தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

3 posters

Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:37 am

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை
இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு
கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச்
செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு
தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த
ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச்
செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக்
காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு
ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது.

தண்ணீர்
என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட
பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு
கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை
பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள்
அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும்
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை
அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ
பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக
எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில
அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும்
உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப்
பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு
புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
அப்துல்
கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து
மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல்
கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே
வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும்
மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட
நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை
திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம்
சாட்டுகின்றனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:37 am

எழுதியுள்ள நூல்கள்
அக்னிச் சிறகுகள்
எழுச்சித் தீபங்கள்
இந்தியா 2020
india 2010
appiram pirnthadhu oru puthiya kulanthi
அப்துல் கலாம் குறித்த ஆவணப்படம்


அப்துல்
கலாம் குறித்த - A Little Dream (a life documentary on Dr.APJ.Abdul
Kalam) எனும் பெயரில் ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. மின்வெளி ஊடகப்
பணிகள் (MINVELI MEDIA WORKS) நிறுவனம் தயாரித்த இந்த ஆவணப்படத்தை
P.தனபால் என்பவர் இயக்கி இருக்கிறார்.
11ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: ஜூலை 25, 2002
பதவி நிறைவு: ஜூலை 25, 2007
நிர்வாகி
மூத்த உறுப்பினர்
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி
டாக்டர் அப்துல் கலாம்

“உன்
விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ
சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய்
என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும்
விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம்
இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த
தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.
உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு
காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு
செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின்
ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி
பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற
முடியும்.”
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:38 am

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்க வேண்டிப்
புறப்படும் எமது கனவுகள்!

“இந்தியா
உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப்
போவதில்லை! இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை! வல்லமைதான் வல்லரசுகளின்
மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற
வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”


“3000
ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து,
எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று
கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ்,
பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு
உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க
வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும்,
கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே
திணிக்க வில்லை.”


“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி
ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி
வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே
சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ,
மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன்
போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப்
பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப்
பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில்
இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம்
என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:38 am

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை


டாக்டர்
அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த
முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப்
பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல்
ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் •பான் பிரௌன் [Wernher Von Braun].
அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக
ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் •பான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும்
ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட்
படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி,
பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி
செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா
போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது! 1980 ஆண்டுகளில்
ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research &
Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக்
கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக
ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990
ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப்
பட்டது.

1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம்
வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.
அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன. முதலாவது வேலை
இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக்
கூடத்தில் {Directorate of Technical Development & Production,
(DTD&P) Ministry of Defence]. அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம்
[Indian Air Force]. இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல்
தேர்வும் கிடைத்தது. முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக
இருக்க வில்லை. அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி
பெறவில்லை.

தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில்
தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல்
தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது! தன்னை
யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர்
இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை! கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா
கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை
நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார். அப்போது சிவானந்தா
கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;
விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ
என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ
பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய
வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச்
செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான
காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின்
விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:38 am

டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி•பிக் அஸ்ஸிஸ்டென்ட்
வேலை கிடைத்தது. அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி
ஹோவர்கிரா•ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார். அவர்
முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா•ப்டில் முன்னாள் இராணுவ
மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார். அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர்
அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.
சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக்
கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில்
பணியாற்றினார். பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள்
ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3
ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்.. SLV-3
ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து,
மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார். 1980
ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு
SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும்
சுழல்வீதியில் இடப் பட்டது. அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல்
டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு
மதிப்பை அளித்தது.

ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும்
இருமுறை இறைவனைத் துதிக்கிறார். அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை
காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார்.
ஸ்ரீராகத்தை ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன்ரென்று
பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த
வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற
பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி
முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள்
முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting
Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டாக்டர் அப்துல்
கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு தேச நேசர். அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப்
படுகிறார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:38 am

இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம்

“ஏன்
இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன? ஏன் இந்தியாவில்
நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம்?
நாம் பெருமைப்பட வேண்டிய உன்னத நாட்டைச் சேர்ந்தவர்! பிரமிக்கத்தக்க
பல்வேறு வெற்றிக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொள்ள
மறுக்கிறோமே. ஏன் ? மரணங்கள், பயங்கர மூர்க்கச் செயல்கள், நோய்கள், மனிதக்
குற்றப்பாடுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாக அறிவித்து நமது மகத்தான
வெற்றிச் சாதனைகள் அவற்றில் மூழ்கி விடுகின்றன.”

“இமயத்தின் உச்சியை
எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை
அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி
தேவைப்படுகிறது.”

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

”என்னால்
மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை
வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான்
செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத்
தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்.”


“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால்
கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில்
இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள்
நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச்
செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )

“முன்னேறிவரும்
ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர்
வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு
மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ,
விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும்
செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!
ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல்
நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம்
தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை
மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

பிரிட்டீஷ் இந்தியாவில் முதன்முதல் ராக்கெட் பயன்பட்ட வரலாறு

கி.பி
1044 ஆண்டை ஒட்டி இடைக்காலச் சைனாவில் முதன்முதல் ராக்கெட் கண்டுபிடிக்கப்
பட்டதாக அறியப் படுகிறது. ஆனால் 1232 இல் சைனா மங்கோலியரை எதிர்த்துப்
போரிட்ட போதுதான் மெய்யாக அவை போர்க்களத்தில் நேராகப் பயன்படுத்தப் பட்டன.
1696 இல் ராபர்ட் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர் எப்படி ராக்கெட்
குழல்வடிவுகள் [Rocket Moulds] பண்ணுவது, எப்படி எரிசக்தி உந்து தூள்களை
[Rocket Propellants] தயாரிப்பது, எப்படி அவற்றின் பரிமாணங்களைக்
கணக்கிடுவது என்று விளக்கிடும் ஈரடுக்குத் தொகுப்பு நூலை எழுதினார். மைசூர்
புலிமன்னர் எனப்படும் திப்பு சுல்தான் கைவசம் 1750 ஆம் ஆண்டில் 5000
எறிகணைகள் இருந்ததாகத் தெரிகிறது. 1780 இல் இந்திய அரசருடன் போரிட்ட
“குண்டூர் யுத்தத்தில்” [Battle of Guntur] முதன்முதல் பிரிட்டீஷ் படைகள்
இந்திய எறிகணைகளால் தாக்கப் பட்டன. 1799 ஆம் ஆண்டில் மைசூரில் பிரிட்டீஷ்
ராணுவத்துடன் நடந்த போரில் ஹைதர் அலி, அவரது புலிப் புதல்வன் திப்பு
சுல்தான் இருவரும் மூங்கில் கம்புகளில் கட்டி விடுத்த எறிகணை
ராக்கெட்டுகள், எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தன. திப்பு சுல்தான்
தோற்றுப் போன பின்பு பிரிட்டீஷ் படையினர் ஸ்ரீரங்க பட்டணத்தில் 700
பயன்படும் எரியா ராக்கெட்டுகளையும், 9000 பயன்பட்டுக் காலியான எரிந்த
ராக்கெட்டுகளையும் கண்டதாக அறியப் படுகிறது. எட்டு அங்குல நீளம், ஒன்றரை
முதல் மூன்று அங்குல விட்டமுள்ள இரும்புக் குழல் எறிகணைகள் 4 அடி நீளமுள்ள
மூங்கில் முனைக் கம்புகளில் கட்டப் பட்டிருந்தன. அவை எறிந்து ஏவப்படும்
போது சுமார் 3000 அடித் தூரம் பாய்ந்து செல்லும். அவை யாவும் மைசூர்
தாரமண்டல் பேட்டையில் தயாரிக்கப் பட்டவை.


மைசூர்ப் போருக்குப்
பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம்
காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய
எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி
மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812-1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப்
போருக்குப் பிறகு அமெரிக்க-கனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு
எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது. வில்லியம் காங்கிரீவ்
தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச்
சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல்
படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள்
மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்)
எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம்
ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற
எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846-1848 ஆண்டுகளில் நடந்த
மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil
War (1861-1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:39 am

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் ராக்கெட் திட்டங்கள்


1982
ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of
Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல்
கலாம் பணி புரிந்த போது, கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம்
[Integrated Guided Missile Development Program (IGMDP)] அவர் பொறுப்பில்
விடப்பட்டது. அத்திட்டமே இந்திய ராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக
விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள்
ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை
யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள்
ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் ஏவுகணைத் திட்டங்களின் பெயர்கள் என்ன ?

1. நாக ஏவுகணை - ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை (NAG - An Anti-Tank Guided Missile)

2.
பிருத்வி ஏவுகணை - தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளத் தாக்கு
ஏவுகணை - (Prithvi - A Surface-to-Surface Battle Field Missile)

3. ஆகாய ஏவுகணை - தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash - A swift Medium Range Surface-to-Air-Missile)


4.
திரிசூல் ஏவுகணை - விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும்
குறுந்தூர ஏவுகணை (Trishul - A Quick Reaction Surface-to-Air Missile with
a Shorter Range)

5. அக்கினி ஏவுகணை - எல்லாவற்றையும் விடப்
பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni - An Intermediate Range Ballistic
Missile, The Mightiest)

துணைக்கோள் ஏவும் ராக்கெட் திட்டத்தில்
(SLV-3) கூட்டுப் பணிசெய்து டாக்டர் அப்துல் கலாம் பெற்ற அனுபவம்
தனித்துறை-பொதுத்துறை தொழில் நிறுவாகங்களை இணைத்து ஏவுகணைச் சாதனங்கள்
செய்யப் பாதை வகுத்தது. அச்சமயத்தில் திட்ட நிர்வாகத் தலைவராக இருந்த
அப்துல் கலாம் மற்ற நிதிப் பொறுப்பு, நிர்வாக ஆணைப் பணிகளின் பொறுப்புகளைக்
கீழிருந்த மேலதிகாரிகளிடம் விட்டுவிட்டு முக்கிய வினைகளை மட்டும் தான்
மேற்கொண்டார்.

பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை


இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேம்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“என்னால்
மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை
வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான்
செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத்
தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்.”

டாக்டர் அப்துல் கலாம்

“கனவு காண், கனவு காண்,
கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.
சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு
கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய
வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )

”முன்னேறிவரும்
ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர்
வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு
மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ,
விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும்
செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! னால்
சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல்
நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம்
தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை
மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

1974
மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு
அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும்
இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப்
போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும்
போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப்
போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள்
நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத்
தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல்
விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித்
தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம்
செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக
முடித்தது.

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

1982
ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of
Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல்
கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித்
திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட
அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு
வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை
படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம்
பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு
பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத்
திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


1. நாக்
தாக்குகணை - இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை
[NAG - An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் :
4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப்
பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

2.
பிரித்வி தாக்குகணை - தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச்
சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle
Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும்
ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து
செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி
கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300
கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப்
பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ.
பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.
பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன்
சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.
பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே
கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது
250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

3. ஆகாஷ்
தாக்குகணை - தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash - A
swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான
மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5
மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25
கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும்
பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ்
ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள்
1997 இல் முடிந்தன.


4. திரிசூல் தாக்குகணை - விரைவில் ஏகித்
தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) -
A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை
தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த்
துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள்
அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

5.
அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை
(Agni - An Intermediate Range Ballistic Missile, The Mightiest),
அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].
உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக
(அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல்
முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்
பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும்
அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில்
ஒரு மைல் கல்லை நட்டது..

பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

இந்தியாவின்
முதல் "அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை" சூரியா [Intercontinental
Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள்
ஆரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப்
பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப்
பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று
எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000
கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு
20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம்
[130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும்
மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ
எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும்
பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,
துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle
(PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

"இந்தியத் திருநாட்டின்
ஜனாதிபதிக்ஷ அரசியல்வாதி அல்ல... அணு விஞ்ஞானி' என்பது உலக வரலாற்றில்
வேறெந்த நாட்டுக்கும் வாய்க்காத அற்புதப் பேறு.

அடிவயிற்றில் கலக்கத்துடன் இந்தியாவை வியந்தும் பயந்தும் கவனித்து வருகிறது உலக நாடுகள்.

இந்தியாவின் காலடி நகரத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தமிழனுக்கு குடியரசுத் தலைவர் எனும் முடிசூட்டி கெஜரவித்திருக்கிறது இந்தியா.

"இந்தியாவை வல்லரசாக மாற்றுவதே என் லட்சியம்' என்பதே ஜனாதிபதி அப்துல்கலாமின் பிரகடனம்.

அதற்கேற்றாற்போல கலாமுக்கு ஒரு கனவு உண்டு. 2020ம் ஆண்டுக்குள் "லட்சிய இந்தியா' என்கிற ஒரு மகத்தான புதுயுகக் கனவுதான் அது.

கலாமின்
இந்தக் கனவு மெய்ப்படவேண்டும் என்பதற்காக 500 அறிஞர்களுடன் கைகோர்த்து
அதற்கான விஞ்ஞானப் பட்டறை அமைத்து பணியாற்றிக்கொண்டிருந்தார். அதேவேளை
ஜனாதிபதி பொறுப்பேற்ற பிறகும்கூட தனது விஞ்ஞான ஆராய்ச்சிப்பணி தொடரும்
என்று கூறி அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

பொக்ரான்
சோதனை, செயற்கைக்கோள் சாதனை என இந்தியாவின் பாதாளத்திலும், ஆகாயத்திலும்
அப்துல்கலாம் நிகழ்த்திய அற்புதங்களால்தான் உலக வல்லரசுகள் தங்களது வாலைச்
சுருட்டி வைத்திருக்கின்றன.

வானளாவிய சாதனைகள் செய்தாலும் கலாம்
எளிமையான மனிதராகவே எப்போதும் காட்சியளிக்கிறார். காரணம்க்ஷ சின்ன
வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதால், எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்ற பண்போடு திகழ்கிறார்.

விஞ்ஞானத்தில் மட்டுமல்ல. எழுத்துத் துறையிலும் வித்தகர் கலாம்.

அப்துல்
கலாம் தன் வாழ்க்கைச் சரிதத்தை "அக்னிச் சிறகுகள்' என்ற தலைப்பில்
ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இன்றைய தேதிக்கு மிகப் பரபரப்பாக
விற்று வரும் நூல் இதுதான்.

இந்நூலின் முதல்பக்கம் தொடங்கி கடைசிப்
பக்கம் வரை கண்ணீர் இழையோடும். அந்த அளவுக்கு கலாமின் இளம் பருவம்
கஷ்டங்களின் பிடியிலிருந்தது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by சிசு Tue Feb 22, 2011 2:42 pm

அப்துல்கலாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் முன்மாதிரி.
அக்னிச்சிறகுகள் ஒவ்வொரு புத்தகத்திற்கும் முன்மாதிரி.

அக்னிச்சிறகுகள் நூல் தனிப்பட்ட ஒருவரின் சுயசரிதை அல்ல.
அது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைத்திட்டத்தின் வெற்றிச் சரித்திரம்.

நல்ல பகிர்வு யூஜின்... நல்ல மனிதரையும், சாதனை நிமிடங்களையும் நினைவுகூர முடிந்தது.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by அரசன் Tue Feb 22, 2011 3:14 pm

சரியான ஒரு சிறந்த பதிவு ...
நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் Empty Re: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum