"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிங்கப்பெண்ணே சீறியெழு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:37 pm

» ஏர்வாடியார் கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பேரா. G. ராமமூர்த்தி
by eraeravi Yesterday at 5:57 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 6:25 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:15 pm

» ஜிப்ஸி – சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:13 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:13 pm

» ரஜினியின் 25 சாதனைப் படங்கள்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:12 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:10 pm

» ஐயப்பனும் கோஷியும் – சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:09 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:02 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:01 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:00 pm

» டிப்ஸ் கிளி
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:00 pm

» ரொம்ப யோசிச்சா உடல் எடை அதிகரிக்கும்...!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:58 pm

» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:57 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:54 pm

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:53 pm

» சிரிப் from ஹோம்!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:52 pm

» வெளியே வா, எனக்கும் போரடிக்குது...!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:50 pm

» கண்ணுக்கு குலமேது கண்ணா
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:28 pm

» என்னுயிர் தோழி கேளொரு சேதி
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:25 pm

» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:22 pm

» இரவும் நிலவும் வளரட்டுமே
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:17 pm

» எத்தனை கோடி இன்பம்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:56 pm

» நிழலை அனுப்பி வை - கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:56 pm

» குழந்தையும் கடவுளும் – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:55 pm

» புதுக்கவிதைகள் - படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:54 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:53 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:53 pm

» காலக்கணிதம் - கண்ணதாசன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:52 pm

» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:52 pm

» பெண் வாழ்க ! -–கண்ணதாசன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:51 pm

» சுய பரிசோதனை – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:50 pm

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:49 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:49 pm

» படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! விளக்கின் கீழே விதை! நூல் ஆசிரியர் : ஓஷோ தமிழில் : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை : பேரா. G. ராமமூர்த்தி
by eraeravi Sat Apr 04, 2020 7:04 pm

» குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 02, 2020 9:19 pm

» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 01, 2020 1:56 pm

» நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 01, 2020 1:46 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:12 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:05 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:54 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» பயோடெக் மணிபர்ஸ்…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்..

Go down

காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்.. Empty காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 09, 2010 2:57 pm

காக்கை குருவிகளின் எச்சத்தில் வீழ்ந்து யார் கண்ணிலும் படாமல் வளரும் மரம் போல, தானே மலரும் வாழ்வுமுண்டு. இன்னொரு புறம், வாங்கும் முன்னூறு ரூபாய்க்கு ஆறுநூறு கணக்கு போட்டும் ஆழக் கடலில் மூழ்கிய; கப்பலாய் கவிழ்ந்த குடும்பமும் உண்டு. அப்படி வாழ்க்கை; நாமொன்றாக நினைத்தாலும் அதொன்றாகவே வாழ்விக்கிறது நம்மை. மாலனின் கணக்குகளும் அதிலிருந்து மாறுபடவில்லை.

எல்லாம் அவர் எண்ணியதற்கு மாறாகவும் அதேவேளை நல்லதாகவுமே நடந்தது, அதில் ஒன்று மறுநாள் வருவதாக இருந்த அவருடைய மனைவி, ஏதோ விசா எடுப்பதில் கோளாறுகளாகி, ஒரு வாரம் கழித்தே வந்தது. பத்து நாட்களுக்கு தள்ளி வைத்த வேறு நாட்டு விழாக்களில் ஒன்று தள்ளிவைக்க இயலாமல் சொன்னது போல் இரண்டே நாட்களில் நடந்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள்ளானது. அதற்கும் சம்மதம் கொடுத்து புறப்பட இருக்கையில் அவர் செல்லப் போகும் விமானம் வெடிக்கப் போவதாக அவர் மனைவி கனவு கண்டு ஓவென்று கத்தியழ, கனவின் மேல் நம்பிக்கை இல்லை அது நியுரான்களின் வேலை என்றாலும், மனைவியின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு போகாதிருந்ததில் அந்த விமானம் ஹைஜாக் செய்யப் பட்டு அடுத்தநாள் வேறு விமானத்தில் அவசர அவசரமாக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த அந் நிகழ்வில் கலந்துக் கொண்டுவிட்டு, மீண்டும் மறுநாளே மொரிசியஸில் ஒப்புக் கொண்ட கலை நிகழ்ச்சியின் காரணமாக மொரிசியஸ் வந்து ‘அங்கே பேசுகையில் கடவுள் பற்றி கேட்டு ‘கடவுள் பற்றி பேசி ‘கடவுள் பற்றி விவாதித்து ‘கடவுள் பற்றிய ‘மதம் பற்றிய முரணான கருத்துக்களை எழுப்பி, கடைசியில் மதம் பற்றிய தவறான சர்ச்சை எழ மாலன் காரணமானதாக எதிர்ப்பு கிளம்பி, அங்கிருந்த சில மதப் பேரினவாதிகளால் கலவரம் ஏற்பட்டு, எப்படியோ ஒருவழியாக சமாதானம் அடைந்தது எதிர்பார்க்காத ஒன்று தான்.

இதற்கிடையில், மதலைமுத்து சூரி தம்பதியினர் வீட்டிற்கு போக முடியாமலே போனது, இன்னும் இன்னபிற நிகழ்வுகளென்று எல்லாம் எண்ணியதற்கு எதிர்மறையாகவே நிகழ, அவைகளை எல்லாம் அசைபோட்டவாறே ‘இதோ அவரும் அவருடைய மனைவியும் அவர்கள் தங்கியுள்ள விடுதியிலிருந்து மதலைமுத்து வீடு நோக்கி சென்று கொண்டுள்ளார்கள்.

மாலனின் மனைவி மொரிசியசில் நடந்த எல்லாவற்றையும் ஓரளவாக அறிந்தவராக இருந்தாலும், இப்போது மாலனின் அருகில் அமர்ந்திருக்கையில் மாலன் மௌனமாக வருவது சற்று வேதனையை அளித்தது. மாலனின் மேல் கொண்ட அன்பின் மிகுதியில் அவரின் கைவிரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவர் தோள் மீது சாய்ந்து படுத்துக்கொள்கிறார்.

“என் மேல ஏதாவது வருத்தமா?” அவருடைய மனைவி மாலினி கேட்க மௌனம் கலைகிறது..

“ச்ச..ச்ச.. அதெப்படி.. அதலாமில்லை மாலினி”

“அமைதியா வறீங்களே??!!”

“நாமொன்று நினைத்தால் அதொன்று நடக்கிறது பார்த்தாயா?”

“அது தான் வாழ்வென்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்!!”

“சொல்வேன் தான்; சொல்வதற்கும் வலிப்பதற்கும் வித்தியாசம் இருக்கில்லையா?”

“வலிக்குதா.. ? வருத்தப் படுறீங்களா?”

“நீ பாவம்ல.. அவ்வளவு தூரம் எனக்காக எப்படி தவித்து வந்திருக்கியே; பெண்கள் நம் தேசங்களில் நம் வாழ்வுகளில் தான் இவ்வளவு உயர்வாக வாழப் பழகி; தன்னையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள்”

“மரபில் ஆச்சர்யமென்ன இருக்கு மாலன்.. !!!” தனை மறந்த நாட்களில் அவரை மீறி ‘மாலன்’ என்று பெயர் சொல்லி அழைப்பது மாலினியின் ரகசிய வழக்கமாக இருந்தது.

“மரபு தான் என்றாலும்; ஏன் அப்படி ஒரு மரபு? நான் கடமை என்று வருகிறேன், நீ எனக்கென்று வந்து விடுகிறாய். நாளை மாலனின் பெயரை உலகம் சொல்லும். உன் பெயரையும் சொல்லுமா?”

“பொல்லாத உலகம்; பெயர் என்ன சொல்ல வேண்டி இருக்கு.. ஏன் இப்படி பேசுறீங்க. உங்களை சார்ந்து வாழ்வது தானே என் வாழ்க்கை.. அதை தானே நான் வாழ்கிறேன்?!!”

“யார் சொன்னது மாலினி? என்னை சார்ந்து வாழ்வதென்பது வேறு, அதேநேரம் உனக்கான அடையாளங்கள் வேண்டாமா? எனக்காக வந்து விட்டாய் சரி.. உனக்கென்றும் உள்ளே ஆசைகளும், அவைகளை தாண்டி உறவுகளும், அப்பா அம்மா குழந்தை சுற்றம் என உன்னை சார்ந்த வாழ்க்கையின் ஏக்கம் எல்லாம் உனக்குள் வலிக்காதா? அத்தனையும் போட்டுவிட்டு வருமளவிற்கு நான் மட்டும் எப்படி உனக்கு அவ்வளவு முக்கியமானேன் மாலினி?”

“சிறுபிள்ளை தனமாக இருக்கிறது மாலன் உங்கள் வினவுகள். எனக்கொன்றென்றால் நீங்கள் தவிக்க மாட்டீர்களா? ஓடி வர மாட்டீர்களா ? நமக்குள் பிரிவுபேதமென்ன?? நானென் பிள்ளைகளுக்கும்; அப்பா அம்மாவிலிருந்து எல்லாம் உறவுகளுக்கும் முக்கியம் தான்; ஆனால் உங்கள் ஒருவருக்கே நான் மட்டும் முக்கியமானேன் மாலன். அவர்களெல்லாம் நானில்லையெனில் துன்புறுவார்கள் ஆனால் வாழ்ந்துவிட இயலும். நீங்கள் வாழ்வீர்களா? எனை விட்டு இருப்பீர்களா? அப்படித் தானே நானும்..”

“மாலன் உணர்ச்சிவசப் பட்டிருக்கவேண்டும், ஆனால் இல்லை, அவருக்கு மாலினியை பற்றித் தெரியும், அவள் மனசு குணம் எண்ணம் எல்லாம் தெரியும். அவர் கவலை வேறு.. ஒரு ஆண் உலகளவில் பேசப் படுவதற்கு அவளுக்கு துணையாக இருக்கும், அன்பாக வாழ்க்கை நடத்தும், அவனை அனுசரித்துக் கொள்ளும் நிறைய பங்கு பெண்ணிற்காகவும் இருக்கிறது. ஆனால் உலகம் தன் காலக் கணக்கில் ஆணின் அல்லது அந்த ஒரு நபரின் பெயரை மட்டும் பதிந்து வைத்துக் கொள்கிறதே.

அவருக்குப் பின்னால் இருக்கும் அந்த பெண்ணிற்கான ஒரு அடையாளத்தை பெண்கள் தனக்கென ஏற்படுத்திக் கொள்ள இந்த சமுதாயம் வழி விடுவதொ அல்லது அந்த பெண்ணினை பற்றி சிந்திப்பதோ இல்லையே. எங்கோ விதி விளக்காய் சிலர் இருக்கலாம். பெரும்பாலும் வெற்றி பெற்ற ஆண்களின் துணைவியான ‘பெண்கள்; வீட்டுக் காரியாக மட்டுமே நிறைவுற்று போகிறார்களே. அவர்களை இச்சமுதாயம் எந்த கல்வெட்டில் பதிந்துக் கொள்ளுமோ’ எனும் கவலை.

மாலினி திறமை சாலி. இருவரும் ஒன்றாக சிறுவயதிலிருந்து வளர்ந்து, ஒன்றாக படித்து, கல்லூரி வரை சென்று பின் திருமணம் செய்துக் கொண்டவர்கள், என்றாலும் மாலினி மிக நல்ல படிப்பாளியும் கூட. மேலே படிப்பதை கூட மாலனை திருமணம் செய்துக் கொண்டதும் நிறுத்திக் கொண்டாள். மாலனை பற்றிய சிந்தனையும் குடும்பமுமே அவளுக்கு பெரிதாக இருந்ததை மாலனால் உணர முடிந்தது. அவள் கைகளை மீண்டும் இறுக பற்றி அவளை தன் தோள்மீது சாய்த்து அனைத்துக் கொண்டார் மாலன்.

“ஏன் அமைதியாக வருகிறீர்கள் மாலன் ஏதேதோ சிந்தனையா??? அப்படி என்னாயிற்று இந்த மக்களுக்கு, ஏன் அந்த கலைநிகழ்வில் அவ்வளவு வருத்தமா? ஏதேதோ பிரச்சனை என்று அன்று சொன்னீர்களே?”

“அது ஒன்றுமில்லை மாலினி, சிறு புரிதல் கோளாறு அல்லது சுயநலம், அவ்வளவுதான்”

“ஏன் என்னவாம் அவர்களுக்கு அவர்கள் மதம் மாதிரியே பேசனுமாமா? மாற்றமே வேண்டாமாமா? யாரும் சிந்தித்து தெளிவு பெறவே கூடாதாமா? அப்போ அவுங்க மடத்துல யாரையாவது பேச அழைத்து வந்திருக்கலாமே? உங்களை ஏன் அழைத்தார்களாம். நீங்கள் எதற்கும் அசராதீர்கள் மாலன், உங்கள் கருத்து எப்பொழுதும் சிந்தித்துணர்ந்த போது கருத்தாகவே இருக்கட்டும்.. ”

“ஆம்; யாருக்காகவும் நான் மாறப் போவதில்லை மாலினி, நான் வந்த பாதை பிறருக்கு நல் வழியாக அமையும், என் தவறுகள் பிறருக்கு பாடமாக இருக்கும். இருந்தாலும், அன்று நடந்ததை முழுதும் தவறென்றும் சொல்லிட முடியாது. நாம் சொல்வதை எல்லாம் கேட்பவர் முழுமையாக எடுத்தே ஆகவேண்டுமென்றும் இல்லை தானே?

கருத்து சுதந்திரம் என்ற இலக்கை விட்டு விலகி நாம் நம் எதிர்ப்பினை தெரிவிப்பது அநாகரீகம் இல்லையா? அவர்கள் ஒரு வட்டத்தில் இருக்கிறார்கள். அதை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களை பற்றிய கவலை..”

“அப்போ நீங்க தவறா பேசிட்டீங்களா?”

“சரி தவறு இதில் இல்லை, தேவையும் இல்லை மாலினி. அவர்களுக்கு அவர்களை பற்றிய கவலை; எனக்கு என் வருங்கால இளைஞர்களை பற்றிய கவலை. அவர்கள் ஒரு வட்டத்தில் நின்று பேசு என்கிறார்கள். நான்; உன்னை கூட வெளியே நின்று பார் என்கிறேன். இந்த முரண் தான் அங்கே நிலவிய எதிர்ப்பிற்கான காரணமானது.

கடவுள் என்ற ஒன்று புரிய இது தான் வழி என்பது அவர்களின் நோக்கம். எனக்கும் அந்த நோக்கத்தில் மறுப்பில்லை. அதனால் எதை ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணித்து ஒரு வெறியை உண்டாக்கி மனிதனை அறுத்துக் கொள்வதில் எனக்கு நாட்டமில்லை. அல்லது இது மட்டுமே சரி என்று சொல்லி, வேறும் சரி என்று மற்றொருவர் போராடி, ஆளாளுக்கு ‘தான் தான் சரி’ என்று தன்னை தானே மாய்த்துக் கொள்ள மதத்தை ஆயுதமாக பயன் படுத்துவார்களெனில்; அதையே நானும் எப்படி ஒப்புக் கொள்வது?

பக்தி, கடவுளை மனதில் தக்கவைத்து, மனிதரை மதிக்க, வாழ்விக்க, சொல்லித் தரவேண்டும். அதை விடுத்து, ‘இது தான், இப்படி தானென்று நின்றுவிடுவதால், இது தான் போல்; இப்படி தான் போளென்று எண்ணி அதற்காக வெட்டி மாளும் கோடான கோடி மனிதர்களை பற்றி; மாளும் உயிர்களை பற்றியிருக்கிறது எனதான கவலை, என்பதை, அவர்களுக்கு புரியவைக்க அன்றெனக்கு திராணியோ; அவர்களுக்கு அவகாசமோ இல்லாமல் போனதே பிரச்சனையின் காரணம்”

“பிறகு எடுத்து சொன்னீர்களா?”

மாலன் ஏதோ பேச வருவதற்குள்; அவர் வாயடைத்து மாலினி ஓட்டுனரை காட்டுகிறாள். அவன் இந்த ஊர்காரன் தானே ஏதும் பிரச்சனை இல்லையே என்கிறாள். இல்லை அவனை எனக்குத் தெரியும், அவன் இந்த ஊரை சேர்ந்தவன், ஆனால் தமிழ் தெரியாது, இரண்டு நாளாக என்னோடு தான் இருக்கிறான் விடு என்கிறார். அவன் ஒரு குரூர சிரிப்பை சிரித்துக் கொண்டதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. சரி சொல்லுங்கள் என்கிறாள் மாலினி.

“அதான். சொன்னேனே; அவர்கள் கேட்டவரை சொன்னேன், முழுதாக் கேட்க அவர்களுக்கு பொறுமை இல்லை. நிகழ்ச்சியினை நிறுத்திக் கொண்டோம். இன்றைய இளைஞர்களின் போக்கில் பெரிய மாற்றமில்லாமையின் காரணம்; கடவுளில் குழப்பமும், போதிய சிந்திப்பும், சிந்திக்க வழியும் இல்லாததே என்பது என் வருத்தம் மாலினி. பசங்களை பார்க்கும் போது அவர்களின் சில மூட நம்பிக்கைகளை பார்க்கும்போது மனதில் மிகுந்த வருத்தம் எழுகிறது மாலினி.

அன்றைக்கொரு நாள் நாம் கண்டோமே ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனை, நினைவிருக்கா, நாள் நல்லாயில்ல, அதுல போய் பரிட்சை வந்திருக்கே, நான் எப்படியும் தோத்துப் போயிடுவேன், என்று அழுதான் ஞயாபகமிருக்கா? எத்தனை நாள் வெளியே புறப்பட்டு ராகுகாலம் எமகண்டமென்றெல்லாம் நம் மக்கள் நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறதே; அதிலெல்லாம் மாற்றம் வேண்டாமா?

வாஸ்த்து சரியில்லை, கண் பட்டது கால் பட்டதென; மனிதர்கள் இன்னும் மூடத்தில் மூழ்கியே போகிறார்களே அது நல்லதா? நாம் நம் மூன்று பிள்ளைகளை பெற்று வளர்க்கிறோமே எப்படி வளர்க்கிறோம், நாமென்ன இப்படி பூசணிக்கா உப்பு சுத்திப் போட்டா வளர்த்தோம்; எந்த ‘திஷ்டி’ வந்து நம் பிள்ளைகளின் வளர்ச்சியை நிறுத்திவிட்டது? எந்த வாஸ்த்து நம் வீட்டின் நிம்மதியை குலைத்தது? நாம் நல்ல மகிழ்வோடு நிறைவாக தானே வாழ்கிறோம்; அந்த நிறைவினை, நம்மை நம்பி வருபவர்களுக்கு தர வேண்டாமா?

கருப்பு குற்றம், இடது கை பீடை, விதவை ராசியற்றவள் இப்படி இந்த சமுகம் இத்தனை உலக மாற்றத்திற்கு பிறகும் மூடத்தில் மூழ்கி கிடக்கும் சிக்கல்களின் மூலாதாரமாக; கடவுள், ஆச்சாரம், மதமென எதையோ ஒன்றினை சொல்லி ஏமாறுகிறதே இந்த சமூகம்; இவர்களுக்கு இன்னும் எத்தனை பெரியாரை பிறப்பித்து மாற்றத்தை உண்டாக்குவது மாலினி??? கடவுள் பக்தி வேறு, நம்பிக்கை வேறு, வெறி வேறு, மூட பழக்கவழக்கங்கள் வேறென எப்படி புரிய வைப்பது. மாற்றங்களில், மனிதன் தன் நம்பிக்கையை வளர்த்து தவறினை சரி செய்து மாறுவதே, நாகரிகத்தின், முன்னேற்றத்தின் சிறப்பில்லையா? கடவுள் கூட என்ன மனிதனை மூடமாக்கவா விரும்புவார்? உண்மையில் கடவுளே வந்து இதலாம் தவறென்று சொன்னாலும், உனக்கதலாம் புரியாதென்பார்கள் இம்மக்கள்.

உலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தால், உலக வாழ்கையினை படித்து கேட்டு தெரிந்துக் கொண்டால் கடவுள் எது, மதம் எதற்கு, எல்லாம் எதுவரை தேவை என்று புரிந்துக் கொள்ள மாட்டார்களா.. ? அதன்பின் தன் சுயபுத்திக் கொண்டு சமுதாயத்திற்காகவும் தனக்காகவும் சிந்திக்க மாட்டார்களா இந்த இளைஞர்கள் என்று ஒரு கெஞ்சலான வருத்தம் எழுகிறது உள்ளே மாலினி”

“போட்டம் விடுங்கப்பா; ஓர்நாள் புரிந்துக் கொள்வார்கள். நாங்கள் புரிந்துக் கொள்ளவில்லையா, அப்படி மெல்ல புரிந்து கொள்ளுமிந்த சமுதயாமும்..”

“எனக்கு அவர்கள் என்னை புரிந்துக் கொள்ளாதது வருத்தமில்லை. இவர்களுக்குப் புரியவைபப்து போல் நான் சொல்ல இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ.., இன்னும் என்னை எப்படி பக்குவப் படுத்த வேண்டுமோ, அதற்குள் நான் நானற்று போனால், என் மரணம் என் நியாயத்தை தின்று விடாதா?”

“விடுவீங்களா, நீங்கள் ஏன் இப்படி மரணமென்றெல்லாம்!!!!!!!? அதற்காக நாமென்ன காத்திருக்கவா முடியும்??? நீங்கள் சொல்ல வேண்டுவதை சொல்லுங்கள், சரியோ தவறோ அவர்கள் சிந்தித்துக் கொள்வார்கள்..”

“ம்ம்ம்.. சரியாக சொன்னாய் மாலினி. நான் உணர்ந்த வழி, நான் வந்த பாதை, என் உணர்வுகளை என் கீழுள்ளோருக்கு தரவேண்டும் என்பதே என் பொறுப்பு. சரி தான். என் கீழே உள்ளவர்களை சற்று மேலே, என்னளவிற்கு கொண்டு வந்து விட்டால் போதும். அதன்பின், என்னளவிற்கு வந்த பின்; மேலே வேறெங்கு போகவேண்டும், எது உயர்வென்று ‘அதை அவர்களே சிந்தித்தடைவார்கள்”

“அதுசரி… நீங்க விதவைன்ன உடனே தான் நினைவு வருது, அந்த ஓட்டுனர் ஒருவர் இறந்தார் இல்லையா, அவர் இந்த ஊர் காரரா அல்லது நம்ம தமிழா?”

“இந்த நாட்டுக் காரர் தான்.. பாவம் மாலினி, நல்ல மனிதர்.., ஒருவரின் வாழ்வு எப்படி விளக்கினை ப்பூ..வென்று ஊதியதாய் அணைந்துப் போகிறது பார்த்தாயா??”

“ஆமாம் மாலன் மரணம் மிகக் கொடிது.. சரி அவருக்கு ஏதாவது செய்தீர்களா..?”

“ஆம்; செய்தோம். பெரிதாக செய்தோம்; அதில் நம் பங்கும் இருப்பது மகிச்சி தான் மாலினி…. “

“அப்படியா, என்ன செய்தீர்கள், எனக்கு சொல்லவேயில்லையே..”

“வாய்ப்பில்லாமல் போனது, வந்ததும் சொல்வோமென்று இருந்தேன். நம்ம மாரியின் பெயரில் ஐ.சி.ஐ.சி ல ஒரு டெபாசிட் இருந்துதுல்ல..”

“ஆமாம், மூன்று லட்சம்..”

“அதை மாற்றி; நடந்த அதே விழாவுல அவர் மனைவியை அழைத்து எல்லோரின் முன்னும் கொடுத்து நீங்களும் இவருக்கு வேறேதேனும் செய்யலாம் என்று சொல்ல.. அவ்விழாவில் இருந்த நிறைய பேர் உதவ முன் வந்தார்கள்”

“குழந்தைகள் இருக்கா அவுங்களுக்கு??”

“ஆம், ஒரு பெண்குழந்தை. படிக்கிற வயசு தான். ஒரு ஆச்சர்யம் என்னன்னா உதவ எல்லோருக்குமே எண்ணம் உண்டு; அந்த உதவி சரியாக அவரை சென்று அடைவதில் தான் பிறரும் உதவிக் கரம் நீட்டுகிறார்கள் என்பதை அன்றும் அறிந்தேன்..”

“அது தெரிந்தது தானே.. ஒருத்தர் கொடுத்தா தான் நாலு பேருக்கு கொடுக்கவே தோணும்..”

“அப்படின்னு இல்லை, கேட்பவர் பொருத்தும், கொடுப்பவரின் நம்பிக்கை பொருத்தும், யாருக்கு, என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தது எல்லாம். அன்று பாரேன், நான் இப்படி சொன்னதும், இரண்டு பேர் உடனே எழுந்து அக்குழந்தை பெயரில் டெபாசிட் பண்ண காசோலை கொடுத்து, ஒருவர் முழு படிப்பு செலவினையும், ஒருவர் அந்த பெண்ணின் திருமண செலவினையும் ஏற்றது பெரிய செயல், இல்லையா”

“ஆனா என்ன தான் சொல்லுங்க அந்த மனைவி பாவம் இல்லையா? என்ன பாடு பட்டிருப்பார் அந்த பெண்? நானா இருந்தா செத்துற்றுப்பேன்..”

“நீ அசடு..”

“என்ன அசடு.. ???!!”

”நீங்களே இல்லாத உலகில் எனக்கென்ன வேலை மாலன்?”

“இந்த சிந்தனை தான் மெல்ல பலப்பட்டு ஒரு ஆண் இல்லாத உலகில் ஒரு பெண்ணுக்கு வேலையே இல்லை’ என்று ஆக்கி விட்டது மாலினி. நம்மை விடு, நம் இந்திய தேசத்தில் எத்தனை இளம்பெண்கள் கணவனை இழந்து விதவை என்ற பெயரில் சித்ரவதை அனுபவித்து வருகிறார்களே.. அதற்கெல்லாம் மூலக் காரணம், ஆண் இறந்துவிட்டால் தானும் இறந்து போகணும் அல்லது கடைசி வரை அவனையே நினைத்து வாழனும் என்று சொல்லாமல் சொல்லி வைத்த சட்டம் தானே மாலினி”

“அதுக்காக எபப்டிப்பா வாழ்ந்த வாழ்க்கையை மறந்துவிட முடியுமா?”

“ஆண்கள் எப்படி மறக்கிறார்கள்? எல்லோரும் இல்லையென்றாலும் அதிக பட்ச ஆண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்களே எப்படி நிகழ்கிறது? உடனே வேண்டாம் கொஞ்ச நாளில் ஏற்றுக் கொள்ளலாமில்லையா? தனித்த ஆதரவற்ற வாழ்க்கை கொடுமை மாலினி, கணவன் மனைவியை தவிர மற்றவர்கள் நாளடைவில் அவர்களின் சுய தேவையின் காரணமாக குடும்ப முடிச்சுகளின் அற்றுப் போகலாம் மாலினி. ஒரு சில குடும்பங்கள் விதிவிலக்காக இருக்கலாம், மற்றவர்களின் கதி?

முற்றிலும் வேண்டாம் என்பது வேறு, என்னால் அவளை மறக்க இயலாது என்பது வேறு. எத்தனை பேர் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் மரணம் எத்தனை பெண்களை விதவையாக்கி விடுகிறதே.. பிறகும்; இப்படி தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற ஒரு திணிப்பு இந்த சமூகத்தால் இன்றும் பெருமளவு நிகழ்த்தப் படுகிறதே அது தவறு தானே..?

நான் அடிக்கடி விதவை பெண்களை பற்றி நினைப்பேன் மாலினி. என்ன தான் வியாக்யானம் பேசினாலும் வயிற்றின் பசி போல் உடம்பின் பசிக்கும் நம்மில் நாம் கலக்காமல் இல்லையே, அதே அந்த பெண்களின் உடல் பசிக்கு மட்டும் ‘வெப்பத்தால் எரியும் ‘உடம்பின் ஏக்க நெருப்பு தான் மீதம் இல்லையா?”

“அந்தளவு முன்பு போல் இப்பொழுதில்லை மாலன், இருந்தாலும் இன்னும் சிலரிப்படி இருக்காங்க தான்”

“நிறைய இருக்காங்க மாலனி, நான் நிறைய பேரை பார்க்கிறேன். அவர்களின் தவிப்பை பார்க்கிறேன். அவர்களின் கண்களில் மிச்சம் வைத்துள்ள வாழ்வின் தேடுதல் அப்பட்டமாய் தெரிவதை பார்க்கிறேன்.. அவர்களுக்கெல்லாம் இந்த உலகம் என்ன நீதி வைத்திருக்கிறது? வாழும் கடைசி நாளில் தனக்கென்று ஓர் துணை இல்லாத பயம், பிறரை அன்டி வாழும் வேதனை, யார் யாருக்கோ எவஎவனுக்கோ அடங்கி வாழ்வது பாவமில்லையா? சமுதாயத்தின் அத்தனை கேளிக்கைகளுக்குள்ளும் ஒளிந்து ஒளிந்து வாழ்வது கொடுமை தானே? அதிலிருந்தெல்லாம் பெண்கள் வெளிய வரணும்னா வீட்டின் பெரியவர்கள் அவர்களுக்காக சிந்திக்கணும் மாலினி. அந்த பிஞ்சுகளின் வாழ்விற்கு பெரியவர்களின் ஒரு தெளிவான சிந்தனை தேவைப் படுகிறது மாலினி.

கணவனிடம் அன்புற்று நெருங்கி முழுதுமாக அர்ப்பணித்து வாழ்வது வேறு, இது போன்ற இடங்களில் மரணம் தான் முடிவென்று நில்லாமல் வாழ்க்கையை வாழ்வின் யாதார்த்தத்தோடு வைத்து சிந்திப்பது வேறு மாலினி..’’

“உணர்ச்சிவசப் படுறீங்களே, எனக்கு புரியுதுப்பா…, என் கதை அப்படியா? நான் அவர்கள் போலவா? நீங்கள் எப்படியோ சொல்லுங்க, உலகத்துக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் மாலன், நான் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவள், எனக்கென்று எந்த ஏக்கமோ ஆசையோ வருத்தமோ மிச்சமில்லை, வாழும் கடைசி பொழுது வரை உங்களின் நிழலில் வாழ்ந்து உங்களின் உயிராகவே போய் விட வேண்டுமென்று சொல்லி மாலினி மாலனின் தோல் பற்றி.. சாய்ந்து கண்ணீர் துளிர்த்து அவரை பார்க்க; அவர் அவளின் முழு மனஉணர்வையும் புரிந்துக் கொண்டவராக அவளையணைத்து அவள் தலைமேல் தலைவைத்து சாய்த்துக் கொண்டார்..” அதையெல்லாம் கேட்டுக் கொண்டுவந்த ஓட்டுனர், சரர்ர்ரென வேகம் உடைத்து வண்டியை தடாரென நிறுத்தினார்.

மாலனும் மாலினியும் திடுக்கிட்டு; ஓட்டுனரை பார்க்கிறார்கள்.

மாலன் அந்த ஓட்டுனரை பார்த்து “இன்னும்போகனும் போப்பா என்கிறார் ஆங்கிலத்தில், அவன் கண்களில் கண்ணீர் பூத்து வண்டியை அனைத்து கீழிறங்கி அவர்களை நோக்கி ஓடி வருகிறான்.

ஏன்.. என்னாயிற்று என்கிறார் மாலன்..

“என்னை மன்னிக்கணும் ஐயா??”

“உனக்கு தமிழ் பேச வருமா?”

“ஆம்; மிக நன்றாக பேச வரும், நான் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழர் ஒருவர் வீட்டில் தான் வாகன ஓட்டியாக பணி செய்துவந்தேன். அதனால் தான் என்னை உங்களோடு அனுப்பி இருந்தார்கள், அவர்கள்.”

“எவர்கள்??!!”

மாலன் திடுக்கிட்டு கேட்க, இப்படி, இப்படிப் பட்ட ஒரு அமைப்பின் தலைவர் இவனை தமிழ் தெரியாதென்று சொல்ல சொன்னதாகவும், உங்களை தொடர்ந்து நடப்பதை தகவல் தர கட்டளை இட்டுள்ளதாகவும், இப்போது கூட போகுமிடத்தை சொல்லி விட்டு தான் வந்தேன் என்றும், இன்னும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உங்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டப் பட்டுள்ளது என்றும்…, இப்படி ஒரு மனிதரை தவறாக எண்ணியுள்ள தன்சார்ந்தவர்கள் குறித்து வருத்தம் கொள்வதாகவும் சொல்லி வருந்துகிறார் அந்த ஓட்டுனர்.

இனி முன்னே போகவேண்டாம் இப்படியே திரும்பி விடுவோமேன்று கேட்கிறார் அந்த ஓட்டுனர். மாலன் ஒரு நமுட்டு சிரிப்பை சிரித்துவிட்டு, இல்லை நாம் அப்படி திரும்பி போனால் அவர்களின் கோபம் அடங்கி விடாது. மீண்டும் அதிக ஆக்ரோசத்தோடு தாக்க தேடி வருவார்கள், போவோம் வா… நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்கிறார்..”

அவன் வேண்டாம் என்று மறுக்க என் மீது நம்பிக்கை உண்டு வா’ என்று மாலன் கட்டளையிட வண்டி புறப்பட்டு முன்னே செல்கிறது. முன்னே ஒரு கூட்டம்; மாலனை ‘உயிர் மட்டும் விட்டுவிட்டு ‘உடலெல்லாம் காயப் படுத்தும் நோக்கில், எதிர் நோக்கி வந்து கொண்டுள்ளது…

உயிர்போனால் கூட பரவாயில்லை அவனுக்கு சரியான பாடம் புகட்டி வா’யென கட்டளை பிறப்பிக்கிறார் அந்த அமைப்பின் தலைவர். மாலன் ‘வாழ்தல் மட்டுமே என் கடன்; வாழ்விப்பது அவன் கடன்’ அவன் தீர்ப்பே என் தீர்ப்பும் என்று எண்ணிக் கொண்டு புன்னகை பூக்கிறார் மாலினியை நோக்கி. மாலனின் வாழ்வும் சாவுமே எனக்கான தீர்ப்பும் என்பதை போல் எண்ணி மாலினியும் புன்னகைக்கிறாள்.

அதற்குள் அந்த கூட்டத்தினர் சீறிக் கொண்டு, அவர்களுக்கெதிரே வண்டியை நிறுத்திவிட்டு.. வேகமாக கீழிறங்கி வந்து மாலனின் வாகனத்தை தாக்குகிறார்கள்..

—————————————————————————————————

‘தாக்க எண்ணுபவர்களின் பலத்தில்; தாக்கப் பட்டதெல்லாம் மரணிப்பதில்லை’ என்பதை காலம் மெல்ல உணர்த்தும்..., காற்றின் ஓசை – தொடரும்..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்.. Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum