தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் சிறு கதைகள்

2 posters

Go down

தமிழ் சிறு கதைகள் Empty தமிழ் சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 23, 2014 10:16 pm

வெந்து தணிந்தது காடு...
***********************************
“நான் ஜடமாட்டம்  நிக்கறேன். நெஜமாவே ஜடமா ஆகிடலாம்னு தோணறது. இவா பண்ற கொடுமைகளுக்கு அது எவ்வளவோ தேவலை. அவர் என்னை விட்டுப் போனதை விட இந்த சித்ரவதைகளைத்தான் தாங்க முடியலை. அடக் கடவுளே! நான் அவருக்கு முன்னமே போயிருக்கக் கூடாதோ?

யார் தயவிலேயும் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை... என்கிட்ட படிப்பு,உத்தியோகம் எல்லாம் இருக்கு... அவர் போயிட்ட ஒரே காரணத்தினாலே இப்போ இவன் வீட்டு வாசல்லே அசிங்கப்பட்டு நிக்கறேன்.

ஆமா. அசிங்கப்பட்டுத் தான் நிக்கறேன். அவன் வேற யாருமில்லை.என் மைத்துனன்-அதாவது அவரோட தம்பி.. என்னை கூட்டிண்டு போக வரச்சே   அவனும் அத்தையும் தான் வந்தா. சுமங்கலிகள் வரப்படாதே...... இவன் வீட்டுக்கு வந்து நான் தங்கிடப் போறதில்லை.... இருந்தாலும் அவர் இறந்த பத்து நாளுக்குள்ளே பாத்தியப்பட்டவா யாரேனும் ஒருத்தர் வீட்டுக்காவது போகணுமாம்.

அவன் வீட்டை நெருங்கறதுக்கு கொஞ்ச முன்னாடியே போன் பண்ணி பக்கத்துல வந்துட்டோம்னு சொல்லிட்டான். வீட்டுப் பொம்பளைங்க யாரும் எதிர்த்தாப்பிலே வந்திடக் கூடாதே அதுக்குத்தான். வாசல்ல வாளித் தண்ணியும் சின்னக் கின்னத்துல பாலும் நெய்யும் தயாரா இருந்தது.

நா அதை கால்ல தடவிக்கனுமாம். அப்பறம் பாதத்தை தண்ணியாலே கழுவிக்கனுமாம். அப்பறம் வீடு முழுக்க நடந்து வரனுமாம். அத்தை அழறாங்க. நான் கூடத்தான் அழறேன். ஆனா ரெண்டத்துக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

14 வயசிலே என் உடம்புல நடந்த அந்தரங்க மாற்றத்தை ஊரக் கூட்டி சொன்னாங்களே-அது பத்து வருஷம் கழிச்சுத் தான் அபத்தம்னு நேக்கு உரைச்சது. என்ன ஒரு முட்டாள்தனம்னு சண்டைக்கு போயிருந்தா என்னை கிறுக்கச்சின்னு சொல்லிருப்பாங்க.

24 வயசிலே அவர் சொல்லிக் கொடுத்தாரே எல்லாத்தையும்.....அவர் சொல்லச் சொல்ல கேட்டுண்டே இருக்கலாம்னு தோணும். சில சமயத்திலே ஆச்சரியமாவும் இருக்கும். அவரோட எல்லாத்திலேயும் நான் ஒத்துப் போனாலும் கடவுள் நம்பிக்கையும் அக்ரஹாரத்திலேயே வளர்ந்திட்டதாலே இந்தப் பேச்சு வழக்கும் என்னை விட்டுப் போகலை. அவர் எல்லாத்திலேயும் நேக்கு சுதந்திரம் கொடுத்ததினாலே இதை ஒரு விஷயமாவே அவர் கண்டுக்கலை. பொண்ணு பிறந்ததுன்னா அதுக்கு  சடங்கு வைக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தோம். ஆனா எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமப் போயிடுத்து.பாக்கியம்னு அதை சொல்றதை அவர் ஏத்துக்க மாட்டார். ஏன்னா பாக்கியம்னு உலகத்திலே எதுவுமே இல்லையாம். "பாக்கியம் இல்லைன்னா குறை இருக்குன்னு பொருளாயிடும். இப்போ நமக்கு என்ன குறை"ன்னு கேப்பார். உண்மைதானே! அப்பல்லாம் நேக்கென்ன குறை?

இதோ என் கழுத்திலே தொங்கறதே அவர் கட்டினது...இன்னும் நாலு நாள்லே பத்தாவது நாள் காரியம். அதுக்கப்பறம் நேக்கு இது சொந்தமில்லை. அடையாளங்கள் தான் பெருசா? இதை தூக்கி எறிஞ்சுடலாம். அதனால அவரோட வாழ்ந்தது பொய்யின்னு ஆயிடுமா?

இது பெண்களை அடிமைப்படுத்த கண்டுபிடிச்ச ஆயுதம்னு அவர் சொன்னது இப்பத்தானே புரியறது.....

இதோ இவா முன்னாடி தலையக் குனிஞ்சுண்டு உக்காந்திருக்கேனே-இது என்னோட தோல்வியா இல்லை இவாளோட வெற்றியா? ஏற்கனவே மனசளவில் நொந்து போயிருக்குற எம்மேல ஏன் இவாளுக்கு இத்தனை குரூரம்?

திமிறிண்டு நிக்கற என்னோட சுயமரியாதையை எப்படி கட்டுப் படுத்திகிறதுன்னு தெரியாமத் தவிக்கறேன். அவரோட பிரிவு என்னோட சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பறிச்சுண்டு போயிடுத்துன்னு  நினைக்கறப்போ எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கறது. என்னாலே இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. அவா சொன்ன மாதிரியே காலைக் கழுவிண்டு வீடு முழுக்க நடந்தாச்சு. இது இவன் வீட்டுக்கு நான் வந்து தங்கறதுக்கு அச்சாரமில்லை. இதான் கடைசி முறைன்னு சபதம் எடுத்துட்டு கெளம்பறேன்.

இதோ என்னைத் தடுத்து நிறுத்தப் பாக்கறாளே-இவாளுக்கெல்லாம் நான் ஏன் கோவப்பட்டுப் போறேன்னு விளக்க வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் புரியாது இல்லையா?”

நன்றி ஹரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 25, 2014 2:21 pm

மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 31, 2014 9:26 am

ஊதாங்கோல்
********************
மிஞ்சியிருக்கும் டிபார்ட்மெண்ட் எக்சாம எழுதி முடிச்சிட்டீங்கனா சமுதாயம், இலக்கியம்னு அலைய உங்களுக்கு தோதா இருக்கும்ல?" பதவி உயர்வுக்காக எழுதச் சொல்லி மண்டியிடாத குறையாக கேட்கிறாள். வீட்டுக்காரியின் முணுமுணுப்பும் நச்சரிப்பும் என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது.

"உம், உம், பார்க்கலாம். அதுக்குல்லாம் நேரமும் காலமும் வரவேண்டாமா? வயசான காலத்துல எவன் ஒக்காந்து படிக்கிறது? நீ வேற தொண, தொணன்னு என்னுயிர வாங்குற" சலித்துக்கொண்டே கெஞ்சும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாய் தலையணையைத் தூக்கி அக்குளில் இறுக்கிக் கொண்டு மாடிப் படிகட்டுகளில் ஏறத் தொடங்கினேன். .

"ஆமாமா, ஒங்க நல்லதுக்கு சொன்னா நான் தொண தொணக்குறன்னு பேசமாட்டீங்க பின்ன? வூட்டுகாரர் பெரிய உத்யோகத்துல கீறார்னு நானும் பெருமையா சொல்லிக்கலாமேன்னு பாத்தேன். அது தப்பா? நாந்தான் கடைசி காலத்துல காரு ஜீப்புன்னு கெத்தா ரிடயர் ஆகப் போறனாங்காட்டியும்! எனக்கென்ன வந்தது? நல்லதுக்கு சொன்னா மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு போறத பாரு. அதுக்கல்லாம் நான் கொடுத்து வக்கிலபோல" உணர்ச்சி வசப்பட்டு மூக்கைச் சிந்தும் மனைவியின் வார்த்தைகளும் என்னுடன் மாடிப்படிகளில் ஏறின.

டிபார்ட்மெண்ட்ல இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்குன்னு இவகிட்ட எதுக்குத்துதான் சொல்லித் தொலைச்சுட்டு பெரிய பாடாய் போச்சே இவகூட என்ற ஆதங்கத்துடன் மொட்டை மாடியில் பாய்விரித்து படுத்தேன். விரிந்து கிடக்கும் வானம் இரவு முழுக்க என்னை முறைத்துக் கொண்டிருந்தது. முனங்கிக் கொண்டும் தாடையை விரல்களால் சொறிந்தபடியும், இந்த வயசுல மனுசனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று படுக்கையில் புழுவாக நெளிந்தேன். பரிட்சையை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி மனசுக்குள் அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.

புகைந்து கொண்டிருந்த இரவு வேப்பமரக் காக்கைகளின் பேச்சரவம் கேட்டு விடிந்தது. மனைவியிடம் பேச்செதுவும் கொடுக்காமல் காலைநேர கடமைகளை முடித்துக்கொண்டு வெளியில் புறப்பட்டேன். வீட்டுவாசலின் கீழ்ப்படியில் காட்சிப் பொருளாக புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தாயாரிடம் "போய்ட்டு வரேம்மா" என்று சம்பிரதாயத்துக்கு சொற்களை உதிர்த்துவிட்டு தெருவில் இறங்கி நடக்க முற்பட்டேன்.

"அய்யோ... என்ன சொல்லிட்டேன்னு இப்படி வயித்துக்குக் கூட கொட்டிக்காம ஜம்பமா பொறப்பட்டுப் போறாரு இந்த மனுசன்" என்று ஏக்கமும் எதிர்பாப்ர்புமாய் எழுந்த மனைவியின் கூப்பாடு வீட்டுவாசலில் ஒலித்தது. அந்தக் கோபக் குமுறல் அக்கம் பக்கம் வீடுகள் தாண்டி பாதி தெருவுக்கு நன்றாகவே கேட்டிருக்கும். சன்னல்களில், வாயிற்படிகளில் மனித முகங்கள் முளைக்க ஆரம்பித்தன. முதுகிற்குப் பின்னால் நடக்கப் போகும் வாசல் நாடகத்தை திரும்பிப் பார்க்கப் பிடிக்காமல் பிடிவாதமாக நடையைத் தொடர்ந்தேன்.

"அத்தே உம்புள்ளைக்கு நீயாவது ஒரு முறை சொல்லிப் பாரேன்" மனைவி தன் மாமியாரிடம் முறையிடுவதும் எனக்குக் கேட்டது. அவசரப்படாமல் நான் நடந்து கொண்டிருந்தேன்.

"சும்மா இரும்மே நீய்யி, அந்த கிறுக்குப் பிடிச்ச பையபுள்ள போகும்போது கூவாத. உன் ஆம்பிடியானுக்கு கோபம் வந்தா இந்த பூமியே தாங்காது" கூச்சலிடும் மருமகளுக்கு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த தாயார் சமாதானம் சொல்லி அடக்குவதை காதில் வாங்கிக் கொண்டே நகரப்பேருந்தில் ஏறினேன்.

இரவுக்காவலன் மற்றும் அலுவலக உதவியாளனின் வணக்கங்கள் வரவேற்க அலுவலகத்திற்குள் நுழைந்தேன். துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் இறுதிநாள் என்ற நினைப்பு மட்டும் தலைப்புச்செய்தி போல சதா என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"இன்னா சார் சீக்கிரமா வந்துட்டீங்க? டல்லா வேற கீறீங்க!" இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களுக்கு பின் இரவுக்காவலன் என்னை சகஜமாக விசாரித்தான்.

"டல்லெல்லாம் ஒண்ணுமில்லப்பா முக்கியமான வேலை ஒண்ணு முடிக்க வேண்டியதிருக்கு அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். .

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மேசைமீது முழங்கைகளை ஊன்றி தலை கவிழ்ந்து உட்கார்ந்தேன். இரண்டு கட்டைவிரல்களும் நெற்றியை அழுத்தின. கடந்து வந்த இளமைக் காலம் பற்றிய நினைவுகள் நெஞ்சில் இழையோடின.

அடர் மரங்களுக்கு ஊடே குனிந்து நிமிர்ந்து உதிர்ந்து கிடக்கும் இலந்தை, நாவல் பழங்களை புட்டுக்கூடையில் பொறுக்கியெடுத்து பள்ளிக்கூட வாசலில் விற்பனை செய்து படிக்க வைத்த தாயாரின் முகமே அலை அலையாய் நெஞ்சம் முழுக்க நிறைந்தது.

தாயன்பை கடைசி காலத்தில் பலமடங்காக திருப்பிக் கொடுக்க வேண்டியது மகன்களின் தலையாய கடமையென்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. அதனால்தான் தாயாரின் பூமுகத்தில் தனிமை தோன்றா வண்ணம் கூடவே வைத்துப் பார்த்துக்கொள்கிறேன். கொடிய முதுமையுடன் அவள் தன் வாழ்க்கையைத் தொடர கூட்டுக் குடும்பமாக நாங்கள் உடனிருந்தது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

பதவி உயர்வு வந்தால் மாநிலத்தின் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் நான் பணி மாற்றம் செய்யப்படலாம். வாழ்ந்த வீட்டில் தாயை தனியாக தவிக்கவிட வேண்டிய நிலை ஏற்படும். இத் தயக்கமான சூழலில்தான் துறைத் தேர்வை எழுதச் சொல்லி மனைவி அழிச்சாட்டியம் பண்ணுகிறாள். . .

"சார்! உங்களூக்குப் போன்" மனதிற்குள் ஆயிரம் குழப்பங்களுடன் கவிழ்ந்திருந்த என்னை அலுவலக உதவியாளனின் குரல் எழுப்பியது. சக பணியாளர்கள் அவரவர் இருக்கையில் வந்து உட்கார்ந்து விட்டிருந்தார்கள்.

சொற்களுக்கு வலிக்காமல் தாழ்ந்த குரலில் அழைத்த அலுவலக உதவியாளனை முதுகில் தட்டிக்கொடுத்து, தோளில் கைபோட்டு அவனை ஜன்னலோரம் அழைத்துச் சென்றேன். தொலை பேசியைக் கையிலெடுத்து அவனைப்போலவே நானும் மிகத்தாழ்ந்த குரலில்தான், "யாரு" என ஆரம்பித்தேன்.

ஆனால் "டேய் சிவா ..! நீயாடா?." நிமிடத்திற்குள் என் குரல் உச்சத்திற்கு உயர்ந்தது. பால்ய நினைவுகள் ஒரே நேரத்தில் மனசுக்குள் துள்ளிக் குதித்தன. மும்மரமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என் வியப்புக் குரலால் ஈர்க்கப்பட்டு சட்டென்று குரல்வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களை நோக்கி தங்களுக்குள் பார்வையால், பெருமூச்சால் கேள்விக் குறிகளைப் பரிமாறிக் கொண்டனர். மேஜைகளின் மீதிருந்த ஆபிஸ் பேப்பர்கள் காற்றில் அசையும் சப்தமோடு இணைந்து என் உற்சாகத்திற்காண காரணம் அலசப்பட்டது.

"அவசியம் வாடா. உனக்குப் போயி நேரங் காலமா..? எப்போன்னாலும் வீட்டுக்கு வாடா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்" என்று ஜன்னல் கம்பியில் ஒருகையும் தொலைபேசியில் மறுகையுமாக நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பால்ய சிநேகிதன் முப்பது வருடத்திற்குப் பிறகு பேச நேர்ந்ததால் என் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.

பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அலுவலக உதவியாளன் மெல்ல விலகிச்செல்வதை பார்வையால் பின் தொடர்ந்தவாறே, "யாரு என் பசங்களா? இரண்டு பேரும் டாக்டருக்குத்தான் படிக்கிறாங்க. பையன் எமெம்சி பொண்ணு சிஎம்சி" என்றேன்.

"டேய் எலந்தை! நீயெல்லாம் பசங்கள டாக்டருக்கு படிக்க வச்சுட்ட....! " மறுமுனையில் ஒலித்த ஏளனமும் நக்கல்பேச்சும் எனக்கு அதிர்ச்சியூட்டின. பத்து நிமிடமாக இலக்கின்றி சந்தோஷமாக நீண்டு கொண்டிருந்த வார்த்தைச் சங்கிலி பட்டென அறுந்தது. குரல் கரகரத்துப் போனது. சட்டென தொலைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்.

ஏழ்மை குத்திக்காட்டப்பட்ட ஷாக்கை தாங்க முடியாமல் உடல் வியர்வையால் நனைந்தது. மனசு மரத்துப்போனது. முகச்சோகத்தை மறைக்க முடியாமல் நாற்காலியில் உட்கார்ந்து புருவங்களை உயர்த்தி அறைக்குள் இருந்த ஊழியர்களை ஏறிட்டுப் பார்த்தேன். ஆயாசத்துடன் உதடுகளைச் சுழித்து அலுத்துக் கொண்டேன்.

ஒரிரு மெளன நிமிடங்களுக்குப் பின் சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்த நான் அலுவலக உதவியாளனை நோக்கி, "பேங்க் வரைக்கும் போய் டிபார்ட்மெண்ட் எக்சாமுக்கு பணம் கட்டிட்டு வரேன். யாராவது வந்தா உக்கார வை" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

அறைக்குள் நடந்தவைகளை கண்ணிமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த அவன், "கொழந்தை மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு என்ன சார் ஆச்சு? யாரு போன்ல?" தலையைச் சொரிந்து கொண்டு அக்கறையோடு கூடவே நடந்து வந்தான்.

"ஒண்ணுமில்லப்பா ஒரு ஊதாங்கோல் அடுப்பு ஊதுச்சு" என்று அழுத்தமாக அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது, யாருமற்ற எங்கள் அலுவலக வாயிலில் அம்மா கையில் டிபன் கேரியருடன் நுழைந்து கொண்டிருந்தாள்.

- கி.மூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 05, 2014 11:19 pm

[You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 06, 2014 10:08 am

நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 06, 2014 1:18 pm

பெண்ணாய்ப் பிறந்தால்...
---------------------------------------

தோழர் உங்ககிட்ட எத்தன நாளா கேட்டுகிட்டு இருக்கேன் பக்கத்து கிராமங்களுக்கு கூட்டிட்டுப் போங்கன்னு” சற்று செல்லக் கோபத்தோடு கேட்டேன்.

அவர் சிரித்துவிட்டு “அப்போ நாலரை மணிக்கு என்னை எழுப்பி விடுங்க” என்றார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை!

எங்கள் கட்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இருக்கிறது. அவர் எங்கள் மாவட்டச் செயலாளர்.

மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள்..... ஒன்று: கிராம மக்களோடு பழகுவதில் கிடைக்கும் அனுபவங்களும் அன்பும். இரண்டு: தோழரோடு நேரம் செலவழிப்பது. எங்கள் எல்லோருக்குமே உன்னதமான தருணம்.. அதை கல்வி கற்கும் காலம் என்று தான் குறிப்பிட வேண்டும்.

சரியாக மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினோம். முதலில் கச்சைகட்டி செல்வதாக திட்டம். பைக்கில் சென்றோம். மண் சாலை எங்களை சிறப்பாக வரவேற்றது.

நான் மதுரை வாசி.... நெரிசலையும் இரைச்சலையும் சகித்துக் கொண்டு வாழ்பவன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மண் சாலைகளையும் பரபரப்பு இல்லாத மனிதர்களையும் பார்த்து பெருமூச்செறிவதுண்டு.

ஒரு வழியாக முத்தம்மா தோழர் வீட்டை அடைந்தோம். சிறிது நேரத்தில் அருகிலுள்ள தோழர்களை சந்திக்க நாங்கள் மூவரும் நடையைக் கட்டினோம்.

“அந்த சந்துல இருக்குதுல்ல ரெண்டாவது வீடு.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே..பதினாலு வயசுப் பொண்ணு. ஹ்ம்ம்.....ஒரு வருசம் ஆச்சு” என்றார் தோழர்.

“இப்போ அந்தப் பொண்ணு எங்க இருக்கா?”

“புருஷன் வீட்டுல தான்.”

அவர் முன்னரே அவளது கதையை சொல்லியிருந்தார். அதை என்னால் மறக்க முடியவில்லை. மிக ஆழமாக மனதில் பதிந்திருந்தது.

ஸ்கூலில் அன்று பி.டி பீரியட் இருந்தது. கோ கோ விளையாட்டில் அவள் கெட்டிக் காரி.. கீ கொடுக்க ஓடிக் கொண்டிருந்தவள் திடீரென வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்திருக்கிறாள்.
 
“ஒங்க பொண்ணு பெரியவளா ஆகிட்டா. பாத்து கூட்டிட்டுப் போங்க” என்றார் தலைமையாசிரியை.

மூன்று நாட்களுக்கு வீடே விழாக் கோலம் பூண்டு விட்டது. சடங்குகளும் முடிந்து விட்டது.

இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. இன்னமும் உதிரப் போக்கு நிற்கவில்லை.. அவள் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது.

வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தோழரிடம் யோசனை கேட்டிருக்கிறார்கள்.

அவர் விஷயத்தைக் கேட்டதும் பதறிப் போய்விட்டார். மதுரையில் உள்ள கைதேர்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இரண்டு நாட்களில் அவளது உடல்நிலை சரியாகிவிட்டது. முதல் வேலையாக தோழரைப் பார்த்து நன்றி கூறியிருக்கிறார்கள். இதில் தான் அவர் வாழ்க்கையின் முழுமையை உணர்கிறார் என்பதை அவர் அருகில் இருந்து ரசித்து வியந்தவன் நான்!

ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சில மாதங்களில் அவளது பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பதை அறிந்த போது அவர் நொந்து போய்விட்டாராம்.

அவள் பெற்றோர் இன்று வரை தோழரை சந்திக்கத் தயங்குகிறார்கள். அவர் இதை விரும்பவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

“தோழர் கொஞ்சம் நில்லுங்க”

என்ன என்பது போல் பார்த்தார்.

“பாப்பா ரொம்பக் கஷ்டப்படுறா. மேலு காலெல்லாம் வலிக்குதாம். டாக்டரு கிட்ட கூட்டிடுப் போவணும்” என்றாள். அவள் அந்தப் பெண்ணின் சித்தியாம். அவளது தாய் அருகில் தான் நின்று கொண்டிருந்தாளாம். ஆனாலும் தோழரை சந்திக்க அவளுக்குத் துணிவில்லையாம்.

“இப்போ தான் பாப்பானு தெரியுதா?” என்றார்.

அவள் தலை குனிந்தாள்.

“போன் பண்ணிக் கேட்டு சொல்றேன். சீக்கிரமாக் கூட்டிடுப் போங்க” என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார்

“ஏன் இப்டில்லாம்?” எனக் கேட்டேன்.

“எல்லாம் பயம் தான்....கல்யாணம் பண்ணி வைக்கிறது சேப்டினு நினைச்சுக்குறாங்க”

“ஓ.ஹோ.....பிரச்சனையே புருஷன் தானே?”

“அக்கரைக்கு இக்கரை பச்சைனு அவங்க நினைக்குறாங்க .ஆம்பிளைங்களை நம்பாதீங்கன்னா எந்தப் பெண்ணும் கேக்குறது இல்ல” என்றார்.

இப்போது வரை அவள் பெயர்கூட எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு 15 வயதை தாண்டியிருக்க வாய்ப்பே இல்லை. உடல் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பருவம். அவள் எடை குறைந்த குழந்தை என்றும் அவர் கூறியிருந்தார். எந்த வகையிலும் உடலுறவில் ஈடுபட அவள் இன்னும் தகுதி பெறவில்லை.
 
“ஆனா ஒன்னு தோழர்.. பொண்ணாப் பிறக்கக் கூடாது. அப்டியே பிறந்தாலும் கிராமத்துல பிறக்கக் கூடாது” என்றேன்.

அவர் சிரித்தார்.

நன்றி ஹரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 08, 2014 3:23 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் சிறு கதைகள் Empty Re: தமிழ் சிறு கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படித்த சிறு கதைகள்
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum