர் அகிலேஷ், “முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, 2 ஜி அலைக்கற்றைகளை 2001ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆ.இராசா உதவிய முக்கியமான இரண்டு நிறுவனங்களை ம.பு.க.வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து, அதில் நடந்த முறைகேட்டினால் ஏற்பட்ட இழப்பைக் கூறியுள்ளார்.
“13 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு ரூ.1,537 கோடி கட்டி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றது ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம். அதனைப்பெற்ற பிறகு தனது நிறுவனத்தின் 45 விழுக்காடு பங்குகளை எடிசலாட் என்ற (துபாயைச் சேர்ந்த) அயல்நாட்டு நிறுவனத்திற்கு ரூ.4,200 கோடிக்கு விற்றுள்ளது. யூனிடெக் என்ற மற்றொரு நிறுவனம் 22 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு ரூ.1,658 கோடி கட்டி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் பெற்றது. அதன் பிறகு அந்த நிறுவனம் தனது 60 விழுக்காடு பங்குகளை டெலிநார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்திற்கு ரூ.6,100 கோடிக்கு விற்றுள்ளது” என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஆ.இராசா செய்த இந்த ‘சேவை’யால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.22,000 கோடி (2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து முதலில் விசாரித்த ஊழல் தடுப்பு ஆணையம் அளித்த மதிப்பீடு இது. அதன் அடிப்படையில்தான் ம.பு.க.2009ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்குத் தொடர்ந்தது) என்று கூறியுள்ளார்.
ரூ.22,000 கோடியா அல்லது தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளரின் மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடியா என்பது இருக்கட்டும், அடிப்படையில் இராசா 2ஜி அலைக்கற்றையுடன் உரிமம் வழங்கிய ஸ்வான், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்க்ளும் செல்பேசி சேவை தொடங்குவதற்கு முன்னரே தங்கள் நிறுவனத்தின் பங்குகளை உரிமம் பெற கட்டியதை விட மூன்று, நான்கு மடங்கிற்கு விற்றன என்றால் இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்தார்கள் என்று பொருளா?
இதற்கு முன்பு செல்பேசி சேவையில் இல்லாதவை இந்த இரண்டு நிறுவனங்களும்! இவைகளை அழைத்து வைத்து, இந்தா எடுத்துக்கொள், அனுபவி என்று கொடுத்த இராசாவை ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றினார் என்று கருணாநிதி கூறுகிறார் என்றால், இவர் கூறும் ஏழை, எளிய மக்கள் நாட்டில் உள்ளவர்களா? அல்லது இவர் வீட்டில் உள்ளவர்களா?
ம.பு.க. புலனாய்வு செய்துவரும் இவ்வழக்கை கண்காணித்துவரும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, “இந்த நாட்டில் நடந்த ஊழல்களுக்கெல்லாம் தாயாகும் தகுதி பெற்ற ஊழல்” என்று குறிப்பிட்ட ஊழலை, ஏழை, எளிய மக்களுக்குச் செய்த சேவை என்று தமிழக முதல்வரால் கூற முடிகிறது என்றால், இவரை விட உலக மகா பொய்யர் வேறு யார் இருக்க முடியும்? ஒரு வேளை ‘ஊழலை நாங்கள் சகித்துக்கொள்ளவே மாட்டோம்’ என்று கூறும் சோனியா காந்தி இவரைத் தாண்டலாம்!
தனது கட்சிக்காரர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, அவர்களிடையே - பொதுக் குழுவில் பேசுவதுபோல் - பேசினால் அது வேறு விடயம். தி.மு.க. என்பது என்றைக்கோ கம்பெனியாகிவிட்டது, அதில் பொதுக் குழு, செயற்க் குழு உறுப்பினர்கள் என்றால் அதன் பங்குதாரர்கள் என்று என்றோ ஆகிவிட்டது. அந்த கம்பெனி இன்றைக்கு அதிக இலாபத்துடன் இயங்குவது அதன் உறுப்பினர்களுக்கு பெருமையானதாக இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பின் வாயிலாக இந்தக் கதையை ஓட்டுவது என்றால், இவர் எந்த அளவிற்கு மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டிருப்பவர் என்று நன்றாகவே புரிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் கட்சியை நிறுவிய ஜனநாயகவாதியா அறிஞர் அண்ணா, அவர் பேசிய பல கூட்டங்களில் சொன்ன வார்த்தைகள் இவை: “சிலரை சில காலத்திற்கு ஏமாற்றலாம், பலரை பல காலத்திற்கு ஏமாற்ற முடியாது” தம்பி.

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
» ஓட்டுனர் உரிமம்
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
» சவுதியில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்
» இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum