தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவன்.....அவள்.....

Go down

அவன்.....அவள்..... Empty அவன்.....அவள்.....

Post by udhayam72 Fri May 10, 2013 1:31 pm

அவன்.....அவள்.....
(பவித்ரா நந்தகுமார்)




சில்லென்று முகத்தில் அறைந்த அந்தக் குளிர் காற்றை ரசித்தபடியே டூவீலரின் வேகம் குறைத்தான் அசோக். ஒரு ‘யூ டர்ன்’ அடித்து யமஹாவை போர்டி கோவில் நிறுத்தினான். சிமியின் மாருதி நின்றிருப்பதைப் பார்த்ததும் இரட்டை சந்தோஷம்!

உள்ளே நுழைந்தவனை “என்ன இன்னிக்கு இவ்வளவு லேட்?” - சுகர் ஃப்ரீயை காபியில் கலக்கியபடியே வரவேற்றாள் சிமி.

“தினம் நான் கேட்ட கேள்விய இன்னிக்கு நீ ரிப்பீட் பண்றியா?”

“அஃப்கோர்ஸ்! அதென்ன கையில்.. பேபி டாலர்..” வெடுக்கென பிடுங்கிப் பார்த்தாள் சிமி.

“யெஸ். கடையில பார்த்தேன். ரொம்ப அழகாயிருந்துச்சு. பார்த்த உடனே நமக்கு பொறக்க போற குழந்தைக்குனு வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் சிமி.. குழந்தை வேணாம்னு தள்ளி வெச்சதெல்லாம் போதும். இந்த வாரம் கைனகாலஜிஸ்ட்கிட்ட ஃபார்மாலிட்டிக்கு ஒரு செக்-அப் பண்ணிட்டு வந்துடலாம்.”

“எதுக்கு?”

“நீ சொன்ன அந்த ரெண்டு வருஷம் போன மாசத்தோட முடிஞ்சிடுச்சு.. ஞாபகம் இல்லையா?”

“ஆமா.. இப்ப ரொம்ப முக்கியம்!”

“என்ன உளர்ற..”

“நான் ஸ்டிரெய்ட்டாவே வரேன் அசோக். எனக்கு இந்த குழந்தை பெத்துக்கறதுல எல்லாம் இஷ்டம் இல்லை.”

“வா..ட்?”

“யெஸ்.. என்னோட கரியரையும் நான் பாக்கணுமில்ல..”

“என்ன சுமி இது? மாடலிங் பண்றவங்க யாரும் குழந்தை பெத்துக்கறதில்லையா? அப்ப நமக்குக் குழந்தையே
வேண்டாமா?”

“இந்த உடம்பை ஸ்லிம்மா வச்சுக்க நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும். குழந்தைக்கு
வேற ஐடியா வச்சிருக்கேன்”

“என்ன ஐடியா?”

“ம்.. ஒரு வாடகைத் தாய் மூலமா நம்ம குழந்தைய பெத்துக்க போறேன்.”

“சிமி.. ஆர் யூ மேட்?” - ஏழு கட்டையில் கத்தினான் அசோக்.

“இப்ப எதுக்குக் கத்தறே..? ஜஸ்ட் பி கொய்ட்! அடுத்து வர்ற 5 வருஷமும் என்னோட வாழ்க்கையில்
கோல்டன் இயர்ஸ். நான் இப்பதான் வளர்ந்துட்டு வர்றேன். கொஞ்சம் கேப் விட்டாலும் என் கரியரே ஜீரோ ஆயிடும். இந்த நேரத்துல என்னால வயித்த முன்னாடி தள்ளிக்கிட்டு நின்னுட்டிருக்க முடியாது. இந்த வாடகைத் தாய் ஏற்பாடு கூட, நீ குழந்தை குழந்தைனு அலையறதாலதான். இல்லைன்னா எனக்கு குழந்தை பெத்துக்கற ஐடியாவே இல்லை!”

“ஓ.. ஹைட்ரஜன் + ஆக்ஸிஜன் = வாட்டர்னு சொல்ற மாதிரி, ஆண் + பெண் = குழந்தைனு சயின்ஸ்ல எனக்கு கணக்கு காட்டுறியா?”

ஆவேசமாய்ப் பேசி சற்று ஆசுவாசித்தவன்..

“ஓ.கே சிமி.. என்ன ஆச்சு உனக்கு? உன் மனசைத் தொட்டுச் சொல்லு.. ஒரு குழந்தையப் பெத்துக்கணும்னு
உனக்கு ஒரு பர்சன்ட் கூட ஆசையில்ல?”

“இல்ல, இல்ல, இல்லவே இல்ல. லைஃப்ல எனக்கு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் இருக்கு. இப்ப அதுதான் முக்கியம்.
உன்னையே எடுத்துக்கயேன்.. சில நிர்ப்பந்தத்துக்காக உன் வேலையை விடுன்னா விடுவியா? ஆம்பளைக்கு ஒரு நியாயம்.. பொம்பளைக்கு ஒரு நியாயமா?”

“சிமி, இது நியாயம் அநியாயம் பாக்குற விஷயமில்ல. இது தாய்மை. உள்ளன்போட அனுபவிச்சு ரசிக்கிற விஷயம். இதே ஆண்களாலும் குழந்தை பெத்துக்க முடியும்னா, குழந்தைக்காக வேலையை விட நான் ரெடி!”

“போகாத ஊருக்கு நீ வழி சொல்லாத.. ஏற்கனவே பல தடவ குழந்தை வேண்டாம்னு நான் மறைமுகமா
சொல்லியிருக்கேன். இதுதான் என்னோட முடிவு. இதுக்கு இஷ்டமிருந்தாநாம சேர்ந்து வாழலாம். இல்லேன்னா டிவோர்ஸ்தான் ஒரே வழி!”

“சிமி, இது ரொம்ப ஓவர். நீ என்னை பல தடவ இன்சல்ட் பண்ணியிருக்கே. ஆனா, நான் எதையும் பெருசா எடுத்துக்கிட்டதில்லை. ஏன்னா நீயே எனக்குக் குழந்தை மாதிரிதான். உன் குறும்புத்தனத்தை எல்லாம் குழந்தை சேட்டையா ரசிச்சிருக்கேன். உன்னை 100% லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காவது மரியாதை கொடு. இன்னும் ஒரு வருஷம் வேணா வெயிட் பண்றேன். எனக்கு நல்ல பதிலா சொல்லு!”

“டோண்ட் பீ சில்லி, பீ பிராக்டிகல். நீதான் லவ் லவ்னு என் முன்னாடி வந்து விழுந்தே. அப்பவே, நாம ‘லிவிங் டு கெதரா’ இருக்கலாம்னு தான் நான் சொன்னேன். உன் பேரண்ட்ஸ்க்காக நீ ஓவரா கம்ப்பெல் பண்ணதால தான் நான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். ஆனா இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கறதா இல்ல. உன்னை மாதிரி குழந்தை குழந்தைனு அலையிற ஆசாமி கூட இன்னும் 30 வருஷம் ஒண்ணா வாழ முடியும்னு எனக்குத் தோணல. ஸோ.. இங்கயே கட் பண்ணிக்கலாம். அட்வகேட்டை கன்சல்ட் பண்ணி நோட்டீஸ்
அனுப்புறேன். ஸைன் பண்ணிடு. அதுக்கப்புறம் நீ சந்தோஷமா வேற லைஃப் ஸ்டார்ட் பண்ணிக்கோ. நான் குறுக்க வர மாட்டேன். ஜஸ்ட், லீவ் மீ அலோன்.”

அலட்டிக் கொள்ளாமல் டைவர்ஸ் வரை பேசிவிட்டுச் செல்பவளை கண் இமைக்கவும் மறந்து வெறித்தான் அசோக்.

ஆயிற்று!
விவாகரத்தும் ஆகி இரண்டு வருடங்கள் உருண்டோடிப்போனது. திருமண நாளை காலண்டரில் பார்த்ததும் பழையநினைவுகள் கண் முன் சில நேரம் நிழலாடும் அசோக்குக்கு!

இருவரும் பிரிந்தது முதல் தொலைத் தொடர்புக்கு வெளியிலேயே இருந்தனர். தொலைக்காட்சியில் அவள்
தலைகாட்டும் விளம்பரங்களைப் பார்க்கையில் ஏற்படும் வெறுமை மனதினுள் சில அதிர்வுகளை உண்டு செய்வதோடு நின்று போனது அவனுக்கும்.

வழக்கம்போல் நாளிதழை மேய்ந்தவனின் கண்கள் நிலை குத்தி நின்றது அந்தக் ‘கண்ணீர் அஞ்சலி’ புகைப்படத்தைப் பார்த்து. சிமியை ஒரே மகளாகக் கொண்ட அந்த ராணுவ அதிகாரி காலமாகியிருந்தார். ஏற்கனவே சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டிருந்தவள் சிமி. போகலாமா வேண்டாமா என ஒரே மனப்போராட்டம் அவனுள். போனால் அவளைப் பார்க்க வேண்டி வரும் என்று தவிர்த்தே விட்டான். 23 நாட்கள்
கழித்து, அவனுள் எழுந்த குற்ற உணர்வு அவள் வீடு இருந்த திசை நோக்கி அவன் டூவீலரைத் திருப்பி விட்டிருந்தது.

மெல்லிய பூப் போட்ட காட்டன் நைட்டியில் சோபாவின் மேல் சரிந்திருந்தாள். அவனுள் ஒரு தயக்கம் உள்ளூர அப்பிக் கிடந்தது. தொண்டையை செருமிச் சரி செய்தான்.

“சிமி.. சிமி..”

மெல்ல தலையைத் திருப்பியவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள். இருக்கையைக் கைகாட்ட.. அமர்ந்தான் அவன்.

பார்வை சந்திப்புகள் தாங்க இயலவில்லை இருவருக்கும். இருவருமே தவிர்த்தனர்.

“ஐ’ம் ஸாரி. அப்பா எப்படி இறந்தார்?”

அவள் கண்களிலிருந்து வந்த நீர் ஒரு கோடாய் கன்னங்களைப் பிரித்தது.

“ஹார்ட் அட்டாக். எனக்கு தைரியம் சொன்னவரு இப்ப திடீர்னு போயிட்டார்” வருத்தம் தெரிவித்து பரஸ்பர
ஆறுதல் சொல்லி கிளம்ப எழுந்தான்.

“அஷோக், பை தி பை உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். உங்க லைஃபை கொஞ்ச நாள் நான் ஸ்பாயில் பண்ணதுக்கு கடவுள் என்னை ரொம்ப தண்டிச்சிட்டார்.”

அவளுக்குப் பேச இயலாமல் மார்பு பொருமியது. கர்ப்பப் பையில் ஏற்பட்ட புற்றுநோயால், அவள் உயிர்
காக்க கர்ப்பப் பையையே எடுத்து விட்டதை நெஞ்சு விடைக்கக் கூறி முடித்தாள். அதிர்ச்சி விலகாமல்
நின்றிருந்தான் அசோக்.

“உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சி, கேட்டுட்டேன். இனி நான் நிம்மதியா தூங்குவேன் அசோக்.”

“….”

“யு நோ ஒன்திங்.. நீ சொன்னப்ப அந்த அருமை தெரியல. என்னோட ‘யூட்ரஸை’ எடுத்துட்டதுக்கு அப்புறம்தான்
குழந்தை பெத்துக்கணும்னு ஆசை.. இல்ல பேராசையே வந்துடுச்சு.

குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமா போயிடுது.எனக்கு இது வேணும்.. இல்ல அஷோக்? முக்கியமா உனக்கு பொண்ணு பொறந்தா தப்பித் தவறி என் பேரை எதுவும் வெச்சிடாதே. என் ஞாபகம் உனக்கு
எப்பவுமே வேணாம்!

பை தி பை, உனக்கு குழந்தை பொறந்துடுச்சா?
இப்ப எத்தனை மாசம்?”

“ஒரு குழந்தை இருக்கு. 25 வயசு. பேரு சிமி!”

udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum