தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மருத்துவ இலைகள்

Go down

மருத்துவ இலைகள் Empty மருத்துவ இலைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 09, 2011 12:29 am

பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக
பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ மருத்துவ
பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

* செம்பருத்தி இலைகள் மற்றும்
பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப்
போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை
கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது.
பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான்
மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு
என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும்,
கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.

* துளசி இலையில் புரதம்,
கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து
காணப்படுகின்றன. துளசி வேர்ப்பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு
வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும்
எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து
மென்மை தரக்கூடியது.

* வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்கு
தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு
வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து
முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும்.
வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து
சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும். * கறிவேப்பிலையிலிருந்து
தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும்
பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை
முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை,
மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது
சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.

* புதினா
இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு
மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது.
இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல்
தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின்
வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

*
கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில்
தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும்.
கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது.
வாசனைப் பொருட்களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.

தேயிலையில்
இருக்கும் `காபின்’ என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது.
கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில்
பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை
தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. மூளையை ஊக்கப்படுத்துதல்,
ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய
குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி,
டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum