தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

+7
yarlpavanan
அ.இராமநாதன்
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat May 19, 2012 1:34 pm

First topic message reminder :

தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது. அவை

  1. தொகுத்தல் - பல் வேறு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் எழுதுதல்
  2. விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
  3. தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
  4. மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.

தமிழ் நூல்களில் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் என்பது எட்டுத்தொகை, பத்து பாட்டு என்று கூறப்படும் நூல்கள் ஆகும். இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளைப் பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும். இவை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"


புறநானூறு
புறம் + நானூறு =
புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், மன்னனின் பெருமை, வீரம் போன்ற புற வாழ்க்கைப் பற்றி கூறும் மொத்தம் நானூறு பாடல்களை கொண்ட நூல் தான் புற நானூறு
.

புறநானூறில் நான் படித்து ரசித்த பாடல்களை இனி வரும் நாட்களில் காண்போம்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down


நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Aug 19, 2012 11:11 am

தமிழ் இளையவளின் வீரம்

வீரம் என்பது பிறப்பில் வரவேண்டும். வழி வழியாக இரத்தத்தில் ஊறி வருகிறது. எல்லைகள் காக்க வீரம், கௌரவம் காக்க வீரம், பெருமைக்கு வீரம், ஆண்மையை வெளிப்படுத்த வீரம், பெண்மையை கவர வீரம் என்று வீரம் பல காரணங்களில் வெளிப்படுகிறது. ஒரு குடும்பம் சுழல ஆண், பெண் என்ற இரண்டு சக்கரங்கள் தேவை. அது போல் நாடு வளம் பெற ஆண் பெண் என்ற இரண்டு பேரும் வேண்டும். நாடு வளம் பெற, வளம் பெற்ற நாடு பிறர் வசம் வீழாமல் இருக்க வீரம் வேண்டும். வீரம் ஆண் பெண் என்ற இரண்டு பேருக்கும் வேண்டும். அப்படி இருவருக்கும் இருக்கும் போது தான் விதைக்கும் விதை வீறுகொண்டு வீரத்தோடு இருக்கும். இப்படி ஒரு வீரத்தில் விளைந்த ஒரு இளையவளின் பெருமையை பாடும் புறப் பாடல் இது. வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்தவள் இவள் என்று இந்த பாடல் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் 21:
செல்கென விடுமே (புறம் 279)
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்
திணை : வாகை துறை : மூதின் முல்லை

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!

பொருள் விளக்கம்

இவள் சிந்தை கொடியது, கடுமையானது இவள் துணிவு. மூத்த மகள் என்று கூற தகுதி உடையவள் இவள். முதல் நாள் போரில் இவளுடைய தந்தை போரில் யானை தூக்கி எறிந்து இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் ஆசைக் கணவன் பசு நிரைகளைக் மீட்கச் சென்று இறந்து போனான். இன்று போர் முரசைக் கேட்டு, தெருவில் பரட்டை தலையோடு விளையாடும் தன் ஒரே மகனை, வீட்டில் இருக்கும் ஒரே ஆண் மகனை அழைத்து எண்ணை இட்டு, போர் அலங்காரம் செய்து,கையில் வேல் கொடுத்து விருப்பத்துடன் போருக்குச் செல் என்று அனுப்பி வைக்கிறாள். என்னே இவள் துணிவு. இவள் துணிவு பெருமை மிக்கது. இவள் வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்தவள் என்று கூறத் தகுதியானவள் தான்.

பாடலின் சிறப்பு


அன்றைய தமிழகத்தில் போருக்கு செல்வது இவ்வளவு பெருமைப் பட வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது. பெருமை உள்ளவரைத் தான் பெண் விரும்புகிறாள். ஒவ்வொரு காலத்திலும் சிறப்பும் பெருமையும், வசதியும் உள்ளவரை தான் பெண் விரும்புகிறாள். இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்யாவில் உள்ள ஜெர்மன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் போர் வீரர்களுக்கு என்று தனி மரியாதை இருந்தது, தன் காதலன் போர் வீரன் என்று கூறுவது பெருமை மிக்கதாய் இருந்தது. இன்று விளையாட்டு வீரர்களை, சினிமாக்காரர்களை நாம் எப்படி கொண்டாடுகிறோம், அதைப்போல் பழைய காலம் முதல் இரண்டாம் உலகப் போர் நடக்கும் வரை சமுதாயத்தில் போர் வீரர்களுக்கு தனி மரியாதை இருந்தது, அவர்களை கொண்டாடி வந்தோம். ஆனால் இன்று ஒரு சினிமாவில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் களைஞர்கள் பேர் கூட நமக்குத் தெரிகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் காலையில் டீ சாப்பிடுவாரா, காபி சாப்பிடுவாரா என்றும் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் முப்படை தளபதியின் பெயரைக் கேட்டால் தெரிவதில்லை. இது தான் இன்றைய வீரம். போரில் இறந்து ஒருவரைப் பற்றி தினசரி பத்திரிக்கையில் வரும் வரை நாம் போர் வீரர்களை நினைப்பதில்லை.

இப்படி வீர மரணம் அடையும் வீரனுக்கு நம் தமிழ் மண் என்ன மரியாதை செய்தது, அடுத்த பாடலில் பாப்போம்.

புறம் வளரும்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 21, 2012 10:58 am

தொடருங்கள் நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Sep 17, 2012 4:08 pm

வருமா வீர மரணம்
போற்களத்தில் புறமுதுகு காட்டாமல் வீரத்தோடு சண்டை போட்டு வெற்றிப் பெறுவது நம் தமிழ்வீரனின் விருப்பம். எதற்காக இப்படி செய்கிறான். நாட்டுப்பற்றும், ஆண்மைத்திறனின் வெளிப்பாடும், வெற்றியும், வீரக்களிப்பும், விருந்தும், புகழ்மாலையும் தான் ஒரு வீரனை போற்களம் நோக்கிச் செலுத்துகிறது. இப்படி போற்களம் செல்லும் வீரனுக்கு நம் தமிழ்மன்னன் செய்யும் மரபு என்ன. இன்று ராணுவத்தில் வீரமரணம் அடைந்து உள்ள வீரனுக்கு தேசியக்கொடி போர்த்துவது புதிதல்ல, பன்னெடுங்காலமாக உள்ள வழக்கத்தின் தொடர்ச்சி தான் இது என்பதை இந்தப்பாடல் மூலம் அறியலாம்.

பாடல் 22 : பலர் மீது நீட்டிய மண்டை (பாடல் 286)
பாடியவர் : ஔவையார்
திணை கரந்தை; துறை வேத்தியல்.

வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!

பொருள் விளக்கம்
வெள்ளை ஆட்டுக் கிடாய் போல் வரிசையாக வீரர்கள் பலர் நிற்க இந்த சிறு வயதுள்ள வீரனின் சிறப்பான செயல் கண்டு அவனுக்கு மன்னனே மண்டையில் (ஒரு வகையான கிண்ணம், வொய்ன் கிலாஸ் போல) கள் கொடுத்து சிறப்பு செய்தான். இது அவனுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த உற்சாகம் அவனுக்கு திடம் அளித்து போற்களம் செல்லச் செய்கிறது. காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தி அவன் உடல் மேல் வெள்ளை ஆடை போர்த்த இன்னும் அவன் வீர மரணம் அடையவில்லை. இதுவே அவனுக்கு வருத்தத்தை தருகிறது.

பாடலின் சிறப்பு
மூப்பு, நோய் வந்து இறப்பதை சுத்த தமிழ் வீரன் விரும்பவில்லை. போற்களம் சென்று வீரமரணம் அடைவதை தான் விரும்பினான் என்று இந்த பாடல் உணர்த்துகிறது. பரம்வீர் ஸக்ரா விருந்து வாங்கிய ராணுவ வீரனை ஜனாதிபதியும் எழுந்து வரவேற்க வேண்டும் என்று இன்று உள்ள வழக்கமும் இது போன்ற ஒரு மரபில் இருந்து வந்தது தான்.

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரனுக்கு மன்னன் கொடுக்கும் பரிசு ஆலிவ் மர சிறு இலை தான், ரோமானிய வீர விளையாட்டில் வெற்றி பெரும் வீரனுக்கு மன்னன் செய்யும் மரியாதை சிறுகையசைப்பும், விருந்து உபசாரமும் தான். பரிசு சிறுசு, ஆனால் அது தரும் உற்சாகம், கௌரவம் பெருசு, இதற்கு உயிரை விடவும் வீரர்கள் தயாராகி விடுகின்றனர். இன்று பணிசெய்பவர்கள் தங்களின் கீழ் சிறப்பாக பணி செய்பவர்களுக்கு தனி மரியாதை செய்ய வேண்டும் என்று நமக்கு கற்றுத்தரும் பாடல் இது.
தொடரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 17, 2012 5:29 pm

தொடருங்கள் நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Oct 13, 2012 3:15 pm

யாருக்கு முதல் மரியாதை
போரில் ஆண்கள் அனைவரும் தான் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கிடைக்கிறதா. இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்ப்பாடல்கள் வாயிலாக பார்க்கும் போதும், இன்றுள்ள தலைவர்கள் போல் இல்லாது, அன்றைய மன்னர்கள் வீரத்துடன் நேரடியாக பேரில் பங்கு பெற்றனர். இப்படி பங்குபெரும் மன்னனின் உயிர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்தது. போரில் ஈடுபடும் மன்னனைக் காக்க தனி மெய்க் காவல் படை வீரர்கள் இருந்தனர். இவர்கள் வழிவழியாக (பரம்பரை பரம்பரையாக) மன்னனின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இவர்கள் உயிர் இழந்து மன்னனின் உயிரை காப்பாறி உள்ளனர். பொன்னியின் செல்வனிலும் கல்கி வேளாளப்படை பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார். இவர்களுக்கு அரசனிடமும், அரண்மனையிலும் தனி மரியாதை இருந்ததாக


கூறப்படுகிறது. உயிரைத் துச்சமாக மதித்து மன்னனின் உயிரை காப்பதாலும், இவர்களில் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போரில் இறந்து விடுவதாலும் இந்த சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படி உள்ள வீரனுக்கு முதல் மரியாதை, முதல் சலுகைகளை மன்னன் வழங்கினான், வழங்க வேண்டும் என்பதை இந்த புறப்பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

பாடல் 22: மறப்புகழ் நிறைந்தோன் (பாடல் 290)
பாடியவர் :ஔவையார்
பாடப்பட்டோன் பற்றிய குறிப்பு பாடலில் இல்லை
திணை : கரந்தை துறை : குடிநிலை உரைத்தல்

இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே


பொருள் விளக்கம்
முதலில் இவனுக்கு கள்ளை கொடு, குடித்து மகிழட்டும். அன்று நடந்த பெரும் சேதத்தை விளைவித்த போரில், ஆண் யானை மேல் இருந்த ஒருவன் அழகான தேரில் அமர்ந்து இருந்த உன் பாட்டன் மேல் (தந்தையின் தந்தை) எறிந்த அம்புகளை எறியும் போது ,இந்த வீரனின் பாட்டன் (தந்தையின் தந்தை) கண் இமைக்காமல் தச்சனின் ஆரச்சக்கரக்குடம் (கேடயம்) போல் தடுத்து உயிர் விட்டான்.அந்த புகழ் நிறைந்த வீரப் பரம்பரையில் வந்த மறக் குடியில் பிறந்த வீரன் இவன்.

பனையோலையில் செய்யப்பட்ட குடை மழையைத் தடுப்பது போல் இவன் உன் மேல் பகைவர் பொழியும் வேல்களைத் தடுப்பான். உனக்கு இவன் மெய்க்காப்பாலனாக இருப்பான். குடி மரபு இது. இவனுக்கு முதலில் சிறப்பு செய்க. கள்வார்த்துக் கொடு, இவனே முதல் மரியாதைக்குரியவன். இப்படி மன்னன் கொடுக்கும் கள்ளுக்கா இவன் ஆசைபடுகிறான். இப்படி உள்ள வீரன் ஆசைப்படுவது என்ன, அடுத்த பாடலில் காண்போம்.

புறம் வளரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 15, 2012 4:21 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum