தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

5 posters

Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by வ.வனிதா Thu Feb 24, 2011 11:54 am



ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.



எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!
நன்றி குணசேகரன் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 12:00 pm

பயமாகத்தான் இருக்கு

//எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by வ.வனிதா Thu Feb 24, 2011 12:06 pm

பயம் எதற்கு ! நாம் உயிருடன் இருக்கும்போது மரணம் வரப்போவதில்லை ! மரணம் வரும்போது நாம் இருக்கப் போவதில்லை ! எதற்குமினியஞ்சேல் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by அ.இராமநாதன் Thu Feb 24, 2011 12:17 pm

உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள்
10-10-2010 ல்
மின்விளக்குகளை அணைத்து வைத்தோம்
---------------------------------------------------
மீண்டும் 11-11-2011ல் இரவு 11 மணி 11 நிமிடங்களுக்கு அவ்வாறே செய்திடலாம்
----------------------------------
சரியா....ஏதோ நம்மலானது!!!


Last edited by அ.இராமநாதன் on Thu Feb 24, 2011 12:19 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 12:18 pm

வ.வனிதா wrote:பயம் எதற்கு ! நாம் உயிருடன் இருக்கும்போது மரணம் வரப்போவதில்லை ! மரணம் வரும்போது நாம் இருக்கப் போவதில்லை ! எதற்குமினியஞ்சேல் !
90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 12:20 pm

அ.இராமநாதன் wrote:உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள்
10-10-2010 ல்
மின்விளக்குகளை அணைத்து வைத்தோம்
---------------------------------------------------
மீண்டும் 11-11-2011ல் இரவு 11 மணி 11 நிமிடங்களுக்கு அவ்வாறே செய்திடலாம்
----------------------------------
சரியா....ஏதோ நம்மலானது!!!
விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தனும், ஏதோ எல்லோரும் செய்கிறாங்க என்றில்லாமல் நாம் முழு மூச்சோடு செய்ய வேண்டும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by அ.இராமநாதன் Thu Feb 24, 2011 12:33 pm

நாம் செய்யவேண்டியது என்ன….

· மலைகளையும், காடு களையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

· நிலத்தையும், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகாலிப்டஸ் போன்றவற்றை வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.

· நன்கு பசுமையான அடர்ந்து வளரும் மரங்களை நட வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது.

· தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் விஷ வாயுக்களான மித்தைல்ஐசோசயனைட், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, நுண் துகள்கள் போன்றவைகட்டுப்படுத்த வேண்டும். இதற்கு இப்பகுதியில் அதிக மரங்களை நட வேண்டும்.

· ஈயமில்லாத பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

· மரபுசாரா எரிசக்தி அதாவது காற்று, சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத் தொழிற்சாலைகளை அதிகம் அமைக்க வேண்டும்.

· பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறு சுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.

· அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்தினால் தான் காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

· காற்றின் அவசியம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 12:46 pm

அ.இராமநாதன் wrote:நாம் செய்யவேண்டியது என்ன….

· மலைகளையும், காடு களையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

· நிலத்தையும், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகாலிப்டஸ் போன்றவற்றை வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.

· நன்கு பசுமையான அடர்ந்து வளரும் மரங்களை நட வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது.

· தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் விஷ வாயுக்களான மித்தைல்ஐசோசயனைட், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, நுண் துகள்கள் போன்றவைகட்டுப்படுத்த வேண்டும். இதற்கு இப்பகுதியில் அதிக மரங்களை நட வேண்டும்.

· ஈயமில்லாத பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

· மரபுசாரா எரிசக்தி அதாவது காற்று, சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத் தொழிற்சாலைகளை அதிகம் அமைக்க வேண்டும்.

· பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறு சுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.

· அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்தினால் தான் காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

· காற்றின் அவசியம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும்.

கடைபிடிப்பது கடினம் தான் என்றால் நாம் முயற்சிப்போம்...

முயற்சி திருவினையாக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by அரசன் Thu Feb 24, 2011 12:48 pm

அரசுக்கு இதுமேல எங்க கவனம் வரப்போகுத்து ...
நாமதாங்க முயற்சிக்கணும் ...
பகிர்வுக்கு நன்றி வனிதா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 12:50 pm

அரசன் wrote:அரசுக்கு இதுமேல எங்க கவனம் வரப்போகுத்து ...
நாமதாங்க முயற்சிக்கணும் ...
பகிர்வுக்கு நன்றி வனிதா
ஆமாங்க நாம தான் இதனை செய்யனும்.. 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by அரசன் Thu Feb 24, 2011 12:53 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:அரசுக்கு இதுமேல எங்க கவனம் வரப்போகுத்து ...
நாமதாங்க முயற்சிக்கணும் ...
பகிர்வுக்கு நன்றி வனிதா
ஆமாங்க நாம தான் இதனை செய்யனும்.. 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 64660
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by கவிக்காதலன் Thu Feb 24, 2011 9:47 pm

தகவலுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum