தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதைப் போட்டி முடிவு

+11
சரவணன்
sarunjeevan
pakee
பார்த்திபன்
ஹிஷாலீ
கலைநிலா
நிலாமதி
dhilipdsp
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
15 posters

Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty கவிதைப் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 13, 2012 3:28 pm

முதல் பரிசு

நாகரீக வாழ்கையில்....


இயந்திர வாழ்கை சூழலில்
இரும்பு இதயத்தோடு
நிற்க நேரமில்லாமல்
வெளிச்சத்தை தேடும்
விட்டில் பூச்சிகளாய்....

மாறிவரும் நாகரீகத்திற்காக
மாறாத கலாசாரத்தை
மாற்ற நினைக்கும்
செருப்பிற்காக காலை
செதுக்கும் நவ நாகரீக
சிற்பிகளாய்....

சுமந்தவர்களே சுமையாகி
முதியோர் இல்லங்களில்
பொமனேரியனுடன்
பொழுதை கழிக்கும்
புதல்வர்களாய்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 13, 2012 3:29 pm

இரண்டாம் பரிசு - சீனு வாசன்

அன்பே சொல்....

எப்போதிலிருந்து
துவங்கியது-
நம் பிரிவுக்கான மௌனம்?

உயிரே சொல்....
எப்போதிலிருந்து
நிச்சயமானது-
நம் உறவுக்கான மரணம்?
காலை வேளையில்
கண்டும் காணாத
ஓரப்பார்வைகளின்
கரிசனங்கள் இல்லை!

மாலை வேளையில்
காற்று வாங்கும்
மாமரத்தடிகளில்
தரிசனங்கள் இல்லை!
எப்போதும் நீ விரும்பும்
குட்டித்தூக்கத்தை
இப்போது-
தொலைத்து விட்டாயாமே?
உனது நாட்குறிப்பேட்டில்
ஆசையாய் எழுதி வைத்த
என் பெயரை-
கலைத்து விட்டாயாமே?

எந்த கேள்வி யார் கேட்டாலும்
ஓரிரு வார்த்தைகளில்
பதில் சொல்ல-
கற்றுக்கொண்டாயாமே ?

எந்த உதவி யார் செய்தாலும்
காரணம் யாரென
உறுதி படுத்தி-
பெற்றுக்கொண்டாயாமே?

குளிப்பதாய் சொல்லி
குளியலறைக்கு சென்று
குளிக்காமல்-
திரும்புகிறாயாமே?

தலையணைக்குள்
முகம் புதைக்கும்
தனிமைகளை-
விரும்புகிறாயாமே?

வேதனையோடு வினவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
சந்தோஷ முல்லைகள்
உன் வதன தோட்டத்தில் பூப்பதில்லை?

எனக்குள்ளே முனவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
உன் காதுகளில்
என் பேச்சு மட்டும் கேட்பதில்லை?

அடிக்கடி
அழுகை உனக்கு
சொந்தமாகிறதாமே?

என்னை பார்த்தால்
உந்தன் புத்தி
மந்தமாகிறதாமே?

என்னைப்பற்றிய
பேச்சுக்களை
வெகு ஜாக்கிரதையாக
தவிர்த்து விடுகிறாயாமே?

அப்படியும் பேசினால்
வேண்டுமென்றே
வேறொரு கதையை
அவிழ்த்து விடுகிறாயாமே?

என்னோடு சேர்த்து
எதை எதையோ
மறந்து விட்டதாக
பொய் மாளிகை கட்டிக்கொள்ள
யார் உனக்கு
அஸ்த்திவாரம் போட்டார்கள்?

உனக்கும் எனக்கும்
ஒருபோதும்
ஒத்துவராதென
பசுமரத்தாணி போல்
யார் உனக்கு
பதியவைக்கப் பார்த்தார்கள்?

புல்லாங்குழலை
முறித்தென்ன?
அதன் கீதம்
செவிக்கு
சொந்தமான பின்னே?

ஜாதிமுல்லையை
கசக்கியென்ன?
அதன் வாசம்
மூக்கின்
மூச்சான பின்னே?

என் செல்லமே
பிரிதல் எனபது
உனக்கும் எனக்குமான
ஒரு புரிதல்
என்றே எண்ணுகிறேன்!


எப்போதும் நீ
ரசித்து பார்க்கும்
அழகிய நட்சத்திரமாய்
எட்டி நின்றே
நான் மின்னுகிறேன்!

என் நெஞ்சை காப்பாற்றும்
நெருப்பாக
உன்னை ஊதி ஊதி
எப்போதும் வைத்திருக்கிறேன்!

உன் காலை காப்பாற்றும்
செருப்பாக
என்னை மாற்றிதர
இப்போதும் காத்திருக்கிறேன்!

நீ
என்னுள்
எழுகின்ற வெப்பம்!

என்
அன்புப்பசியை
அடக்கிய அப்பம்!

நிஜமான
நினைவுகள்
மரிப்பதில்லை!

நிஜமான
கண்ணீர்
கரிப்பதில்லை!

உன்னைப்பற்றிய
நினைவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
இந்த மண்ணின்
சொர்கங்களோ?

உன்னைப்பற்றிய
கனவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
அந்த விண்ணின்
சொர்கங்களோ?

நெஞ்சு கூட்டுக்குள்
நிரந்தரமாய்
நீ இருக்க
பிரிவுகளுக்காய்
அழுவதில் அர்த்தம் இல்லை!

ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்ட
பிறகும் கூட
பிரிவுகளுக்காய்
புலம்புவதில் நியாயம் இல்லை!

பிரிவு என்பது
சுதந்திரம்
அதில் பிரியம் என்றுமே
நிரந்தரம் ஆனால்!

பிரிவு என்பது
ஒரு வரம்
அது பிரியத்தின்
அடையாளம் ஆனால்!

நீ தள்ளி
இருக்கையில்தான்
தவிக்க முடிகிறது!

நீ தூர
இருக்கையில்தான்
துடிக்க முடிகிறது!

எனவேதான்
உன் நினைவுகளில்
நனையவே
தனிமை தேடுகிறேன்!

நீயே வந்து
தட்டும் போதும்
இதயத்தின்
கதவை மூடுகிறேன்!

நீ
தொலைவில் இருக்கையில்
வார்த்தைகள் முட்டுகிறது!

உன்னை
அருகில் பார்க்கையில்
உதடுகள் ஒட்டுகிறது!
நம்மை நமக்கே
பிரிவுதான்
புரிய வைக்கிறது!

உயிரின் உணர்வை
பிரிவுதான்
தெரிய வைக்கிறது!

என்றிலிருந்து என்று
ஞாபகம் இல்லை!
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்கிறது!

என்றிலிருந்து என்று
சொல்ல முடியாது!
உனக்கு பிடிக்காததெல்லாம்
விட்டுவிட தோன்றுகிறது!

உன் தனிமைகளில்
என்ன யோசிப்பாயென
நான் யோசிக்கிறேன்!

உன் வெறுமைகளில்
எதனை நிரப்புவதென
கடவுளை யாசிக்கிறேன்!

உன்னை பிரிந்து
நான் வாழ்கிறேனா?
யார் அப்படி
சொல்லிப்போனது?

உன்னை மறந்து
நான் இருக்கிறேனா?
அதனை நீ
நம்புகிறாயா?

எந்த பாடலையும்
தாளத்துடன்-
இசைத்து கேட்கிறேன்!

சுற்றி நடக்கும்
வேடிக்கையை-
ரசித்து பார்க்கிறேன்!

வேளை தவறாமல்
வயிற்றை-
பசித்து நிரப்புகிறேன்!

காற்றில் வரும்
நறு மணத்தை
விரும்பி நுகர்கிறேன்!


கண்ணாடி பார்த்து
தலை வாரி
அலங்கரிக்கிறேன்!

எல்லோரும் போல்
சிரித்து
பேசிக்கொண்டிருக்கிறேன்!

நீ இல்லாமலேயே
உன் நினைவுகள்
என்னை நிறைத்திருப்பதால்!

நீ
என்ற சொல்லின்
அர்த்தம்
எனக்கு தெரியும்!

நான்
என்ற சொல்லின்
அர்த்தம்
உனக்கு தெரியும்!

நாம்
என்ற சொல்லின்
அர்த்தம்
நமக்கே தெரியாது!

உன்னை என்றுமே
எனக்குள்
இருத்தி வைக்க
ஆசைபடுகிறேன்!

சுமக்க முடியாத
உன் ஞாபகங்களை
நான் இன்னும்
சேகரிக்கிறேன்!

பிரிவு என்பதை
சொல்லத்தான் வேண்டும்
அதற்கான வார்த்தைக்கு
நான் எங்கு போவேன்?

பிரபஞ்சத்தில்
நீயும் நானும் நிறைந்திருக்க
காலத்தின் இச்சிறு பிரிவு
நம்மை என்ன செய்யும்?

உடல்
எப்போதும் அழிந்து விடும்!
அது பிரிவை
நமக்கு தருகிறது!

மனம்
நினைவுகளின் பிறப்பிடம்!
அது உன்னிடம்
இருந்தே தொடங்குகிறது!

என்னில்
சில வரிகளை மட்டுமே
நீ படித்திருக்கிறாய்!
நான் இன்னமும்
முழுமை அடையாத
ஒரு புத்தகம்!

என்னிடமிருந்து
விலகிப்போக
நீ எத்தனிக்கிறாய்!
அது உன்னை
எனக்குள் சிறைவைக்கும்
தீவிர முயற்சி!

ஏன்
என் அன்புக்கு
பெயர் வைக்க சொன்னாய்?

தென்றல் மொழி
பூவுக்கு
புரியாதா?


ஆதவன் தீண்டல்
தாமரைக்கு
தெரியாதா?

வாசிக்கும் கரங்கள்
ராகம்
அறியாதா?

நேசிக்கும் உள்ளத்துக்கு
அன்பு
தெரியாதா?

புரிந்தும் புரியாமல்
நடிக்கின்ற
ஊடலா?

புல்லின்
அனுமதி கேட்டா
பனித்துளி
படுத்து உறங்குகிறது?

உன்னிடம்
அனுமதி கேட்டா
மனம்
மயங்கி கிறங்குகிறது?

கடலோடு
அலை
சங்கமிப்பது
யாரை கேட்டு?

மனதோடு
மனம்
சங்கமிப்பது
யாரை கேட்டு?


உன்னால் என்னை
புரிந்து கொள்ள
முடியும் என்றால்
எனக்காக
விட்டு கொடு!

என்னால்தான்
உன் இரவுகள்
விடியவில்லை என்றால்
என்னையே
விட்டு விடு!

வாழ்வின்
வசந்தங்களோடு
வாழ்க்கை முடிவதில்லை!

வசந்தமில்லா
வாழ்க்கையை
வாழ்வதில் பயனில்லை!

காற்றோடு
வாசம் வீசும்
பூக்கள் கூட
வாடித்தான்
ஆகவேண்டும்!

விடியலோடு
உல்லாசமாயிருக்கும்
உலகும் கூட
அஸ்தமித்துதான்
ஆகவேண்டும்!

உனக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 13, 2012 3:30 pm

மூன்றாம் பரிசு ராசை நேத்திரன்

ஞாபங்கள் முடிவில்


சம்பளத்தை நோக்கிய
மாத மாத வாழ்க்கை பயணம்
எளிதாய் மனித வாழக்கையின்
நாட்களை நொடிப்பொழுதில்
தின்று விடுகிறது

தேவைகளை பூர்த்தி செய்து
கொள்ளவே வாழ்க்கை பயணம்
என்று மாறிவிடுவதில் சாதிக்க
பிறந்த மனிதன் எங்கே யோசிக்க
சாதனையின் படிக்கட்டுக்களை

திடும் என திரும்பி பார்க்கிறேன்
பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி
அனிச்சையாய் ஓடிக்கொண்டு
இருக்கிறேன் .......
இது போலவே இன்னும் சிறிது
நாட்களில் கல்லூரி காலம்,
உயிர் நண்பனின் நட்பு,
உறவின் பாலம்
கொஞ்சம் கொஞ்சமாய்
தேயத்தொடங்கிவிடுகிறது
நாட்காட்டியை போலவே
ஞாபங்களும்.......... முடிவில்
தேய்ந்து விடுகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 13, 2012 7:09 pm

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Apr 13, 2012 7:56 pm

முதல் பரிசு பெற்ற கவிஞரின் பெயர் என்ன?
-
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

கவிதைப்  போட்டி முடிவு Oct


Last edited by அ.இராமநாதன் on Sat Apr 14, 2012 6:28 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by dhilipdsp Fri Apr 13, 2012 8:06 pm

கவிதைப்  போட்டி முடிவு 917596
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by நிலாமதி Sat Apr 14, 2012 5:28 am

அனைவருக்கும் என் பாராட்டுக்கள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Apr 14, 2012 11:58 am

பாராட்டுக்கள் தோழர்களுக்கு ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Sat Apr 14, 2012 12:39 pm

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by பார்த்திபன் Sat Apr 14, 2012 12:56 pm

பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பரிசு பெறாத என் பரிதாபத்திற்குரிய கவிதை இதோ...

மின்னல்!

அங்கே விண்மீன்களைப் பிடிக்க
வெள்ளைத் தூண்டில் போடுவது யார்?

அந்தப் பால்வெளியைக்
கீழ்வழியாகக் கிழிப்பது யார்?

அங்கே நிலவை உருக்கி
நிலம்நோக்கித் தெளிப்பது யார்?

மின்னல் - கடவுளின் கைரேகை!

கருப்பு மேகம் சுழற்றும்
வெள்ளைச் சாட்டை!

கதிரவன் மறைந்த கருப்பு பூமியை
வெளிச்சமடித்து வேவுபார்க்கும்
வானத்தின் செயல்!

வானம் வடிக்கும்
வைரக் கண்ணீர்!

வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!

வான்மகள் மழை என்ற
பெயரில் வாசல் தெளித்து,
கோலம் என்ற பெயரில்
கோனலாய்க் கிழிக்கும் கோடு!

வெள்ளை மையால்
வரையப்படும் வேரின் ஓவியம்!

மேகத்தாய் பிரசவிக்கும்
மின்சாரக் குழந்தை!

மழைவானம் கொழுத்தும்
மத்தாப்பு!

மேகப் புற்றிலிருந்து வெளியேறும்
வெள்ளிப் பாம்புகள்!

ஆகாய அரசாங்கம் வெளியிடும்
வெள்ளை அறிக்கை!

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!

இயற்கை இறைக்கும்
இலவச மின்சாரம்!

கொடியாய் விண்ணில் படர்ந்து,
இடியாய் மண்ணில் இறங்கும்,
அழகிய ஆபத்து!



- நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 14, 2012 2:01 pm

பார்த்திபன் wrote:பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பரிசு பெறாத என் பரிதாபத்திற்குரிய கவிதை இதோ...

மின்னல்!
- நிலவை.பார்த்திபன்

ஏதோ காரணத்துக்காகத் தங்கள் கவிதை பரிசுக்குரிய கவிதையிலிருந்து தவறியிருக்கலாம். முயற்சியுங்கள் அடுத்த முறை வெற்றி பெற்றுவிடலாம்...

நடத்துநர் அவர்கள் போட்டிக்கு வந்த படைப்புகள் அனைத்தையும் வெளியிடலாமே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by pakee Mon Apr 16, 2012 3:34 am

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by sarunjeevan Sun Apr 22, 2012 4:45 pm

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 64660
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by சரவணன் Mon Apr 23, 2012 11:37 am

மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by கோவை ரவி Tue Apr 24, 2012 3:04 pm

பரிசை தட்டி சென்றவர்களுக்கு பாராட்டுக்கள்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Apr 24, 2012 3:22 pm

மூன்றாம் பரிசுபெற்றவர் தனது வலைப்பூவில்
தெரிவித்துள்ளது:-

-
Occupation PHYSIOTHERAPIST

Location இராசிபுரம், தமிழ்நாடு, India

Introduction என்னோட பெயர் செந்தில்குமார்,
இயன்முறை மருத்துவன், ராசை நேத்திரன் புனை
பெயரல எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் கொஞ்சம் கிறுக்கிட்டு
இருக்கன். சமீப காலமா எழுத்து மேல ஆர்வம் வந்து
எழுத ஆரம்பிச்சு இருக்கன், என்னோட கிறுக்கல் அப்டின்னு
சொல்றது சரியா இருக்கும், எனக்கு தமிழ் மேல பற்று அதிகம்,
அதனால இந்த வலைபூ திறந்து எழுத ஆரமிக்கறன்,
என் எழுத்துக்கள் என் அம்மாவிற்கு சமர்ப்பணம்.....
ஒரு நல்ல பயணத்தை நோக்கி...
----------------------------------
இவரது தமிழ்பணி தொடர வாழ்த்துவோம்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by yarlpavanan Tue Apr 24, 2012 7:25 pm

சிறந்த பதிவுகளுக்குப் பரிசு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
2011 போட்டிக்கு 2012 பரிசு கிடைத்தது போல, முதல் மாதப் போட்டிக்கு கடைசி மாதம் பரிசளிப்பதாக அமையாது பேணவும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 24, 2012 7:38 pm

yarlpavanan wrote:சிறந்த பதிவுகளுக்குப் பரிசு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
2011 போட்டிக்கு 2012 பரிசு கிடைத்தது போல, முதல் மாதப் போட்டிக்கு கடைசி மாதம் பரிசளிப்பதாக அமையாது பேணவும்.
முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதால் தவறுகள் நடக்காது நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by yarlpavanan Tue Apr 24, 2012 8:03 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
yarlpavanan wrote:சிறந்த பதிவுகளுக்குப் பரிசு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
2011 போட்டிக்கு 2012 பரிசு கிடைத்தது போல, முதல் மாதப் போட்டிக்கு கடைசி மாதம் பரிசளிப்பதாக அமையாது பேணவும்.
முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதால் தவறுகள் நடக்காது நண்பரே...

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 25, 2012 11:12 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
yarlpavanan wrote:சிறந்த பதிவுகளுக்குப் பரிசு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
2011 போட்டிக்கு 2012 பரிசு கிடைத்தது போல, முதல் மாதப் போட்டிக்கு கடைசி மாதம் பரிசளிப்பதாக அமையாது பேணவும்.
முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதால் தவறுகள் நடக்காது நண்பரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by kavithaigal Thu Apr 26, 2012 1:39 pm

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 548321 கவிதைப்  போட்டி முடிவு 64660
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by jaleela Thu Apr 26, 2012 2:44 pm

வாழ்த்துக்கள்
jaleela
jaleela
மல்லிகை
மல்லிகை

Posts : 92
Points : 168
Join date : 16/11/2011

Back to top Go down

கவிதைப்  போட்டி முடிவு Empty Re: கவிதைப் போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum