தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கைபேசி தகவல்கள்

2 posters

Go down

கைபேசி  தகவல்கள் Empty கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:44 pm

அடக்க முடியாத ஆண்ட்ராய்ட் மால்வேர்
------------
நன்றி: vayal 
ஆண்ட்ராய்ட் சாதனங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், அண்மையில், புதிய வகை மால்வேர் புரோகிராம் ஒன்று வேகமாகப் பரவி வருவதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழிகளைச் சரியாகக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் புரோகிராம்களை உருவாக்க முடியவில்லை என்று, இதனை உணர்ந்த Ars Technica என்னும் ஆய்வு மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த மால்வேர் புரோகிராம், பிரபலமான ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. இதனை, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், தரவிறக்கம் செய்து, பதிந்தவுடன், போனுடைய அடிப்படைக் கட்டமைப்பினையே மாற்றி, இன்னும் பல கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு வழியை ஏற்படுத்தித் தருகிறது. இதனை, நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.


இந்த மால்வேர் புரோகிராம், தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ஸ்டோர்களில் காணப்படுகிறது. இதன் குறியீடுகள், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பேஸ்புக், ட்விட்டர் செயலிகள் போலக் காட்டிக் கொள்கின்றன. எனவே, இவை செயல்படத் தொடங்குகையில், நாம் மாற்றம் எதனையும் உணர்வதில்லை. வழக்கமான புரோகிராம்கள் போலவே செயல்படுகின்றன. ஆனால், இவற்றில், கெடுதல் விளைவிக்கும் வகையில் பல குறியீடுகள், இவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. அவை இயக்கப்படுகையில், போனின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைகின்றன. அதில், மற்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் வரும் வகையில் பாதைகளை அமைக்கின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலமாக இவை போனில் நுழைந்துவிடுவதால், இவற்றை நீக்குவதற்கு புரோகிராம்கள் வடிவமைப்பது சிரமமாகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நீக்கி, புதியதாக, சரியான, சிஸ்டத்தினை நாம் பதிந்தாலே இதிலிருந்து தப்பிக்க இயலும்.

தற்போதைக்கு Shedun, Shuanet, and ShiftyBug என அறியப்பட்டுள்ள இந்த புரோகிராம்கள், விளம்பரங்களை காட்டுவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இவை வளைத்துவிட்டால், நம் தனி நபர் டேட்டாவினை எளிதாக, இவை கைப்பற்றலாம். அவற்றின் மூலம் நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளன.

இவை தானாகவே, வேகமாகப் பரவி வருகின்றன. ஏறத்தாழ, 20 ஆயிரம் அப்ளிகேஷன்களை (பேஸ்புக், ஸ்கைப், ட்விட்டர் போன்றவை) இவை மாற்றி அமைத்துள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளில், இந்த மால்வேர் பரவி வருவதாக, Ars Technica ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை, கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகார பூர்வ ஸ்டோர் இயங்கும் தளங்களை இவை சென்றடைந்ததாகத் தெரியவில்லை.

எனவே, அப்ளிகேஷன் புரோகிராம்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்வதாக இருந்தால், மிகக் கவனமாக, அவை உரிய அதிகாரபூர்வ தளங்களில் இருந்து பெறப்படுவதனை உறுதி செய்து, பின்னர் தரவிறக்கம் செய்திடவும். தர்ட் பார்ட்டி ஸ்டோர்களிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் இறக்கிப் பயன்படுத்த வேண்டாம்.

நன்றி ;senthilvayal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:46 pm

மோசமாக எஸ்.எம்.எஸ். தரும் எண்களைத் தடை செய்திட

vayal 

நம்மில் பலரின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ் செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், “அனுப்பவே இல்லை” என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். நீங்களாகவே, இதனைத் தடுத்துவிடும் வழிகள் உள்ளன. அதனை இங்கு காணலாம்.


உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் ““SMS blocker”” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாகhttps://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker – Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும். இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு •SMS blocking என்பதிலும் Spam auto blocking – என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, ““Block”” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 

“Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும். 
அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:48 pm

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!
 vayal 

எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.

ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.


இதுகுறித்து கூகுள் மேப்ஸ் டைரக்டர் சுரேன் ருஹேலா கூறுகையில், “டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்குமாறு செய்துள்ளோம். இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்‌ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள் வெகுவாகப் பயனடைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.  
உதாரணமாக நீங்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு கிளம்புகிறீர்கள். மொபைலில் வீட்டிலுள்ள வைஃபை கனெக்‌ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை ‘search’ பாரில் தேடி ‘டவுன்லோட்’டை க்ளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம். மாற்றாக மேப்ஸ் மெனுவில்  ’Offline Areas’க்கு சென்று ’+’ பட்டனை க்ளிக் செய்தும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் சென்னையில் இணைய வசதி இல்லாமலே மேப்ஸ் உங்களுக்கு வழிகாட்டும்

அதுமட்டுமல்லாது ஆன்லைனில் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் லைவ் ட்ராபிக் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மொபைல், வைஃபையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது தானாகவே மேப்ஸ் அப்டேட் செய்து கொள்ளும்.

நன்றி ;senthilvayal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:51 pm

ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!

நன்றி vayal 

ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 
mAH குறியீடு எண்: ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.


1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும். 
இரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரிகளைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது. 

அதிக பிக்ஸெல் கொண்ட திரை: இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது. 
இந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெசல்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும். 

ஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல. 

சொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. 
ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்: இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது? நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட 

அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம். 
மிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில் 

மால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும். 
அதிக ‘கோர்’ எனில் கூடுதல் திறன் ப்ராசசர்: சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப்படுத்துகின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றதுதான். ஒரு ப்ராசசரில் அதிக ‘கோர்’ இருப்பதனாலேயே, குறைவான ‘கோர்’ இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் ‘கோர்’ என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் ‘கோர்’ (Core) என்கின்றனர். ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். 

ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர்களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும், ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல்திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது. 

போனுடன் வரும் சார்ஜர்: மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லதுதான். 

ஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்ற வினா எழலாம். உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது. 

ஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம். 

எனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.

நன்றி ;senthilvayal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:54 pm

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த

நன்றி ; vayal 

நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை. 
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம். 
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது. அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது. 

மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை. எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம். 
குறிப்பு 1:


மின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும். 
குறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
குறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா! மைக்ரோசாப்ட் அண்மையில் https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம். 
குறிப்பு 5: ஜிமெயிலில் "conversation view" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். 

குறிப்பு 6: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே. 
ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். 
குறிப்பு 7: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான். 

குறிப்பு 8: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம். 

குறிப்பு 9: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.
 
குறிப்பு 10: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும். 
குறிப்பு 11: ஜிமெயில் ஆண்ட்ராய்ட் செயலியில், அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வசதி லேபிள்களுக்கான வழக்கமான நோட்டிபிகேஷன்களைச் சோதனை செய்திடும் அதன் திறன் தான். முக்கியமான மின் அஞ்சல் ஒன்று உங்கள் மெயில் பெட்டியை அடையும்போது, உங்கள் போன், உங்களை உஷார் படுத்த வேண்டும் என எப்போதாவது எண்ணியதுண்டா? அதுவும், வெவ்வேறு தன்மை கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு, வெவ்வேறு ஒலிகளில். லேபிள்களுக்கான நோட்டிபிகேஷன்ஸ்களில் தான் இந்த அருமையான வசதியை செட் செய்து பயன்படுத்தலாம். 

இந்த அருமையான வசதியைப் பயன்படுத்த, முதலில் லேபிள்கள் மற்றும் பில்டர்களை உருவாக்கும் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக, ஜிமெயில் தரும் Priority Inbox அல்லது categorized inbox பயன்படுத்தினால், மாறா நிலையில் உள்ள லேபிள் மற்றும் பிற செட்டிங்ஸ் கொண்டு இதனை அமைக்கலாம். இதனைப் பின்பற்றி, லேபிள் மற்றும் பில்டர்களை அமைத்த பின்னர், ஜிமெயில் ஆண்ட்ராய் செயலியின் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும். 
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து Label Notifications பாக்ஸ் செக் செய்திடவும். இங்கு எந்த மாதிரி ஒலி மற்றும் வைப்ரேஷன் அதிர்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். அவ்வளவுதான். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் இனி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டண்ட் போல செயல்படும். குப்பையாய் வரும் அஞ்சல்களைப் பிரித்துப் பார்த்து (நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கேற்ப) குறிப்பிட்ட வகை அஞ்சல் வரும்போது, நீங்கள் அமைத்த ஒலியை அல்லது அதிர்வைக் கொடுக்கும். 
குறிப்பு 12: உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி., அதனைத் தயாரித்தவரால், அதன் சாப்ட்வேர் சற்று மாற்றப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கூகுள் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இது https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar என்ற தளத்தில் கிடைக்கிறது. இந்த காலண்டர் செயல்பாடு மற்றவற்றைக் காட்டிலும், சிறப்பான தோற்றங்களைக் கொண்டதாகவும், பயன்படுத்துபவருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ளது. நாம் குறிப்பிட்ட நிகழ்வினை, காலண்டரில் குறித்து வைத்தால், அதற்கேற்ற சிறிய படங்களை அத்துடன் தானாக இந்த செயலி இணைத்துக் கொள்கிறது. நிகழ்வுகளுக்கான இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடங்களைத் தருகிறது. நாம் ஏதேனும் நிகழ்வுகளை உறுதி செய்தால், நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கிறது. பயணம் என்றால், அதற்கான கால அட்டவணையைத் தொகுத்துத் தருகிறது. 

குறிப்பு 13: காலண்டரில் அமைக்கும் நிகழ்வுகளுக்கேற்ப, நம்மை எச்சரிக்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் “கூகுள் நவ்” செயலி, நேரத்திற்கேற்றபடியும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற வகையிலும், உங்களுக்கு நிகழ்வுகளை நினைவூட்டும். இதற்கு, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒலிவாங்கியை (microphone) செயல்படுத்தி, எப்போது உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதனை அறிவிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, "Remind me to take out the trash when I get home" அல்லது "Remind me to call the doctor’s office tomorrow morning எனக் கூறலம். இதே கட்டளையில், எங்கேனும் சரியான இடத்தில் “every” என்ற சொல்லைச் சேர்த்தால், குறிப்பிட்ட நினைவூட்டல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, “Remind me to take my umbrella every Friday at noon” எனக் கட்டளை கொடுக்கலாம். 

குறிப்பு 14: கூகுள் நவ் நினைவூட்டல்களைச் செயல்படுத்த, Google Now செயலி தேர்ந்தெடுத்து, அதில், திரையின் மேலாக இடது பக்கம் உள்ள மெனு ஐகானைத் தட்டவும். பின்னர் Reminders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, உங்களுடைய இன்றைய, முந்தைய நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும். அதிலேயே, நீங்களாகவே, ஒரு புதிய நினைவூட்டலையும் அமைக்கலாம். 

குறிப்பு 15: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை, எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும்மா? இலவசமாகக் கிடைக்கும் ‘கூகுள் கீப் ஆப்’ (Google Keep app) என்ற செயலியைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். இதில் நீங்கள் செய்திட வேண்டிய செயல்களை, நீளமான வரிகளில், தெளிவாக அமைத்திடலாம். அவற்றிற்கான குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷன் கூகுள் நவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். எனவே, இந்த பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கும், நீங்கள் நினைவூட்டல்களை செட் செய்திடலாம். 

குறிப்பு 16: எந்த ஓர் ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் நீங்கள் அமைத்திடும் அழைப்பிற்கான தொடர்புகள், தானாகவே, கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட Google Contacts Web app மூலம் அழைப்பு தொடர்புகளைப் பார்க்கலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்களும், உங்களுடைய அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். 

குறிப்பு 17: நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பினை மிக எளிதாகக் கண்டறிய, அந்த தொடர்புக்குரிய நபரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானை தட்டவும். உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தின் காண்டாக்ட் பிரிவில் இதனை மேற்கொள்ளலாம். அல்லது Google Contacts Web அப்ளிகேஷனிலும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் சார்ந்த தகவல்கள், பட்டியலின் மேலாகப் பார்க்கக் கிடைக்கும். 

குறிப்பு 18: எப்போதாவது, ஒரே நபரின் அதே தகவல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக காண்டாக்ட் பட்டியலில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவரின் பணி குறித்த மின் அஞ்சலுக்காக ஒன்றும், தனி நபருக்கான மின் அஞ்சலுக்கான ஒன்றுமாக, அவை இடம் பெற்றிருக்கலாம். இதனைச் சரி செய்வதற்கு கூகுள் எளிமையான வழியைத் தருகிறது. Contacts Web அப்ளிகேஷனில், திரையின் இடது புறத்தில் Find Duplicates என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைத் தட்டினால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டவற்றை, இனம் கண்டறிந்து காட்டும். இவற்றில் ஒரு முறை கிளிக் செய்து, அனைத்தையும் இணைத்து வைத்துக் கொள்ளலாம். 

இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம். செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை, கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 5:57 pm

ஆக்டா கோர் / குவாட் கோர் சொல்வது என்ன?
நன்றி vayal 

மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். நாம், உடனே, நான்கைக் காட்டிலும், எட்டுதானே அதிக மதிப்புடையது என்ற எண்ணத்தில், ஆக்டா கோர் ப்ராசசரே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறோம். இது அனைத்து போன்களுக்கும் பொருந்தாது. இதன் அடிப்படையில் ப்ராசசரின் இயக்க தன்மை குறித்து முடிவெடுப்பது தவறாகும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.


தொழில் நுட்ப விவகாரங்கள் என்றைக்கும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளன. எனவே, வியாபாரத்தில் உள்ள ஒரு நிறுவனம், தொழில் நுட்ப விஷயங்களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர் ஒருவர், என்ன வாங்குவது என்ற முடிவினைச் சரியாக எடுக்க முடியும். “அதிக எண்ணிக்கையில் தரப்படுவதுதான் சிறந்தது” என்பது எந்த ஒரு சராசரி மனிதனும் எண்ணக் கூடியதே. ஆனால், அது எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. கேமராவைப் பொறுத்தவரை, இதே போல மெகா பிக்ஸெல் திறன் குறித்து கணிக்கிறோம். ஒரு கேமராவின் மெகா பிக்ஸெல் திறன் அதிகமாக இருப்பதாலேயே, அதன் வழி எடுக்கப்படும் படங்கள், மிகச் சிறந்தவையாக இருக்கும் என்ற முடிவிற்கு வர முடியாது. அதே போல, அதிக கோர் இயக்கம் இருப்பதாலேயே ஒரு ப்ராசசர் மிகச் சிறந்ததாக இருக்க முடியாது. ப்ராசசர் ஒன்றில் ஒவ்வொரு கோர் பகுதியும், ஒரு மையச் செயலகமாகச் செயல்படும். 

அதனால், அதிக எண்ணிக்கையில் கோர் பகுதியை ப்ராசசரில் இணைப்பதால், அது வேகமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அனைத்து கோர் பிரிவுகளும் இயங்கும் வகையில், சாப்ட்வேர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டிருந்தாலே, அது சிறந்ததாகவும் வேகமாகவும் செயல்பட வழி தரும். எடுத்துக் காட்டாக, எட்டு சமையல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவினைத் தயாரிப்பதில் ஈடுபட்டால், அனைவரின் சக்தியும், அந்த உணவினைத் தயாரிப்பதில் ஈடுபடும் வகையில் நாம் அவர்களை நிர்வாகம் செய்திட வேண்டும். இல்லை எனில், பலரின் உழைப்பின் பலன் அந்த உணவின் தயாரிப்பில் இருக்காது. 

எட்டு கோர் ப்ராசசரின் செயல் தன்மையைப் பல காரணிகள் நிச்சயிக்கின்றன. அந்த ப்ராசசரின் செயல் வேக இடைவெளி, (frequency), அனைத்து கோர் இயக்கங்களையும் திறமையாகச் செயல்படுத்தும் சாப்ட்வேர், சிப் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ஆகிய அனைத்தும் இணைந்தே ப்ராசசரின் செயல் தன்மையை உறுதி செய்கின்றன. 

இவற்றில், ப்ராசசர் ஒன்றின் செயல் தன்மையை முழுமையாகப் பெறவிடாமல் கெடுப்பது அதனை இயக்கும் சாப்ட்வேர் தொகுப்பாகத்தான் இருக்கும். எடுத்துக் காட்டாக, மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், அந்த கேம் இயங்க இயக்கப்படும் சாப்ட்வேர், எட்டு கோர் பிரிவுகளையும், ஒரே நேரத்தில் முழு திறனையும் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து கேம்ஸ்களிலும் இது போல அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அது போலவே, அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ப்ராசசர் சிப் ஒன்றின் எட்டு பிரிவுகளையும் வேலை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

மொபைல் போன்களுக்கான ப்ராசசர் சிப்கள் பெரும்பாலும் ஏ.ஆர்.எம். (ARM) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. ஏனென்றால், இந்நிறுவனம் Qualcomm, Samsung, NVIDIA, and Mediatek போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவனங்களுக்கு சிப் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்பதனை வழங்கி அதற்கேற்ப சிப்களைத் தயாரிக்க அனுமதி கொடுத்து பெற்றுக் கொள்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது இண்டெல். ஏ.ஆர்.எம். நிறுவனம் தான், முதன் முதலில், இரண்டு குவாட் கோர் ப்ராசசர்களை (மொத்தத்தில் எட்டு) கொண்டு சிப் வடிவமைப்பதில் ஈடுபட்டது. இவற்றில் ஒரு குவாட் கோர் பிரிவு அதிக பட்ச செயல் திறன் தர பயன்படுத்தப்படும். இன்னொரு குவாட் கோர் பிரிவு, பேட்டரி, உஷ்ணம் போன்றவற்றைக் கண்காணிக்கும். பொதுவாக இந்த இரண்டு குவாட் கோர் பிரிவுகளும் தனித்தனியே தான் செயல்படும். 
இன்றைக்கு சந்தைக்கு வரும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள். ஏ.ஆர்.எம். தந்த கட்டமைப்பில் குவால்காம், சாம்சங், மீடியாடெக் போன்ற நிறுவனங்கள் தயாரித்த சிப்களுடன் தான் நமக்குக் கிடைக்கின்றன. அசூஸ் மற்றும் லெனோவா போன்ற, இண்டெல் நிறுவனத்துடன் தாங்கள் தயாரிக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே, இண்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்களைப் பயன்படுத்துகின்றன. இண்டெல், குவாட் கோர் ப்ராசசர்களுடன் நிறுத்திக் கொண்டது. ஏ.ஆர்.எம். நிறுவனம் இரண்டு குவாட் கோர் அடங்கிய ப்ராசசர்களைக் கொண்டுள்ளது. இண்டெல் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு, தனியே ஒரு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட ப்ராசசர்களைக் கொடுத்து வருகிறது. 

எனவே, ஆக்டா மற்றும் குவாட் கோர் ப்ராசசர்களிடையே செயல் திறன் வேறுபாடு அவை குறிப்பிடும் எண்களில் இல்லை. அதனால் தான், சில மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள ப்ராசசர் சிப் குறித்து குறிப்பிடுகையில், அவை “உண்மையான ஆக்டா கோர் (“True octacores”,)” எனக் குறிப்பிடுகின்றன. அப்படிக் கூறுவதன் மூலம், தங்களுடைய சிப்களில், எட்டு கோர் பிரிவுகளும் முழுமையான சக்தியைத் தரும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கின்றன. 

ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், பெரும்பாலான அப்ளிகேஷன்கள் முழுமையான பலன் தரும் வகையில் இயங்க, எட்டு கோர் பிரிவுகளும், ஒரு ப்ராசசரில் இயங்கத் தேவை இல்லை என்பதே. அண்மையில் வந்திருக்கும் சில ஆண்ட்ராய்ட் விளையாட்டுகள் கூட குவாட் கோர் ப்ராசசர்களில் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால், இவை இயங்க நல்ல கிராபிக்ஸ் ப்ராசசர் துணை இருக்க வேண்டும். 

குவாட் மற்றும் ஆக்டா கோர் ப்ராசசர்களுக்கிடையே உண்மையிலேயே இயக்க திறன் வேறுபாடு உள்ளதா என்ற சர்ச்சை இருந்தாலும், இந்த மாயத் தன்மையை பல மொபைல் போன் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவர பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை. எனவே, வாங்க இருக்கும் மொபைல் போன் திறனை, அதன் ஆக்டா அல்லது குவாட் கோர் ப்ராசசரைக் கொண்டு மட்டும் 
முடிவு செய்திட வேண்டாம். மற்ற வசதிகளைத் தரும் ஹார்ட் வேர் பாகங்களும் முக்கியமானவையே. எனவே, மொத்த செயல் திறனைக் கொண்டு தான், மொபைல் போன் ஒன்றை எடை போட வேண்டும். 

இப்போதெல்லாம், இணைய தளங்களில், பலர் மொபைல் போன் திறன் குறித்தும், குறிப்பிட்ட போன் ஒன்றை, அதே ஹார்ட்வேர் அமைப்பில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிட்டும் தகவல்களைப் பதிந்து வழங்குகின்றனர். இவற்றைப் படித்து நாம் மொபைல் போன் ஒன்றின் திறனை முடிவு செய்திடலாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 6:01 pm

மொபைல் சாதனங்களில் தடம் அமையாத இணையம்

 நன்றி ;vayal 

நாம் இணையத்தில் பார்த்துச் செல்லும் தளங்கள் குறித்த தகவல்கள், நாம் பயன்படுத்தும் பிரவுசர் தொகுப்புகளால் பதியப்படுகின்றன. இது குறித்து முன்பு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிரவுசர்கள், இந்த தடங்கள் எதுவும் இல்லாத தனிநபர் பயன்பாட்டினைக் (Private browsing) கொண்டு வந்தன. இந்த வகையில் இணையத்தில் உலா வருகையில், நாம் பார்த்த தளங்கள், தரவிறக்கம் செய்த கோப்புகள் குறித்த குக்கி பைல்கள் எதுவும் உருவாக்கப்படாமல் இருக்கும். 

பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த ஏற்பாட்டினை பிரவுசர்கள் தந்துள்ளன. அப்படியானால், மொபைல் சாதனங்களில், நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இந்த வசதி கிடையாதா? என்ற கேள்வி நம் மனதில் எழும். மொபைல் சாதனங்களிலும், இந்த பிரைவேட் பிரவுசிங் வசதி சில பிரவுசர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்களில் இந்த வசதி எப்படி நமக்குத் தரப்பட்டுள்ளது என்று இங்கு காணலாம். 
ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இயங்கும் கூகுள் குரோம், பயர்பாக்ஸ் மற்றும் டால்பின் பிரவுசர்களில் இந்த பிரைவேட் பிரவுசிங் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 
அத்துடன், மொபைல் சாதனங்களில், பிரைவேட் பிரவுசிங் வழிகளுக்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் டால்பின் ஸீரோ மற்றும் இன்பிரவுசர்களில் (Dolphin Zero மற்றும் InBrowser) இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். 
கூகுள் குரோம்: கூகுள் குரோம் பிரவுசரில், தடம் அறியா இணையப் பயன்பாட்டிற்கு “Incognito” நிலையில் ஒரு டேப் திறக்கப்பட வேண்டும். இதற்கு, நெட்டு


வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள் அமைந்துள்ள மெனு பட்டனைத் தொடவும். கீழாக விரியும் பட்டியலில், “New incognito tab” என்னும் இடத்தில் தொட்டால், இந்த தடம் அறியாப் பயன்பாட்டிற்கான டேப் திறக்கப்படும். ஏற்கனவே திறக்கப்பட்ட டேப்களுக்குப் பதிலாக, புதிய Incognito டேப் திறக்கப்படும். கூடுதலாக ஐகான் ஒன்று கிடைக்கும். பிரவுசர் விண்டோவின் இடது மேல்புற மூலையில், ரகசிய போலீஸ் போன்ற தோற்றம் கொண்டவரின் படம் கொண்ட ஐகான் இருக்கும். 

குறிப்பு: இன்னொரு incognito டேப் திறக்கப்பட வேண்டும் எனில், அப்போதைய டேப்பிற்கு வலதுபுறம் உள்ள சிறிய டேப்பினைத் தொடவும். இந்த தனி காப்பு நிலையில் இருந்து விலகி வழக்கமான நிலைக்கு மாற, அனைத்து incognito டேப்களையும் மூடவும். மீண்டும் வழக்கமான நிலையில் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த இணையதளங்களுக்கான டேப்கள் காட்டப்படும். 

பயர்பாக்ஸ்: இதில் தனி நிலையில் இணைய உலா வர, Private tab ஒன்று திறக்கப்பட வேண்டும். பிரவுசர் விண்டோவின் வலது மூலையில், உள்ள மெனு பட்டனில் (நெட்டு வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள்) தொடவும். பின்னர் கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “New Private Tab” என்பதைத் தொடவும். 
ஒரு புதிய “Private Browsing” காட்டப்படும். ஏற்கனவே திறந்து பயன்பாட்டில் இருந்த வழக்கமான டேப்கள் இருக்காது. தொடர்ந்து தனி நிலை Private tab திறக்க வேண்டும் என விரும்பினாலோ அல்லது டேப்களை மூட வேண்டும் என விரும்பினாலோ, இடது மேல் மூலையில் உள்ள டேப் ஐகானைத் தொடவும். 

இப்போது பிரவுசரின் இடது புறம் ஒரு பிரிவு திறக்கப்படும். இதில் பிரைவேட் பிரவுசிங் நிலையில் திறக்கப்பட்ட டேப்கள் சிறிய அளவில் காட்டப்படும். இந்த பிரிவின் மேலாக, மூன்று ஐகான்கள் இருப்பதனைக் காணலாம். தனி நிலையில் இருக்கையில், மூடப்பட்ட ஐகான்கள் கீழாக கோடு தரப்பட்டிருக்கும். தனி நிலை டேப்களை மூடாமல், வழக்கமான இணைய உலா நிலைக்குச் செல்ல விரும்பினால், இடது பிரிவில் மேலாக உள்ள ஐகான்களில், இடது மூலையில் உள்ள ஐகானைத் தொடவும். 
தனி நபர் நிலையில் மேலும் ஒரு டேப் திறக்கப்பட விரும்பினால், இடது பிரிவில், கீழாக உள்ள கூட்டல் (plus sign) அடையாளத்தைத் தொடவும். இங்கு உள்ள சிறிய ஐகான் மறைக்கப்பட்ட நிலையில் காட்டப்படும். இது நீங்கள் தனி நிலையில் பிரவுசரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. 
குறிப்பு: தனிநிலையில் கண்டு கொண்டிருக்கும் தளங்களுக்கான அனைத்து டேப்களையும் நீங்கள் மூடிவிட்டால், நீங்கள் தானாகவே, பழைய, வழக்கமான பிரவுசிங் டேப்களுக்கு திரும்புவீர்கள். 

டால்பின் பிரவுசர்: டால்பின் பிரவுசரில் தனி நிலையில் இணையதளங்களைத் திறக்க விரும்பினால், தனியாக private browsing டேப்களைத் திறக்க வேண்டியதில்லை. இதற்குப் பதிலாக, “Private Mode” என்பதனை இயக்க வேண்டியதிருக்கும். இது, நீங்கள் டால்பின் பிரவுசரி மூடி வெளியேறும்போது, உடனே தானாகவே உங்களுடைய பிரவுசிங் ஹிஸ்டரி, குக்கி பைல்கள், படிவங்களுக்கான டேட்டா ஆகியவற்றை நீக்குகிறது. 
“Private Mode” நிலைக்குச் செல்ல, டால்பின் பிரவுசர் விண்டோவில், இடது கீழாக உள்ள மூலையில் தரப்பட்டுள்ள டால்பின் ஐகானைத் தொடவும். தொடர்ந்து மெனு பட்டனைத் தொடவும். இது அங்கு கிடைக்கும் மூன்று பட்டன்களில் கீழாக அமைந்திருக்கும். அடுத்து டூல் பார் ஒன்று மேலாக எழும். இதில் கிடைக்கும் “Settings” பட்டனைத் தொடவும். இப்போது கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, “Privacy & Personal Data” என்பதைத் தொடவும். 

இப்போது கிடைத்துள்ள “Privacy & Personal Data” என்ற விண்டோவில், “Private Mode” என்பதற்கு வலப்புறமாக உள்ள ஸ்விட்ச்சினைத் தொடவும். இது இப்போது இயக்க நிலைக்கு வரும். இது இயக்க நிலையில் உள்ளது என்பதனை, அதன் இடது புறம் உள்ள டிக் அடையாளம் காட்டும். அது இல்லை எனில், மீண்டும் சரியாக அதனை தொட வேண்டும். இனி நீங்கள் தனி நிலையில் இணையத்தில் எத்தனை தளங்களில் வேண்டுமானாலும் உலா வரலாம். உங்கள் உலா, நீங்கள் தரும் தகவல்கள், தரவிறக்கம் செய்திடும் கோப்புகள் குறித்து எந்த தகவலும் பிரவுசரில் பதியப்பட மாட்டாது. 

டால்பின் பிரவுசரை விட்டு நீங்கிச் செல்ல, பிரவுசர் விண்டோவின் இடது கீழ் மூலையில் உள்ள டால்பின் ஐகானத் தொடவும். தொடர்ந்து கிடைக்கும் டூல் பாரில் உள்ள “Exit” என்பதனைத் தொடவும். இப்போது டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். இதன் மூலம் கேஷ் மெமரியில் உள்ள பைல்கள் மற்றும் இணைய உலா குறித்த ஹிஸ்டரி பைல்கள் அனைத்தையும் நீக்க வழி கிடைக்கும். “Clear cache” மற்றும் “Clear history” ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “Exit” என்பதைத் தொடவும். உங்கள் பிரவுசிங் குறித்த அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். 
நீங்கள் மாறா நிலையில், உங்கள் மொபைல் சாதனத்தில் மேற்கொள்ளும் அனைத்து இணையத் தேடல்களும், மற்றவர்கள் அறியா நிலையிலேயே, எந்தவித பதிவுகளும் இல்லாமல் அமைய வேண்டும் எனில், இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரவுசர்களைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட வகையில் அமைந்த இரண்டு பிரவுசர்களை இங்கு காணலாம். 

டால்பின் ஸீரோ (Dolphin Zero): இது டால்பின் பிரவுசரின் இன்னொரு வகையான பதிப்பு. பிரைவேட் பிரவுசிங் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கானது. இதில் மேற்கொள்ளப்படும் அனைத்து இணைய தேடல்களும், பிரைவேட் பிரவுசிங் வகையிலேயே இருக்கும். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடி, இன்ஸ்டால் பட்டனில் அழுத்தி, மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். 
இது இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், இந்த டால்பின் ஸீரோ பிரவுசரைத் திறக்கவும். திறந்தவுடன், இந்த பிரவுசர், ஏற்கனவே பிரவுசரால் நீக்கப்பட்டது குறித்துக் கூறும். இந்த பிரவுசர் விண்டோவின் மேலாக உள்ள இதன் அட்ரஸ் பாரில், இணைய முகவரி ஒன்றை அமைத்து இயக்கவும். 
குறிப்பு: டால்பின் ஸீரோ பிரவுசரில், ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களை ஒரே நேரத்தில் திறக்க முடியாது. பிரவுசிங் முடித்த பிறகு, பிரவுசர் விண்டோவிற்குக் கீழாக உள்ள மெனு பட்டனைத் தொட்டு, கிடைக்கும் மெனுவில் “Exit” என்பதனைத் தொடவும். பிரவுசர் மூடப்படுவதற்கு முன்னால், பேப்பர் ஒன்று சுக்கு நூறாகக் கிழிக்கப்படும் நகரும் படக் காட்சி ஒன்று காட்டப்படும். உங்களின் இணைய தேடல் குறித்த அனைத்து தடயங்களும், மொத்தமாக நீக்கப்படுவதற்கான அறிகுறி இது.
 
இன்பிரவுசர் (InBrowser): டால்பின் ஸீரோ பிரவுசரைப் போலவே, பிரைவேட் பிரவுசிங் மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுக்கும் பிரவுசர் இது. ஆனால், இதில் ஒன்றுக்கு மேலாக டேப்களைத் திறந்து, ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைக் காணலாம். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் பிளே ஸ்டோரில், தேடி இதனை இன்ஸ்டால் செய்திடவும். 

இன்ஸ்டால் செய்த பின்னர், இதனை முதன் முதலில் திறக்கும்போது Changelog காட்டப்படும். “Back to InBrowser Startpage” என்பதனைத் தொட்டு, இதன் மாறா நிலையில் உள்ள தேடல் பக்கத்தினைக் காணவும். தொடக்க நிலையின் தேடல் பக்கம் காட்டப்படும். நீங்கள் இணையத்தில் எதனையேனும் தேடிப் பெற விரும்பினால், அதற்கான சொற்களை இதில் இடவும். அல்லது இணையப் பக்கத்திற்குச் செல்ல திட்டமிட்டால், பிரவுசரின் மேலாக உள்ள அட்ரஸ் பாரில், அதற்கான முகவரியினை அமைக்கவும். இன்னொரு டேப்பினைத் திறக்க எண்ணினால், பிரவுசர் விண்டோவில் வலது மேல் பக்க மூலையில் உள்ள மெனு பட்டனைத் தொடவும். அருகே கிடைக்கும் டயலாக் பாக்ஸில் கீழாகக் கிடைக்கும் “New Tab” என்பதில் தொடவும். மீண்டும் பிரவுசர் விண்டோவிற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். புதிய டேப் ஒன்று, தேடல் பக்கத்தில் காட்டப்படும். 

டேப்களுக்கு இடையே செல்ல வேண்டும் என்றால், மீண்டும் வலது மேல் பக்கம் உள்ள மெனு பட்டனைத் தொடவும். இப்போது எந்த இணைய தளம் செல்ல வேண்டுமோ, அதற்கான டேப்பினைத் தொடவும். 
குறிப்பு: டேப்களுக்கு இடையே மாறி மாறிச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால், “Back” பட்டனைத் தொடக் கூடாது. நம் மொபைல் போனில் உள்ள “Back” பட்டனையும் தொடக் கூடாது. எந்த இணைய தளம் மீண்டும் செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அது உள்ள டேப்பினைத் தொட்டே, அந்த இணைய தளம் செல்ல வேண்டும். இப்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர்களுக்கும், மொபைல் சாதனங்களில் இயங்கும் பிரவுசர்களுக்கும், தன் ரகசிய நிலை இணைய உலா மேற்கொள்வதில் இருக்கின்ற வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனி, தயக்கமின்றி, மொபைல் சாதனங்களிலும் தன் ரகசிய நிலையில் இணைய உலா செல்ல விரும்பினால், எளிதாகச் செல்ல உங்களால் முடியும்.

நன்றி ;செந்தில்வயல் நன்றி ;senthilvayal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 6:03 pm

வேலைத்திறனை அதிகரிக்கும் 10 ஆப்ஸ்கள் !
 vayal 
[size=16]எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.
10 ஆப்ஸ்கள் இதோ:
ட்ரெல்லோ!



நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்துமுடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலை களைப் பதிவு செய்துவிட்டால், அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டிவிடும்.அதுமட்டுமின்றி உங்கள் அலுவலகத்தில் உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு, அதை அவர்களுக்கு அனுப்பிவிட்டால், அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு நினைவுபடுத்தும். வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்துசேரும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.trello
இன்பாக்ஸ் பை  ஜி-மெயில்:
கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனியொரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது கூகுள். இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவை களான யாகூ, ஹாட்மெயில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு வரும் மெயில்்களையும் இதில் பெற முடியும். பதிலளிக்க வும் முடியும். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில்களை யும் பெறுவதால், தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந்தாலும், 50 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் இதை  டவுன்லோடு செய்து   பயன்படுத்து கின்றனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inbox
ஸ்வைப் கீபோர்டு:
முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்டன்கள் உள்ள கீபோர்டுகளைப் பயன்படுத்தி வந்தோம். அடுத்து, ஸ்மார்ட் போன் ஸ்கிரீனில் தொடுதிரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம். அதற்கடுத்து டிக்‌ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தைகளைத் தேர்வு செய்தோம்.  தற்போது கீபோர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்துக்களில் வைத்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகிவிடும் .
[/size]
கைபேசி  தகவல்கள் Nav94b
[size]
ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட சில மொழி களிலும் வார்த்தைகளை அடையாளம் காணும் இந்த ஆப்ஸ் இன்னும் சில மொழிகளுக்கும் அப்டேட் செய்யப்பட உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.dtc
கூகுள்அனலிடிக்ஸ்:
நாம் செய்யும் வேலைகள் சரியான வேகத்தில் உள்ளதா, அந்த வேலையை இதே வேகத்தில் சென்றால், நம் டார்கெட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல் மற்றும் பிடிஎஃப் ஃபைல்களாக வழங்குகிறது கூகுளின் அனலிடிக்ஸ் ஆப்ஸ். உங்கள் அலுவலக இணையதளங்களை இதனுடன் இணைத்துக்கொள்வதன் மூலம் எத்தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர், அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர்  என்பதையும் சொல்கிறது இந்த ஆப்ஸ்.
ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.giant
வுண்டர்லிஸ்ட்:
நாம் செய்யும் வேலைகள் சிலவற்றை நாம் மறந்துவிடுவோம். சிலசமயம் வேலைகளைத் தாண்டி இன்று உறவினர் ஒருவருக்குப் பிறந்தநாள், ஒரு முக்கியமான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வுண்டர்லிஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள், சந்திக்க வேண்டிய நபர்கள் மற்றும் மறக்கக்கூடாத தினங்களைப் பதிவு செய்துவிட்டால், சரியாக நமக்கு நினைவுபடுத்தி நமது வேலைகளை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
[/size]
கைபேசி  தகவல்கள் Nav96a
[size]
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும்
இந்த ஆப்ஸை இதுவரை 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். 5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wunderkinder.wunderlistandroid
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:
நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டுகள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், எக்ஸ்எல் படிவங்கள் ஆகியவற்றை மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெயில் மூலமாக அனுப்ப முடியும். நாம் கணினியில் செய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும். இது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4 ரேட்டிங்கை இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.  இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub
இன் 5:
பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களுக்குள் சென்று அங்கேயே மணிக்கணக்கில் தங்கிவிடுகிறார்கள். இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள்கூட பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வதுதான் இந்த ஆப்ஸ். இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துவிட்டால், எந்த சமூக வலைதளத்திலும்  சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களை இருக்க அனுமதிக்காது. காரணம், ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலைதளத்தை உங்கள் கம்ப்யூட்டர் திரையிலிருந்து இந்த ஆப்ஸ் காணாமல் அடித்துவிடும்.
[/size]
கைபேசி  தகவல்கள் Nav96b
[size]
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: 
https://play.google.com/store/apps/details?id=sariodev.in5.app

ட்ராப் பாக்ஸ்:
செல்போனில் டவுன்லோடு செய்யும் புகைப்படம், வீடியோக்களை மெமரி கார்டுகளில் இடம் இல்லை என அழித்துவிடுவோம். அல்லது இ-மெயில்களில் இருந்து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றைகூட மறந்து போய் நீக்கி்விடுவோம். அதனைச் சேமித்து வைக்கத்தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது.
அதுமட்டுமின்றி, இதனை மற்றவர்களோடு பகிரவும், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.
இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதன் அளவு நாம் பயன்படுத்தும் போனை பொறுத்து மாறுபடும்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.dropbox.android
[/size]
கைபேசி  தகவல்கள் Nav96c
[size]
க்ளீன் மாஸ்டர்:
நமது செல்போனில் நாம் சேமிக்காமலேயே நிறைய பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள். 
இது குறிப்பிட்ட அளவுக்குமேல் சேர்ந்தால், நமது செல்போனின் வேகம் குறையும். அதனைச் சரிசெய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது. 
டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஃபைல்களை அறிந்து அதனை நீக்க  பரிந்துரைக்கும். ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள்ளது.

இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard
அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:
ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஒரு மிகப் பெரிய புராஜெக்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சிதமாக கணக்கிட்டு, அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஆப்ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும். அந்த வேலையைச் செய்து முடிக்க  இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல்களை இந்த ஆப்ஸ் துல்லியமாகத் தந்துவிடும்.
இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப டாஸ்குகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.  இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=pl.thalion.achieve.productivity.timer[/size]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 18, 2015 6:06 pm

ஆப்பிள் வாட்ச்: அதிசயமானதா?
vayal 

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனத்தை அறிமுகப்படுத்தினார். தன் பயன்பாட்டு சாதனங்களில், இதுவரை ஆப்பிள் நிறுவனம் இது போன்றதொரு சாதனத்தைத் தந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தில் உருவானது என்று குறிப்பிட்டார். கடிகாரம் ஒன்றில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று மக்கள் எண்ணக் கூடியதைக் காட்டிலும், முற்றிலும் புதிய வசதிகளுடனும் செயல்பாடுகளுடனும் இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் இதே போன்ற சாதனத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னாலேயே, ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கோ சென்றுவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.


ஐபாட், ஐபோன் மற்றும் ஐபேட் எப்படி முற்றிலும் புதிய வசதிகளை எதிர்பாராத வகையில் தந்தனவோ, அதே போல முற்றிலும் புதிய கோணத்தில் இதன் செயல்பாட்டினைக் காணலாம். 
ஆப்பிள் வாட்ச் ஒன்றின் விலை 349 டாலர் எனத் தொடங்குகிறது. மூன்று வகையான ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டு விலைக்குக் கிடைக்கிறது. இதன் ஆளுமை வரும் 2015 ஆம் ஆண்டில் முழுமையாகத் தெரிய வரும். நிச்சயம் அணிந்து இயக்கப்படும் கம்ப்யூட்டர் சந்தையில், ஆப்பிள் வாட்ச் முதல் இடத்தை மட்டுமின்றி, வேறு எந்த சாதனமும் இதன் வசதிகளுக்கு அருகே வராத நிலையும் ஏற்படும் என்று பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில், இதே போல எம்.பி. 3 பாடலை வழங்குவதில் தன்னிகரற்ற சாதனமாக ஐபாட் அறிமுகமானது. விற்பனைச் சந்தையில் ராஜாவாகப் பல ஆண்டுகள் வீற்றிருந்தது. 2007ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எனப்படும் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. புதிய தரத்தையும் வசதிகளையும் நிலை நிறுத்தியது. 
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள், அணிந்து இயக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். அல்லது உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், ஆப்பிள் ஏற்கனவே தன் சாதனங்கள் பெற்ற வெற்றியின் புகழ் நிழலில், ஆப்பிள் வாட்ச் இயங்கும் என நம்பி, இந்த சந்தையில் இறங்கியுள்ளது. 

தற்போது விற்பனையில் வர இருக்கும் ஆப்பிள் வாட்ச், அதனை அணிபவரின் உடல்நிலையினைக் காட்டும் சாதனமாக புதிய முறையில் உருவெடுக்கும். மொபைல் வழி பணம் செலுத்துவதனைக் கண்காணிக்கும். மற்றும் பிற புதிய நவீன வசதிகளை அளிக்கும். இரண்டு வகையான அளவுகளில் இது வடிவமைக்கப்பட்டு நமக்கு இது கிடைக்கும். மூன்று வகையான வடிவமைப்பில் இவை உருவாக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த மாடலைத் தேர்ந்தெடுக்க இது வசதியாக இருக்கும். 

இதன் மேலாக உள்ள கண்ணாடி கவர் சபையர் கிறிஸ்டல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் ஸ்கிராட்ச் எனப்படும் கீறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. உள்ளே இருக்கும் டிஸ்பிளே ரெடினா வகையைச் சார்ந்தது. தட்டுவது மற்றும் தொடர்ந்து அழுத்துவது ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இந்த திரை புரிந்து கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Force Touch என்னும் டூல் இதனை மேற்கொள்கிறது. எனவே, திரை அழுத்தத்திற்கு தனித்தனியே சாதனங்கள் தேவைப்படாது. 

இதனை மணிக்கட்டில் அணிந்து கொண்டு, ஒவ்வொரு முறை மணிக்கட்டினை உயர்த்தும் போதும், வாட்ச் செயல்பாடு காட்டப்படும். 
இதன் மூலம் மெசேஜ் பெறுகையில், அதில் உள்ள சொற்களின் பொருள் மற்றும் தன்மையினை இந்த வாட்ச் புரிந்து கொண்டு பதிலையும் தயார் செய்கிறது. 
அதனால், அதிகம் டைப் செய்து பதில் தயார் செய்திட வேண்டியதிருக்காது. இந்த வாட்ச் செயல்பாட்டிற்கான சிறிய அப்ளிகேஷன்களைத் தயார் செய்வதற்கு, ஆப்பிள் நிறுவனம் தன் டெவலப்பர்களுக்கு WatchKit ஒன்றை வழங்குகிறது. 

இந்த வாட்ச் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்த ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி, இதற்கான 
காத்திருப்பு அவசியம் தான் என வாட்ச் வரும்போது மக்கள் உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி ;செந்தில்வயல் நன்றி ;senthilvayal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by jeba Wed Nov 23, 2016 4:05 pm

தகவலுக்கு நன்றி. நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கைபேசி  தகவல்கள் Empty Re: கைபேசி தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum