தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

5 posters

Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by RAJABTHEEN Tue Mar 01, 2011 1:59 am

தற்சமயம்
வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில்
தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி
மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. பற்றியும்




இந்த
தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன்
வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும்
பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே
இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது.
அவற்றை இங்கு காணலாம்.



MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Microsoft-Office-2010


1.வண்ணக் கட்டமைப்பை மாற்றுக:
இது
ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப்
பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள
மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை
பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப்
பலரும் எண்ணுகின்றனர்.



குறிப்பாக
கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை
யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த
வழிகள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும்.
முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ்
என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம்,
ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



இப்போது
கிடைக்கும் கலர் ஸ்கீமில் ஒரு கீழ்விரி கட்டம் தரப்படும். இங்கு
உங்களுக்குத் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு
வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.



2. ரிப்பனை மாற்றி அமைக்க:
ஆபீஸ்
2007 தொகுப்பில், முதல் முதலாக ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட
போது பலரும் இதனை விரும்பவில்லை. புதியதாக ஒன்றைத் தந்து பயன்படுத்து என்று
சொன்னால், பொதுவாக யாருக்குமே ஒரு வெறுப்பு வரும். ஆனாலும் வேண்டா
வெறுப்பாக இதனை அனைவரும் பயன்படுத்தினார்கள்.


MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Office-2010


இப்போது
ஆபீஸ் 2010 தொகுப்பிலும் இது தரப்பட்டுள்ளது. இதனை ஏன் நமக்கேற்றபடி
வைத்துக் கொள்ளக் கூடாது? என்ற நம் கேள்விகளுக்கேற்ப, மைக்ரோசாப்ட்
நிறுவனம், இந்த ரிப்பனை வளைக்க சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழிகள்
மூலம், ஆபீஸ் 2003 தொகுப்பிலிருந்து, புதிய தொகுப்பிற்கு மாறுபவர்களுக்கு
ஏற்படும் சில தொல்லைகளைத் தீர்க்கலாம்.



இதில்
ஒருவர் அடிக்கடி பயன்படுத்தாத சில கட்டளைகளை இதிலிருந்து நீக்கலாம்.
அல்லது அவற்றைத் தனியே பிரித்து, டேப் ஒன்றில், இன்னொரு இடத்தில்
வைக்கலாம். கட்டளைகளின் பெயர்களைக் கூட மாற்றலாம். இதில் இன்னொரு சிறப்பான
அம்சமும் உள்ளது. இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட ரிப்பனை, சேவ் செய்து
இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் 2010 தொகுப்பிலும் அமல் படுத்தலாம்.
உங்கள் வீட்டு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் ஆபீஸ் தொகுப்பில்
மாற்றப்பட்டதனை, அலுவலகக் கம்ப்யூட்டருக்கும், லேப் டாப்
கம்ப்யூட்டருக்கும் கொண்டு செல்லலாம். மாற்றும் வழிகள் அனைத்தும்
http://news.officewatch.com/t/n.aspx?a=968 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது.



3. குயிக் அக்செஸ் டூல்பார்:
ரிப்பனை
நம் வழிக்குக் கொண்டு வந்தது போல, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சில
கட்டளைகளை, அவை எந்த ரிப்பன் டேப்பில் இருந்தாலும், விரைவாகப் பெற வேண்டும்
என விரும்புவோம். இங்கு தான் குயிக் அக்செஸ் டூல் பார் நம் உதவிக்கு
வருகிறது. ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வசதியினை
அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை.

இந்த டூல்பாரில் Save, Save As, Undo, Redo, Email, New Comment மற்றும் New Document
போன்ற அனைத்து கட்டளைகளையும் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம். அதே போல
இந்த டூல்பாரையும், ரிப்பனுக்கு மேலாக இல்லாமல், அதன் கீழாக வைப்பது,
இவற்றை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.



4. லைவ் பிரிவியூ இயக்கலாமே!:
வேர்ட்
டாகுமெண்ட்களில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்கையில், அது எந்த வடிவமைப்பில்,
டாகுமெண்ட்டில் ஒட்டிக் கொள்ளும் என்பது தெரியவராது. ஒட்டிய பின்னரே, இதனை
வேறு முறையில் வைத்திருக்கலாமே என்று எண்ணுவோம். இந்த குழப்பத்தினைத்
தவிர்க்க, வேர்ட் தொகுப்பில் லைவ் பிரிவியூ என ஒரு வசதி தரப்பட்டுள்ளது.
பிரிண்ட் கொடுக்கும் முன், டாகுமெண்ட் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனைப்
பிரிண்ட் பிரிவியூ மூலம் அறிந்து கொள்வது போல, ஒட்டும் முன் எப்படி
ஒட்டப்படும் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். எந்த பார்மட்டில் ஒட்டப்பட
வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில் ஒட்டலாம். ஆனால், இந்த
வசதி, ஆபீஸ் 2010 தொகுப்பினைப் பதிகையில், இயக்கப்படாமல் உள்ளது. இதனை
இயக்க நிலையில் வைத்திட, File | Options சென்று Generalபிரிவில் Enable Live Preview செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by RAJABTHEEN Tue Mar 01, 2011 2:00 am

5. ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் சரி செய்க:
டாகுமெண்ட்
தட்டச்சு செய்கையில் ஏற்படும் பொதுவான பிழைகள் தானாகச் சரி செய்யப்
படுவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு அருமையான வசதி ஆட்டோ கரெக்ட் ஆகும். இதனால்
நமக்கு நேரம் மிச்சமாகும். ஆனால் சில வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்க
வேண்டும் என சில சொற்களை டைப் செய்தாலும், ஆட்டோ கரெக்ட் வசதி, அதனைத்
திருத்தி மாற்றி அமைக்கும்.



எடுத்துக்காட்டாக,
சொல் ஒன்றின் முதல் இரு எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்களாக அமைத்து எழுத
வேண்டிய சூழ்நிலையில், அப்படி அமைத்திடும்போது, ஆட்டோ கரெக்ட் அதனைத்
தவறென்று கருதி, மாற்றிவிடும். நாம் என்ன செய்தாலும் இரண்டு எழுத்துக்களைத்
தொடர்ந்து பெரிய எழுத்துக்களாக அமைத்து சொல்லை அமைக்க முடியாது.



எடுத்துக்காட்டாக, Thomas Rick என்பவர் அமைத்த ஒரு நிறுவனம் TRick என்றே எழுதப்படும். இதனை TRick என தட்டச்சு செய்கையில் ஆட்டோ கரெக்ட் TRick என மாற்றிவிடும். இதற்காக ஆட்டோ கரெக்ட் பட்டியல் சென்று TWo INitial Caps
என்ற பதிவையே எடுத்துவிட்டால், பின் மற்ற தவறுகள் திருத்தப்படாமல்
அமைக்கப்படும். எனவே சில விதிவிலக்குகளை இங்கு அமைத்திட வேர்டில் வழி
தரப்பட்டுள்ளது. இந்த வழியைக் கீழ்க்காணும் முறையில் பெறலாம்.



1. BackStage மெனுவில் இடது பக்கம் உள்ள பிரிவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



2. அடுத்து AutoCorrect என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.



3. AutoCorrect டேப்பில், Exceptions என்னும் பட்டனில் கிளிக் செய்திடுக.



4. பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும்.
இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஆட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.

மேலே
தரப்பட்டுள்ள மாற்றங்களைப் போல, வேர்ட் தொகுப்பில் இன்னும் சில
மாற்றங்களையும் மேற்கொண்டு, அதனை நம் வசதிக்கேற்ப அமைத்து வேகமாகப் பணியை
மேற்கொள்ளலாம்.



MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Msoffice2010-about

புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆப்பிஸ்-2010 தொகுப்பை விண்டோஸ்-XP சர்விஸ்பேக் 2 வில் இண்ஸ்டால் செய்ய இயலாது. இந்த ஆப்பிஸ் 2010 யை XP-SP3,Vista,Windows 7 போன்றவற்றில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய இயலும். நாம் XP-SP2 வில் இன்ஸ்டால் செய்ய முயன்றால்


“Setup
is unable to proceed due to the following error(s): The installation of
Microsoft Office 2010 requires that MSXML version 6.10.1129.0 be
installed on your computer Install this component and re-run the setup.
Correct the issue(s) listed above and re-run the setup.”



MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Ms+2010


இது போன்ற பிழை செய்தி வரும். இதற்கு காரணம் MSXML version 3.10.1129.0 விண்டோஸ்-XP சர்விஸ் பேக்2 வில் இல்லாமல் இருபதே காரணம் ஆகும்.

இந்த MSXML யை தரவிறக்கி நிறுவிவிட்டால் OFFICE-2010 யை கணினியில் நிறுவிவிட முடியும்.
Download MSXML 6.0 SP1
இந்த
MSXML பதிவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு OFFICE-2010 யை தாராளமாக
XP-சர்விஸ் பேக் 2 விலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 11:46 am

தகவலுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:01 pm

கவிக்காதலன் wrote:தகவலுக்கு நன்றி...!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by AAqeell Sat Jun 08, 2013 12:54 am

thanks
AAqeell
AAqeell
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 2
Join date : 07/02/2013
Age : 28
Location : Batticaloa

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 08, 2013 11:21 am

தகவலுக்கு நன்றி... நான் 2007 தான் பயன்படுத்துகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும் Empty Re: MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum