தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

+6
கலைநிலா
கவிக்காதலன்
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 14, 2011 2:14 pm

ம. ரமேஷ் – சென்ரியு கவிதைகள் - 3

•சிரித்தாள்
திரும்பிப் பார்த்தேன்
என் பின் புறம்

•இருபது வயது
குறைந்து விட்டது
எதிரே காதலி

•சைகை காட்டி
அழைக்கிறது
அவள் கால்தடம்

•நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி

•ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில் காதலி

•கண்ணாம்பொத்தியை
கண் திறந்து விளையாடுகிறது
காதல்

•காதலி வந்துவிட்டாள்
பாதி எழுந்து தோற்றேன்
பாதிப் பிணமாக எரிந்தபோது

•புரியாமல் வருகிறது
தெரிந்தால் போய்விடுகிறது
காதல்

•புதுத்துணி போட்ட
குழந்தையின் மகிழ்ச்சி
காதல்

•சொல்லாம் கொள்ளாமல்
போய்விட்டது
உயிர்க்காதல்

•பணம் செய்யும்
காதல் எல்லாம்
கள்ள நோட்டுகள்

•காதல் கண்ணீருக்குப்
பொறுப்பு ஏற்கிறது
வெங்காயம்


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by சிசு Mon Feb 14, 2011 2:42 pm

எல்லாமே நல்லாருக்கு ரமேஷ்...

"சென்ரியு" அப்படீன்னா என்னன்னு இன்னும் சொல்லலியே தலைவரே...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 14, 2011 2:44 pm

லிமரைக்கூ அப்படீன்னா
ரெண்டு ரூல்ஸ்,
மொத்தம் மூன்று வரிகள்.
முதல்வரியும் கடைசி வரியும் ரைமிங்காக முடியவேண்டும் அவ்வளவே
{இடையிடையே மோனையையும் பயன்படுத்தலாம்.}
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by சிசு Mon Feb 14, 2011 2:47 pm

நன்றி யூஜின்...

ஆனா நான் கேட்டது "சென்ரியு " யோசி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by அரசன் Mon Feb 14, 2011 4:01 pm

ஏதோ சண்டை ... நல்லா அடிச்சிக்குங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவிக்காதலன் Mon Feb 14, 2011 10:58 pm

//காதலி வந்துவிட்டாள்
பாதி எழுந்து தோற்றேன்
பாதிப் பிணமாக எரிந்தபோது//

ரொம்ப நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கலைநிலா Tue Nov 22, 2011 11:54 pm

ஒன்றுக்கு ஒன்று
போட்டி
வென்றது கவிதைகள்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 23, 2011 12:12 am

சிசு wrote:எல்லாமே நல்லாருக்கு ரமேஷ்...

"சென்ரியு" அப்படீன்னா என்னன்னு இன்னும் சொல்லலியே தலைவரே...

சென்ரியு
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’.)

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.

தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும்.

மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.

தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன.

குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

யார் சொல்லிக் கொடுத்தவன்?
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 10:55 am

நல்லதொரு விளக்கம் நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கலைநிலா Wed Nov 23, 2011 12:51 pm

விரிவான விளக்கத்திருக்கு நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by thaliranna Wed Nov 23, 2011 3:45 pm

[You must be registered and logged in to see this image.] அருமையான காதல் சென்ரியூக்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 23, 2011 11:13 pm

தங்கள் அனைவரின் ரசனைக்கு நன்றிகள் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by kanagavasu Mon Dec 12, 2011 11:06 pm

அருமை
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 3:53 pm

மகிழ்ச்சி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by பட்டாம்பூச்சி Wed Dec 21, 2011 3:57 pm

[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 21, 2011 6:25 pm

மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by kanagavasu Tue Jan 03, 2012 8:34 pm

வாழ்த்துக்கள்
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by அ.இராமநாதன் Tue Jan 03, 2012 10:00 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 04, 2012 10:26 pm

மகிழ்ச்சி ஐயா சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3 Empty Re: ம. ரமேஷ் – (காதல்) சென்ரியு கவிதைகள் - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum