தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அம்மா என்றழை !

+2
அ.இராமநாதன்
வ.வனிதா
6 posters

Go down

அம்மா என்றழை !  Empty அம்மா என்றழை !

Post by வ.வனிதா Thu Feb 10, 2011 6:08 pm

[You must be registered and logged in to see this image.]

பாலுக்காகப் பசித்தழும்
பச்சிளங்குழந்தை போல்
உன் அன்பிற்காக ஏங்கியழும்
பேரிளங்குழந்தை நான்!

உன்னை சூல் கொண்ட
கருப்பை இன்று கதறியழுகிறது !
கட்டியவனிருந்தால் இன்று
கால்வயிற்றுக் கஞ்சியாவது
கண்ணீரில்லாமல் குடித்திருக்கலாம் !
ம்ம்ம்... விதியின் சதி,
எனக்கு முன்னாலவன் இறந்து
புண்ணியம் கட்டிக் கொண்டான்...

என்குழவியே !
இன்றும் உன்னை மனமார
வாழ்த்துகிறேன்! எனக்கு ,
உலக உண்மைகளை
உணரவைத்ததர்க்காக ....

நில்லா அன்பையும்
நிலையான பண்பையும்
நிர்பந்தப் படுத்திகூறும்
உன் கண்களில், நானில்லாத்
தருணங்களில் தான்
மகிழ்வுக் குருவிகள்
சிறகடிக்கின்றன......!

அன்றென் கைவிரல் பிடித்து
நடந்த நீ,
இன்றென் பக்கம் நிற்கக்கூட
பலமுறை யோசிக்கிறாய்....
ம்ம்ம்.. உன்முன் காலம் என்னைத்
தீண்டத் தகாதவளாய் ஆக்கிவிட்டது !

உன் தந்தை மறைவின் பின்
அன்பு இல்லத்தில் கூட விட
மறுத்தேன் உன்னை...
இன்றோ , நான் முதியோர் இல்லத்தில்
கூட சேராத் தகுதியுடையவளாய்
நிற்கின்றேன் உன்னால்....

முன்பெல்லாம் சிறுதுன்பம்
வந்தாலும் நெஞ்சம் நெக்குருகும் ,
இன்று, கடலளவு துன்பம் வந்தாலும்
என் இதயத்தில் பனித்துளியாய்ப்
பட்டுச் சிதறுகிறது....
ம்ம்..அவற்றிக்கு நீ கொடுத்த
சன்மானத்திற்கு நிகராக
நிற்கக்கூட முடியவில்லையாம்....

அடிக்கடி அழுவதால்
என் முகமே எனக்கு மறந்துவிட்டது...
இன்னமும் கண்களின் ஓரம்
கண்ணீராய் கசிந்து கொண்டிருக்கிறது,
கற்பனை மட்டுமே பொய்யாக
நீ என்னிடம் அன்பு வைத்திருக்கிறாய் என்று...

ஆறுதலுக்காகவாவது ஒரு முறை
அழை என்னை
"அம்மா" என்று ...!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by அ.இராமநாதன் Thu Feb 10, 2011 6:29 pm

கவிதை நன்றாக உள்ளது..
முதியவர்களைப் பராமரித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசு அவர்களுக்காக முதியோர் உதவித் தொகை வழங்குகிறது.
--
இதோ ஒரு செய்திக் குறிப்பு (பகிர்தலுக்காக)
நன்றி: தினமலர்
============================================

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு அரசு 'செக்!
----------------------------------------------------------------------
விருதுநகர்:பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு அரசு "செக்' வைத்துள்ளது. சமூக நல அலுவலரிடம் முறையிட்டால், ஜீவனாம்சம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்: 60 வயதான முதியவர்களை பிள்ளைகள் பராமரிப்பு செய்து கவனிக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசு 2007ம் ஆண்டு பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல வாழ்வு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இது உடனடியாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, தமிழக அரசு இந்த சட்டத்திற்கான செயல் வடிவம் தயாரித்துள்ளது. இதற்காக, கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. இவர்களை கண்காணிக்க, மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


சட்டம் என்ன சொல்கிறது: 60 வயது நிரம்பியவர், தனது சம்பாத்தியத்தில், தேடி வைத்துள்ள சொத்துக்களால், தன்னை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் போது, ஜீவனாம்சம் பெற தகுதியுடையவராகிறார். 18 வயது நிரம்பிய தனது மகன், மகள் அல்லது உறவினர் ஆகியோரிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். முதியவர் இறந்த பின், அவரது சொத்துக்கு யார், யார் வாரிசாக வருகிறார்களோ அவர்கள் அடையும் சொத்து விகிதப்படி, அனைவரும் ஜீவனாம்ச தொகையை கொடுக்க வேண்டும். ஒரு முதியவருக்கு குழந்தைகள் இல்லை என்றால், அடுத்தபடியாக அவரது சொத்துக்கு வாரிசாக வரும் உறவினர்கள், நல்ல நிலையில் இருந்து சொத்துக்களை பெறாவிட்டாலும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும். ஜீவனாம்சம் தர மறுப்பவர்களுக்கு, சட்டப்படி ஐயாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனை வழங்க முடியும். அதிக பட்சமாக, முதியவர் ஒருவருக்கு, மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஜீவனாம்சம் பெற முடியும்.


சமூக அலுவலர்கள் நியமனம்: பெற்றோர், முதியோர் பராமரிப்பு நல வாழ்வு சட்டத்தின் பராமரிப்பு அலுவலராகவும், செம்மைபடுத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சமூக நல அலுவலகத்தில் இச்சட்டத்தின் படி, ஜீவனாம்சம் பெற விண்ணப்பிக்கலாம். அதுதவிர, முதியவர் சார்பாக தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் மனு கொடுக்கலாம்.


நடவடிக்கை: மனுவை பெறும் சமூக நல அலுவலர்கள் முதியோர்களின் வாரிசுகளை அழைத்து, பெற்றோரை பராமரிப்பு செய்ய கவுன்சிலிங் நடத்துவர். இதில், பிள்ளைகள் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஜீவனாம்சம் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான குழுவும் அமைக்கப்பட உள்ளது. இதில், கலெக்டர் தலைவராகவும், சமூகநல அலுவலர், ஆர்.டி.ஓ.,தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த குழு, பெற்றோர், முதியோர் நல வாழ்வு சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.


தென் மாநிலங்கள் ஆர்வம்: மத்திய அரசின் இந்த சட்டத்தை, தென் மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி செயல்படுத்த முன் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில், இந்த சட்டம் அமலுக்கு வந்துள் ளது. தற்போது, தமிழ்நாடு, கேர ளா, ஆந்திர மாநிலங்கள் இந்த சட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளன.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by வ.வனிதா Thu Feb 10, 2011 7:38 pm

அருமையான பகிர்வுதான் ! நாட்டில் எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் அனைத்தும் நன்மையே ! மிக்க நன்றி தோழரே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by அரசன் Thu Feb 10, 2011 7:47 pm

கவிதை தொடுத விதம் மிக அருமை...
நல்ல வரிகள் ././//
படிக்கும் பொது மனதுக்கு வலிக்கிறது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 10, 2011 8:19 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன் wrote:கவிதை தொடுத விதம் மிக அருமை...
நல்ல வரிகள் ././//
படிக்கும் பொது மனதுக்கு வலிக்கிறது


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Feb 11, 2011 12:04 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by கவிக்காதலன் Fri Feb 11, 2011 1:20 am

அரசன் wrote:கவிதை தொடுத விதம் மிக அருமை...
நல்ல வரிகள் ././//
படிக்கும் பொது மனதுக்கு வலிக்கிறது
ஆம் படிக்கும்போது மனது வலிக்கிறது!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by வ.வனிதா Fri Feb 11, 2011 12:02 pm

நான் சென்ற முதியோர் இல்லத்தில் உள்ளே நுழையும் போதே எனக்கு மனம் செத்துவிட்டது தோழர்களே ! மிக்க நன்றி ! நான் சந்தித்த சில உள்ளங்களின் குமுறல்களைத் தான் கவிதையாக வடித்தேன்.
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by செய்தாலி Sat Feb 12, 2011 1:14 pm

அரசன் wrote:கவிதை தொடுத விதம் மிக அருமை...
நல்ல வரிகள் ././//
படிக்கும் பொது மனதுக்கு வலிக்கிறது

சியர்ஸ் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

அம்மா என்றழை !  Empty Re: அம்மா என்றழை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum