தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுன்னாவின் பார்வையில் வட்டி!

2 posters

Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 10:42 pm

வட்டியின் தீமைகள் குறித்து முஸ்லிம்கள் அறிந்திருப்பதுபோல் வட்டியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பரிதாப நிலையைக்கண்டு பொதுநல விரும்பிகளும் வட்டியின் கோரப்பிடியை உணரத்துவங்கியுள்ளனர்! எனவே, வட்டியின் வகைப்பற்றிய மேலதிக விளக்கம் தேவையில்லை எனக்கருதி நேரடியாக விஷயத்திற்குச் சென்று விடுவோம்.
வணிகம் - விலைவாசி ஏற்ற இறக்கம். மற்றும் சந்தை நிலவரம், நாணய மதிப்பின் ஏற்றத்தாழ்வு, பதுக்கல் ஆகியவை இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளதோ இதுபோன்றே நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்தன!
"சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள் - புகாரி 2177, முஸ்லிம் 3227, திர்மிதீ, நஸயீ, அஹ்மத், முவத்தா மாலிக்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 10:42 pm

இதே அடிப்படையில் பண்ட மாற்றம் செய்யும்போதும் ஒரே இனப் பொருள்களை சரிக்கு சரியாகவே உடனுக்குடன் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் ''(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?'' என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் ''(எங்கே) உமது தங்கத்தைக் காட்டும் அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்'' என்று கூறினார்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ''இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக்கொள்வது வட்டியாகும், உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்'' என்று கூறினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 10:43 pm

அறிவிப்பவர் மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) (நூல்கள் - புகாரி 2134, 2170, 2174 முஸ்லிம் 3231, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)
இதேக் கருத்தில் பல அறிவிப்புகள் உள்ளன. அனைத்திலும் நாம் பெறும் படிப்பினை ஒன்றுதான். நாணய மாற்று, பண்ட மாற்று வணிகத்தில் உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும்போது அதில் வட்டி ஏற்படாது என்றும், உடனுக்குடன் அல்லாமல் ஒன்று ரொக்கமாகவும் ஒன்று தவணையாகவும் விற்கும்போது அதில் வட்டி ஏற்படும் என்று மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளங்குகிறோம்!
அதாவது, தங்கத்தை வெள்ளிக்கு விற்கும்போது உடனுக்குடன் அவற்றை கைமாற்றிக்கொண்டால் வியாபாரம் முடிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று வெள்ளியை எடுத்து வந்து தருகிறேன். அல்லது இன்னும் ஒரு வாரத்தில் தருகிறேன் என்று தவணை கேட்டால் அந்தத் தவணை நேரத்தில் சந்தை நிலவரம் மாறி நாணய மதிப்பீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, விற்றவர் பாதிக்கப்படுவார் அல்லது வாங்கியவர் பாதிக்கப்படுவார். விலை ஏறினாலும், விலை குறைந்தாலும் இரண்டுமே வட்டியாகிவிடும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 10:44 pm

அதுபோல், தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் சரிக்குச் சரியாக - ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காமல் உடனுக்குடன் விற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வு இருந்தாலும், தவணை ஏற்பட்டாலும் அது வட்டியாகிவிடும்.
''உடனுக்குடன் நிகழ்ந்த (நாணயமாற்று வணிகத்)தில் வட்டி கிடையாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3255, நஸயீ 4580, அஹ்மத்)
ஆகவே, கைக்குக் கை - உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும் வணிகத்தில் வட்டி ஏற்படாது என்பதை சுன்னாவிலிருந்து விளங்குகிறோம். இதே அளவுகோல் பண்ட மாற்று வியாபாரத்திற்கும் பொருந்தும் என்பதால் அது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லை!
தவணை - கடன்
''வட்டி என்பதே கடனில் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல் - முஸ்லிம் 3254)
அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் ''தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும், வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்கு சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்'' என்று கூறியதை நான் செவியுற்றேன். அவர்களிடம் ''இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்களே?'' என்று கேட்டேன். அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ''நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது நீங்கள் கூறிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?'' என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை, இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, 'வட்டி என்பது கடனுக்கு (நாணயமாற்று செய்யும்போது)தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களே என்னிடம் கூறினார்கள் என்றார்கள். அறிவிப்பவர் அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்) (நூல்கள் - புகாரி 2178, முஸ்லிம் 3253, 3256)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by RAJABTHEEN Sat Feb 26, 2011 10:44 pm

உடனுக்குடன் கைமாறாமல் ஒன்று ரொக்கமாகவும், மற்றொன்று கடனாகவும் இருந்தால் தவணை நாள்களின் அடிப்படையில் காலம் கடக்கும்போது சந்தை நிலவரத்தின் நாணய மதிப்பில் மாற்றம் ஏற்பட்டு வட்டியாகிவிடும் என்றே மேல்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்கமுடிகிறது.
இப்போது கடனுக்கு வருவோம்
கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு வாங்குவதும், வசதி படைத்தோர் மனிதாபிமானத்துடன் கடன் கொடுத்து உதவுவதுமாகும். கடன் வாங்கியோருக்கு அவகாசம் வழங்குங்கள் என்றும் முடிந்தால் கடனில் பாதியைத் தள்ளுபடி  செய்யுங்கள் அல்லது கடனையே தள்ளுபடி செய்யுங்கள் என்றும் குர்ஆன், சுன்னா கூறுகின்றன! கடன் வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதல்ல!
இந்நிலையில், சென்ற ஆண்டு ஒருவரிடம் 10.000 ரூபாய் கடன் வாங்கியதை இந்த ஆண்டு திரும்பச் செலுத்தும்போது இன்றைய சந்தை நிலவரத்தின் பணமதிப்பின் ஏற்றத்தாழ்வை கணக்கிட்டு 10.800 ரூபாயாகக் கொடுப்பதும், கேட்பதும் வட்டியாகும் என்றே மேல்கண்ட நபிவழி அறிவிப்புகளிலிருந்து நாம் விளங்கியுள்ளோம். (கடன் வாங்கியவர் விரும்பி கூடுதலாகக் கொடுத்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது)
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்க!
வங்கி, அஞ்சல் அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனத்தில் சேமிக்கும் சிறு சேமிப்புப் பற்றியும் பின்னர் அலசுவோம்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by rajeshrahul Sun Feb 27, 2011 12:58 am

பகிர்வுக்கு நன்றி
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

சுன்னாவின் பார்வையில் வட்டி!  Empty Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum