தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாண மொழி..!
+9
செய்தாலி
சக்தி
கவிக்காதலன்
நிலாமதி
rajeshrahul
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
சிசு
வ.வனிதா
13 posters
Page 1 of 1
நாண மொழி..!
[You must be registered and logged in to see this image.]
பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
இதழ் மறுத்துக்
கண்கள் சிரிக்கும்
ஓர் மாய இன்பம்!
ஏற்றுக்கொள்கிறேன்....
ஆனால் என்னிடம் மட்டும்
ஏன் நொடிக்கொருமுறை
வீசிக்கொண்டே இருக்கிறாய் ?
உன் நாண மொழிகளை???
உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல்
எதற்காக காதோரத்தில்
ஓரிரு முடியை மட்டும்
சுற்றி விட்டு என் நெஞ்சை
நஞ்சால் தைக்கிறாய்??
நிலா உலாவும் வான் வீதியா
உன் நெற்றி ?
ஒரே சுருக்கத்தில் எனை
மடித்து மடக்கிவிட்டாயே ?
உன் கண்கள் இரண்டும்
மீன்களா என்ன ?
என் இதயத்தைப்
புழுவாக்கித் தூண்டிலில்
கட்டி நீரினுள் விட்டதும்
சட்டென்று இழுத்துவிட்டது ?
உன் கண்களில் வழியும்
கண்ணீரா நான்?
பன்னீர் போல் உன்
கன்னக்குழியில் தேக்கிவைத்து
நீந்துகிறாயே?
அப்படி என்ன பாவம் செய்தேன் ?
நான் சுவாசிக்க வேண்டிய
காற்றை உன் நாசி
திருடிச் செல்கிறது?
உன் காதணிக்கு என்
இதழோடு என்ன வேலை ?
எப்போது பார்த்தாலும்
என் இதழ் உச்சரிப்பிலேயே
ஊஞ்சல் ஆடுகிறது ?
உன் இதழ்கள் இரண்டும்
மதுபானம் அருந்திவிட்டதா?
சற்று நேரத்தில் என்னை
உன்னில் வீழ்த்திவிட்டதே ?
உன் முகம் ரோஜா மலரோ ?
முகப்பருக்கள் அனைத்தையும்
பனித்துளி என்றெண்ணி
சேர்த்து வைத்திருக்கிறது ?
காற்றில் கதைபேசும்
உன் கைகள் இரண்டும்
இப்போது என்னை
விலைபேசுகின்றன,
உன் இதயத்திற்காக ....
இத்தனையாண்டுகளாய்
நான் என் நிழலோடுதான்
பயணித்தேன் !
நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !
தெரியாமல் தான் கேட்கிறேன்
ஏன் என்னை இம்சிக்கிறாய் ?
என் நிழலாய் வரும்
உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?
புரியவில்லையடி....!
பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
இதழ் மறுத்துக்
கண்கள் சிரிக்கும்
ஓர் மாய இன்பம்!
ஏற்றுக்கொள்கிறேன்....
ஆனால் என்னிடம் மட்டும்
ஏன் நொடிக்கொருமுறை
வீசிக்கொண்டே இருக்கிறாய் ?
உன் நாண மொழிகளை???
உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல்
எதற்காக காதோரத்தில்
ஓரிரு முடியை மட்டும்
சுற்றி விட்டு என் நெஞ்சை
நஞ்சால் தைக்கிறாய்??
நிலா உலாவும் வான் வீதியா
உன் நெற்றி ?
ஒரே சுருக்கத்தில் எனை
மடித்து மடக்கிவிட்டாயே ?
உன் கண்கள் இரண்டும்
மீன்களா என்ன ?
என் இதயத்தைப்
புழுவாக்கித் தூண்டிலில்
கட்டி நீரினுள் விட்டதும்
சட்டென்று இழுத்துவிட்டது ?
உன் கண்களில் வழியும்
கண்ணீரா நான்?
பன்னீர் போல் உன்
கன்னக்குழியில் தேக்கிவைத்து
நீந்துகிறாயே?
அப்படி என்ன பாவம் செய்தேன் ?
நான் சுவாசிக்க வேண்டிய
காற்றை உன் நாசி
திருடிச் செல்கிறது?
உன் காதணிக்கு என்
இதழோடு என்ன வேலை ?
எப்போது பார்த்தாலும்
என் இதழ் உச்சரிப்பிலேயே
ஊஞ்சல் ஆடுகிறது ?
உன் இதழ்கள் இரண்டும்
மதுபானம் அருந்திவிட்டதா?
சற்று நேரத்தில் என்னை
உன்னில் வீழ்த்திவிட்டதே ?
உன் முகம் ரோஜா மலரோ ?
முகப்பருக்கள் அனைத்தையும்
பனித்துளி என்றெண்ணி
சேர்த்து வைத்திருக்கிறது ?
காற்றில் கதைபேசும்
உன் கைகள் இரண்டும்
இப்போது என்னை
விலைபேசுகின்றன,
உன் இதயத்திற்காக ....
இத்தனையாண்டுகளாய்
நான் என் நிழலோடுதான்
பயணித்தேன் !
நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !
தெரியாமல் தான் கேட்கிறேன்
ஏன் என்னை இம்சிக்கிறாய் ?
என் நிழலாய் வரும்
உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?
புரியவில்லையடி....!
Last edited by வ.வனிதா on Sat Mar 19, 2011 5:09 pm; edited 1 time in total
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாண மொழி..!
ஹூம்... இப்போதுதான் உங்களின் இன்னொரு கவிதையைப் படித்துமுடித்தேன். அதுக்குள்ள இன்னொன்னா??? ரைட்டு...
ரசித்த வரிகள்:
//பெண்களால் பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக உணர்வு - நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
இதழ் மறுத்துக் கண்கள் சிரிக்கும் ஓர் மாய இன்பம்!//
கவிதை.. புகைப்படத்திலிருக்கும் அந்தப்பெண்ணின் நாணத்தைப் போலவே கொள்ளை அழகு...
//உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?//
கவிதைக்கு தலைப்பா முக்கியம்..???
ரசித்த வரிகள்:
//பெண்களால் பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக உணர்வு - நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
இதழ் மறுத்துக் கண்கள் சிரிக்கும் ஓர் மாய இன்பம்!//
கவிதை.. புகைப்படத்திலிருக்கும் அந்தப்பெண்ணின் நாணத்தைப் போலவே கொள்ளை அழகு...
//உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?//
கவிதைக்கு தலைப்பா முக்கியம்..???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நாண மொழி..!
சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கியுள்ள வரிகள் மிகவும் அழகாக உள்ளது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நாண மொழி..!
நன்றி ! மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாண மொழி..!
அருமையான முத்தான கருத்துக்களை உள்ளடக்கிய வரிகள் வாழ்த்துக்கள் தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாண மொழி..!
கவி வரிகள் மிகவும் அழகாக உள்ளது. அருமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நாண மொழி..!
பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
மிக்வும் அருமை . படமும் தங்க்கள் வரிகளும். ............. :héhé:
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!
பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...
மிக்வும் அருமை . படமும் தங்க்கள் வரிகளும். ............. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நாண மொழி..!
//நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !//
கவிதை சூப்பரோ சூப்பர்...!!
பி.கு: படத்திலிருக்கும் பி....... சூப்பர்...!
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !//
கவிதை சூப்பரோ சூப்பர்...!!
பி.கு: படத்திலிருக்கும் பி....... சூப்பர்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நாண மொழி..!
ஆகா என்ன ஒரு வர்ணை பெண்மையே அழகு
அதற்குமேல் அழகு சேர்க்கிறது உங்கள் வரிகள்
வரிகளின் நிஜங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது புகைப்படம்
அதற்குமேல் அழகு சேர்க்கிறது உங்கள் வரிகள்
வரிகளின் நிஜங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது புகைப்படம்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாண மொழி..!
செய்தாலி wrote:ஆகா என்ன ஒரு வர்ணை பெண்மையே அழகு
அதற்குமேல் அழகு சேர்க்கிறது உங்கள் வரிகள்
வரிகளின் நிஜங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது புகைப்படம்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நாண மொழி..!
பெண்மையின் மென்மையை
சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
வண்ணக் கவியாக்கி-அவன்
கண்ணில் தோன்றிய காதலை
எண்ணித் தவிக்கும் விதம் அருமை...
சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
வண்ணக் கவியாக்கி-அவன்
கண்ணில் தோன்றிய காதலை
எண்ணித் தவிக்கும் விதம் அருமை...
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: நாண மொழி..!
sivarathy wrote:பெண்மையின் மென்மையை
சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
வண்ணக் கவியாக்கி-அவன்
கண்ணில் தோன்றிய காதலை
எண்ணித் தவிக்கும் விதம் அருமை...
இந்த கவியிலிருக்கும் வரிகள் தான் புகைப்படத்தையும் அழகுற செய்துள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாண மொழி..!
[You must be registered and logged in to see this image.]
--
உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல் ...
இது - சேர்த்து முடிக்காமல் என்றிருக்கலாம்
-
பனித்துளி என்றிண்ணி
- என்பது என்றெண்ணி என இருத்தல் நலம்
தவறுகள் சுட்டிக் காட்டப்படுவது, சுவை கூட்டலுக்கே
-
கவிதையும் படமும் மிக அழாக உள்ளன
-
--
உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல் ...
இது - சேர்த்து முடிக்காமல் என்றிருக்கலாம்
-
பனித்துளி என்றிண்ணி
- என்பது என்றெண்ணி என இருத்தல் நலம்
தவறுகள் சுட்டிக் காட்டப்படுவது, சுவை கூட்டலுக்கே
-
கவிதையும் படமும் மிக அழாக உள்ளன
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நாண மொழி..!
தவறுகளை சுட்டி காட்டுவதில் தவறில்லைஅ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
--
உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல் ...
இது - சேர்த்து முடிக்காமல் என்றிருக்கலாம்
-
பனித்துளி என்றிண்ணி
- என்பது என்றெண்ணி என இருத்தல் நலம்
தவறுகள் சுட்டிக் காட்டப்படுவது, சுவை கூட்டலுக்கே
-
கவிதையும் படமும் மிக அழாக உள்ளன
-
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாண மொழி..!
தோழி நான் ரசித்து ரசித்து படித்து மிக வியந்தேன் ,,,,
என்ன ஒரு வரிகள் இப்படியும் எழுதலாம் என்று
எனக்கு தோன்றவே இல்லை ..
மிக அற்புதமாய் கச்சிதமாய் வார்த்தைகளை
கையாண்டு கவி நயம் பூசி எங்களுக்கு
கொடுத்த உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்
என்ன ஒரு வரிகள் இப்படியும் எழுதலாம் என்று
எனக்கு தோன்றவே இல்லை ..
மிக அற்புதமாய் கச்சிதமாய் வார்த்தைகளை
கையாண்டு கவி நயம் பூசி எங்களுக்கு
கொடுத்த உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாண மொழி..!
தோழி அந்த படம் அழகு ,....
யார் என்று தெரிந்து கொள்ளலாமா ??????
யார் என்று தெரிந்து கொள்ளலாமா ??????
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாண மொழி..!
அவங்களா சிக்குபுக்கு படத்தில் வரும் ஆர்யா காதலிக்கும் ஒரு பெண் ! என் தவறுகள் உணரவைத்த இராமநாத ஐயாவுக்கு மிக்க நன்றி ! திருத்திக்கொள்கிறேன் ! ஆனால் முடிக்காமல் என்பது வார்த்தை சிக்காமல் இருக்கிறது மழிக்காமல் என்பது ஆண்களுக்கு முடியெடுப்பதையும் பெண்களுக்கு எண்ணெய் வைத்து சீராக வாறுவதும் போன்றது எனவே அந்த வார்த்தை சரியே ! அடுத்த பிழை நான் திருத்திவிடுகிறேன் ! நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நாண மொழி..!
[You must be registered and logged in to see this image.]
--
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க,
ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான அம்ரிதாராவின் தங்கை ப்ரீத்திகா நடித்திருக்கிறார்.
--
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க,
ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான அம்ரிதாராவின் தங்கை ப்ரீத்திகா நடித்திருக்கிறார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நாண மொழி..!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» கண் மொழி
» மொழி
» ஓஷோ மொழி
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» கண் மொழி
» மொழி
» ஓஷோ மொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum