தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு நாளில் பெருநாள்!
Page 1 of 1
ஒரு நாளில் பெருநாள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படி அறிவுப்பூர்வமாக கேட்டவர்களே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் என்று பிரிந்து நிற்கிறார்கள்; ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எப்படியோ அது எனக்குத்தேவையில்லை.
இதனால் எனக்கு குழப்பமாக உள்ளது. இன்று பெருநாள் தொழுவதா? இல்லை நாளை தொழுவதா? என்று குழப்பம். அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று பெருநாள் மட்டும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் வேறுபடுமா? ஒரே நாளில் பெருநாள் கிடையாதா? ஷரிஅத் அடிப்படையில் ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை என்று கொண்டாட, குறிப்பாக தொழ வேண்டும்? விளக்கம் தேவை.
வஸ்ஸலாம் - முகம்மது சாதிக்.
தெளிவு:
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!
மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற அவாவில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் முகம்மது சாதிக் அவர்களுக்கு மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.
சமூகத்தில் பாமர முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமின்றி அறிஞர்களுக்கிடையேயும் நீண்டகாலமாக நிலவும் குழப்பமான ஒரு விஷயத்தைத் தொட்டு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒத்தக் கருத்து இல்லாத விஷயங்களில் ஓரளவாவது தெளிவு ஏற்படும் வரை மார்க்க அறிவு முழுமையாகப் பெறாதப் பாமர முஸ்லிம்கள் எந்நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே இத்தகைய ஒன்றுக்கு மேற்பட்டக் கருத்துகள் நிலவும் விஷயங்களில் சந்தேகங்கள் எழ அடிப்படைக் காரணமாகும். இத்தகைய விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் எனில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
தொலைதூரத் தகவல் தொடர்பு ஏற்படாத காலத்தில் அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அவர்கள் முடிவு செய்யும் நாளே பெருநாளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அக்காலத்தில் ஆசியா கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் எந்நாளில் பெருநாள் கொண்டாடினார்கள் என ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தெரியாது.
ஆனால், இன்று உலகம் சுருங்கி விட்டதோ எனும் அளவுக்கு உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தையும் அந்த நிமிடத்திலேயே உலகம் முழுவதும் அறிவித்து விடும் அதிவேக நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை இக்கால மக்கள் பெற்றிருக்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என முஸ்லிம் மக்கள் வெவ்வேறு நாட்களில் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு வித்தியாசமான நாட்களில் பெருநாளைக் கொண்டாடுவது அதிவேகத் தகவலாக அறிவிக்கப்பட்டு இதனால், முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒரே நாளில் ஏன் பெருநாள் கொண்டாடுவதில்லை? என அநேகரிடையே கேள்வியை எழுப்புகிறது.
சகோதரர் எழுப்பியுள்ளக் கேள்வி இன்று அவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகம் முழுமையாக வியாபித்துக் காணப்படும் குழப்பமே இக்கேள்வியின் ஊற்று கண்ணாகும். சகோதரர்கள் முதலில் அடிப்படையாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் என்பது எப்பொழுதுமே தெளிவானது தான். அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே சில வேளைகளில் ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன. அது அவரவர்களின் ஆய்வு திறன், கல்வியறிவு, ஒரு பிரச்சனையை ஆழமாகக் கூர்ந்து நோக்கும் திறமை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றது.
இவ்வாறு கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களைப் பொறுத்தவரை அதனை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருபவர்களுக்கு அவ்வாய்வுகள் தவறாக இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு நன்மை கிடைத்து விடுகின்றது. சரியாக இருந்து விட்டால் இரு நன்மையும்.
இங்கு மற்றவர்களைக் குறித்துத் தான் பிரச்னையே. மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்துப் பின்பற்ற இயலாதப் பாமரன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் கிடைத்து விட்டால் இங்கு கேட்கப்பட்டுள்ள பெருநாள் போன்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் கொண்ட விஷயத்தில் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதுத் தெளிவாகி விடும்.
இஸ்லாம் எப்பொழுதுமே இபாதத் சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. அது தொழுகையாக இருந்தாலும் சரி, ஹஜ்ஜாக இருந்தாலும் சரி, ஜக்காத்தாக இருந்தாலும் சரி.
இதன் அர்த்தம், இஸ்லாம் எச்செயலின் மூலமும் சமூகத்தில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த நாடுகின்றது என எடுத்துக் கொள்ளலாம். அது போன்றே இந்தப் பெருநாள் விஷயத்திலும் தற்போதைய குழப்ப நிலைக்கு இஸ்லாம் ஒரு தீர்வை முன்வைக்கிறது.
'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)
இதனை மனதில் கொண்டு இன்றைய முஸ்லிம்களின் சமூகச் சூழலை எண்ணிப் பார்த்தால் ஒட்டு மொத்தமாக இப்பெருநாள் விஷயத்தில் அது பின்பற்றப்படாமையைக் கண்டு கொள்ளலாம். அதற்காக பிளவுப்பட்டு வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதில்லை. சமூக ஒற்றுமைக்காக அறிஞர்கள் தங்கள் பிடிவாதங்களைச் சற்றுத் தளர்த்திக்கொண்டு (அருகருகே அமைந்த ஊர்களிலாவது) ஒரே நாளில் பெருநாள் கொண்டாடக் கருத்தொற்றுமை ஏற்படுத்த முன்வர வேண்டும், இறைவன் அருள் புரியட்டும். நாம் வேணவாவுடன் ஏங்கிக் கிடக்கும் உலகளாவிய இஸ்லாமிய இமாரத் ஒன்று ஏற்பட்டு, இதற்கு முடிவான தீர்வு கிடைக்கும்வரை பாமர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் சார்ந்திருக்கும் அந்தந்த ஊர் ஜமாஅத் முடிவு செய்யும் நாளில் அவ்வூர் மக்களுடன் இணைந்துப் பெருநாள்/தொழுகை நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும்.
(இறைவன் மிக்க அறிந்தவன்)

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அர்த்தமுள்ள பெருநாள்
» உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» எங்கள் ஊர் பெருநாள் கொண்டாட்டம்...பகுதி 1
» நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum