தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்னியப் பெண் ஜனாஸாவின் முகத்தை ஆண்கள் பார்க்கலாமா?
Page 1 of 1

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண் மையித்தின் முகத்தை வருபவர்களுக்கெல்லாம் (ஆண், பெண்) திறந்து காட்ட இஸ்லாம் அனுமதிக்கின்றதா?
- சகோதரி. ஜியா சித்தாரா.
தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மார்க்கத்தை அறிந்துப் பேணி நடக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ள சகோதரி ஜியா சித்தாரா அவர்களுக்கு அல்லாஹ் மேன்மேலும் ஞானத்தை வழங்குவானாக.
சாதாரண நிலையில் அன்னிய ஆண்/பெண்களின் முகத்தை அன்னிய பெண்/ஆண்கள் சரியான காரணமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
"நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்" என்று திருமறை 24:30,31 வசனங்கள் அறிவுரை கூறுகிறது.
''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மதீ, அபூதாவூத்)
"நானும் மைமூனா(ரலி)வும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்தார்கள். ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?'' என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''நீங்கள் இருவரும் குருடிகளா?; நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டதாக உம்முஸலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
மேற்கண்ட அறிவுரைகளிலிருந்து ஓர் ஆண் அன்னியப் பெண்ணையோ, ஒரு பெண் அன்னிய ஆணையோ அவசியமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எதிரில் வருவது பெண், அல்லது ஆண் என்று தெரிந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை/ஆணைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இது தான் அன்னியரைக் காண்பதைக் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கும் அறிவுரையாகும்.
அவசிய நிமித்தம் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதில் தவறில்லை. மருத்துவரிடம் நோயைச் சொல்லும் போது அவரை நோக்கியே சொல்ல வேண்டியிருக்கும். வியாபாரம், மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் பொது இடங்களில் பணி போன்ற அவசிய நிமித்தம் கருதி நேரடியாக உரையாட வேண்டியச் சந்தர்ப்பம் நிகழுமானால் அதில் தவறில்லை. மார்க்க சம்பந்தமாக பெண்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி கேள்வி கேட்டுள்ளனர். நபி(ஸல்) அவர்களும் பெண்களின் கேள்விகளுக்கு அவர்களை நோக்கி விளக்கமளித்துள்ளார்கள்.
ஜனாஸாவின் முகத்தைப் பார்த்தல்
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்திற்குக் காரண, காரியங்களில் அடிப்படையில் மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. அவசியக் காரணங்கள் ஏதுமின்றி தடை செய்யப்பட்ட விஷயங்களுக்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்னியப் பெண் ஜனாஸாவின் முகத்தை ஆண்கள் பார்க்கலாமா?
அன்னிய ஆணின் முகத்தை அன்னியப் பெண்களும் அன்னியப் பெண்ணின் முகத்தை அன்னிய ஆண்களும் பார்ப்பதை இஸ்லாம் பொதுவாகத் தடை செய்கிறது.
இந்தத் தடைக்கு அவசியக் காரணங்கள் மட்டுமே விதிவிலக்காக அமையும். அந்த வகையில் அன்னிய ஜனாஸாவின் முகத்தைப் அன்னிய ஆண் /பெண்கள் பார்ப்பது எவ்வகையில் அவசியம் என்பதற்குப் பார்க்க நினைப்பவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
''எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை..." என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 1244)
அபூபக்ர்(ரலி) 'ஸுன்ஹ்' எனுமிடத்திலுள்ள தம் உறைவிடத்திலிருந்து ஒரு குதிரை மீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையைவிட்டு) இறங்கிப் பள்ளிவாசலுக்குள் நுழைத்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றினால் போர்த்தப்பட்டிருக்க, அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக் கவிழ்த்து அவர்களை முத்தமிட்டு அழுதார்கள். பிறகு, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரண்டு இறப்புகளை ஒன்று சேர்க்கவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்துவிட்டீர்கள்'' என்று கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 1241, 3667, 4452)
இங்கு தந்தை ஜனாஸாவின் மூடிய முகத்தை மகனும் நபி(ஸல்) அவர்களின் ஜனாஸாவின் முகத்தை அபூபக்ர்(ரலி) அவர்களும் திறந்துப் பார்த்ததிலிருந்து மூடப்பட்ட ஆண் ஜனாஸாவின் முகத்தைப் ஆண் பார்வையாளர்கள் பார்க்க அனுமதியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. இதிலிருந்துப் பெண் ஜனாஸாவின் மூடிய முகத்தைப் பெண் பார்வையாளர்களும் திறந்துப் பார்த்துக் கொள்ள இஸ்லாத்தில் தடை இல்லை என்பதை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
ஆனால், பெண் ஜனாஸாவின் முகத்தை அன்னிய ஆண்கள் பார்க்கலாம் என்றோ, ஆண் ஜனாஸாவின் முகத்தை அன்னியப் பெண்கள் பார்க்கலாம் என்றோ நேரடியாக அனுமதித்து அறிவிப்பு எதையும் நாமறியவில்லை. விசாரணை ஏற்படும் சூழலில் இன்னார் மகள், இன்னார் மனைவி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள - இறந்தவர் அவர் தானா? என்ற சந்தேகத்தைத் தீர்க்கும் முகமாக அன்னியப் பெண்/ஆண் ஜனாஸாவின் முகத்தைப் பார்க்கலாம். மற்றபடி அன்னியப் பெண்/ஆண், அன்னிய ஆண்/பெண் ஜனாஸாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே இஸ்லாத்திலிருந்து பெறும் படிப்பினையாக உள்ளது.
(இறைவன் மிக்க அறிந்தவன்)

Similar topics
» முகத்தை மூடி பர்தா அணிந்து சென்ற பெண் பிரான்ஸில் கைது
» Wax மியூசியம் பார்க்கலாமா?..
» சந்திரனை தொட்டு பார்க்கலாமா .,
» ஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா?
» உன் பூ முகத்தை முத்தமிட…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum