தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எச்சில் ராணிகள்...

+2
சிசு
வ.வனிதா
6 posters

Go down

எச்சில் ராணிகள்...  Empty எச்சில் ராணிகள்...

Post by வ.வனிதா Tue Feb 22, 2011 7:15 pm

[You must be registered and logged in to see this image.]

இருட்டைப் பூசிப் பகட்டாய்
ஜொலிக்கும் விடுதிகளான
விலைமாதர்கள் விற்றுப்போன
உடலை நிதம் தூக்கித்திரியும்
பரிதாபம்!

மனையகன்று வெளிவரும்
தலைவன் ஒருத்தனுக்கு
மட்டும் பரத்தையாக
வாழ்ந்த எம் முன்னோர்கள்
இன்றிருந்தால் எங்களை
இப்பாவத்தில் விழவிடாமல்
தீயிலிட்டுப் பொசித்திருப்பர்....

நாங்கள் இரவில் நிர்வாணமாக
உழைத்தால்தான் கிழிசலற்று
பகலில் உடுத்த ஆடை
வாங்க வசதியாவோம் !

காமக் குரோதிகள் உமிழ்ந்த
எச்சில் மட்டுமே எங்களின்
இலையைக் கழுவத் தெளிக்கும்
முதல் தண்ணீராய் போனது...

தெருநாயைக் காணும்
கண்களை வைத்து எங்களைப்
பார்க்கும் குடும்ப விளக்குகளைப்
பார்த்தால்தான் மானவெட்கமனைத்தும்
காரித் துப்புகிறது எங்களை...

என்ன செய்வது?
காம ஜடங்களின் கைகளில்
சிக்காமல், குடும்பவிளக்குகளனைத்தும்
கற்போடு இருக்க வேண்டி ,
நாங்கள் திரியாகி கற்பில்
தீக்குளிக்கிறோம்!

எங்களை ஏசும் சமுதாயம்
ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம்
பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...

நாட்டின் நியாயதர்மங்களனைத்தும்
நகையாடித் திரிகின்றன...
என்ன செய்வது?
நகைப்பிற்கிடமாக வாழ்க்கைப்பட்ட
எங்களின் வாழ்வு வழியற்றுப்
போனதே!

கல்விப் பணியில் பல்கலைக்கழகம்,
படித்த மாணவர்களுக்கே
பட்டமளிப்பு விழா!
பல்கலைக்கழகம் மட்டும் பார்த்த
கண்ணிற்கு அழும்பில்லாமல்
அப்படியே இருக்கும்!

ம்ம்ம்...
நாங்களும் பல்கலைக்கழகம்தான்,
சற்றே வித்தியாசம் ....
எங்களிடம் படுத்தவர்களை விடுத்து
கழகத்திற்குப் பட்டமளிப்பு விழாநடத்தி
"விபச்சாரி" என்ற பட்டமளிக்கும்
பொதுமக்கள்.....

காமப் புண்கள் அனைத்தும்
உமிழ்ந்து உறிஞ்சி எங்களை
எச்சில் ராணிகளாக்கிவிட்ட
சூழ்நிலையில் கண்ணாடிமுன்
நிற்கக்கூட கூச்சமாக உள்ளது....

வருங்காலங்களில் ,
குப்பாய்க் கள்ளர்கள் அனைவரும்
கோவலன்களாகிவிட்டால்
நாங்களும் கறைபடியா
கண்ணகிகளாக ஒளிர்விடுவோம்!


Last edited by க.வனிதா on Wed Feb 23, 2011 12:55 pm; edited 1 time in total
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by சிசு Tue Feb 22, 2011 7:30 pm

ஓமகசியா... ஜல்ஜல்.. டங்க்டங்க்... ஆப்ஷ்.. கச்ரி... கில்மாங்கோ... ஜிப்ஸி..

என்ன முழிக்கிறீங்க... உங்கள பாராட்ட (எனக்கு தெரிந்த) தமிழில் வார்த்தைகளே இல்லை. அதனாலதான் இப்படி பாராட்டறேன்.

விலைமாதர்கள் குறித்த கவிதைகளை சிலர் எழுத நானும் வாசித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலுமிருந்து நாகரீகமான மொழியிலும், நடையிலும் இந்த கவிதை தனித்தோங்கி நிற்கிறது.


ரசித்த வரிகள்:

//காமக் குரோதிகள் உமிழ்ந்த எச்சில் மட்டுமே எங்களின்
இலையைக் கழுவத் தெளிக்கும் முதல் தண்ணீராய் போனது...//

அவர்கள் இந்த நிலைக்கு வர என்ன காரணம் என்பதை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும்.... Amazing...

//எங்களை ஏசும் சமுதாயம் ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம் பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...//

//வருங்காலங்களில் ,
குப்பாய்க் கள்ளர்கள் அனைவரும் கோவலன்களாகிவிட்டால்
நாங்களும் கறைபடியா கண்ணகிகளாக ஒளிர்விடுவோம்!//

வனிதா Rocks...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 7:35 pm

வாழ்த்த வார்த்தைகளே இல்ல அருமையா வார்த்தைகளால் கவி மழை பொழிந்திருக்கீங்க

//எங்களை ஏசும் சமுதாயம் ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம் பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...//

[You must be registered and logged in to see this image.] மனம் திறந்து ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க வாழ்த்த வார்த்தைகளே வரல... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by செய்தாலி Tue Feb 22, 2011 7:41 pm

தாசி பெண்மைகளின் வாழ்கையை சொல்லும்
உயிருள்ள வரிகள் அற்புதம் நல்ல சமூக சிந்தனை பாராட்டுக்கள்

//மனையகன்று வெளிவரும்
தலைவன் ஒருத்தனுக்கு
மட்டும் பரத்தையாக
வாழ்ந்த எம் முன்னோர்கள்
இன்றிருந்தால் எங்களை
இப்பாவத்தில் விழவிடாமல்
தீயிலிட்டுப் பொசித்திருப்பர்...//

கடந்த நூற்றாண்டுகளில் தாசிகள் அத்தியாவசமான தேவைப் இருந்தார்கள் இருக்கப்பட்டார்கள் அதை மறத்தல் கூடாது (அதன் நினைவுச் சின்னங்க்லாகதான் இன்னும் வடநாடுகளில் வாழும் தாசித் தொழிலாளர்கள் )

இற்று இருப்பவர்கள் தாசி அல்ல
சிலர் வறுமைக்காக வேறு சிலரோ பணத்திற்காக சில மதிக்ட்டவர்களோ உடல் சுகத்திற்காக
வறுமைக்கு உடலை இரவல் கொடுப்பாள் கலந்ங்கமற்றவள்
மேல் சொல்லபட்டவர்தான் மற்ற இரண்டு வர்க்கம்த்தான் கேடுகெட்ட தாசிகள்

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by கவிக்காதலன் Wed Feb 23, 2011 6:58 am

”அவர்களின்” உணர்வுகள் வரிகளாய்....

நல்லா இருக்கு...............
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by வ.வனிதா Wed Feb 23, 2011 1:01 pm

மிக்க நன்றி சிசு , யூஜின், செய்தாலி, மற்றும் அனிஷ் அனைவருக்கும் மிக்க நன்றி ! உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் ! மிக்க நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by அரசன் Wed Feb 23, 2011 1:17 pm

சிறப்பான வரிகள் ...
எந்த இடதிலும் பிசிறு தெரியவில்லை ..
அவரிகளின் வலிகளையும் ரணங்களையும்
கூறிய விதம் சிறப்பு ...

சில ஜென்மங்கள் பல ஜென்மங்கள் எடுதாலும் திருந்தா ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by வ.வனிதா Wed Feb 23, 2011 1:18 pm

ஆம் ! அரசன் ! சில ஜென்மங்கள் சொல்லித்திருந்துவதில்லை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எச்சில் ராணிகள்...  Empty Re: எச்சில் ராணிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum