"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Today at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Today at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Yesterday at 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Yesterday at 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Yesterday at 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Yesterday at 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Yesterday at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சின்னச் சின்ன கதைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 12:32 pm

கொடுங்கள்... பெறுவீர்கள்!
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. நடக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அருகில் இருக்கும் பம்ப்செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்செல்லவும்."

அந்த பம்ப்செட்டோ மிகவும் பழையதாகஇருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவுகூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப்பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம்தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப்பெரிய பரிசு, விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்ம திருப்தியை விடப் பெரியசபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால்தான் பெறமுடியும். இதுபிரபஞ்சவிதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்தசந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

கதையை எழுதியவர் : தெரியவில்லை.
நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 12:52 pm

உலகத்திற்கு உப்பாய் இரு
---------------
ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி
காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக
அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில்
திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக
தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு
சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு'
என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல

காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன்
இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப்
பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன்
முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா,
நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது
கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும்

கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன்
வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால்
அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக்
கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை
சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை
அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த
எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும்
கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை
விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.
இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.


வேறு

வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு
ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி
வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான்.
இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு
கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு
பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய்
விட்டது.


காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு
பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து
ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று
நம்பிக்கையை வளர்த்தி விட்டது.


மன்னன் ஏரியைத் தேடி
ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக்
கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக்
கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில்
இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது.
அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை
ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று
நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை
அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான
பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள
புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன்
குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப்
போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப்
பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக்
கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன்
வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப்
போகின்றன' என்றது.


தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.


நீதி:
நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


நன்றி: எகனாமிக் டைம்ஸ், இந்தியா
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 12:54 pm

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
-------------------
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து
கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும்,
நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை
மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான்
போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா
தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும்
மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால்
கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை
படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?"
என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள
மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில்
வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று
முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர்
கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன்
காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.


வீரன் நாண் ஏற்றி
அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின்
தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து
ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.


வீரன்
கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப்
பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர்
கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு
ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி
ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு
அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு
ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே
எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம்
சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப்
போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை
எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே
கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.


கிருஷ்ணர் "வீரனே,
போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில்
பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார்.
அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி,
அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத்
தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு
தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.


நீதி:
எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன்
இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 12:56 pm

கை மேல் பலன் கிடைத்தது !
--------------
அரசன்
ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த
நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான்
'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள்
சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான். ஒரு
நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக
அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு
நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க
ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு

மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற
சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன்
சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப்
புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.
'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி'
என்று உறுமினான்.

சேவகன்
சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக்
காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 12:58 pm

சட்டமும் தர்க்கமும் - குறும்புக் கதை
-------------
ஒரு சட்டக்கல்லூரி மாணவன் தனது பரீட்சையில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டான்.

தனது மதிப்பெண் சான்றிதழைப் பார்த்துவிட்டு தனது பேராசிரியரிடம் கேட்டான். அவருக்கு வயது 50+.

மாணவன் - “நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?”.
பேரா - “தாராளமாக. பதில் கூறுவது எனது கடமை”.

மாணவன் - “நல்லது. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தேவை. நீங்கள் சரியான பதிலைச் சொன்னால் எனக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண்ணையே அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் தவறான பதிலைச் சொன்னால் எனக்கு உயர் மதிப்பெண் வழங்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?”.

பேரா - “சரி. கேள்வியைக் கேள் மகனே!”.

மாணவன் - 1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்க (logical) ரீதியிலாக தவறானதும் எது?
2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி சரியானதும் எது?

நீண்ட நேரம் யோசித்த பிறகும் எந்த ஒரு முடிவுக்கும் வராத பேராசிரியர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என ஒத்துக்கொண்டார். அந்த மாணவன் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண்ணை அதிகபட்சமாக மாற்றுவதற்கு சம்மதித்தார்.

பின் மாணவனின் முகத்தைப் பார்த்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டு ”பதில் வேண்டும்”, என்றார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்கள் :

1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்கரீதியிலாக தவறானதும் எது?
உங்களுக்கு 55 வயது ஆன பின்பு இப்போது 20 வயது குமரியைத் திருமணம் செய்திருக்கிறீர்கள். இது சட்டப்படி சரியானதாக இருந்தாலும், தர்க்க ரீதியிலாகத் தவறானது.

2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி (logical) சரியானதும் எது?
உங்கள் மனைவிக்கு 25 வயதுக் காதலன் ஒருவன் இருக்கிறான். அது தர்க்கப்படி சரி ஆனால் சட்டப்படி தவறு.

அந்த 25 வயதுக் காதலனுக்கு நீங்கள் முதலில் குறைத்த மதிப்பெண் வழங்கினீர்கள். இப்போது அதிகபட்ச மதிப்பெண் வழங்கிக் கவுரவித்துவிட்டீர்கள். அவன் வேறு யாருமில்லை. நானே..

(இதுக்கு மேல என்ன நடந்துருக்கும்னு சொல்லத் தேவையில்லைங்க)
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:00 pm

என்ன பிரச்சினை தல?
----------
ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - “நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை”, சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. “குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை” என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

“இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்” என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

”தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது”, ஓட்டுநர்.

நடத்துநர் “அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்” எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. “நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்” - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - “நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை”.

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் “ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்” என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் “எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை” எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:01 pm

உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்
-------------
சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமான கம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன் பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டு பாத்திரங்களிலும் நீரை நிரப்பி அவற்றைத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவாள்.

அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரை நிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில் கொட்டி வீணாகிவிடும்.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டு பாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரை சுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக் காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாக இருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவது பானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன் முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப் பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாத பாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".

இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் - "சிறுமியே ஒன்றைக் கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும் கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப் பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜா மலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன் திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவை பூப்பூப்பதற்கு யார் காரணம் - அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர் சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"

நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் என நன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கான விதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்த ஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்ட பிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச் செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம் காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:03 pm

மணலில் எழுதிய எழுத்து
---------------

இணைபிரியாத நண்பர்கள் இருவர் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர். இருவரும் பயணத்தின் ஊடே பேசிக்கொண்டே சென்றனர். வாக்குவாதம் பலமாக இருந்தது. வாதம் மிக தீவிரமாகச் சென்றது. ஒரு நண்பனானவர் அடுத்தவனின் கன்னத்தில் அடித்து விட்டான்.வாக்குவாதத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.

அடி வாங்கியவனுக்கு வலித்தது. அவன் மனம் துடித்தது. இருப்பினும் அவன் எதையும் சொல்லாமல் மவுனமாக அந்தப் பாலைவனப் பாதையின் மணலில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது கன்னத்தின் அடித்துவிட்டான்”.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் மேலும் வெகுதொலைவு நடந்து சென்றனர். அங்கே ஒரு பாலைவனச்சோலை (oasis) காணப்பட்டது. அந்தப் பாலைவனச்சோலையில் குளிக்கலாமென இருவரும் முடிவெடுத்தனர். குளித்தனர். திடீரென்று கன்னத்தில் அடிவாங்கிய நண்பனானவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் சற்றுமுன் அவனை அடித்த நண்பன் இவனைக் காப்பாற்றிவிட்டான்.


உயிர்போகி உயிர் வந்தது நீரில் மூழ்கிப் பிழைத்தவனுக்கு. பிறகு அவன் அந்த நீர்க்கரையில் இருந்த ஒரு பாறையில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்”.

அவனைக் கன்னத்தில் அடித்தவனும், நீரில் இருந்து காப்பாற்றியவனும் கேட்டான் - “நான் உன்னை அடித்தவுடன் அந்த நிகழ்ச்சியை நீ மணலில் எழுதினாய். ஆனால் உன் உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை பாறையில் எழுதிவிட்டாயே?”.

உயிர்பிழைத்தவனும் அடிவாங்கியவனுமாகிய நண்பன் சொன்னான் - “யாராவது நமது மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டால் நாம் அதை மனதில் எழுதிக்கொள்ளக் கூடாது. மணலில்தான் எழுத வேண்டும். மன்னிப்பு என்கிற காற்றானது மணலில் எழுதியவற்றை அழித்துவிடும்”.

“ஆனால் யாராவது நமக்கு உண்மையிலேயே நன்மை செய்திருந்தால் அதை மனம் என்கிற கல்லில்தான் எழுத வேண்டும். காற்று அதை எக்காலத்திலும் அழித்து விடாது. அப்போதுதான் பிறர் செய்த நன்மையானது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.”

நீதி : உங்களிடம் உள்ள செல்வங்களால் உங்கள் மதிப்பு எடை போடப்படுவது இல்லை. உங்களுக்கு உதவ முன்வருபவர்களைக் கொண்டே உங்களுடைய மதிப்பு எடை போடப்படும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:05 pm

முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?
---------------

எட்டுவயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

அன்னையின் பதில் : “கடவுள் ஆதாம், ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்படியே மனித உலகம் உருவானது”.

இரண்டு தினங்களுக்குப் பிறகு அவள் தன் தந்தையிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

தந்தையின் பதில் : “குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்காக இருந்தவர்கள் நாம்”.

சிறுமிக்குக் குழப்பம் அதிகரித்தது. ”ஒரே கேள்விக்கு தாயின் பதிலும், தந்தையின் பதிலும் வேறுவேறாக இருக்கிறதே” என்று.

அடுத்த நாள் தன் தாயிடம் கேட்டாள் “இது எப்படிச் சாத்தியம்? நீங்கள் ஆதாமும், ஏவாளுமே மனிதன் உருவாகக் காரணம் என்றீர்கள். ஆனால் அப்பா சொன்னார் - குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று. இரண்டில் எது உண்மை”.

சுதாரித்துக்கொண்ட தாய் சொன்னாள் -

1) “இது மிக எளிது. என் பரம்பரை அதாவது (உன் அம்மாவின் பரம்பரை) வந்த விதம் ஆதாம், ஏவாளின் சந்ததி வாயிலாக உருவானது”

2) “உன் தந்தையின் பரம்பரை வந்த விதம் குரங்குகளின் சந்ததி வாயிலாக உருவானது. இரண்டுமே சரிதான்” என்றாள்.

இதைக்கேட்ட சிறுமி ‘ஙே’ என விழித்தாள்.

நீதி : மட்டம் தட்டியே பழக்கப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:07 pm

பழசும் புதுசும் - இது என்ன சத்தம்?
------------------
எண்பது வயதான முதியவர் நன்கு படித்த தனது மகனுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

மகனுக்கு 45 வயதிருக்கும். வெளிநாடு சென்று மேற்படிப்புப் படித்து தற்போது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிக்கிறார். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மாடியில் ஒரு காகம் ‘காகா’ எனக் கரைந்தது.

மகனிடம் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

“காகம் கரையும் சத்தம்”

சில நிமிடம் கழித்து மீண்டும் அவர் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

”அப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னேனே - காகம் கரையும் சத்தம் இது”.

மீண்டும் சில நிமிடங்களுக்குப் பிறகு தந்தை கேட்டார் - “இது என்ன சத்தம்?”.

மகன் கத்தியே விட்டார். ”ஏம்பா இப்படிக் கேட்ட கேள்வியையே மறுபடி மறுபடி கேட்டு உசிரை வாங்குறீங்க. இது காக்கை கரையும் சத்தம்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். வயசானாலே உசிரை எடுக்கிறீங்களே”.

மூன்றுமுறை அவர் “இது என்ன சத்தம் என்று கேட்டதற்கே” மகனுக்கு tension தலைக்கேறிவிட்டது.

உடனே வயதில் முதிர்ந்த தந்தை தனது அறைக்குள் சென்று ஒரு பழைய நாட்குறிப்பேடு (diary) ஒன்றைக் கொண்டு வந்தார்.
அவர் பிறந்ததில் இருந்து நடந்த சுவையான சம்பவங்களை அவர் அதில் பதிவெழுதி வந்திருக்கிறார்.

அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து மகனிடம் காண்பித்தார். “மகனே இந்தப் பக்கத்தை சற்று சத்தமாக உரக்கப் படிக்கவும்” - என்றார்.

மகன் படித்துக்கொண்டிருந்தார் :

அந்த நாட்குறிப்பேடில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டு இருந்தது.

“இன்று என் இனிய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஒரு காகம் மாடியின் ஜன்னலின் அருகே அமர்ந்தது. என் பையன் 23 முறை அப்பா அது என்ன? அப்பா அது என்ன? எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். நானும் அவனுக்குப் பொறுமையாக அன்புடன் - அது காகம் - அது காகம் என திரும்பத் திரும்ப அவன் கேள்வி கேட்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவனை அன்புடன் தழுவிக்கொண்டே அவன் ஒவ்வொருமுறையும் அது என்ன என்று கேட்கையில் நான் பதில் சொன்னேன்.
ஒரே கேள்வியை 23 முறை கேட்கிறானே என்று எனக்குத் தோணவில்லை. அவன் மேல் இருந்த அன்பே பெரிதாக இருந்தது.”.

இதைச் சத்தமாகப் படித்த மகனுக்கு பழைய Flash back ஓடியது. தற்போது மூன்றுமுறை தனது தந்தையார் “அது என்ன என்று கேட்டதற்கே - தன்னால் பொறுமையாகப் பதில் சொல்ல இயலவில்லையே. தந்தையின் அன்பு எங்கே தான் எங்கே!” என வெட்கித் தலைகுனிந்தார்.

நீதி : ஊருக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாமல்ல. அனைவருக்கும் ஒரே நியாயம்தான்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:09 pm

மிஸ்டர் எக்ஸின் அரேபியப் பயணம்
----------------------

ஒரு மிகப் பெருமை வாய்ந்த குளிர்பானக் (soft drinks) கம்பெனியில் மிஸ்டர். எக்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அரேபிய நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் அந்தக் கம்பெனியின் Marketing பிரிவு முடுக்கிவிடப்பட்டிருந்தது.

அரேபியாவின் Marketஐப் பிடிப்பதற்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.

அவர்களின் எந்த ஒரு முயற்சியும் அங்கே வெற்றியடையவில்லை. வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டு வீடு திரும்பினர்.

வீட்டில் மிஸ்டர். எக்ஸின் மனைவி கேட்டாள் “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. என்ன விசயம். இப்படி நீங்க கவலைப் பட்டு நான் பார்த்ததில்லையே”.

மிஸ்டர் எக்ஸ் - “அரேபிய நகரத்தில் என் குழுவினருடன் Marketing செய்வதற்காகச் சென்றேன். அங்கே பாலைவனப் பகுதியாயிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிநடை போட்டுச் சென்றேன். ஆனால் அங்கே அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. நான் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. அதற்காக நான் ஒரு உபாயம் சொன்னேன். நகரின் முக்கியமான இடங்களில் எல்லாம் மூன்று படங்களை வைத்தோம். ஒரே மனிதனின் மூன்று தோற்றங்களை விளக்கும் வகையில் அந்தப் படங்கள் அமைந்திருக்கும்.

முதல் படம் : பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டுப் பயணிக்கிறான் ஒருவன். நீர் குடிக்கும் ஆவலில் வறட்சியுடன் நிற்பான் அவன்.

இரண்டாம் படம் : அவனே நம் கம்பெனியின் குளிர்பானத்தைக் குடிப்பான்

மூன்றாம் படம் : முற்றிலும் உற்சாகமானவனாக அவனே காட்சியளிப்பான்.

இந்த மூன்று படங்களையும் நகரின் அனைத்துத் தெருக்களிலும் காட்சிக்கு வைத்துக் காத்திருந்தோம். அப்படி இருந்தும் எல்லோரும் படங்களை உற்று நோக்கிச் சென்றனரே தவிர யாரும் குளிர்பானங்களை வாங்கி அருந்தவில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு நொந்துபோகி வீடு வந்தேன்” என்றார்.

மிஸ்டர் எக்ஸின் மனைவி தன் தலையில் மெல்ல அடித்துக்கொண்டாள்.

”ஏங்க உங்க Idea எல்லா இடத்திலும் Work out ஆகிடாதுங்க. எல்லா நாடுகளிலும் இடமிருந்து வலமாகத்தான் (Left to Right) படிப்பாங்க எழுதுவாங்க. ஆனால் அரேபியாவில் வலமிருந்து இடமாக (Right to left) எழுதுவாங்க. படிப்பாங்க.

இது உங்களுக்குத் தெரியாமல் போயிருச்சு. மொழி தெரியாமல் நடந்த தப்பு இது.

அதே படங்களை வலமிருந்து இடமாக (Right to left) யோசிச்சுப் பாருங்க

1. மிக உற்சாகமாக ஒரு இளைஞன் காட்சியளிக்கிறான்
2. உங்கள் கம்பெனி பானத்தைக் குடிக்கிறான்.
3. மிகக் கலைத்துப் போகி கஷ்டப்படும் முகத்தைக் காண்பிக்கிறான்.

இதுதான் நீங்கள் செய்த தவறு.” என்றாள்


நீதி : யானைக்கும் அடி சருக்கும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 1:11 pm

கருமியின் மனைவி
----------------
ஒரு தேசத்தில் ஒரு உலக மகாக் கஞ்சன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு பணத்தின் மேல் கொள்ளை ஆசை.

உலக மகாக் கருமி அவன். வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கிடைத்த பணம் அனைத்தையும் பத்திரப்படுத்தி வந்தான்.

அவன் சாகும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னான் - “நான் இறந்த பிறகு, எனது வாழ்நாளில் நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் உடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆதலால் அனைத்துப் பணத்தையும் ஒரு சிறு பெட்டியில் போட்டு எனது சவப்பெட்டிக்குள்ளேயே வைத்துவிடவும்.”.

இவ்வாறு செய்தே தீரவேண்டும் என தனது மனைவியிடம் உறுதிமொழியும் சத்தியமும் பெற்றுவிட்டான். மனைவியும் கணவன் மேல் உள்ள பாசத்தினால் சத்தியமும் செய்துவிட்டாள்.

அவனும் அவன் நினைத்தமாதிரியே விரைவில் இறந்துவிட்டான்.
அனைத்து மதச்சடங்குகளும் முடிந்தபிறகு சவப்பெட்டியை மூடத் தயாராகினர். அந்த நேரத்தில் துக்கத்துக்கான கருப்பு நிற ஆடை அணிந்த அவனது மனைவியானவள் ஒரு சிறிய கையடக்கப் பெட்டியைக் கொண்டு வந்தாள். “ஒரு நிமிடம். பெட்டியை மூடாதீங்க. இதை உள்ளே வைச்சுருங்க”

அவள் கொடுத்த சிறிய பெட்டியை கருமியுடன் வைத்துச் சவப்பெட்டியை மூடிவிட்டனர்.
பின் ஒரு வழியாக அவனுடைய சவ அடக்கமும் முடிந்தது.

அவன் மனைவியின் நண்பி ஒருத்தி வந்தாள். “ஏண்டி உனக்கு எதாவது அறிவிருக்கா?. அவந்தான் ஒரு கூறுகெட்ட மனுசன். பணம் பணம்னு அழைஞ்சான். பத்துக் காசு செலவழிக்காம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சு அழகு பாத்தான். செத்தபிறகாவது நிம்மதியா இருக்க விடாம. எல்லாப்பணத்தையும் தன்னுடன் எடுத்துப் போகணும்னு சத்தியம் கேட்டான். சத்தியத்தைப் பண்ணிப்புட்டு இப்போ எல்லாத்தையும் பொட்டியில போட்டு அவங்கிட்டயே கொடுத்திட்டியே” என்றாள்.

மனைவி சொன்னாள் - “என் கணவர் எவ்வளவு மகாக் கருமியா இருந்தாலும், அவர் மேலே எனக்குக் கொள்ளைப் பிரியம். என் மனசு முழுவதும் நிறைந்திருப்பவர் அவர். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றாவிட்டால் எனது கட்டை வேகாது. அவர் விருப்பத்துக்கு இணங்கி அவருடைய பணத்தையெல்லாம் அவருடனேயே வைத்துவிட்டேன்”.

“என்னடி சொல்றே. எல்லாப் பணத்தையும் அவனோட அனுப்பிட்டியா?!@#$$%%^#”

“ஆமாம். அப்படித்தான் செய்தேன்”. “அவருடைய பணம் எல்லாத்தையும் எனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு, அவருடைய பெயருக்கு ஒரு செக் எழுதி அந்த செக்கை ஒரு சிறு பெட்டியில் வைத்து அவருடன் அனுப்பிவிட்டேன். அவரால் அந்தச் செக்கைப் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள இயலுமெனில் மாற்றிக்கொண்டு செலவழிக்கட்டுமே” - என்றாள் மனைவி.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:20 am

அரசர்
-----
ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை
இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம்
இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.


யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர்.
யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது
மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக்
கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்
மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை
நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை
ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர்
நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து
இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து
வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள்
ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான்
அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது
புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை
ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக்
கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல
எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில்
விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச்
சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு
செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத்
திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:24 am

யார் டாப்?
----------------
ஒரு
குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும்
குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர்.


என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன்
கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி
நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன்
சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையில
ேயே வைத்துக் கொண்டான்.

இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது,
எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அவன் தன் மனம்போன போக்கில்
எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான்.
அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது,
அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான்.

அந்த அறுசுவை உணவைத்
தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக்குப் பின்னால்
அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல்
அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம்
உதவியாளராகச் சேர்ந்து கொண்டான்.
அவனைப் பிடித்துப் போனதால் சமையல்
கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.

மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான்
அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த
வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு
குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து
கொண்டான்.

ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை
அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய
வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ
முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு.

குரு அடிக்கடி சொல்லும் உபதேசம்
ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன்
செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை
வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும்
என்பதுதான் அந்த உபதேசம்.

உடனடியாக, அந்தச் சீடன், அச்
சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச்
சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க
ஆரம்பித்தான்.
அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர்.

அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான்.
சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத்
திகழ்ந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன்
சீடர்களைக் காண விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக்
கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும்
மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை
செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர்.
ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர்.

அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல்
முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச்
செய்தது.

ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார்.

பின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார். “நீ அரசவைப் புலவன்! சிறந்த
இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி
தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான்
மறுக்கவில்லை!’என்றார்.

பின்னர், இரண்டாமவனைப் பார்த்து, “நீ
சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு
ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற
குரு மேலும் தொடர்ந்தார்.

“ஆனால், அறியாமையில் இருக்கும்
ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது
போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும்
கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள்
இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம்
கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! உங்கள்
மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்… என்னை மன்னித்துவிடுங்கள்…’
என்றார் குரு.

“அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள்
இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது
தெளிவாக உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்’ என்றனர்
சீடர்கள் இருவரும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:26 am

வக்கீல் வாதம்
-------------
ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன்
அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு
போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக்
குழப்ப முயன்றார்.


வக்கீல் : கேட்ட கேள்விக்கு மட்டும் உண்டு இல்லை என்று
பதில் சொல்... இதற்குமுன் இவன் யாரென்று உனக்குத் தெரியுமா?

விவசாயி : தெரியாது..

வக்கீல் :
இவன் உன் தோட்டத்தில் அனுமதியின்றி நுழைந்ததை நீ
பார்த்தாயா...?

விவசாயி : இல்லை பார்க்கவில்லை


வக்கீல்
: இவர் யாரென்று தெரியாது...
அனுமதியின்றி தோட்டத்தில் நுழைந்தது தெரியாது... உன் காடைகளைச் சுட்டது மட்டும்
எப்படித் தெரியும்...?

விவசாயி
: நான் அவர்தான் சுட்டார் என்று
கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறேன்.

வக்கீல் :
சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?

விவசாயி :
நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என்
நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய
இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.அவ்வளவுதான். ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை
செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:26 am

தவறும் தண்டனையும்ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று
திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு
மன்னிப்புக் கேட்டான்.

பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு
தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.

அவனும்,'என் முதலாளியை நாயே,என்று நான் சொன்னது
தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.

ஒரு தடவை நாயே என்று
சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:00 pm

குடும்பம் – ஒரு பக்க கதை
குடும்பம் – ஒரு பக்க கதை 
----------------------- 
தீபக்… என்னடா சொல்றே? 
என்னைப் பிரிஞ்சு போகப் போறியா? 
வேற யாரையாவது கல்யாணம் செய்துக்குற 
ஐடியாவா? துரோகி’’ என ஆத்திரப்பட்டாள் புவனா. 
– 
‘‘இல்லை புவனா… எனக்கு வேலை போயிடுச்சு. 
இப்போ நான் வேலையில்லாத உதவாக்கரை. 
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில நம்ம காதல் வளர்ந்துடுச்சு. 
உன்னைப் பிரிஞ்சிருக்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. 
ஆனா, வருமானமில்லாத நான் உன்னை கல்யாணம் 
பண்ணிக்கிட்டா உன் சம்பளத்துலதான் என் வீட்டுல 
இருக்குற ரெண்டு ஜீவன்களை காப்பாத்தணும்!’’ 
– தீபக் தலைகுனிந்தபடி சொன்னான். 
– 
‘‘சே, இதுக்குப் போயா பிரியணும்னு சொன்னே? 
நீ வேற, நான் வேறயாடா? ஏன்டா இப்படிப் பிரிச்சுப் பார்க்கறே? 
உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் உன் 
குடும்பத்தை நான் காப்பாத்த மாட்டேனா?’’ 
– 
‘‘ப்ச்… அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது!’’ 
– 
‘‘ஏன், தீபக்? நான் வேணும்னா உங்க அப்பா அம்மாகிட்ட 
வந்து பேசட்டுமா?’’ 
– 
‘‘இங்கதான் தப்பு நடந்து போச்சு புவனா. எங்க வீட்ல இருக்குற 
ரெண்டு பேரை என் அப்பா, அம்மானு நீ நினைச்சிக்கிட்டு 
இருக்குறே. 
அது, என் மனைவியும் குழந்தையும். அந்த உண்மையை இனி 
மேலும் நான் மறைக்க முடியாது!’’ 
– 
———————- 
கே.என்.எஸ்.மணியன் 
குங்குமம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:02 pm

புதுமனை – ஒரு பக்க கதை
-------------------

தான் புதுசாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்கு
அவசர அவசரமாய் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு
செய்தான் சுகுமார்.


இன்னும் வீட்டு வேலைகள் முழுமையாய் முடியவில்லை.
அதற்குள் கிரகப்பிரவேசமா? அந்தத் தெரு மக்களுக்கே
இது ஆச்சரியமாய்த்தான் இருந்தது.

‘‘ஏங்க… இப்ப கிரகப்பிரவேசத்துக்கு என்ன அவசரம்?’’
எனக் கேட்டாள் மனைவி சுமதி. ‘‘பின்னாடி சொல்றேன்’’
எனச் சொல்லி வைத்தான் சுகுமார்.

மங்கள இசை ஒலிக்க, பசுவும் கன்றும் வீட்டிற்குள்
அடியெடுத்து வைத்துச் செல்ல, உறவினர்கள் வந்து
சேர்ந்தார்கள். வீட்டைச் சுற்றி வந்த நண்பர்களும்
உறவினர்களும் ஆளாளுக்கு தங்களுக்குத் தெரிந்த
யோசனைகளைச் சொன்னார்கள்.
எல்லோரும் போன பிறகு மனைவியிடம் பேசினான்
சுகுமார்.

‘‘ஏன் வீட்டை கம்ப்ளீட் பண்ணாம கிரகப்பிரவேசம்
வச்சீங்கனு கேட்டியே… இப்பப் பாரு, ஆளாளுக்கு எத்தனை
விதமான யோசனைகள் சொல்லியிருக்காங்கன்னு.
முழுசா கட்டி முடிச்சிருந்தாலும் ‘இப்படிக்
கட்டியிருக்கலாமே’னு இவங்க யோசனை சொல்லத்தான்
செய்வாங்க. ‘அடடா, செய்யாம விட்டுட்டோமே’னு
நமக்கு மனசு அடிச்சிக்கும்.
இப்ப பிரச்னையே இல்ல. இவங்க சொன்ன அட்வைஸ்ல
நல்லதை எடுத்துக்கிட்டு அதன்படி செய்யலாலாம்.
இதனாலதான் கிரகப் பிரவேசத்தை முன்கூட்டியே
என்றான் சுகுமார்.
அதில் உள்ள நியாயம் புரிந்தது சுமதிக்கு.

———————————
வெ.இளங்கோ
குங்குமம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:08 pm

முயல், ஆமை கதையின் #‎லேட்டஸ்ட்_வெர்ஷன் முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

#‎நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்… இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

#‎நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்… அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்… டூ… த்ரீ…

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

#‎நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது… ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

#‎நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!

#‎டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
#‎முயலாமை மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால் #‎அனுபவம் .

முயலாமல் தோற்றால் #‎அவமானம் .

வெற்றி நிலையல்ல,

தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

————–
நன்றி-முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:10 pm

நட்பை முறிக்கும் வார்த்தைகள்…!
---------------------
சுட்ட கதை சுடாத நீதி

பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும்,
குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்கு காரணம்
ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி. நகரின் மிக பெரிய
பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல்
விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என
தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர்.

ஒருவாராக பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை
வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில்
இருந்தது.

அதை மீட்பதற்காக போட்ட வழக்கில், இன்று தான் அந்த
தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதை
குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.

குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான்.

‘சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு
இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள்’
என நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டு
கொண்டிருந்தார்.

அதனால் பீஸ் நயா பைசா கூட வாங்கவில்லை. இப்போது
ஜெயித்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை
செய்ததாக நினைத்து கொள்வாரா? என்று குழப்பம்.

வெற்றி தகவலை சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரை
பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை
பரிசாக தந்தார்.

‘இது லண்டனில் வாங்கியது. பொம்மை மாதிரி குழந்தைகள்
விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலை பயன்படுத்தலாம்’

‘என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பல கோடி
ரூபாய் சொத்தை வாதாடி மீட்டு தந்திருக்கிறேன். நீ என்ன
வென்றால் ஒரு பொம்மையை தருகிறாய். வெளி ஆளாக
இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்கி இருப்பேன்
தெரியுமா? என கொதித்தார்.

தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல்
பொம்மையை வாங்கி திறந்தார்.

‘இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட
பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி
ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம்
உள்ள இருக்கு’ என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு
வெளியேறினார்.

பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு
நின்றார் வழக்கறிஞர்.

நீதி:

அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:11 pm

நம்பிக்கைகள் தான் உறவுகளை உறுதியாக்குகின்றன!
----------------
“காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
ஆசைப்பட்டேன். ஆனால், என்னால் எந்தப் பெண்ணையும்
காதலிக்க முடியவில்லை. குழப்பமாக இருக்கிறது” என்றபடி
அந்த குருவிடம் போய் நின்றான் அவன்.

நல்ல வேலையில் இருக்கிறான்; வசதியானவன்; கம்பீரமாகவும்
இருந்தான்.

குரு அவனை பார்த்து சிரித்தார். பக்கத்திலிருந்த சோளத்
தோட்டத்தைக் காட்டினார்.

“அங்கு போ! இருப்பதிலேயே பெரிதான சோளக்கதிரை பறித்து வா.
ஒரே நிபந்தனை…. போன பாதையில் திரும்பி வந்து, ஏற்கனவே
பார்த்ததைப் பறிக்கக் கூடாது!”

இளைஞன் போனான். முதல் வரிசையிலேயே ஒரு பெரிய
சோளக்கதிர் இருந்தது. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் அதைவிடப்
பெரிதாக இன்னொன்று தெரிந்தது. தோட்டம் ரொம்பப் பெரியது.
இன்னும் உள்ளே போனால் பெரிதாக கிடைக்கும் என்று நினைத்தான்.

கொஞ்ச தூரத்தில் மிகப்பெரிய சோளக்கதிர் அவனை சுண்டி இழுத்தது.
அதையும் அலட்சியம் செய்துவிட்டு நடந்தான். நடக்க நடக்க அவனுக்கு
ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது….

தோட்டத்தின் இந்த பக்கத்தில் இருக்கும் கதிர்கள் எல்லாமே சிறிதாக
இருந்தன. பெரிய கதிர்களை அவன் இழந்துவிட்டான். எனவே வெறுங்
கையோடு தலையை தொங்கப் போட்டுக்கொண்டு வந்து குரு முன்பாக
நின்றான்.

குரு சிரித்தார்.
“இன்றைய இளைஞர்களின் பிரச்சினையே இது தான்! இதை விட சிறந்தது
வேண்டும்’ என நினைத்து, கிடைக்கும் ஒவ்வொரு துணையையும்
புறக்கணிக்கிறீர்கள். அந்த தேடல் வெறுமையில் முடியும்போது தான்
அவர்களுக்கு புரிகிறது…’கிடைத்த நல்ல துணையை இழந்துவிட்டோம்’
என்பது! வாழ்கையில் ரிவர்ஸ் கியர் போட்டு அதை அடைய முடிவதில்லை…”

“அப்போ என் கல்யாணமும் இப்படி தான் ஆகுமா?”

“இல்லை” என்று அந்த இளைஞனின் தோள்களை ஆதரவாக பிடித்தபடி
குரு சொன்னார்,

“இப்போது உன்னைத் திரும்பவும் அந்த தோட்டத்துக்கு அனுப்பினால்
உசாராகி விடுவாய். கையில் கிடைத்த ஏதோ ஒரு கதிரை பறித்து,
‘இது தான் பெரியது’ என்று திருப்தியடைந்து விடுவாய். அது தான் பெரியது
என்று நம்புகிறாயே, அந்த நம்பிக்கை உனக்கு கைகொடுக்கும்” என்றார்.

————–
நீதி:

நம்பிக்கைகள் தான் உறவுகளை உறுதியாக்குகின்றன!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 24, 2015 4:14 pm

அடக்கம் அவசியம்! -ரஜினி சொன்ன குட்டி கதை!
----------------

என்னுடைய சின்ன வயசுல ஒரு பெரியவர் என்னைக்
கூப்பிட்டு: ‘தம்பீ! வாழ்க்கையில் நீ எவ்வளவு தூரம் நடக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?’ என்று கேட்டார்.

‘ஐயா, நான் கடைசி வரை நடந்து கொண்டே இருக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றேன்.

‘அப்படியானால் தலையை மேலே தூக்கியபடி நட’
என்றார் அந்தப் பெரியவர்.

நானும் தலையைத் தூக்கிக்கிட்டு, மேலே பார்த்தப்படியே
ஒரு பத்தடி நடநதிருப்பேன். அதற்குள் தடுக்கி கீழே விழுந்து
விட்டேன்.

பிறகு அந்தப் பெரியவர் மறுபடியும் என்னை அழைத்து,
‘இப்ப தலையை குனிந்து நடந்து போ’ என்றார்.

அவர் சொன்னபடி குனிந்து நடந்தேன். இன்றுவரை கீழே
விழாமல் நல்லபடிநடந்து கொண்டிருக்கிறேன்..

மனுஷனுக்கு எவ்வளவு அடக்கம் இருக்கோ,
அந்த அளவுக்கு வளர்ச்சியும் இருக்கும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 25, 2015 11:22 am

பச்சை – ஒரு பக்க கதை
ஒரு பக்க கதை
-----------
தன் காதலி நளினியின் பெயரை கையில் பச்சை
குத்திக்கொண்டது எவ்வளவு தவறு என்று ராகவனுக்கு
இப்போது புரிந்தது. அமெரிக்காவில் வேலை பார்க்கும்
பணக்கார சாஃப்ட்வேர் மாப்பிள்ளை கிடைத்தவுடன்
டாட்டா சொல்லிவிட்டு பறந்து போய்விட்டாள்.

ராகவன் வீட்டிலும் அவனுக்கு வேறு பெண் பார்த்து
விட்டார்கள். பச்சை குத்திக்கொண்ட பெயரை எப்படி
அழிப்பது? திண்டாடினான். நிச்சயதார்த்தத்தில்
முழுக்கை சட்டை போட்டு சமாளித்தான். எத்தனை
நாள் இப்படி?

விசாரிக்காத டாக்டர் இல்லை. லேசர் சிகிச்சை மூலம்
அழித்துவிடலாமாம். ஆனால் அதற்கு அவன் நான்கு
மாதச் சம்பளத்தை கட்டணமாகக் கேட்டார்கள்.

யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல்
அடித்தது. வருங்கால மனைவி சுமாதான் பேசினாள்.

‘‘ராகவ், நேத்து டி.வி பார்த்தீங்களா?
என் ஃபேவரிட் நளினிக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு.
பத்து வயசில் என்னமா பாடறா! ஆறு மாசமா நடந்த
போட்டியில் அவளுக்கு நான் பயங்கர ரசிகை ஆயிட்டேன்!’’

ராகவனுக்கு அவள் பேச்சு பாட்டாக ஒலித்தது.
‘‘நான்கூட நளினிக்கு தீவிர ரசிகன். அவ பேரை பச்சை
குத்தியிருக்கேன்னா பார்த்துக்க…’’

‘‘நமக்குள்ள என்ன ஒற்றுமை… நான் கொடுத்து வச்சவ!’’

‘அப்பாடா!’ – பெருமூச்சு விட்டான் ராகவன்.

———————————–
வி.சிவாஜி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 25, 2015 11:25 am

பணம் – ஒரு பக்க கதை
-------------
கொட்டும் மழை… சுற்றி எங்கும் பால் பாக்கெட்
கிடைக்கவில்லை. பசியில் அழும் குழந்தைக்கு
எதைத் தருவதென்று அமுதாவுக்குத் தெரியவில்லை.
அந்தக் குடியிருப்பெங்கும் அதே கதைதான்.

வாடிக்கையாய் பால் போட வரும் வேம்புலி, மழைக்கு
பயந்து வீட்டோடு இருந்துவிட்டதாகத்தான் எல்லோரும்
நம்பினார்கள். ஆனால், இங்கே வாடிக்கையாகத்
தரவேண்டிய பாலை, தண்ணீரில் தத்தளித்த அடுக்கு
மாடி குடியிருப்பில் அவன் அதிக விலைக்கு விற்றுக்
கொண்டிருந்தான்.

சம்பாதித்த அதிக லாபத்தை மிக்க மகிழ்ச்சியோடு
வீடு கொண்டு சென்ற வேம்புலிக்கு காத்திருந்தது
அந்தப் பேரதிர்ச்சி. வயோதிகத்தில் துன்பப்பட்டுக்
கொண்டிருந்த அவன் தாய் உயிர் பிரியும் தறுவாயில்
அல்லாடிக் கொண்டிருந்தார்.

பை நிறைய பணமிருந்தும் கடைசியாக அவன் தாயின்
வாய்க்கு ஊற்ற ஒரு மிடறு பால் வாங்க அந்தக் காசு
பயன்படவில்லை.

ஊரெங்கும் பால் தட்டுப்பாடு. மற்ற பால்காரர்கள்
மட்டும் என்ன பிழைக்கத் தெரியாதவர்களா?

இறந்த அவரை அன்று மாலையே அருகிலிருந்த மின்தகன
மயானத்துக்குத் தூக்கிச் சென்றான். இலவச அமரர் ஊர்தி
கிடைக்காததால், இரட்டிப்பாகக் காசு கொடுத்து தாயின்
தகனத்தை முடித்துவிட்டு வந்தான் வேம்புலி.
பணம் அத்தனையும் காலியாகியிருந்தது!

————————————-
எஸ்.கார்த்திகேயன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 12, 2016 1:17 pm

தாயாகத் தந்தையாக…
--------------
சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின.

புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா"  என வினாவினார்.

தனம்   "ஓமோம்..." என்றான்
"இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாப் பிறப்பது அதிஸ்டம்தான்… இவையளின்ரை அம்மா எங்க? வேலைக்கா? "என்றார்
" இல்லை… வரவில்லை…. "
தொடர்ந்து அங்கே இருந்தால் பலபேரின் கேள்விக்கு உள்ளாகலாம் என நினைத்த தனம், அங்கிருந்து வெளியேறினான்.

அப்போது அவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் அலைபோல் மனதில் ஆர்ப்பரித்தன.
அவன் பிராங்போட் நகருக்கு அண்மையில் உள்ள சிறியநகரம் ஒன்றின் அலுவலகத்தில் பிரதான உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தான். மதியச் சாப்பாட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று உணவருந்துவது வழக்கம். அங்கே தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருவதைக் கண்டபோது அவருடன் பேச வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க அப்பெண்ணுக்கு அருகில் சென்று, அவளுடன் பேசித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். பின்னர் அடிக்கடி சந்தித்துப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருநாள் ஏதோ வேலை விடயமாக தனம் உணவருந்த வரவில்லை.
வருவார் வருவார் என எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் வராதது ஏமாற்றமாக இருந்தது.
மறுநாள் தனம் வந்தபோது, அவள் அவனருகில் சென்று  "நேற்று நீங்கள் வராதது எனக்கு மகிழ்ச்சியைத் தொலைத்த மாதிரி இருந்தது " என்றாள்.

" ஏன் அப்படி? "
 " இல்லை… இங்க… எந்தத் தமிழ் ஆட்களும் வாறதில்லை. நான் இருக்கிற இடத்திலும் தமிழ் ஆட்கள் இல்லை… உங்களைக் காணும்போது ஒரு பேச்சுத் துணை வந்த சந்தோசம்… அதனால்தான். நீங்க வராதது… ஒரு மாதிரி இருந்துச்சு…"
" அதென்ன ஒருமாதிரி… என்றவன், எனக்கும் அப்படித் தான்… " எனக் கூறினான்.
"மெய்யாவா!"
 " மெய்யாகத்தான்."

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள்.
ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது   " வீட்டைபோனால் உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு? " எனத் தனம் கேட்டான்.
" ரிவி, இன்ரெநெற், ஸ்கைப், ரெலிபோன்…என பொழுதுபோகுது."
" அப்படியானால் ஒருநாளைக்கு நாங்க எங்கேயாவது சந்தித்து ஆறுதலாகப் பேசலாமே…"
" நல்லது… ஆனால் லீவு எடுக்கிறதுதான்…"
"ஏன் உங்களுக்கு லீவு இல்லையா?"
 " இருக்கு… கேட்கவேணும்… உங்களுக்கு எப்ப லீவு?"
" எனக்கு… சனி ஞாயிறு லீவுதான். சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்வன். ஞாயிறு… அங்கை இங்கையென்று….. ஓய்வுதான்… சிறிது நேரம் அவன் யோசித்தபின் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்...  ஞாயிற்றுக்கிழமை லீவு எடுங்கள்… வேறை எங்காவது ஒரு இடத்துக்குப் போயிருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆறுலலாகப் பேசலாம்…"

" முயற்சி செய்கிறன்… "
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
தனம் லீவைப் பற்றிக் கேட்டான்.
அவள்  "ஒருமாதிரி ஞாயிற்றுக்கிழமை எடுத்திருக்கிறன்."
" நல்லது. அப்ப… நீங்கள் எத்தனை மணிக்கு வருவீங்கள்?"
"  அடிக்கடி கள் பாவிக்கிறீங்க… "
" நான் கள்ளுப் பாவிக்கிறதில்லை… "
" நான் அந்தக் கள்ளைச் சொல்லவில்லை… "நீங்கள் என்று விகுதியிலை வாறத்தைச் சொன்னனான்."
" அப்படியா..? அப்ப பேரைச் சொல்லுங்களன்.".
" சுதாஜினி…. "
 "நல்ல பெயர்… சுதாஜினி. நீங்கள்…"

"   ம்ம்… பிறகும் கள்ளா? " என்று அவள் கூறி, அவன் கூற வந்த வார்த்தையை தடுத்து விட்டாள்.
அவன் அதைக் கைவிட்டு, " கள்ளா என்று என்னையா…" என்றான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவனும் சிரித்தான்.
இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.

எங்கே எப்போது சந்திப்பதென்று இருவரும்; தீர்மானித்துக் கொண்டதுடன் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
மறுநாள் சுதாஜினி அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
அவள் மனம் படபடத்தது.
சிறிது நேரம் தாமதமாக அவன் வந்தான். வரும்போதே,  "மன்னிக்கவும் சுதாஜினி. வழியில வாகன நெரிசல் ஏற்பட்டுப்போச்சு."  என்றான்.
அவள் பொய்க் கோபம் காட்டித் தலையை ஆட்டினாள்.
காரின் முன் கதவைத் திறந்து  "  ஏறுங்க…"  என்று கூறிய பின், " முதலில் வலது காலை வைச்சு ஏறுங்க… " என்றான்.
அவள் சிரித்தபடியே  " எல்லாம் என்ரை கால்தான் " எனக் கூறிக்கொண்டு, காரின் முன்பக்கம் ஏறி, அவனுக்கருகில் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் பிரபலமான ஒரு உணவகத்துக்குச் சென்றார்கள். .
தனம் '"உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டுக்குச் சொல்லுங்க…" என்றான்.
 "எனக்கு என்னெண்டாலும் பிரச்சினையில்லை… நீங்க சொல்லுங்க... "
" இல்லை நீங்க சொல்லுங்க… நீங்கதான் முதலில் சொல்ல வேண்டும்... பன்மையில பேசாதீங்க…"
 "சரி…. எதைச் சொல்ல…"
பேச்சில் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையிலே குறிப்பிட்டார்கள்.

இருவரும் ஒரே உணவுக்கு சொன்னார்கள்.
உணவு வந்தது. இருவரும் உரையாடியபடியே சாப்பிட்டார்கள்.
உணவிற்கான கட்டணத்தை அவனே கொடுத்தான். பின்னர் இருவரும் ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று அதன் அருகில் அமர்ந்திருந்து பேசினார்கள். இவ்வாறு இருவரும் தொடர்ந்து சந்திக்க, சந்திக்க இருவரிடையேயும் மிக நெருக்கம் ஏற்பட்டு அது அவர்கள் உள்ளங்களில் காதலாக மலர்ந்தது.
ஒருநாள் ஒரு குளக்கரையிலே அமர்ந்திருந்து, அங்குள்ள நீர்பறவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, இரண்டு வெள்ளை அன்னங்கள் சோடியாக நீந்தி வந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். சுதாஜினி அன்னத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசினாள்.
அவன் சிரித்தான். பின்னர் அவன்  " நானும் திருமணம் செய்யலாம் என யோசிக்கிறன்…"  என்றான்.
" யாரை …? "  அவன் முகத்தைப் பார்த்தாள்.
அதற்கு அவன் பதில் கூறவில்லை.

மீண்டும் கேட்டாள். "யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள்?"
" நாளைக்குச் சந்திக்கும்போது கூறுகிறன்."
மாலை வேளை குளிர்காற்று மெல்ல வீசியது. இருவரும் எழுந்து சென்றார்கள்.
இரவு முழுதும் சுதாஜினிக்கு, யாரைத் திருமணம் செய்யப் போகிறார்? என்பதே கேள்வியாக இருந்தது.
மறுநாள் காலை தனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்தாள்.
" என்ன நீங்க இன்றைக்கு வேலைக்குப் பொகவில்லையா? " என்றான்.
" கொஞ்சம் தலையிடியாக இருந்தது…. அதனால போகவில்லை…"
 " அப்ப உங்களைப் பின்னேரம் சந்திக்கிறன்…"
"  ஓ சந்திப்பம்…. நேற்றுச் சந்தித்த இடத்தில் ….  "அங்கே அன்னம் பார்க்கலாம்… வாறன்…"
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
அவள் மௌனமாக இருந்தாள்.

"என்ன நீங்கதான் சந்திக்கலாம் எனக் கூறினீங்க… இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
" நேற்று இரவு ஒரே தலையிடி… அதுதான் ஒரு மாதிரி இருக்கு… பேசிக்கொண்டிருந்திட்டு திடீரெனவும் புறப்பட்டிட்டம். "
" எட… அதுதானா… விசயம். நான் கலியாணம் செய்யப்போவதாகக் கூறினதை பற்றி யோசிச்சிற்றீங்களா?"
" இல்லை… இல்லை… யாரைச் செய்யப் போகிறீங்க என்பதை அறியலாம் என்றுதான்…"

" ஒரு பெண்பிள்ளையைத்தான்… அறிஞ்சா உதவி செய்வீங்களா?"
" அறிந்த ஒருவர். தெரிந்த ஒருவர். செய்வன்தானே. " அவள் பதிலில் சோகம் இழையோடி இருந்தது.
அவள் முகத்தை அவன் பார்த்தான். அவளும் அதைப் பார்த்தாள்.  " யாரென்று அறிய ஆசைப்படுகிறீங்க… நானும் இன்று கூறுவதாகத்தானே சொன்னனான். யாரையும் இல்லை. உங்களைத்தான்…"

"என்ன என்னையா?"|
"என் மனத்தில் தோன்றியதைக் கேட்டன்… பிழையென்றால் மன்னியுங்கள். "
அவள் மௌனமாக இருந்தாள்.
" உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்று இல்லை. யோசித்துச் சொல்லுங்க… "
அவள் சிறிது நேரம் குனிந்தபடியே மௌனமாக இருந்தாள்.
குளத்தில் நீர் பறவைகள் சோடியாகவும் கூட்டமாகவும் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த தனம் " நீங்கள் காட்டிய அன்னம் சோடியாக வருகுது.. "என்றான்.
தலை நிமிர்ந்து அதனைப் பார்த்தாள். அவள் பார்த்ததையிட்டு அவன் சிரித்தான். அங்கே அன்னமில்லை.

அவள் அவனைப் பார்த்தாள்.
" என்ன கோபமா? நான் கேட்டதில் பிழையிருந்தால் மன்னியுங்கோ என்றும் சொல்லிப்போட்டன். யோசிச்சுச் சொல்லுங்க எண்டும் சொல்லிப்போட்டன். அப்படியிருந்தும் நீங்க பேசாமல் இருக்கிறீங்க… அது எனக்கு உள்ளார தேனையாக இருக்கு… போவம்"  என்றான்.
"இல்லை இல்லை இருப்பம்…"
"ம்ம்ம் என்று மூஞ்சியை நீட்டிக்கொண்டா?"
" ஏன் நான் மூஞ்சியை நீட்டிக்கொண்டா இருக்கிறன். மூஞ்சி ஒரே மாதிரித்தான் இருக்கு.

பார்த்தான். " இப்ப அழகாத்தான் இருக்கு…"
"இதுக்கு முந்தி அழகு இல்லையா?"
"அப்படி நான் சொல்லவில்லையே…அன்பாககப் பழகிறீங்க.. அழகா இருக்கிறீங்க.. அறிவா இருக்கிறீங்க… அன்னியோன்னியமாகப் பேசிறீங்க… நல்ல நட்பாக இருக்கிறீங்க.. வேலை செய்யிறீங்க… அதனாலதான் உங்களை எனக்குப் பிடித்தது. திருமணம் செய்யலாமா எண்டு கேட்டன். கேட்டதற்கே இப்படி?"
"உண்மையாகத்தான் கேட்டனீங்களா?"|

" இதென்ன கதையுங்க….. உண்மையாகக் கேட்;காமல்… இப்பவும் கேட்கிறன். உண்மையாகத்தான் கேட்கிறன்."
அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன மௌனம்? என்னோடை பேசிறீங்க, பழகிறீங்க, இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
இபபொழுதும் அவள் தலைகுனிந்து மௌமாக இருந்தாள்.
"மௌமாக இருக்கிறீங்க… மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று நான் எடுக்கலாமா?"
தலையசைத்தாள். குனிந்தாள். அவன் தன் கரம் கொடுக்க அதைப் பற்றி அவள் எழுந்தாள.; அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டாள். சினிமாக் காட்சியில் வருவதுபோல் இருவர் மனமும் உடலும் வானத்தில் மகிழ்வடன் சிறகடித்துப் பறந்தன. .
இருவரும் கை கோர்த்தபடி ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று கோப்பி அருந்தியபின் வீட்டுக்குச் சென்றார்கள்.

சில மாதங்களின் பின் திருமணம் நடைபெற்றது. இருவரும் சுவிஸ், கோலண்ட் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். தனம் தன் வேலை நேரம் முடிந்தபின்
சுதாஜினி வேலை செய்த இடத்தி;குச் சென்று அவளை அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.
புதிய வீடு எடுத்தார்கள். புதிய தளம்பாடங்கள் போட்டார்கள். நண்பர்களை அழைத்தார்கள். விருந்துபசாம் செய்தார்கள். திருமண முதலாண்டு நிறைவையும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
சுதாஜினி வேலை செய்த இடத்தில் புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது, சுதாஜினியின் வேலை மாலை நேரமாக மாற்றப்பட்டது. இவ் வேலை நேர மாற்றம் தனத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் வேலையை விடும்படி கூறினான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
வேலைநேர மாற்றத்தினால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் மிகக் குறைவாக இருந்தது. தனம் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவள் வீட்டில் இல்லாதது தனத்துக்கு உள்ளாறக் கவலையை ஏற்படுத்தியது.

அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு தொலைபேசி எடுத்தாலும் மனைவியுடன் பேச முடிவதில்லை. அந் நேரங்களில் அவள் தொலைபேசி, ஸ்கைப்,, முகநூல் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். இதனால் பல புதிய நண்பர்களின் தொடர்பும் அவளுக்குக் கிடைத்தது. ஆனால் கணவனின் தொடர்பு குறைந்தது.
"  நான் ரெலிபோன் எடுக்கிற நேரங்களில் யாரோடை கதைக்கிறாய்… ஏதாவது அவசரமென்றாலும் தொடர்பு கொள்ள முடியாம இருக்கு…"  என்று அவன் ஒருநாள் கோபமாகப் பேசினான்.
அதைக் கேட்டு அவள், அவன்மேல் சீறி விழுந்தாள். இச் செயல் தனத்துக்க மேலும் கவலையை அதிகரித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் சுதாஜினி தாய் தகப்பனைப் பார்க்க இந்தியா செல்ல வேண்டுமென்று தனத்திடம் கூறினாள்.

அவன் யோசித்தான். அதன் பின் போய் வர ஒழுங்க செய்வதாகக் கூறி அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டான். விமான நிலையத்திற்கு சென்று அவளை வழியனுப்பி வைத்தான்.
மூன்று கிழமைகளின்பின் அவள் திரும்பி வந்தாள். தனம் விமான நிலையத்திற்கு சென்று அவளை அழைத்து வந்தான்.

வீட:டுக்கு வந்தவள் யாருக்கோ தொலைபேசி எடுத்து பேசினாள்.
"வீட:டுக்கு வந்து ஆறுதலாக இருக்கக்கூட இல்லை. அதுக்குள்ள ரெலிபோன்… யாரோடை பேசுகிறாய்…?"
" நான் யார்… யாரோடை பேசுகிறன் என்று எல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். " எனக் கூறி, சுதாஜினி சத்தம் போட்டாள்.
தனம் மௌனமாக இருந்தான்.
இதிலிருந்து இருவருக்கும் முறுகல் நிலை தோன்றி, படிப்படியாக அதிகரித்தது. அதனால் சில வேளைகளில் தனம் தன் நண்பர்கள் வீடடில் தங்கும் நிலை ஏற்பட, சுதாஜினி வீட்டில் தனிமையில் இருக்கும் நிலை தோன்றியது,
பாவம் என்ன செய்கிறாளோ.. என எண்ணித் தனம் வீட்டுக்கு செல்லும் வேளைகளிலும் அவள் தொலைபேசியிலோ, ஸ்கைப்பிலோ மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பாள். இச்செயல் தனத்துக்கு மேலும் சினத்தைத் தூண்டுவதாகவே இருந்ததுடன், இருவருக்குமிடையே முரண்பாடுகளை மேலும் படிப்படியாக வளர்த்த வண்ணமாகவே இருந்தது.
எத்தனையோ பெண்களை இச் செய்தித் தொடர்புகள்தான் கெடுத்துள்ளன. என யோசித்த தனம் மனைவியைக் கண்டித்தான்.
ஆனால் அவள் கேட்கவில்லை. கோபம் கொண்டாள். "எங்களை அடக்கியாள நினைக்காதையுங்கோ…" என்று ஆவேசமாகக் கத்தி, " இப்படியானல் இருவரும் சேர்ந்த வாழ்வது கஸ்டம் " என்றம் கூறினாள்.
தனம் மௌனமாக இருந்தான்.

மீண்டும் அவள் " நாளைக்கே இதற்கு ஒரு முடிவெடுகிறன் " எனக் கூறினாள். அதற்கமைய சட்டத்தரணி ஒருவரை நாடினாள். அவளின் முறைப்பாடு கோடு வரை சென்றது.
நீதிபதி விவாகரத்துக்கு ஒருவருடம் அவகாசம் கொடுத்தார்.
அவள் வேறு இடத்துக்கு சென்று தங்கினாள்.

இக்காலத்தில் சுதாஜினியின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வைத்தியரை நாடினாள். உடல் பரிசோதனையின் போது அவள் கற்பமடைந்துள்ளதாகத் தெரியவந்தது. அதனைக் கலைக்க வைத்தியரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடிக்கடி வைத்தியப் பராமரிப்புக்கு செல்ல வேண்டி வந்தது.
ஒருமுறை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது தனத்துக்க தெரிந்த ஒருவர் அங்கு சென்றதால் அச் செய்தி தனத்துக்க வந்தது.
தனம் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவளை நலம் விசாரித்தான்.

அவள் நடந்ததைக் கூறி, " குழந்தை பிறந்தால் இரண்டு குழந்தைகளையும் நான் வளர்க்க முடியாது. ஆண் பிள்ளையை நான் வளர்க்கிறன்… பெண் பிள்ளையை உனக்குத் தாறன்… " என்றாள். .
அவன் " எனக்குப் பிரச்சினை இல்லை… இரண்டையும் என்னட்டைத் தந்தாலும் நான் வளர்க்கிறன் " | என்றான்.

உரிய மாதத்தில் குழந்தை பிறந்தது. பெண் பிள்ளையை அவனிடம் ஒப்படைத்தாள். ஆண்பிளையை தான் வளர்த்தாள்.
இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தன.
மூன்று வருடங்கள் சென்றன. சுதாஜினியின் மனநிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முகநூல் மூலம் தொடர்பு கொண்ட ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது காதலாகக் கனிந்தது. திருமணம் செய்வதானால் குழந்தையை ஏற்க முடியாது என அவன் திடட்வட்டாகக் கூறிவிட்டான். அதனால் தனத்தின் தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்று, அவனுக்கு தொலைபேசி எடுத்தாள்.
" சுதாஜினி பேசுகிறன் "

" என்ன திடீரென்று… சுகமாக இருக்கிறாயா? மகன் எப்படி இருக்கிறார்?"
"அவன் விடயமாகத்தான் பேச வேண்டியுள்ளது. ".
" சொல்லுங்க பிரச்சினை இல்லை…"
"அவனையும் நீங்க வளருங்கோ… அதற்கான உரிமையைச் சட்டப்படி எடுத்துத் தாறன்."
" ஏன்? வளர்க்கிற ஆசை விட்டுப்போச்சா? "
" நான் வேறொருவரைத் திருமணம் செய்யப் போகிறன். அவருக்கு குழந்தையுடன் திருமைணம் செய்ய விருப்பம் இல்லை.. அதுதான்…"

" எனக்குப் பிரச்சினையில்லை…"
இரண்டு குழந்தைகளையும் தாய் தந்தையாக வளர்த்தான்.
"அப்பா… வீடு வந்திற்று நிப்பாட்டுங்கோ.."  என்று மகள் உரத்துக் கூற, அவன் சிந்தனையும் தடைப்பட்டது. காரும் நின்றது.
யாவும் கற்பனை

நன்றி மணியம்
யாழ் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14403
Points : 17241
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum