தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தலைவலிக்கு
Page 1 of 1
தலைவலிக்கு
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல்
முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம்
இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த
முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.
சிலருக்கு
அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு
வந்து விடக் கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலைப் பளு இவற்றால்
வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல்
நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில
சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர்
கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலை வலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டுமின்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம்,
இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை). மூளைக்கு
இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம்,
மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட
தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.
அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு
நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி தலைவலி ஏற் படும்.
குளிர்காலத்தில் மூடிய ஜன்னல்கள் காற்றை வெளி யேற விடாவண்ணம்
வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவு
அதிகரிக் கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி கோப்பி போன்ற
பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்தத்தில் அதன் அளவு குறைந்தால் தலைவலி
ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு கோப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி
இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி. அடிக்கடி தலை வலி வந்தால்
மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால்
எவ்வளவு நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம்
மருத்துவர்கள் தலைவலியின் தன்மையை அறிந்து குணமாக்க முடியும். முன்பு
தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக
ஆரம்பித்த வலியின் அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால்
எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி
போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவை.
வேலைப்பளு,
மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி சாதாரணமாக வலியாக இருக்கும். சில
மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையைச் சுற்றி ஒருவித அழுத் தம்
இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம்,
இசை போன்றவை இத் தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. மைக்ரேன்: இது
போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 மணி முதல் 3 நாட்கள்
வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிக ரிப்பதால், வெளிச்சம்
அதிகரிப்பதால் தலைவலி அதி கரிக்கும்.
சில வாரங்களுக்கு இல்லாமல்
இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது
மருத்துவர்கள் இந்த ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும்
குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால்
கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்து ழைப்பும்
குறையக்கூடும்.
சளியினால் ஏற்படும் தலைவலி மிக கொடுமையானது, கண்களை
சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விடக்
கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால்
வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும்.
இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள்
தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை
பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம்
அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும்
மருந்துகள் பயன் தரக்கூடும். பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு
கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து
கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள்
இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. இது போல மருத்துவர்
பரிந்துரை செய்யாமல் கிடைக் கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல்,
கணையம் போன்ற உறுப்புகளில் உபாதைகளை ஏற்படுத் திக்கொள்பவர்கள் அதிகமாகி
கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்து
விடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவ தோடு, மற்ற குறைபாடுகளும் வர
காரணமாகின்றன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்து களின் பிடிப்பை
எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான
மருந்துகளை உட்கொள்ளுதலை எப்படி போக்குவது என்பதும் தான்..

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum