தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள்.
2 posters
Page 1 of 1
பயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள்.
· சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள் அணிவதே சிறந்தது. பாதணிகளில் இரண்டு செ.மீட்டர்(சுமார் அரை இஞ்ச்) அளவுக்குப் பின்னங்கால் உயரம் அதிகம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், இரண்டு இன்ச், மூன்று இன்ச் உயரத்துக்கும் அதிகமாக ஹைஹீல் பாதணிகள் அணிந்தால் உடலில் பல பிரச்னைகள் வந்து சேரும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
முக்கியமாக, இடுப்பு வலி வரும். குதிகால் உயரமான பாதணிகளைப் அணியும் பொழுது, உடல் எடை முழுவதும் பூமியில் நிற்காமல் இடுப்பு, மூட்டு போன்ற பகுதிகளில் குவிந்து முழுபாரமும் உடலிலேயே தங்குகிறது. இதனால் இடுப்பு வலி, தொடைக்குக் கீழே கால் பகுதிகளில் வலி வந்து உயிரை எடுக்கும்.
மேலும், குதிகால் செருப்பு போட்டு நடக்கத் தெரியாத ஆரம்பக்காலத்தில் கொஞ்சமாக கால் இடறினால்கூட, கால் பகுதியில் பாதிப்பு பலமாக இருக்கும்.
நம் நாட்டு பெண்களில் சிலர், வெளிநாட்டுப் பெண்கள் போல் ஸ்டைலாக ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் எப்போதும் ஹை ஹீல்ஸ் அணிவதில்லை. வேலைக்குப் போகின்ற பெண்கள் மட்டும் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள். மற்ற குடும்பப் பெண்கள் ஏதாவது முக்கிய விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மட்டுமே ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்வார்கள். அவர்களைக் கூட உயரமான குதிகால் பாதணிகள் அணிய வேண்டாம் என்றுதான் டாக்டர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
அப்படியே ஹைஹீல்ஸ் அணியும் மேற்குலக பெண்கள் கூட அதிகம் சாப்பிடாமல் உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் உடலின் எடையை சீராகப் பராமரித்து ஹை ஹீல்ஸ் அணிவதன் மூலம் வரும் பிரச்சினையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். நம்நாட்டு பெண்களிடம் அது மாதிரியான விஷயங்கள் இல்லாததால் குதிகால் செருப்பை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அழகு என்பது உடையிலும், செருப்பிலும் இல்லை. அது பழக்கவழக்கங்களிலும் மனதிலும் இருக்க வேண்டும்.
· பொதுவாக மாரடைப்பு என்பது மூன்றாவது முறை வந்தால் காப்பாற்ற முடியாது என்று ஒரு தவறான கருத்து அனைவரிடமும் காணப்படுகிறது. மூன்றாவது முறை மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்தால் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று சொல்வது உண்மை அல்ல. மக்களிடம் இப்படி ஒரு தவறான அபிப்பிராயம் பரவலாக உருவாகிவிட்ட.து. மூன்று முறைக்கு மேல் மாரடைப்பு வந்தவர்கள் பலரும் உயிரோடு இருக்கவே செய்கிறார்கள்.
முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டவர்களை முதல் நான்கு மணி நேரத்திற்குள் (மருத்துவர்கள் இதனை கோல்டன் ஹவர் – பொன்னான நேரம் என்று அழைக்கிறார்கள்) மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டால் அந்த மாரடைப்பிலிருந்து தப்பிப்பதுடன் அடுத்து வரும் மாரடைப்பிலிருந்தும் தப்பிக்க நிறைய வாய்ப்பு உண்டு.
மாரடைப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தினசரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவில் கட்டுப்பாடு, தினமும் அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். எந்தப் பிரச்னையையும் சந்திக்கிற மனதைரியம் வேண்டும். மனக்கவலையை விட்டொழிக்க வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற மனநிலையோடு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் மாரடைப்பு வருவதைத் தடுத்துவிடலாம்.
· இரவில் பால் சாப்பிடும் காரியத்தில் பலரிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சில மருத்துவர்கள் இரவில் நன்றாக தூக்கம் வர, தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பால் அருந்த கூறுவார்கள். சிலர் இரவில் தூங்கும் முன் பால் அருந்துவது சரியல்ல என்பார்கள்.
இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார் யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன. என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேன் என்கிறது என்ற கவலை உள்ள்வர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடுவது நல்லது. பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.
ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறைய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மேலும் அதிகமாக உடல் பருக்க அது ஏதுவாகும்.
· நம் நாட்டின் முக்கிய உணவு வகை அரிசியாகும். இதில் இருவகைகள் உள்ளன. ஒன்று பச்சரிசி மற்றொன்று புழுங்கல் அரிசி.
பச்சரிசி சாப்பாடு பார்ப்பதற்கு அழகாக வெள்ளை வெளேர் என்று பூப்போல இருக்கும். அதைச் சாப்பிட ஆரம்பித்தவர்கள், வேறு அரிசியைத் தொடமாட்டார்கள். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் பச்சரிசியில் மாவுச்சத்து தவிர, வேறு எதுவும் இல்லை.
ஆனால், புழுங்கல் அரிசி சாப்பாடு பார்ப்பதற்குப் பழுப்பாக இருக்கும். நெல்லை அவிக்கும்போது நெல்லில் உள்ள சத்துக்கள் எல்லாம் அரிசியில் இறங்கிவிடுவதால், அந்த அரிசி நிறம் மாறுகிறது. பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், நிறையச் சத்து உள்ளது புழுங்கல் அரிசியில்தான்.
தொகுப்பு: முஹம்மது அலி ஜின்னா (நன்றி: குமுதம்)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள்.
நல்லா தகவல் நன்றி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» ஆரோக்கிய குறிப்புகள்
» பயனுள்ள குறிப்புகள் -
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
» பயனுள்ள குறிப்புகள் -
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum