"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Today at 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:32 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by அ.இராமநாதன் Today at 3:30 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Today at 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

» குறியீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:35 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:33 pm

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:03 pm

» அம்மி அப்டி...!!
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:59 pm

» புத்திமதி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:56 pm

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:55 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:54 pm

» சொல்லடி அபிராமி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:52 pm

» சிரிக்கலாம் வாங்க....!
by அ.இராமநாதன் Sun May 19, 2019 3:22 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 2:12 pm

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:25 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:16 pm

» அன்னை மொழி
by அ.இராமநாதன் Sun May 19, 2019 12:49 pm

» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun May 19, 2019 10:36 am

» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat May 18, 2019 6:24 pm

» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat May 18, 2019 2:29 pm

» இரட்டையர்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:53 pm

» தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:44 pm

» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
by eraeravi Thu May 16, 2019 9:26 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:52 am

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:18 am

» காதலியின் முதல்முத்தம்..!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:25 pm

» அழகான முத்தம்.....!!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:23 pm

» முதல் முத்தம் - - குமார் சுப்பையா
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!

Go down

ஏர்வாடியம் !   நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் !                         பேராசிரியர் நிர்மலா மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.! Empty ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!

Post by eraeravi on Tue Mar 12, 2019 12:20 pm

ஏர்வாடியம் !


நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் !
                        பேராசிரியர் நிர்மலா மோகன் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!


வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், 
சென்னை-600 017. பக்கம் : ரூ.125, விலை : ரூ.125.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

*******

      ‘ஏர்வாடியம்’ பெயரே சிறப்பாக உள்ளது என்று சூட்டியபோதே தெரிவித்தேன். ‘பெண்ணியம்’, ‘பெரியாரியம்’ என்பது போல ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் பற்றிய இயம் என்பதால் ஏர்வாடியம் என்று சூட்டியது சிறப்பு.


      நூலாசிரியர்கள் பேராசிரியர் இரா.மோகன் அவர்களும், பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மாண்பாளர்கள். இலக்கிய இணையரின் இனிய படைப்பாக வந்துள்ளது.


      எளிமை, இனிமை, புதுமை, மென்மை, மேன்மை இப்படி பல ‘மை’களுக்கும் சொந்தக்காரர் ஏர்வாடியார். புன்னகை மன்னர் என்பதை நூலின் முன்அட்டை பறைசாற்றுகின்றது. மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்புத் திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


      ஏர்வாடியார் பற்றி எழுதிய கட்டுரைகளையும் நூல் அணிந்துரை-களையும் தொகுத்து புகழ்மாலையாக்கி வாழும் காலத்திலேயே படைப்பாளிக்கு இலக்கிய மாலை சூட்டி உள்ளனர்.  ஏர்வாடியாரை அறியாதவர்கள் இல்லை இருந்தாலும் அவரைப்பற்றி அவரது எளிமையான வரலாறு பன்முக ஆற்றல் என முழுமையாக உணர்ந்து கொள்ள உதவிடும் உன்னத நூல்.  நூல் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.


      முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களின் அணிந்துரையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களின் அணிந்துரையும் நூல் எனும் மகுடத்தில் வைத்த வைரக்கல்லாக மிளிரிகின்றன.  ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்களின் வாழ்த்துரையும் உள்ளது.


      பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்பது போல இந்நூலில் பத்து கட்டுரைகள் உள்ளன. பத்தும் ஏர்வாடியாரின் இலக்கியச் சொத்தைப் பதிவு செய்து உள்ளன.


      ஏர்வாடியாரின் திருமண நாளான 10.09.1972 அன்று நடந்த ரகசியம் நூல் உள்ளது.  நலங்கு சடங்கின் போது அவரது மனைவி சிதம்பரம்மாள் அவர்கள், தனக்குக் கிடைத்த மோதிரத்தை குடத்திற்குள் கணவன் எடுக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டு, “நீங்க தோற்கக் கூடாது, அதுக்காகத் தான்” என்று சொல்லிய வரலாற்று நிகழ்வு நூலில் உள்ளது. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை திருமணத்தன்றே நிறைவேற்றியது சிறப்பு. நாமும் நம் துணைக்கு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது.


      ஏர்வாடியார் பிறந்தது திருநெல்வேலி அருகே உள்ளது ஏர்வாடி. ஆனால் மிகவும் பிரபலமானது இராமனாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி அதை மனதில் வைத்து கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கில் ஏர்வாடியார் இப்படி அழைக்க



      அடுத்த கவிஞர் இராதாகிருஷ்ணன்
      ஏர்வாடியார் இருந்து வருகிறார்
      யாரும் பயப்பட வேண்டாம்
      அடுத்து ஏர்வாடியார் வாசிக்கிறார்!


        ஏர்வாடியில் இருந்து வருகிறவர்களைப் 
        பார்த்து பயப்படத் தேவையில்லை 
        போகிறவர்களோடு 
        பழகும்போது தான் 
        கொஞ்சம் பத்திரமாக இருக்க வேண்டும்.


 வருகிறவர்கள நலமாகி வருவார்கள். போகிறவர்கள் தான் கோளாறாகி இருப்பார்கள் என்பதை உடனடியாக கவியரங்கில் சொல்லி கைதட்டல் பெற்ற நிகழ்வு நூலில் உள்ளது.


      கவிதை குறித்து ஏர்வாடியார் தந்துள்ள விளக்கம்.
[size]


      பக்கம் பக்கமாய் வளர்வதல்ல கவிதை
      இதயத்தின் பக்கம் வருவதே கவிதை
      சொல்லப்படுவது கவிதையன்று,

      மழையெனப் பெய்யப்படுவதே கவிதையாவது
      தானாய் வருவதே கவிதை – தினம்
      தேனாய இனிப்பதே கவிதை!


[/size]
‘கவிதை உறவு’ என்ற பெயரில் கவிதைக்கு முக்கியத்துவம், முன்னுரிமை அளித்து நடத்தி வரும் கவிஞரின் கவிதை, விளக்கம் அருமை. பெருமை. 


கவிதை உறவில் ஏர்வாடியார் எழுதி வரும் ‘என் பக்கம்’, ‘ஏழாம் பக்கக் கவிதை’, ‘மனத்தில் பதிந்தவர்கள்’, ‘நூல் மதிப்புரை’ என அனைத்தையும் ஆய்வு செய்து அவர் எழுதிய நூல்கள், குறிப்பாக முன்பு எழுதிய நாடக நூல்கள் அனைத்தையும் வரி விடாது ஆழ்ந்து படித்து ஏர்வாடியார் எனும் இலக்கியக் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து, தொகுத்து, பகுத்து நூலாக்கி உள்ளா நூலாசிரியருக்கு பாராட்டுக்கள். வைர வரிகள் பல இடம்பெற்றுள்ளன.
[size]


கையில்லை என்பதை விடவா
      கையில் இல்லை என்கிற கவலை!
      உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?


[/size]
இப்படி பல வரிகள் சிந்திக்க வைக்கின்றன.  ஏர்வாடியாரின் நகைச்சுவை உணர்வை, மொழி ஆளுமையை, பன்முக ஆற்றலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.


நூலிலிருந்து சில துளிகள்!


“கவியரசர் கண்ணதாசனும், வள்ளல் இராமலிங்க அடிகளும், கவிமணி தேசிய வியாயகம் பிள்ளையும், கவிஞர் வைரமுத்துவும், முதுமுனைவர் வெ. இறையன்பும், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானும், மகாகவி பாரதியும், பிற நாட்டு நல்லறிஞர்களான சாமர்செட் மாமும், பெர்னாட்ஷாவும், வேர்ட்ஸ்வொர்த்தும், ஏர்வாடியார் அழைத்த போதெல்லாம் அன்பான விருந்தாளிகளாக வருகை தருகிறார்கள்.


இதில் குறிப்பிட்டுள்ள அனைவரின் நூல்களையும் ஆழ்ந்து படித்தவர் ஏர்வாடியார். அதனால் தான் அவர்களை மேற்கோள் காட்டி எழுதி முடிகின்றது. அவர்களுடைய பெயருடனேயே மேற்கோள் காட்டிடும் அறிவு நாணயத்தையும் பாராட்டி உள்ளார்கள்.


உங்க வீடு மதுரையா? சிதம்பரமா? என்ற கேள்விக்கு ஏர்வாடியார் மனைவியை வைத்துக்கொண்டே தைரியமாக சிதம்பரம் என்பார். காரணம் மனைவியின் பெயர் சிதம்பரத்தம்மாள். இதுபோன்ற பல நகைச்சுவைகள் நூலில் உள்ளன.


இன்றைய இளைய தலைமுறையினர் பாடமாக எடுத்துச் சொல்ல வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளர் ஏர்வாடியார் என்பதை நூல் பறைசாற்றுகின்றது.
[size]

.
[/size]


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2321
Points : 5399
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum