தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Go down

  ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் Empty ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Post by அ.இராமநாதன் Thu May 10, 2018 7:55 pm

[You must be registered and logged in to see this image.]

இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் தமிழ்நாடறிந்த பிரபலம்.
 தேவரின் `மகராசி' தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசை 
அமைத்திருக்கிறார். 

இப்போதும் இசை அமைப்பு, இசைக் கச்சேரிகள் எனச் சுற்றி 
சுழன்றுவருகிறார். `எனது ஆன்மிகம்' பகுதிக்காக அவரைச் 
சந்தித்தோம். 

அவரது ஆன்மிகம், அவர் முக்கியமாக வணங்கும் மூன்று மனித
 தெய்வங்கள், வழிபடும் முறை பற்றிக் கூறுகிறார் இங்கே...

(சங்கர்) கணேஷ்

``தெய்வ நம்பிக்கையில் பல வகை உண்டு. சின்ன வயசுலே 
அம்மா, அப்பா சாமி கும்பிடச் சொல்லிக் கொடுப்பாங்க
. `டேய்... இந்த சாமிய கும்பிடு. இது தப்பு... செய்யாதே’னு
 சொல்லிக் கொடுப்பாங்க. `தப்பு செஞ்சா சாமி கண்ணைக் 
குத்திடும்’னு சொல்லி வளர்ப்பாங்க. அது இயற்கை. 

அதுக்குப் பிறகு நம்ம விருப்பங்கள் நிறைவேறணும்னு 
சாமிகிட்ட வேண்டிக்க ஆரம்பிப்போம். அப்புறம் சமுதாயத்துல
 பெரிய ஆளாக ஆகணும், பேரு புகழ் கிடைக்கணும்னு 
வேண்டிக்குவோம். 

ஆனா, அதெல்லாம் இயற்கையாக இருக்கணும். அந்த நம்பிக்கை
 உண்மையாக இருக்கணும். அப்படி இருந்தால்தான் பலன் 
கிடைக்கும். 

போகிற போக்குல ஏதோ  ஃபார்மால்டிக்காக  சாமி
கும்பிட்டோம்னா பலிக்காது. சிவனைக் கும்பிடுறோமோ, 
இயேசுவைக் கும்பிடுறோமோ, அல்லாவைக் கும்பிடுறோமோ... 
அது பிரச்னையில்லை. 

உண்மையாக, முழு மனசோட தெய்வத்தைக் கும்பிட்டோம்னா 
நிச்சயம் அது பலிக்கும். 
-
------------------------------------------------------விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

  ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் Empty Re: ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Post by அ.இராமநாதன் Thu May 10, 2018 7:57 pm

[You must be registered and logged in to see this image.]

நாம அவசரப்பட்டா மட்டும் போதுமா... அவர் எப்போ நடத்தி 
வைக்கணும்னு நினைச்சிருக்கிறாரோ... அப்போ கண்டிப்பா 
நடக்கும். ஆனா, மனித மனம் அதுக்குள்ள அவசரப்பட்டு 
கடவுளைத் திட்ட ஆரம்பிச்சிடுது. அது கூடாது. 

ஒரே சிந்தனையா கடவுளை நினைச்சு, நம்ம கடமையை நாம 
சரியா செஞ்சோம்னா அவர் கண்டிப்பாக நடத்திவைப்பார் . 

நான் ஒரு சாதாரண கார் டிரைவரோட மகன். 
எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் திண்டிவனம். அம்மாவுக்குச் 
சொந்த ஊர் மேல்மருவத்தூர் பக்கத்துல சோத்துப்பாக்கம். 

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஆயிரம் விளக்கு
 மக்கீஸ் கார்டன்ல. தேனாம்பேட்டை கார்ப்பரேஷன் 
ஸ்கூல்லதான் படிச்சேன். மதியம் 3:30 மணிக்கு விளையாட்டு 
பீரீயட் நடக்கும். ஆனா, எனக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கு 
பாட்டுப் பாட கிளாஸ் நடக்கும்.



நாம அவசரப்பட்டா மட்டும் போதுமா... அவர் எப்போ நடத்தி 
வைக்கணும்னு நினைச்சிருக்கிறாரோ... அப்போ கண்டிப்பா 
நடக்கும். ஆனா, மனித மனம் அதுக்குள்ள அவசரப்பட்டு 
கடவுளைத் திட்ட ஆரம்பிச்சிடுது. அது கூடாது. 

ஒரே சிந்தனையா கடவுளை நினைச்சு, நம்ம கடமையை நாம 
சரியா செஞ்சோம்னா அவர் கண்டிப்பாக நடத்திவைப்பார் . 

நான் ஒரு சாதாரண கார் டிரைவரோட மகன். 
எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் திண்டிவனம். அம்மாவுக்குச் 
சொந்த ஊர் மேல்மருவத்தூர் பக்கத்துல சோத்துப்பாக்கம். 

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஆயிரம் விளக்கு
 மக்கீஸ் கார்டன்ல. தேனாம்பேட்டை கார்ப்பரேஷன் 
ஸ்கூல்லதான் படிச்சேன். மதியம் 3:30 மணிக்கு விளையாட்டு 
பீரீயட் நடக்கும். ஆனா, எனக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கு 
பாட்டுப் பாட கிளாஸ் நடக்கும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

  ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் Empty Re: ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Post by அ.இராமநாதன் Thu May 10, 2018 7:57 pm

அன்னிக்கு ஆரம்பிச்சது... இன்னிக்கு நான் ஆயிரம் படங்களுக்கு 
மேல இசை அமைச்சிட்டேன். அதுக்கு முழுக்க முழுக்க காரணம் 
இறைவன், என் அம்மா அப்பா. என்னைப் பெத்த அம்மா 
எல்லம்மா இறந்துட்டாங்க. எங்க சின்னம்மா அரவணைப்புலதான்
 வளர்ந்தேன். இவங்களைத் தவிர, நான் வணங்கும் மூன்று மனித
 தெய்வங்கள்தாம் என் வளர்ச்சிக்குக் காரணம். 

முதல்  மனித தெய்வம் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 `தெனாலிராமன்', `நிச்சயத் தாம்பூலம்' படங்களின் கேமராமேனும் 
இயக்குநருமான வி.எஸ்.ரங்காகிட்ட என் அப்பா டிரைவராக 
இருந்தார்.

வி.எஸ்.ரங்கா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதன் சார்கிட்ட 
சேர்த்துவிட்டார். சின்ன வயசுலயே துறுதுறுனு சுறுசுறுப்பா 
இருக்கிறதைப் பார்த்துட்டு கம்போஸிங் இன்சார்ஜ் பணியையே 
எம்.எஸ்.வி சார் என்கிட்ட கொடுத்தார். 

அந்தச் சின்ன வயதில் அத்தனை பெரிய வாய்ப்பை எனக்கு 
அளித்த மனித தெய்வம் அவர். 

அவருக்கு அடுத்து நான் வணங்கும் மனித தெய்வம் கவியரசர்
 கண்ணதாசன். அவர்தான் எங்களை இசையமைப்பாளராக்கி `
நகரத்தில் திருடர்கள்' என்ற படத்தைத் தயாரித்தார். 

ஆனா, அந்தப் படம் பாதியிலேயே நின்னு போச்சு. ஆனாலும்,
 அவரே எங்களை சாண்டோ சின்னப்பா தேவரிடம் அழைத்துச்
சென்று எங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி `மகராசி' 
படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

  ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் Empty Re: ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Post by அ.இராமநாதன் Thu May 10, 2018 7:59 pm

எம்.ஜி.ஆர் அவர்களின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு 
என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு, 
`நான் ஏன் பிறந்தேன்' படத்தில் எங்களுக்குக் கிடைத்தது. 
அதற்குக் காரணம் என் மாமனார் ஜி.என்.வேலுமணி. 

`பதிபக்தி’, `பாலும் பழமும்’, `பாகப்பிரிவினை’, `பாத காணிக்கை’, 
`பஞ்சவர்ணக்கிளி’, `குடியிருந்த கோயில்’, `நாணல்’, `
நான் ஏன் பிறந்தேன்?’ படங்களைத் தயாரித்தவர். அவர் பையனும் 
நானும் நல்ல நண்பர்கள். 

அவங்க வீட்டுக்குப் போக வர இருந்தபோது அவர் பொண்ணுக்கும் 
எனக்கும் பூ மலர்ந்த மாதிரி காதல் ஏற்பட்டுச்சு. அவர்கிட்ட 
பொண்ணு கேட்டா கொடுப்பாரா? உதைப்பார். இழுத்துக்கிட்டு 
போய் மேரேஜ் பண்ணலாம்னாபோலீஸ்ல புடிச்சுக் 
கொடுதுடுவாரோனு பயம்... என்ன பண்றதுனே தெரியலை.

`சரி எல்லாக் கவலையையும் தீர்க்கிறதுக்குத்தான் நான் 
இருக்கேனேடா'னு சொல்ற திருவேற்காடு 
தேவி ஸ்ரீகருமாரியம்மன்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. 
[You must be registered and logged in to see this image.]
தேவி கருமாரியம்மன்

ஞாயிற்றுக்கிழமைனா காலையிலயே கிளம்பிப்போய் 
மாரியாத்தாளைக் கும்பிட்டுட்டு வந்துடுவேன். மனசுக்குத் 
தைரியமா இருக்கும். 

சில நாள்கள் நடந்தே கோயிலுக்குப் போயிருக்கேன். அப்படி 
ஒருமுறை போனப்போ மழைனா மழை, அப்படியொரு மழை. 
அங்கே இருக்கிற தரைப்பாலத்துல இடுப்பு அளவு தண்ணி 
போகுது. நான் கூடையில இருக்கிற பூவோடு இந்தக் கரையில 
நிக்கிறேன். 

அந்தக் கரையில் இருந்தவங்க எல்லாரும் `வராதேடா... 
தண்ணியில அடிச்சிக்கினு போயிடுவே. போ... போ...’னு 
சொன்னாங்க. 

நான் போய் ஒரு மரத்தடியில் கொஞ்ச நேரம் இருந்துட்டு 
திரும்ப ஆத்துல இறங்கிப் போய் அம்பாளுக்குப் பூவை
 சாத்தி வேண்டிக்கிட்டுத்தான் வந்தேன்.

 ஐயர் கூட `இந்த மழையில ஏம்பா?'னு கேட்டார். 
என் பிரச்னை எனக்குத்தானே தெரியும். 

அம்மன், என் மாமனாருக்கு உடல்ரீதியா சோதனை கொடுத்தா. 
அவர் மனம் மாறினார். அந்தச் சமயத்துல ஒரு பத்திரிகையில,
 `வேலும் மணியும் நினைத்தால், கணேஷ் திருமணம் நடக்கும்'னு 
செய்தி போட்டுட்டாங்க.

எதுக்கு இதைச் சொல்றேன்னா அப்படி வைராக்கியமாப் 
போய் அம்பாளைக் கும்பிட்டதாலதான் எங்க மாமனாரே 
என்னை வீட்டுக்கு வரச்சொல்லி, ஆள் அனுப்பினார். 
-
-------------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

  ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் Empty Re: ``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum