தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கஸல் என்றால் என்ன?

+10
Thanjaavooraan
thaliranna
அரசன்
அ.இராஜ்திலக்
தங்கை கலை
கவிக்காதலன்
அ.இராமநாதன்
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty கஸல் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 18, 2011 2:39 pm

First topic message reminder :

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


கஸீதா
கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம்.

கஸீதாவின் தன்மைகள்
கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் கொண்டுள்ளோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்”2 என்கிறார்.

அமைப்பு
கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது.

சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது3 என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.

கஜல் - சொற்பொருள் விளக்கம்
கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘ழுயணநடடந’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன4 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்”5 என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்
அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்”6 என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்
எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது”7 என்பார்.
இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது”8 என்கிறார்.

தோற்றம்
“கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில், பாரசீக மொழியின் கவிதை வடிவமான பாரசீகக் கஸீதாவிலிருந்து வளர்ந்து வந்த அருமையான வடிவமாகும். முன்னதாக அரபு மொழியில் தோன்றி பிறகு பாரசீகக் கஸீதாவிலிருந்து புத்தாக்கம் பெற்று செழித்தோங்கி, உருதுவில் புகழ் பெற்ற போது ‘கஜல்’ என பெயர் பெற்றது”9 என்று கே.சி. காந்தா குறிப்பிடுகிறார். கவிக்கோ கூறுகையில், “கஸல் (ழுhயணயட) அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்”10 என்கிறார்.

வளர்ச்சி
“உருது மொழியானது, இந்திய சமூக-அரசியல் வரலாற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமக்குரிய அமைப்பையும் வளர்ச்சியையும் பெற்றிருப்பதாக”11 நசீர் அகமது குறிப்பிடுகிறார். மேலும், “முதல் உருதுக் கவிஞர் மசூத் சாஅத் சல்மான் (1046-1122) என்பவர் ஒரு சூஃபி ஞானி ஆவார். அவரைத் தொடர்ந்து, காஜா மொய்னுத்தீன் சிஸ்தி (1140-1268), பாபா ஃபரீது கன்ஜ் சர்க்கார் (1173-1265), நிஜாமுத்தீன் அவ்லியா (1238-1325), அமீர் குஸ்ரு (1253-1325), குல்பர்காவைச் சார்ந்த காஜா பண்டா நவாஸ் ஜேஸ்தரஜ் (1321-1422) போன்ற எண்ணற்ற சூஃபிக் கவிஞர்கள் தோன்றினர்”12 என்று நசீர் அகமது கூறுகிறார்.
“கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மொகலாயர்கள் இந்தியாவிற்கு வந்த போது, தங்களோடு சேர்த்து ஈரானியக் கலாச்சாம், நாகரிகம் போன்றவற்றையும் கொணர்ந்தனர். அதன் விளைவாக உருவாகிய இந்தோ-ஈரானியக் கலாச்சாரத்தின் இனிமையான கொடையாகிய கஜல் இந்தியாவில் மணம் பரப்பத் தொடங்கியது. மேலும், அலாவுதீன் கில்ஜி(1296-1316) மற்றும் முகம்மது பின் துக்ளக் (1925-1351) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் மாநிலங்களிலும். வட மாநிலங்களான கோல்கொண்டா, பீஜப்பூர் போன்றவற்றிலும் பரவத் தொடங்கியது”13 என்று கிரியர்ஸன் மற்றும் ஜார்ஜ் ஆப்ரகாம் தெரிவிக்கின்றனர்.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாய மன்னர்களின் துணையினால் உருது மொழி இலக்கியத்தில் பல எண்ணற்ற படைப்புகள் உருவாகின. வட இந்தியாவில் அமீர்குஸ்ரு (1253-1325) கஜல் வடித்தாலும், அதற்கு முன்பாகவே தென்னிந்தியாவில் கஜல் வந்துவிட்டது. உருது மொழி வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞக்ள் மிரன்ஜி (1595-1663), பஹாவுத்தீன் பஹன் (1388-1506), முல்லா வஜ்ஹி (1529-1635), குத்துபுஷா (1565-1611) போன்றோர்களாவர். வாலி தக்கானியின் கவிதைகள் மக்கள் மனதில் புதிய எழுச்சியை உண்டாக்கின. மேலும் , அவர் கஜல் கவிதையின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்தார்”14 என்று கே.ஏ. ஃபரீக் குறிப்பிடுகிறார்.

கஜல் இலக்கணம்
“உருது இலக்கியத்தில் கீத், நக்ம், ருபையாத், ஆஸாதி ஷாய்ரி, இப்படிப்பல வடிவங்கள் உள்ளன. இவற்றின் அமைப்புகள் பின்வருமாறு

கீத் - பாடல்
நக்ம் - விருத்தம் (நக்மா-விருத்தம் போன்ற அழகி)
ருபை - நான்கு அடிகள் (ருபை ஒருமை, ருபையாத் பன்மை)
அஸாதி ஷாய்ரி - புதுக்கவிதை, நவீன கவிதை
மேலும், சூஃபியிசத்திலிருந்து உருவான கவ்வாலி என்னும் குழுப்பாட்டு கஸீதா எனும் புகழ்மாலை எனப்பல யாப்பு வகைகள் உருதுவில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையையும் சூழலையும் கொண்டவை. அஸாதிஷாய்ரி நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கணம் உண்டு”15 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
கவிக்கோ கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை16 என்கிறார்.

ஷேர், மத்லா மற்றும் மக்தா
இரண்டடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர் எனப்படும். ஷேர்களின் தொகுப்பு கஜல் ஆகும். எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கும் ஷேர்களின் தொகுப்பு கஜலாகிவிடாது. கஜலுக்கென்று தனி இலக்கணம் இருக்கிறது.
“கஜலில் மிகவும் முக்கியமானவை, முதல் இரண்டு அடிகள். இவை தான் கஜலின் தன்மையையும். சூழலையும் ரசிகனுக்குச் சொல்லி ரசிகனின் மன நிலையை கஜலை அனுபவிப்பதற்கான சூழலுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த முதல் இரண்டு அடிகள், ஒரு ஷேர். உருதுவில் இதை மத்லா என்பார்கள். எத்தனை சீர்களை (சொற்களை) வேண்டுமானாலும் அது கொண்டிருக்கலாம்.
‘அப்னீ துன்மே ஏஹ்தாஹீன்
மே பீ தேரே ஜைய்ஸா ஹீன்’ (குலாம் அலி)
‘எனது தொனியில் ஒலிக்கின்றேன்
நானும் உனைப் போலிருக்கின்றேன்’
என்று மூன்று சீர்களைக் (சொற்களைக்) கொண்டும் இருக்கலாம்.
‘உன்ஸே நஸ்ரேன் க்யாமிலி ரோஷன் ஃபிஸாபேன் ஹோஜயே
ஆஜ் ஜானா ப்யார்கி ஜாதுகரி க்யா சீஸ் ஹை!’
‘அவளின் பார்வை படரும்போது ஒளியின் ஊர்வலங்களோ
காதல் தந்த வர்ணஜாலம் கண்ணில் வந்ததல்லவோ!’
என்று ஐந்து சீர்களைக் (சொற்களை) கொண்டும் இருக்கலாம்”17.
எனவே முதலிரண்டு அடிகள் மத்லா (உதிப்பு) எனப்படும். இறுதியிரண்டு அடிகள் மக்தா (முடிவு) எனப்படும். மக்தாவில் கவிஞர்கள் தங்கள் பெயரையும் அமைத்து எழுதுவதுண்டு.

முதல் அடியில் எத்தனை சீர்கள் (சொற்கள்) வருகின்றனவோ, அதே எண்ணிக்கையிலும், தன்மையிலும் இரண்டாவது அடியின் சீர்கள் (சொற்கள்) அமைந்திருக்க வேண்டும். கஜலின் எல்லா அடிகளும் ஒரே சந்தத்தில் அமைய வேண்டும்.

“ஒவ்வொரு ஷேரின் இறுதி வார்த்தையும் ஒன்று போலவே ஒலிக்க வேண்டும். அதாவது கஜல் என்பது இயைபுத்தொடை,
‘குதா பீ ஹை
கபி பீ ஹை
நஹீன் கீ ஹை’
இப்படியானதாக அமைந்திட வேண்டும். முதல் கண்ணியில் சொல்லப்பட்ட வரிகளின் தொடராக அடுத்த கண்ணி இருக்க அனுமதி இல்லை. நமது யாப்பிலக்கண அடிப்படையில் கஜலின் இலக்கணத்தைப் பார்த்தால், தமிழில் குறள் ‘வெண்செந்துறை’ எனும் யாப்பினை ஒத்திருப்பதாக அறியலாம்”18 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
“கண்ணிகள் 5,7,9,11..... என்று ஒற்றைப் படையில் அமைய வேண்டும். முதலிரண்டு அடிகளின் இறுதிச் சீர்கள் (சொற்கள்) இயைபுத் தொடை பெற்று வரும். (சுhலஅந) அடுத்த ஒன்று விட்டு ஒன்று இயைபுத் தொடை பெற வேண்டும்”19 என்று கவிக்கோ கூறுகிறார்.

பெஹர்
“சீர்களின் அளவு பெஹர் ஆகும். இது அறுசீர், எழுசீர். எண்சீர் என அனைத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு சொல் ஆகும். நாம் சீர்களின் (சொற்கள்) எண்ணிக்கையைக் குறிப்பிடுவது போல் பெஹரில் ரமல், ரஜல், ஹஜஸ், முத்கரீப், கஃபீப் என்று அடிகளில் இருக்கும் வார்த்தைகளின் சந்தத்திற்கேற்பப் பெயர்கள் அமையும்”20 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
“அகா ஷாஹித் அலி கூறுகையில், உருதுவில் பத்தொன்பது பெஹர்கள் உள்ளன. அவைகள் நீளமான பெஹர், நடுத்தரமான பெஹர், சிறிய பெஹர் என்று மூன்று வகைப்படுத்தப்படும்”21 என்கிறார்.

காஃபியா
அடிகளின் கடைசிச் சீர் (சொல்) காஃபியா ஆகும். இது இயைபுத் தொடையை ஒத்தது. (அடிகளின் கடைசிச் சீர்கள் (சொற்கள்) ஒன்றுபோல் ஒலிப்பது இயைபுத் தொடை), கஜலில் கண்ணிகளின் கடைசிச் சீர்கள் (சொற்கள்) ஒன்றுபோல ஒலிக்கும்.

ரதீஃப்

காஃபியாவுக்கு முன் நின்று, காஃபியாவின் அழுத்தத்தை அதிகப்படுத்தும் சொல் ஆகும். காஃபியா என்னும் இயைபைத் தொடந்து ஒலிக்கக் கூடிய இன்னொரு வார்த்தையும் ஓசை நயத்தில் அடுத்த அடிகளுடன் ஒன்றியிருக்க வேண்டும் என்ற கூடுதல் இலக்கணம் உண்டு. அதன் பெயர் ரதீஃப் ஆகும். உதாரணமாக,
‘ஹஸ்தி அப்னி ஹபாப்ஸீ ஹை’
‘உன் இயல்பு நீர்க்குமிழ்களோ’
‘யே நுமாயிஷ் ஷராப்ஸீ ஹை’
‘மதுக்கோப்பை மூடிய சிமிழ்களோ’
என்பதில் ஹபாப், ஷராப் இரண்டு காஃபியா. ஹை, ஹை இரண்டும் ரதீஃப். தமிழாக்கத்தில் குமிழ், சிமிழ் இரண்டும் காஃபியா, களோ, களோ இரண்டு ரதீஃப் ஆகும்”22 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.

கண்ணிகள் (ஷேர்)
கஜலின் இரண்டு அடிகளுக்குள் இரண்டாவது அடியில் ஒரு திருப்பத்தைத் தந்து ‘வாஹ் வாஹ்’ போட வைக்கும் தன்மையுள்ளவை இந்தக் கண்ணிகளாகும். கவிக்கோ கண்ணிகளின் வீச்சுக்குத் தருகின்ற உதாரணம்.
‘மர்ளேகே பாத்பி மேரே ஆங்க்கேன் குலி ரஹேன்’
‘இறந்த பின்னும் என் இமைகள் திறந்தே இருக்கும்’
இந்த அடியை நான்கைந்து முறை திரும்பத் திரும்பப் பாடுவார்கள். இதனால் அடுத்த அடியில் என்னதான் சொல்லப் போகிறார் எனும் ஆர்வம் ரசிகனிடம் எழுந்து விடும். மெதுவாக,
‘ஆதத்ஸே படுகயித்தி இனிகா இந்த்ஸார்கா’
‘வழக்கமாகிப் போனது அவள் வருகையைத் தேடி!’
இப்படி ஒரு விடையைச் சொன்னதும், அரங்கத்தில் ‘வாஹ் வாஹ்’க்கள் அலை மோதும். இது தான் கஜல் கண்ணிகளின் பலம். கவிஞர் கமர் ஜலாலாபாதியின் இந்த வரிகளை மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், பாடகர் பாடும்போது கூடவே அவர்களும் ‘வாஹ் வாஹ்’ சொல்லி ரசனையூட்டுவார்கள். மேலும்,
‘துபா பஹார்கி மாங்கீத்தோ இத்னே பஹீல் கிலேன்’
‘வரங்கேட்டேன் வசந்தத்தில் இத்தனை பூக்கள் பூத்தன’
பிறகு என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டு, புன்னகை இழையோட,
‘கயீன் ஜகா ராமிலினா ஆஷியானே கோ!’
‘காதலிக்கவும் இடமில்லாமல் எங்கும் பூக்கள் பூக்கள்!’
என்ற கண்ணிகளை எடுத்துக் காட்டுகளாகத் தருகின்றார்23.

கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள்
கவிக்கோ கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் பற்றி கூறுகையில், சில வல்லெழுத்து ஒலிகளையும், மெய் இரட்டிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் காதலின் துயரத்தால் ஏங்கித் துடிக்கும் காதலன், காதலியை விளித்துக் கூறுகின்ற முறையிலேயே அமையும். காதலியின் சௌந்தர்யம், தவிக்க வைக்கும் பண்பு, காயம்பட்ட இதயத்தின் வேதனை என்ற தொனியில் கருத்துக்கள் அமையும். காதலியை விளிப்பது என்ற தொடர்பு தவிறக் கண்ணிகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கஜல் ஆகாது. (காதல் உலகில் ஒன்றிற்கொன்று தொடர்பற்ற உணர்ச்சி வசப்பட்ட உலவாக் கட்டுரைகளே பேசப்படும் என்ற ஆழ்ந்த உண்மையைக் குறிப்பால் உணர்த்தும் நுணுக்கமான வரையறை இது) பதினேழு மரபான சந்த விகற்பங்களும், இருபத்தாறு, அதற்கும் மேற்பட்ட புதிய சந்த விகற்பங்களும் கஜலுக்கு உண்டு. விட்டில்-விளக்கு, பூ-புல்; சபை (மஹயில்); இலட்சிய அடைவிடம் (மன்சில்), கடல்-நீர்த்துளி; மதுக்கடை-மது பரிமாறுகிறவன்; வசந்தம்-இலையுதிர் காலம்; முள்; கூடு; நீர்ச்சுழல், புயல், கரை, தோணி போன்ற ஏராளமான படிமங்களும் குறியீடுகளும் இதில் கையாளப்படும்”24 என்று தெளிவாக விரித்துரைக்கிறார்.

கஜல் கவிஞர்கள்

1. மீர்ஸா காலிப்
உருதுக் கவிஞர்களில் தலைமையிடம் பெறுகின்ற தகுதியுடையவர். இவரது இயற்பெயர் மீர்ஸா அஸதுல்லாஹ்ளபேக் கான். ஆக்ராவிலே பிறந்த இவர், இளம் வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்தவர். துவக்கத்தில் மன்னர் பகதூர்ஷா ஜஃபர், காலிப்பின் கவிதைகளுக்கு செவி சாய்க்காதவராக இருந்தாலும், 1947 முதல் 1857 வரையில் மன்னரின் அவைக்கு நேரிடையாகச் செல்லும் மதிப்பினைப் பெற்றிருந்தார். இவர் இயற்றிய கஜல் கண்ணிகளில் ஒன்று:
‘கிஷ்க் முஜ்கோ ரஹீன் வெஹ்ஷத்ஹீ சஹீ
மேரா வெஹ்ஷத் தேரா ஷொஹ்ரத்ஹீ சஹீ’
‘காதல் என்னில் இல்லை!? வெற்றாய்த் தனிமைதான் சகி
எந்தன் தனிமை உந்தன் அழகால் வந்ததுதான் சகி’25

2. பகதூர் ஷா ஜஃபர் (1775-1862)
கடைசி மொகலாய மன்னரான இவர் சிறந்த கவிஞராகவும், கவிதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவராகவும் திகழ்ந்தார். தனது காலத்தில் வாழ்ந்த மீர்ஸா காலிப்பையும் தன் அவையில் உடனிருக்கச் செய்தார். இவரது கவிதைகள் பெரும்பாலும் சோகத்தில் ஆழ்ந்தவையாக இருக்கும். 1858-இல் பிரிட்டிஷ் அரசால் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். ஐந்து வருடங்கள் ரங்கூனிலேயே இருந்து கடைசியில் நோய்வாய்ப்பட்டு 1862-இல் மரணமடைந்தார். இவருடைய கஜல்களில் பிரசித்தி பெற்ற ஒன்று பின்வருமாறு:
‘ஹை கித்னா பத்ரசீப் ஜபர் தப்ன் கேலியே
தோ கஜ் ஜமீன் பீஹ் மில்ன சகீ கூயெ யார்மெ!’
‘ஜபர் எவ்வளவு துரதிஷ்டமுடையவன்
காதலியின் வீதியில் அடக்கமாக
ஆறடி நிலம் கூடக் கிடைக்கவில்லையே’

3. ஹஸ்ரத் மோஹானி (1878-1951)
கஜல்களில் காதல் முத்திரையைப் பதித்து கவிஞனுக்கும் ரசிகனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்தவர்களில் இவர் முன்னோடியாகச் சொல்லப்படுகிறார்.

4. அக்பர் ஹீசைன் அக்பர் (1846-1921)
குறுகிய காலமே நீதிபதியாகப் பணியாற்றி, உடல்நிலை காரணமாக இடையிலேயே பதவி விலகியவர். மேற்கத்திய கலாச்சாரத்தின் நகலான வாழ்க்கை முறையை எதிர்த்தவர். ஆங்கிலம், உருது இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்.

5. இப்னே இன்ஷா (1927-1978)
சோஷலிச சித்தாந்தத்தைக் கொண்டிருந்தவர். இயற்கையை நேசிப்பவராக, பூங்காக்களில் தனது பொழுதைக் கழித்தவர். பயணம் செய்வதிலும், நகைச்சுவையாக எழுதுவதிலும் திறன் உள்ளவர்.

6. அஹமத் ஃபராஸ்
1931 இல் பிறந்த இவர், பெஷாவர் பல்கலைக் கழகத்தில் உருதுவிலும், ஃபார்ஸியிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆழமான சமூக அரசியல் பார்வை உள்ளவர். தீவிர இலக்கியவாதிகளையும், சராசரி வாசகனையும் ஈர்க்கும் விதமாகக் கவிதைகள் படைத்தவர். பெஷாவர் இஸ்லாமியாக் கல்லூரியில் உருது, ஃபார்ஸி மொழிகளுக்குப் பேராசிரியராக இருந்தது முதல், நேஷனல் புக் பவுண்டேஷனின் தலைவர் வரையில் பல பதவிகளை வகித்தவர்.

7. ஜாவீத் அக்தர்
ஹிந்தித் திரையுலகில் மிகவும் பரிச்சயமான பெயர் ஜாவீத் அக்தர். இவரது எழுத்துப் பணியினை மூன்று பிரிவுகளாகச் சொல்லலாம். அவை, திரைக்கு கதை, வசனம் எழுதுதல், திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் என்பன. ஃபிலிம்ஃபேர் விருதினை ஆறு முறை பெற்றிருக்கும் ஜாவீத், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

8. ஷாரியார்
இவரது இயற்பெயர் கன்வார் இக்யாக் முஹம்மத் கான். 1936 இல் பரேலியில் பிறந்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்ந்து படித்து, அதே பல்கலைக் கழகத்தில் உருதுப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், மராத்தி, பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

9. நீதா ஃபாஸ்லி
1938-இல் டெல்லி நகரில் பிறந்தவர். மகாராஷ்டிரா உருது அகாதெமியின் சிறந்த கவிஞர் பட்டத்தையும், 1998 இல் சாகித்ய அகாதெமி விருதினையும் பெற்றவர். தனக்கென்று எல்லைகளை வைத்துக் கொள்ளாமல் நகர்ப்புறம், கிராமப்புறம், மனிதநேயம் எனப் பன்முகத்தன்மை கொண்டதாகவே இவரது கவிதைகள் இருக்கின்றன.

10. கதீல் ஷிஃபாயி (1919-2001)
அவுரங்கசீப் கான் என்பது இவரது இயற்பெயராகும். கதீல் என்பது இவரின் புனைப்பெயராகும். ‘ஷிஃபாயி’ என்பதனை இவரின் குருவான உஸ்தாத் ஹக்கீம் முஹம்மத் ஷிஃபாவிலிருந்து எடுத்து தன் பெயரோடு இணைத்துக் கொண்டார். 1947 முதல் திரைப்படங்களுக்கு கஜல் எழுதத் தொடங்கி எளிமையான வார்த்தைகளில் எழுதிப் பெயர் பெற்றார்.

கஜல் இசைக் கருவிகள்
“ஹிந்தித் திரைப்படங்களாக ‘கீத்’ களில் மூழ்கியிருந்த ரசிகர்கள், போதை தருகின்ற கஜலில் மயங்கத் தொடங்கினார்கள். நட்சத்திர விடுதிகளிலும், பணக்காரத் தனமாக சந்திப்புகளிலும் அந்தஸ்தின் அடையாளமாக இருந்த கஜலை சராசரி ரசிகனிடம் அழைத்து வந்தவை இசைத் தட்டுக்களே ஆகும். எழுபதுகளின் மத்தியில் அமைதியாக இந்தப் புரட்சி நடந்தது. இசைத் தட்டு நிறுவனங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் கஜல்களைப் பரவச் செய்தன. மென்மையான குரலில் ஹார்மோனியம், தபேலா, வயலின் போன்ற இசைக்கருவிகளின் பின்னணியில் இதயத்தின் மெல்லிய நரம்புகளை மீட்டி, தாலாட்ட வைக்கும் கஜலில் மக்கள் சொக்கிப் போனார்கள்”26 என்று எடுத்துரைக்கிறார் அபுல் கலாம் ஆசாத்.

“கஜல் கவிதையை இருபாலரும் பாடலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் காதல் அனுபவங்களை, சிறப்புக் குறிப்பாக காதலின் சோகத்தை சுகமான கவிதைகளாக வடித்தெடுக்கலாம். பெண்களில் ஆபிதா பர்வீன் போன்ற மிகச் சிறந்த கவிஞர்களை அடையாளப்படுத்தலாம்”27 என்று ரயிஸ்கமர் தெரிவிக்கின்றார்.

இன்றைய கஜல்கள்

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கஜல் வடிவமானது காதலையும், இறைமையையும் மட்டும் பாடாமல், வாழ்வின் எதார்த்தங்களையும் தெளிவாகப் படம் பிடித்திட வேண்டும் என்று ஹலி என்பவர் குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்பர் அல்லாபதி, இக்பால் போன்றோர் இக்கொள்கையை வலியுறுத்தினர். அதோடு மட்டுமல்லாது சமூக, அரசியல், மனிதம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் பாடப்படுதலாக கஜல் இருந்திட வேண்டும் என்றனர்”28 என்று சாதிக் முகம்மது கூறுகிறார்.

கஜல் கவிதையில் ஆழம் கண்ட கவிஞர்களான மஜாஸ், ஜாஸ்பி, அக்தர் அன்சாரி, ஃபாயிஜ், மஜ்ரூத் சுல்தான்புரி, பல்வேஸ் ஷாஹிதி, குலாம் ரப்பானி தாபன், ஜான் நிஸார் அக்தர் போன்றோரெல்லாம் காதலை மட்டுமே மையமாக வைத்துப் படைக்காமல், சமூக அரசியல் புத்துணர்வுக் கொள்கைகளைக் கொண்டு, மனித மனத்தோடு எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக உறவாடக் கூடிய வகையில் கஜல்களைப் படைத்து வெற்றிவாகைச் சூடினர்.

இன்றைய இளம் கவிஞர் பட்டாளமானது, கஜலின் பரிமாணங்களைச் செழுமைப்படுத்திடும் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. “ஹசன்நயிம், பானி, ஷா தம்கானாத், கிருஷ்ணா மோகன், ஷாரியார், பஷீர் பத்ர், மக்மூர் சய்தி போன்றோர் இன்றைய குறிப்பிடத்தக்க கஜல் கவிஞர்கள் ஆவர். ஹசன் நயிம் டெல்லியில் ‘கஜல் அகாதெமி’ என்ற ஒன்றை நிறுவி நவீன கஜல் வடிவத்தை இளைய தலைமுறைக் கவிஞர்கள், வாசகர்களிடையே பரப்பி வருகிறார்”29 என்று இந்திய ஒப்பிலக்கிய நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழில் கஜல் கவிதையின் வடிவ முயற்சி மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. உருது, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களே கஜல் கவிதையின் வடிவத்தை உள்வாங்கி அதைப் பிற மொழிகளில் அறிமுகம் செய்ய இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை உருது பாரசீக மொழிகளில் தேர்ச்சியும், புலமையும் மிக்கவர்களாக இசுலாமியர்களே திகழ்வதால், தமிழில் கஜல் கவிதையின் அறிமுக முயற்சி இவர்களின் புலமையைச் சார்ந்தே அமைகிறது.

அப்துல் ரகுமான் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, மதுரையில் பிறந்து, தியாகராயர் கல்லூரியில் தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவராதலின், தமிழில் கஜல் வடிவக் கவிதையை அறிமுகம் செய்யும் முயற்சி அவருக்கு சாத்தியமாகியுள்ளது.

‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.

காதல் சாளரம்
திறந்தேன்
கடவுள் தெரிந்தார்


இறைவா!
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்


உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன்


உன் அழகு
உனக்கு வரம்
எனக்கோ சாபம்


மனிதனின்
ஆதிப் பாவம்
காதல்தான்

உன் மெளனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு


காதல் என்பது
கண்ணாடியும் கல்லும்
ஆடும் ஆட்டம்


விலக்கப்பட்ட கனியை
உண்பதற்காகவே
படைக்கப்பட்டவர் நாம்
வா, உண்போம்.


- இவை அனைத்தும் கவிக்கோ அப்துல் ரகுமானின் மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற கஸல் கவிதைத் தொகுதியிலிருந்து மேற்கோளுக்காக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்:

• இறைவா
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன


• என் கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

• நீ
என்னை
மறந்துபோய்
நினைத்திருக்கலாம்
துன்பத்தில்
நினைக்கும்
பக்தன்போல

• நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்


• உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது

• கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்


• இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது


• வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக


• சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்


• என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்


• என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Sep 24, 2012 7:49 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down


கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by கலைவேந்தன் Sun Jul 15, 2012 3:14 pm

மிக்க நன்றி ரமேஷ்..

எனக்கு வெண்பாக்களும் குறட்பாக்களும் மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளுமே கைவந்த கலை..

ஹைக்கூ மற்றும் இந்த கஸல் எல்லாம் புதியன.. கற்றுக்கொள்ள முயல்கிறேன்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 15, 2012 4:01 pm

கலைவேந்தன் wrote:மிக்க நன்றி ரமேஷ்..

எனக்கு வெண்பாக்களும் குறட்பாக்களும் மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளுமே கைவந்த கலை..

ஹைக்கூ மற்றும் இந்த கஸல் எல்லாம் புதியன.. கற்றுக்கொள்ள முயல்கிறேன்..

எனக்கு வெண்பாக்களும் குறட்பாக்களும் மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளுமே கைவந்த கலை..
உங்களுக்கு இதெல்லாம் எளிமை என்றால் தானாகவே ஹைக்கூவும் கஸலும் வாய்க்கப்பெறும். பாராட்டுகள். மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 16, 2012 12:47 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by கலைவேந்தன் Mon Jul 16, 2012 10:52 pm

3.
மடிதேடிவந்த குயில்
மருண்டுவிழுந்தது..
விருப்புடன் வந்த குழந்தை
வெறுப்பை ஈன்றது..
உன் நிழலில் வாழவந்த நான்
குயிலா குழந்தையா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by அ.இராமநாதன் Tue Jul 17, 2012 12:56 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 17, 2012 2:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by கலைவேந்தன் Thu Jul 19, 2012 9:35 pm

கஸலின் முயற்சிப்படிகளில் இருக்கும் எனது கஸலைப் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.. விரைவில் இன்னுமொன்று எழுதுவேன்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 24, 2012 7:51 pm

முதற்பதிவி்ல் கஸல் பற்றிய தோற்றம் வளர்ச்சி விரிவாகப் பதியப்பட்டுள்ளது.

நண்பர்கள் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

கஸல் என்றால் என்ன?  - Page 2 Empty Re: கஸல் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum