"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! பாராட்டுரை : மெர்வின்
by eraeravi Sun Jun 16, 2019 8:14 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் திப்புரை : முனைவர் வெ. ரஞ்சனி
by eraeravi Sun Jun 16, 2019 8:12 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
by eraeravi Sun Jun 16, 2019 8:11 pm

» சுய தரிசனம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Jun 08, 2019 8:35 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:53 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:04 pm

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:01 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 11:12 pm

» மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:51 pm

» கோபம் அழிக்கும், சாந்தம் செழிக்கும்...!!
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:43 pm

» அதிகாரத்தின் நிழல் - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:31 pm

» இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 8:41 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:51 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:44 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Wed Jun 05, 2019 1:29 pm

» சித்திரம் பேசுதடி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 03, 2019 10:08 pm

» கற்க கசடற! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jun 03, 2019 10:04 pm

» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat Jun 01, 2019 6:22 pm

» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:53 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:48 pm

» கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Wed May 29, 2019 12:08 am

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by asokan1962 Mon May 27, 2019 6:34 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:38 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:23 am

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by அ.இராமநாதன் on Mon Aug 06, 2018 8:50 am

கண்ணதாசனின் பாவமன்னிப்பு!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

‘பாவ­மன்­னிப்பு’,  தமிழ் திரை­யி­சை­யில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய திரைப்­ப­டம். ‘பாவ­மன்­னிப்பு’, ‘பாச­ம­லர்’, ‘பாலும் பழ­மும்’  என்று 1961ல் அடுத்­த­டுத்து வந்த  படங்­க­ளில் அமைந்த பாடல்­கள், ஒரு புதிய மெல்­லிசை அலையை மட்­டு­மல்ல, ஒரு கண்­ண­தா­சன் அலை­யை­யும் ஏற்­ப­டுத்­தின.

ஐம்­ப­து­க­ளில் வந்த பெரும்­பா­லான படங்­க­ளில் ஒவ்­வொரு படத்­தி­லும் இரண்டு, மூன்று பாட­லா­சி­ரி­யர்­க­ளா­வது பாடல்­கள் எழு­து­வார்­கள். இதற்கு விதி­வி­லக்­கு­கள் இருக்­கத்­தான் செய்­தன: ‘அலி­பா­பா­வும் 40 திரு­டர்­க­ளும்’ படத்­தில் அ.மரு­த­காசி அனைத்­துப் பாடல்­க­ளை­யும் எழு­தி­னார்.

 ‘கல்­யாண பரிசு’ படத்­தில் எல்லா பாடல்­க­ளை­யும் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம் எழு­தி­னார். ‘வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன்’ படத்­தின் பாடல்­களை எல்­லாம் கு.மா. பால­சுப்­ர­ம­ணி­யம் எழு­தி­னார்.
ஆனால், கண்­ண­தா­ச­னைப் பொறுத்­த­வரை, ஐம்­ப­து­க­ளில் அவரே ‘மாலை­யிட்ட மங்கை’, ‘சிவ­கங்கை சீமை’ என்று படங்­கள் தயா­ரித்­த­போ­து­தான், அவற்­றின் அனைத்­துப் பாடல்­க­ளை­யும் எழு­த­மு­டிந்­தது! 

 அவரை பாடல் ஆசி­ரி­ய­ராக மதித்­த­வர் குறைவு. ‘பா’ வரி­சைப் படப்­பா­டல்­க­ளின் அமோ­க­மான வெற்­றிக்­குப் பிறகு, அத்­த­கைய வாய்ப்­பு­கள் அவ­ரைத் தேடி அலை­மோ­தின. அவரே கூட படங்­க­ளின் அனைத்­துப்­பா­டல்­க­ளை­யும் தானே எழு­தத்­தான் விரும்­பி­னார்.

பிறகு, அவர் 1981ல் மறை­யும் வரை அவ­ரு­டைய சினிமா பாடல்­கள் எழு­தும் வேலை­யில் பல ஏற்­றத்­தாழ்­வு­கள் இருந்­தன என்­பது உண்­மை­தான். ஆனால், அவர் இறந்து நாற்­பது வரு­டங்­கள் ஆகப்­போ­கும் இன்­றைய நிலை­யி­லும், இது­வரை திரைப்­பா­டல்­கள் எழு­தி­ய­வர்­க­ளில் அவ­ருக்­குத்­தான் முதல் ஸ்தானம் என்­ப­தில் எந்த மாற்­ற­மும் இல்லை! இந்த விஷ­யத்­தில் ஒரு சில­ருக்கு நிறைய ஏமாற்­றம் உண்டு!

அறு­ப­து­க­ளின் தொடக்க ஆண்­டு­க­ளில், வெற்­றி­யின் சந்­தோ­ஷத்­தில் குளித்­த­ப­டியே, திரைப்­பா­டல்­கள் குறித்­துக் கண்­ண­தா­சன் சொன்ன விஷ­யங்­க­ளில் முக்­கி­ய­மான ஒன்று -- ‘‘பாட்டு என்­பது வெறும் படத்­துக்­காக அல்ல, தனித்து நிற்க வேண்­டும்’’.

என்­னது, வெறும் படமா? படம் முக்­கி­யம் இல்­லையா? பாட்டு தனி­யாக நிற்­க­வேண்­டுமா? படத்­தோடு பாடல் இணைந்து போக­வேண்­டும் என்று சினிமா மேதை­கள் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் போது இந்­தக் கவி­ஞர் என்ன பாடல்­கள் தனி­யாக நிற்­க­வேண்­டும் என்­கி­றார்? இப்­ப­டி­யெல்­லாம் மன­தில் கேள்­வி­கள் எழ­லாம்.

அந்­தக் கேள்­வி­க­ளுக்­குப் பதில், பாடல் படத்­தோடு ஒட்­டா­மல் இருக்க வேண்­டும் என்று கவி­ஞர் சொல்­கி­றார் என்று எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. காட்­சிக்­கும் கேரக்­ட­ருக்­கும் ஏற்­ற­படி எழு­தக்­கூ­டி­ய­வர் என்று அவர் புக­ழப்­பட்­டார்.  ஏதோ  காட்­சிக்­காக மட்­டும் பாடல் என்று நினைத்­துப் பாட­லை­யும் அதன் காட்­சிப்­ப­டுத்­த­லை­யும் தக்­கை­யாக விட்­டு­வி­டக்­கூ­டாது. பாட­லும் அதன் காட்­சி­யும் மிக­வும் முக்­கி­யம் என்று நினைக்க வேண்­டும் என்­கி­றார் கவி­ஞர்.

‘பாவ மன்­னிப்பு’ படத்­தைப் பார்த்­தால் பாடல்­கள் தனி­யாக நிற்­கும்­ப­டித்­தான் அமைந்­தி­ருக்­கின்­றன.
தன்­னு­டைய காதலி தங்­கத்­தைக் குறித்து, பல­வி­த­மான கற்­ப­னை­கள் செய்து, ராஜன் (ஜெமினி கணே­சன்) பூங்­கா­வில் பாடும் பாடல் -- ‘காலங்­க­ளில் அவள் வசந்­தம்’.[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

இஸ்­லா­மி­யர்­க­ளின் கொண்­டாட்­டப் பாட­லாக, ரஹீம் (சிவாஜி கணே­சன்) பாடும் பாடல், ‘எல்­லோ­ரும் கொண்­டா­டு­வோம்’.

ரஹீம் சைக்­கிளை மிதித்­த­படி, ரம்­மி­ய­மான இயற்கை சூழ­லில், மனி­த­கு­லம் இப்­ப­டி­யெல்­லாம் மாறி­விட்­டதே என்று வருந்­திப் பாடி வரும் பாடல், ‘வந்த நாள் முதல்’.
இரண்டு பெண்­கள் (சாவித்­திரி, தேவிகா), தங்­கள்  காத­லர்­களை நினைக்­கும் நிலை­யில் வெளிப்­ப­டும் பாடல், ‘அத்­தான், என்­னத்­தான்’.

ஆணின் ஹம்­மிங்­கு­டன் அமைந்த ஒரு காதல் டூயட், ‘பாலி­ருக்­கும் பழ­மி­ருக்­கும்’.
சோகத்­திற்­கும் மகிழ்ச்­சிக்­கும் இடையே ஊச­லா­டும் மன­து­டன் நாய­கன் ரஹீம் பாடு­வது, ‘சிலர் சிரிப்­பார் சிலர் அழு­வார்’.

இந்­தப் பாடல்­களை வெட்­டி­விட்­டா­லும், கதை நகர்ந்து கொண்­டு­தான் இருக்­கும். ஆனால், இந்­தப் பாடல்­க­ளுக்­கா­கவே படம் பார்க்க திரை அரங்­கம் செல்­லும் ரசி­கர்­கள், பாடல்­களை ஏன் வெட்­டி­னீர்­கள் என்று கலாட்டா செய்­வார்­கள்!

நாட­க­மே­டை­யில் ஒரு பாடலை பாடி­விட்டு இறந்து போவ­தாக நடிப்­ப­வர், ‘ஒன்ஸ் மோர்’ கேட்­டால், எழுந்து பாடலை பாடி­விட்டு மீண்­டும் செத்­துப்­போ­வார் என்று சொல்­வார்­கள்! திரை­ய­ரங்­கு­க­ளில் கூட இந்த ‘ஒன்ஸ்­மோர்’ கூக்­கு­ரல் இருந்­தி­ருக்­கி­றது. 

சுதந்­தி­ரப்­போ­ராட்­டக் காலத்­தில், தேச பக்­திப் பாடல்­கள் வரும் ரீல்­களை மீண்­டும் மீண்­டும் சுழற்றி திரும்ப திரும்ப போடு­வார்­க­ளாம். ‘அன்­பிற்­கும் உண்டோ அடைக்­கும் தாழ்?’ என்று கேட்­டார் திரு­வள்­ளு­வர். அதே போல், ஆர்­வத்­திற்­குத்­தான் கட்­டுப்­பா­டு­கள் உண்டா?

தன்னை வெற்­றிப்­ப­டி­யில் ஏற்­றிய ‘பாவ மன்­னிப்பு’ பாடல்­க­ளைப் பற்றி, கண்­ண­தா­சன் இன்­னொரு விஷ­ய­மும் கூறி­யி­ருக்­கி­றார். ‘‘இந்த இடத்­திற்கு இப்­ப­டித்­தான் கருத்­தி­ருக்க வேண்­டும் என்று நான் எந்த வரம்­பை­யும் வைத்­துக்­கொள்­வ­தில்லை. பல நேரங்­க­ளில் உற்­சா­க­மாக எனக்­குத்­தோன்­று­கிற பொதுப் பாடல்­க­ளைப் படங்­க­ளில் நுழைத்­தி­ருக்­கி­றேன். இதில் எனக்­குத் துணை­யாக இருந்­த­வர் பீம்­சிங் ஆவார்.

 ‘பாவ­மன்­னிப்பு’, ‘பாலும் பழ­மும்’ படங்­க­ளில் பெரும்­பா­லான பாடல்­கள் பொதுப்­பா­டல்­க­ளாக பிறந்த பாடல்­கள்­தான்.’’  தமிழ் படப்­பா­டல்­கள் பொது­வாக இந்த வகை­யைச் சேர்ந்­த­வை­தானோ?

இயக்­கு­ந­ரி­ட­மி­ருந்து இவ்­வ­ளவு சுதந்­தி­ரம் பெற்று, ‘பாவ­மன்­னிப்பு’ பாடல்­க­ளுக்­கான வரி­களை எழுத அமர்ந்த கண்­ண­தா­சன் மன­தில் எத்­தனை கற்­ப­னை­கள் சிற­க­டித்­தி­ருக்­க­வேண்­டும்!  

திரா­விட இயக்­கத்­தின் சொல்­ல­டுக்­கு­கள் திகட்­டிப்­போய், கண்­ண­னின் குழ­லி­சைக்கு கண்­ண­தா­சன் செவி­சாய்க்­கத் தொடங்­கி­யி­ருந்த நேரம் அது.  பக­வத் கீதை­யின் ‘விபூதி யோகம்’ என்ற பகு­தி­யில், கிருஷ்ண பர­மாத்மா அர்­ஜு­ன­னுக்கு விஸ்­வ­ரூ­பம் காட்­டு­கி­றார். ‘வானத்­தில் நான் சூரி­யன், மேகங்­க­ளில் நான் மழை மேகம், வேதங்­க­ளில் நான் சாம­வே­தம், மாதங்­க­ளில் நான் மார்­கழி’ என்­ப­து­போல் சிறப்­பா­ன­வற்றை வரி­சைப்­ப­டுத்தி, அவை­யெல்­லாம் பக­வா­னான என்­னு­டைய சிறப்­பைத்­தான் பிர­தி­ப­லிக்­கின்­றன” என்று பார்த்­த­னுக்கு எடுத்­து­ரைக்­கின்­றார்.

பக­வான் இந்த வகை­யில் வெளிப்­ப­டுத்­திய உத்­தியை, காத­லி­யைக் குறித்து காத­லன் பாடும் பாட்­டில் கண்­ண­தா­சன் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்! ‘காலங்­க­ளில் அவள் வசந்­தம், கலை­க­ளில் அவள் ஓவி­யம், மாதங்­க­ளில் அவள் மார்­கழி, மலர்­க­ளிலே அவள் மல்­லிகை’ என்று எளி­மை­யான அழ­கு­டன் வரி­க­ளைத் தொடுத்­துச் சென்­றார் கண்­ண­தா­சன். இப்­ப­டியே பட்­டி­யல்­போட்­டுக்­கொண்­டு­போ­னால் சலிப்­புத்­த­ரும் அல்­லவா? அத­னால், தான் இப்­ப­டி­யெல்­லாம் அடுக்­கு­வ­தற்­கான கார­ணத்­தைக் கூறு­வ­து­போல், ‘அவள் கவி­ஞன் ஆக்­கி­னாள் என்னை’ என்று அற்­பு­த­மாக முடித்­தார்.

மத நல்­லி­ணக்­கத்­தைச் சொல்­வ­தாக நினைத்­துக்­கொண்டு, பீம்­சிங் ‘பாவ­மன்­னிப்பு’ படத்தை எடுத்­தி­ருந்­தார். அவ­ரு­டைய புத்தா பிலிம்ஸ் ஸ்தாப­னத்­தின், ‘புத்­தம் சர­ணம் கச்­சாமி’ என்ற பவுத்த பிர­க­ட­னத்­து­டன் படம்  தொடங்­கி­யது. ‘பாவ­மன்­னிப்பு’ என்ற படப்­பெ­யர் கிறிஸ்­தவ சமய பழக்­கங்­க­ளில் ஒன்­றைக் குறிப்­பிட்­டது. படத்­தின் மகா வில்­லன் (எம்.ஆர். ராதா), காமாட்சி, மீனாட்சி என்று பேசி பித்­த­லாட்­டம் செய்­யும் ஒரு கொலை­கா­ரன். 

படத்­தில் அவன் இந்து மதப் பிர­தி­நிதி!   ஜேம்ஸ் என்ற கிறிஸ்­த­வர் மிக­வும் நல்­ல­வர். ஊருக்கு உப­காரி. தன்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மாணிக்­கம் பிள்­ளை­யின் குழந்­தையை மேரி என்ற பெய­ரில் வளர்க்­கி­றார். ரஹீம் என்ற கதா­நா­ய­க­னின் வளர்ப்­புத் தந்­தை­யான இஸ்­லா­மி­யர், சேரி­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு வைத்­தி­யம் பார்க்­கும் உத்­த­மர். ‘பாவ மன்­னி’ப்­பில், இந்த வகை­யில் சம­யங்­கள் அடை­யா­ளம் காட்­டப்­பட்­டி­ருந்­தன.

‘பாரதி வைத்­தி­ய­சாலை’ என்ற பெயர் பொறிக்­கப்­பட்ட கூடை­யு­டன் கூடிய சைக்­கிளை,  பறந்த வெளி­க­ளுக்கு இடையே ரஹீம் ஓட்டி வரு­கி­றான். அப்­போது அவன் சிந்­த­னைச் சித­ற­லாக ஒலிக்­கிற பல்­ல­வி­யின் முக்­கிய வரி, ‘மனி­தன் மாறி­விட்­டான், அவன் மதத்­தில் ஏறி­விட்­டான்’. படம் வெளி­வந்த 1961ல், யாருக்கு மதா­பி­மா­னம் பெரி­தா­கப்­போய்­விட்­டது என்று பீம்­சிங்­கும் அவ­ரு­டைய பார்ட்­னர்­க­ளில் ஒரு­வ­ரான வச­ன­கர்த்தா சோலை­ம­லை­யும் கவ­லைப்­பட்­டார்­கள்? 

மதா­பி­மா­னத்­தால் பாரத தேசம் பிரிக்­கப்­பட்­டி­ருந்­தது. பாகிஸ்­தான் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆகஸ்ட் 17, 1947 அன்று கோல்­கட்­டா­வின் வீதி­க­ளில் வெடித்த வன்­முறை மூன்று நாட்­கள் தொடர்ந்து, 4,000 உயிர்­க­ளைக் காவு கொண்­டது.  நாட்­டின் பிரி­வி­னை­யின் போது பஞ்­சாப்­பி­லும் வங்­கா­ளத்­தி­லும் மொத்­தம் பத்து லட்­சத்­திற்கு  மேற்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்­டார்­கள். 

இந்­தப் பின்­ன­ணி­யைக் கொண்ட ‘நாஸ்­திக்’ (1954) என்ற இந்தி திரைப்­ப­டத்­தில் கவி­ஞர் பிர­தீப் என்­ப­வர், தான் எழு­திய ஒரு பாடலை தன் குர­லி­லேயே பாடி­னார். பாகிஸ்­தா­னின் உரு­வாக்­கத்­தால் ஊரை­யும், உட­மை­க­ளை­யும், உற­வி­னர்­க­ளை­யும் இழந்து, ரயி­லில் இந்­தி­யாவை நோக்கி வரும் அக­தி­க­ளின் கூக்­கு­ர­லாக ஒலித்­தது அவர் எழு­திப்­பா­டிய, ‘தேக் தேரா இன்­ஸா­னுகா ஹாலத், கியா ஹோ கயா பக­வான், கித்னா பதல் கயா இன்­ஸான்’ என்ற பாடல்.  


பாட­லின் சந்­தத்­தி­லேயே தர­வேண்­டும் என்­றால், அதன் கருத்தை, ‘படைத்த மனி­த­னின் நிலை­யைப் பாரு, என்­ன­தான் ஆச்சு இறைவா, மனி­தன், மாறிய கதையை சொல்­லவா?’என­லாம். இதைத் தொட­ரும் வரி­க­ளில், சூரி­ய­னும் மாற­வில்லை, சந்­தி­ர­னும் மாற­வில்லை, வான­மும் மாற­வில்லை, மனி­தன் மாறி­விட்­டான் என்று பொருள்­பட கவி பிர­தீப் எழு­தி­னார்.

இந்த விஷ­யங்­கள்­தான், ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாற­வில்லை, வான் மதி­யும் மீனும் கடல் காற்­றும், மல­ரும் மண்­ணும் கொடி­யும் சோலை­யும்’ என்று இசை­ய­மைப்­பா­ளர்­கள் விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி தந்த சந்­தத்­திற்கு ஏற்­ற­வாறு, கண்­ண­தா­சன் வார்த்­தை­களை அடுக்­கி­னார்.
இந்­திப் பாட­லில், ‘ஆயா ஸமய் படா பேடங்கா, ஆஜ் ஆத்மி பனா லபங்கா’ என்று கவி பிர­தீப் தொடர்ந்­தார்.   

அதன் பொருள் -- மிக மோச­மான காலம் வந்­தது, மனி­த­ரின் தீய கோலம் வந்­தது. இதைத்­தான், ‘நிலை மாறி­னால் குணம் மாறு­வான்’ என்று எழு­தி­னார் கண்­ண­தா­சன். ஒன்­றி­லி­ருந்து ஒன்று வந்­தது என்று இசைக்­கும் மெட்­டுக்­கும் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் கூறு­வார். இந்­தப் பாட­லைப் பொறுத்­த­வரை, பாடல் வரிக்­கும் அது பொருந்­திப்­போ­னது!

‘கல்­லைத்­தான் மண்­ணைத்­தான் காய்ச்­சித்­தான் குடிக்­கத்­தான் கற்­பித்­தானா’ என்று ராமச்­சந்­திர கவி­ரா­யர் என்ற கவி­ஞர், தான் படும் வயிற்­றுப்­ப­சி­யின் பாட்டை ‘தான்’ போட்டு தாளித்­தார். ‘தானை’ தொடர்ந்து பயன்­ப­டுத்­தும் உத்­தியை இந்­தப் பாட்­டி­லி­ருந்து எடுத்­துக்­கொண்ட கண்­ண­தா­சன், ‘அத்­தான், என்­னத்­தான், அவர் என்­னைத்­தான், எப்­ப­டிச் சொல்­வே­னடி’ என்று வெளியே கூற­மு­டி­யா­ததை அழ­கா­கக் கூறா­மல்­தான் விட்­டார்!

எத்­த­னையோ புல்­லாங்­கு­ழல் மேதை­கள் வாசித்­தா­லும் மாலி­யின் குழ­லி­சை­யில் ஒரு தனி ஜீவன் இருக்­கும். எல்லா ஓசை­க­ளும் அடங்­கிய பின்­னர் வரும் இன்­னி­சை­யாக அது மட்­டும் ஒலிக்­கும். ‘அத்­தான்’ பாட­லும் அப்­ப­டித்­தான். என்­னடா இது பொத்­தான் பாடல் என்று நினைத்­த­வர்­களே இதை சத்­தான பாடல் ஆக்­கி­விட்­டார்­கள்! நிசப்­த­மான நீள்­வா­னில் கண்­சி­மிட்­டும் நித்­தி­லங்­கள் போல், அது அமை­தி­யாக இசை அலை­க­ளை­யெ­ழுப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது! 

அக்­கார்­டி­ய­னின் அழ­கான நாதத்­திற்­கும் ‘தானின்’ எழில்­கோ­லத்­திற்­கும் மெல்­லி­சை­யின் ரம்­மி­ய­மான புது தொனிக்­கும் இந்­தப் பாட்டு ஒரு எடுத்­துக்­காட்டு. கண்­ண­தா­சன் அங்­கி­ருந்து எடுத்­தார், இங்­கி­ருந்து எடுத்­தார் என்று கூறு­வ­தல்ல இதன் நோக்­கம்...எவ்­வ­ளவு அழ­கா­கத் தொடுத்­தார் என்று காட்­டு­வ­து­தான்!
கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 134
நன்றி- தினமலர்-நெல்லை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum