தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்

2 posters

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 10:45 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

2, காதல்
காதல் எனும் உணர்வு ஒன்றாயினும் அதனுள் எத்தனையோ உணர்வுகள் செறிந்து கிடக்கின்றன. ஆசை, ஏக்கம், சோகம், ஏமாற்றம், சினம், தாய்மை போன்ற பல உணர்வுகள் நிறைந்து கிடப்பதால் காதலை உணர்வுகளின் தொகுதி என்று கூடச் சொல்லலாம். காமம் என்ற ஆசை காதலுக்குள் அடங்கிருந்தாலும் காமம் வெறியாக மாறக்கூடியது. காதலோ மென்மையாக மாறி அதற்காக எதையும் இழக்கும் அன்பின் முதர்ச்சியாக அமைகிறது. இந்தக் காதலைப் பற்றி நம் கவிஞர் மிகுதியாகவே பாடியிருக்கிறார்.
வாசம்
காதலியின் உடலில் தனி வாசனை - மணம் வீசுமாம். காதல் (திரு)மணத்தைப் பற்றித் தான் நாம் அறிவோம். காதலியின் உடலில் வீசும் மணம் ஈசனைக் கூட மயங்கச் செய்துவிடுமாமே.
பாவை மேனி வாசனை
மயங்கச் செய்யும் ஈசனை (1 - 17)
பார்வதிதேவியின் கூந்தலில் இயற்கை மணம் இல்லை என்று ஈசனிடமே வாதாடியவர். அவர் நம் கவிஞர் தம் பாடல்களைக் கேட்டால் என்ன சொல்வாரோ?
வேருக்கு வாசம் உண்டு. அனைவரும் அறிவர். அதுவும் வெட்டி வேர் வாசம் உள்ளத்தை மயங்கச் செய்வது. குளிர்ச்சியூட்டுவது. அந்த வெட்டி வேரின் வாசம் விடலைப் பிள்ளையின் அன்புக்கு உண்டு என்கிறார் கவிஞர்.
வெட்டி வேரு வாசம்
வெடளப்புள்ள நேசம் (2 - 2)
The first kiss of a virgin............. என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதற்கு ஆற்றல் அதிகமென்று சொல்லுவார்கள். அந்த ஈர்க்கும் ஆற்றலைத் தான் கவிஞர் வெட்டிவேர் வாசமாக உருவாக்கிறார் போலும்.
சேலை கட்டுகின்ற பெண்ணுக்கு என்று ஒரு தனி மணம் உண்டு. அதை அறிந்ததுண்டோ? அல்லது அறிந்தவர் சொன்னதுண்டோ? தன் காதலியின் வாசம் எந்த மலருக்கும் இல்லை என்பது ஒரு காதலனின் முடிவு.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு -- கண்டதுண்டோ?
கண்டவர்கள் சொன்னதுண்டோ?
.............
இவளின் குணமோ மணமோ
மலருக்குள் இல்லை. (2 - 185)
காதலி குளிக்கின்ற நதியில் கூட மணம் வீசும். ஓடுகின்ற நதியின் கூடவா? அப்படித்தான் கவிஞர் கூறுகிறார்.
நீ குளித்தால் நதியில் மணமிருக்கும். (2 - 189)
காதலி மீது கொண்ட நேசம் - நேயம் - அன்பு காதலுக்குப் பலவித மணமாகத் தெரிவது இயற்கைத்தான்.
காதலர் உணர்வுகள்
காதலர்கள் முற்பகுதியிலெல்லாம் சொல்லோணா இன்பமே அனுபவிப்பார்கள். நினைவே நறுமணத்தைக் கொடுக்கக் கூடியது. அவளைப் போல் யாருமில்லை என்று அவன் நினைப்பதும் அவனைப்போல் யாருமில்லை என்று அவள் நினைப்பதும் எல்லாவற்றிலும் அவள் முகமே காண்பதும் காதலின் இன்பம் தான்.
மாலையில் மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியும் அழகாகக் காட்சியளிக்கிறது. அந்தத் துளிகள் அனைத்திலும் அவள் முகமே தெரிகிறது. அழகுக்குக் கேட்கவா வேண்டும் இது அவனுக்கு இன்பம் தரும் காட்சி.
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது. (1-2)
காதலன் தருகின்ற முத்தம் தனக்கு மட்டுமே சொந்தம் என ஒரு பெண் எதிர்பார்ப்பது எச்சரிக்கையான உணர்வு தானே. இன்பத்தில் பங்குபோட்டுக் கொடுத்து விட முடியாது. அவள் உள் உயிர் அவன் அன்பை நினைத்து உருகுகிறது. அதன் சத்தம் அவனுக்கு மட்டும் தான் கேட்கும்.
எனக்கு மட்டும் சொந்தம் - உன்
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் -- எனது
உயிர் உருகும் சத்தம். (1 - 4)
கன்னிப் பெண் காலால் உதைத்தால் வேங்கை மரம் பூக்கும் என்று சொல்வார்கள். அதைவிடக் காதலியின் பார்வைக்கு அதிக ஆற்றலுண்டு. அவள் பார்வை பட்டால் பாலைவனத்தில் கூட ஊற்றுப் பெருகிவிடும். அவள் கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனத்தில் வீசும் மணமிக்க தென்றலே வீசும்.
பாவை இவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்.
கண்ணிமைகள் தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும். (1 - 11)
அவன் இரண்டு வருடங்களாகப் புதிய இராகம் ஒன்று கண்டுபிடிக்க முயன்றான். முடியவில்லை. ஆனால் அவள் குரலைக் கேட்டதும் புதிய இராகத்தைக் கண்டு பிடித்துவிட்டான். ராகம் என்றால் காதல் என்றும் பொருள் உண்டு.
புதிய ராகம் கண்டுபிடிக்க
ரெண்டு வருஷம் நெனைச்சேன் - உன்
குரலைக் கேட்ட பிறகு தானே
ராகம் கண்டு பிடிச்சேன்.
அவள் மட்டும் என்னவாம். அவன் நினைவாகத்தான் இருக்கிறாள். முல்லைப்பூ தொடுத்துக் கொண்டிருந்தவள் அவனுடைய பாட்டைக் கேட்டுக் கொண்டே மலர் முடிப்பதாக நினைத்து வெறும் நாரைத்தானே முடித்தாள்.
முந்தா நாளு சாயங்காலம்
முல்லைப் பூவைத் தொடுத்தேன் - உன்
பாட்டுக்கேட்டுக் கிறங்கிப் போய்
நாரைத் தானே முடிஞ்சேன். (1 - 28)
அவனைக் கண்டு காதல் கொண்டாள். அதன் பின் விந்தையான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி விட்டன. அவள் குளிக்கும் நீரோடை தேன் ஓடையாக மாறி குளிக்கத் தொடங்கி விட்டது.
இனி நானாடும் நீரோடை
தேனாடை ஆகும் தானே. (1 - 30)
தன் காதல் மனைவியின் கூந்தலைப் பின்னே அழகு பார்க்கும் அவன், அவள் நடந்தால் பாதம் நோகும் என்று மலர்ப்பாதையும் அமைத்துக் கொடுத்தான்.
பாவையின் கூந்தல் பின்னிப்
பூ முடிப்பேன் நானே
நீ நடந்தால் பாதம்நோகும்
பூ விரிப்பேன் மானே. (1 - 35)
அவர்கள் ஒருவர்க்கொருவர் அன்பைப் பரிமாறிப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். வசந்த காலத்தில் மலராக இருந்து மகிழ்ச்சி கொடுத்து, இலையுதிற்காலத்தில் வேராக இருந்து வாழ வைப்பேன் என்று கூறுவான்.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன். (1 - 43)
கவிஞரின் இப்பாடலைப் படிக்கும்போது
அத்தி மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்
நத்தி வரும் மச்சானுக்கு
முத்துச்சரம் நாணாவேன்.
என்று கிராமியப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்து மேலும் இன்பமூட்டுகிறது.
காதல் என்னென்ன விந்தைகளைச் செய்கிறது. காதல் கொண்ட உள்ளம் கல்லாக இருந்தாலும் பூவாக மாறுகின்றது. சகாராப் பாலைவனத்தில் கூட எங்கும் மரங்கள் பூத்துக் குலுங்கும் இனிய சோலையாகி நிற்கும்.
சகாராவில் உங்கும் பூமரம்
காதலித்தால் இதயங்கள் பூவாகும். (1 - 48)
அவன் பாதம் அனிச்சப்பூவினும் மெல்லிது. அம்மென்மையான பாதங்கள் ஜடமான பாதையில் பட்டுவிட்டால் அதற்கும் மோக உணர்வு தோன்றிவிடும்.
பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும். (1 - 52)
நதியில் நீர் ஓடும் திசையிலே தான் என்னுடைய சேலையும் போகும். அதுபோல் நீ போகின்ற வழியைத் தேடிப் பின்னாலேயே வருவேன் என்று தன் காதல் உறுதியை வெளிப்படுத்துகிறாள்.
நீர் போகும் வழியோடு தான் போகும் ஏஞ்சேல
நீ போகும் வழிதேடி வருவேனே பின்னால (1-70)
அவள் ஆசையோடு அவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தாள். ஆனால் அஞ்சலில் சேர்க்கவில்லையே. ஏன்? அதில் அவன் பேரைத் தவிர வேறு எதுவும் எழுதவில்லையே.
எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று
அஞ்சல் செய்யவில்லை -- அதில்
உந்தன் பேரைத்தவிர அன்பே
வேறு வார்த்தை இல்லை. (1- 73)
அவன் தன் ஆசையையும் வெளியிடுகிறான். அவள் கன்னத்தில் அழகு சேர்த்து நிற்கிறதே ஒரு புள்ளி. அந்தப் புள்ளியாக உன் கன்னத்தில் படிந்திருப்பேன்; மகிழ்ந்திருப்பேன்.
நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றைச்
சொல்லியாக வேண்டும்
கண்ணே உந்தன் கன்னம் தன்னில்
நான் புள்ளியாக வேண்டும். (1 - 73)
அவனுக்கும் அவளுக்கும் காதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அதைத்தான் அவள் நீண்ட காலமாகப் பூக்கள் சேர்த்து அவனையே எண்ணி மாலையாக்கியதாகக் கூறுகிறாள்.
நீண்ட நாளாய்ப் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலைக் கோத்தேன். (1 - 74)
இப்பாடலில் ‘கருங்கோற்குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேனிழைக்கும் நாடனெடு நட்பே’ என்ற சங்கப் பாடலின் கருத்தமைந்து இனிமை சேர்க்கிறது.
குப்பத்திலே கடற்கரையோரம் வாழும் வேல் விழியாள் அவள். அவள் தொட்டுவிட்டால் காய்ந்து போன கட்டு மரங்களெல்லாம் பூ பூக்கத் தொடங்கிவிடும். அவள் பாதம் பட்டுவிட்டால் உப்பைச் சுமந்து அலையும் கடல் கடத்தேனாக மாறி இன்பம் சேர்க்கும்.
பட்டுப்பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
குப்பத்து பொண்ணு பாதந்தொட்டா
உப்புக் கடலலை தேனாகும். (1 - 77)
காதல் இத்து விளையாட்டுக்களைக் கூடச் செய்யுமேல?
அவன் மீது அவள் கொண்ட காதல்யுகங்களாகத் தொடர்ந்து வருகிறது; கரை மீது அலைகள் காதல் கொள்வது போல... உயிரும் உயிரும் சேரும் உறவு. விழித்துக் கொண்டாலும் மறைவாக கனவு போல் இன்பளிப்பது.
உன் மீது நான் கொண்ட மோகங்கள்
கலைமீது அலைகொண்ட தாகங்கள்
உயிரோடு உயிர்சேரும் உறவல்லவா?
விழித்தாலும் விலகாத கனவல்லவா? (1 - 90)
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனை நினைத்தாள். வெட்கம் உடலெல்லாம் வழிந்தது. அந்த நிறத்தோடு எப்படி வெளியே போவது? எனவே வெட்கத்தின் நிறத்தை மறைப்பதற்காக மஞ்சள் பூசிக் குளிக்கிறாள்.
ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்
வெட்க நெறம் போக மஞ்சக் குளிச்சேன். (1 - 92)
அந்தக் காதல் முல்லை ஆளாகிவிட்டாள். யாரோ ஒருவனுக்கும் ஆளாகிவிட்டால் போலும். கண்களில் உறக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.
ஆளானதால் வந்த தொல்லை
காதல் முல்லை.
கண்ணோடு தூக்கம் இல்லை. (1 - 98)
காதல் படுத்தும் பாட்டில் உறக்கம் எப்படி வரும்?
காதல் கொண்ட ஒருவனுக்கு எப்போதும் அவள் நினைவே நிற்கிறது. அவன் தூங்கவில்லை. விழித்துக் கொண்டே இருக்கிறான். ஆனாலும் ஆயிரமாயிரம் கனவுகள் தோன்றிக்கொண்ட இருக்கின்றனவே. மன்மத பாணம் செய்யும் விந்தையோ?
தோகை உந்தன் பூமுகம்
எந்த நாளும் ஞாபகம்
தூங்கவில்லை ஆயினும்
கனவு தோன்றும் ஆயிரம். (1 - 100)
அவள் நினைவிலே அவன் நிறைந்திருந்தான். யோகமெனும் தீ நெஞ்சுக்குள் நின்று வாட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உடல் முழுதும் பூ மலர்ந்தது போன்ற இன்பம் முகிழ்த்துக் கொண்டே இருக்கிறது.
நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும்
மேனியெங்கும் பூவசந்தம் (1 - 114)
அத்தீயின் காரணமாகவோ என்னவோ அக்கன்னியாகிய கரும்பு அவனை எண்ணிப் பிழியாமலே சாறாகிறது.
கள்ளிக் கரும்பு
உன்னை எண்ணிச் சாறாகும் (1 - 114)
அந்தச் சிற்றோடையின் ஓரங்களிலே விதவிதமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் அவை எல்லாம் அவள் பேரையே சொல்லிக் கொண்டு உள்ளனவே. அவள் தொட்டால் அந்த மலர்களுக்கு மோட்சம் கிடைக்கும். அந்தத் தேவ மகள் யார்?
ஓடைக்கரைப் பூக்கள் எல்லாம்
உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம்
மோட்சம் போகுமா?
ஜீவன் தொடும் தேவன் மகள்
யார் அது நீயா? (1 - 154)
அவன் அவளைப் பார்த்த போது நோக்கு எதிர்நோக்காது மண் பார்த்து நின்றாள். அவள் என்ன இளநீர் காய்க்கும் கொடியோ?
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண்பார்த்தாய்
.....
இது என்ன கூத்து
அதிசயமோ?
இளநீர் காய்க்கும்
கொடியிது வோ? (1 - 169)
அவளைத் தொட்டால் பேரின்பம் உண்டாகிறது. கட்டிக்கொண்டால் அதைவிட இன்பம் உண்டாகிறது. அவர்கள் வாழ்க்கை வேதமோ? இல்லை அனைவரும் கட்டுப்படும் தேசிய கீதமோ?
தொட்டுக்கொண்டால் ஓர் இன்பம்
கட்டிக்கொண்டால் பேரின்பம்
.....
நீயும் நானும் வேதமடி - நம்
காதல் தேசிய கீதமடி. (1 - 171)
தென்றல் மெல்லெனத் தவழ்ந்து வந்தது. அவளைச் சத்தமின்றித் தொட்டு முத்தமிட்டது. அவளுக்குப் பகல் துன்பமாகிறது.
ஏ பகலே நீ போய்விடு; இரவை வரவிடு. அவள் உடலெங்கும் பாய்ந்து விட்டதே தடுக்க இயலாத -- தாங்க இயலாத காதல் மின்சாரம்.
தென்றல் வந்து என்னைத் தொடும்
சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
...
தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்த தேனோ அன்பே (1 - 173)
அவன் உறங்கும் போதெல்லாம் கனவுகள் தோன்றித் தோன்றி அலைக் கழிக்கின்றன. ஆனால் அவளுக்குக் கனவுகளே வருவதில்லை. அவள் தான் உறங்குவதே இல்லையே.
நான் தூங்கும் வேளை
கனவுகள் தொல்லை
நான் தூங்கவில்லை
கனவுகள் இல்லை. (1 - 194)
அவன் அழகாக மல்வேட்டி கட்டியிருந்தான். ஆனால் அதில் மஞ்சள் ஒட்டியிருக்கிறதே ஏன்? முத்தழகியை அணைத்துக் கொண்ட போது மஞ்சள் ஒட்டிக் கொண்டதில் என்ன வியப்பு இருக்கும்?
மல்லுவேட்டி கட்டியிருக்கு - அது மேல
மஞ்சள் என்ன ஒட்டியிருக்கு
முத்தழகி கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்க
மஞ்சவந்து ஒட்டிக்கிருச்சு. (2 - 1)
மாலை வருவதற்கு முன்பே அவர்கள் இருவரும் களவொழுக்கத்தில் ஈடுபட்டார்கள். அவள் சேலையில் சந்தனமும் அவன் வேட்டியில் குங்குமமும் மாறி அடைக்கலம் அடைந்தன.
சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிருச்சாம் - அடி
பால வருமுன்ன சோலக்கிளி ரெண்டு
மத்தனம் கொட்டிக்கிச்சாம். (2 - 6)
அவன் நெஞ்சுக்குள் மகிழ்ச்சி பூக்கத் தொடங்கிவிட்டது. அவளிடம் வாய்விட்டுக் கேட்கவும் இயலவில்லை. குறிப்பினாலுணர்ந்த அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொற்கள் வாய் வரைக்கும் வந்து வந்து செல்கின்றன. பெண் தன் ஆசையை வாய்விட்டுச் சொல்ல முடியுமா? கட்டுமரம் பூப்பூக்க அசைப்பட முடியுமா?
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும்
வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவனதென்ன? (2 - 33)
அவனைக் கண்ட நேரத்தில் அவள் உள்ளத்தில் மின்னல் ஒன்று பளீரிட்டது. ஆனால் அவள் பார்த்த அந்த நேரத்தில் அவன் உள்ளமே உடைந்து போய்விட்டதே.
உன்னை நான் கண்ட நேரம் - நெஞ்சில்
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் - எந்தன்
நெஞ்சம் துண்டானது. (2 - 47)
அவர்கள் உறவு யுகயுகமானது. அது அழிந்த போகாது. அவர்களைப் போல் யாரும் இதுவரை இணை சேர்ந்ததும் இல்லை.
அந்தக் கால பந்தம்
அழிந்து போவதில்லை
நம்மைப் போல யாரும்
ஜோடி சேர்ந்ததில்லை. (2 - 52)
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அவள் உடலும் நூலாகத்துவண்டு மெலிந்துவிட்டது. தை மாதமும் வந்து விட்டது. தங்கத்தாலி எப்போது வரப்போகிறது? என்று அவள் கேட்டால் நியாயந்தகனே.
எப்பப் பாரு வீண் பேச்சு
இந்த மேனி நூலாச்சு
தை மாசம் வந்தாச்சு
தங்கத்தாலி என்னாச்சு? (2 - 55)
அவன் அனுபவிக்கத் துடிக்கிறான். வாலிபம் இருப்பது சில நாள். அனுபவிப்பதும் சில நாள். எனவே காதல் சுகம் சேர்க்கக் காமனையே வரச் சொல்கிறான்.
காதலோ இதமானது
காமனே வருக
வாழ்க்கையோ சுகமானது
வாலிபம் வருக. (2 - 58)
அவள் பார்த்துவிட்டாள். பிறகென்ன? மார்கழி மாதத்துக் குளிரும் சூடாக மாறி விட்டது. அவள் ஆணையிட்டதால் தான் பூங்கொடி ஒன்று பூப்பூக்கத் தொடங்கிவிட்டது.
நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூப்பூத்தது பூங்கொடி (2 - 59)
விடிந்தது. வாசலில் நீர் தெளித்து அழகாகக் கோலம் போடத்தான் வந்தாள். ஆனால் அவன் போன வழியைப் பார்ததுக்கொண்டு புள்ளி வைத்தாள். கோலமிட மறந்துவிட்டாள்.
வாசத்தெளிச்சு ஆசையாகக்
கோலம் போட நெனச்சேன் - நீ
போனதடம் பார்தது மயங்கிப்
புள்ளிமட்டும் வரைஞ்சேன். (2 - 68)
அவள் காதல் ஆழமானது கடலைவிட மாறாதது. ஆனால் கடல் கூட ஒருநாள் வற்றிப் போனாலும் போய்விடும். அவள் காதல் மாறுமோ?
கடல் கூடக் குளம் ஆகும்
என் காதல் மாறாது. (2 - 83)
அவளுக்கு வெட்கம் வந்து முகத்தில் கோலமிடத் தொடங்கி விட்டது. ஆனால் அவனது முத்தம் பட்டபோது அந்த வெட்கமும் கரைந்து மறையத் தொடங்கி விட்டது. அப்போது தான் சோலைகளில் பூக்களெல்லாம் தங்கமாக மாறி மலர்ந்தன. அவை வைரங்களையும் உதிர்க்கத் தொடங்கி விட்டன.
வெட்கம் வந்து வரைகின்ற கோலம்
முத்தம் பட்டுக் கரைகின்ற நேரம்
நம் சோலை எங்கும்
பூவெல்லாம் தங்கம்
தங்கம் மலர்ந்திட
வைரம் உதிர்க்கும். (2 - 89)
காதல் என்பது இளமைக்கு மட்டும் தான் சொந்தமா? இல்லையில்லை. காதல் என்ற தெய்விக உணர்வுகளுக்கு வயதென்ன வேண்டிக் கிடக்கிறது?
எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும்
தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும்
கிழடுகள் பாடும் இது ஒரு காதல் (2 - 91)
அவள் வாயில் தான் பாலும் தேனும் ஊறுவதாகச் சொல்வார்கள். ஆனால் அவள் பெயரை உச்சரித்தால் போலும்; அவனுடைய வாயில் பாலும் தேனும் சேர்ந்து ஊறத் தொடங்கி விடுகின்றனவே.
உன்னழகு பேரை
உச்சரிக்கும் வேளை
எச்சலுக்குள் பாலும் தேனும்
சேர்ந்து ஊறுது. (2 - 94)
பூ ஒன்று புடவை அணிந்து வந்தது. அதைக் கண்ட அவன் ஆசையோடு அள்ளினான். அந்தக் கோலம் - அழகு கலைந்தது. அவள் உதடுகள் வெளுத்து விட்டன. இரவானதும் பெண்மை மலரத் தொடங்கி விட்டது.
பூ ஒன்று இன்று புடவை அணிந்ததென்ன?
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன?
நீ தந்து உதடு வெளுத்ததென்ன?
என் பெண்மை இரவில் மலர்ந்ததென்ன? (2 - 142)
புள்ளிமான் போல் அவள் துள்ளித்துள்ளி ஓடுகிறாள். ஆனால் மச்சானின் மல்வேட்டி அவளை இழுத்துப் பிடிக்கிறதே. அவன் பேசும் பேச்சைக் கேட்டதும் வேப்பங்குச்சி கூட இனிக்கத் தொடங்கிவிட்டது.
துள்ளிப்போகும் புள்ளிமானை மல்லுவேட்டி
இழுக்குது
மாமன்பேசும் பேச்சைக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது
(2 - 149)
காதல் கொண்ட அவர்கள் நெஞ்சுக்குள் காம உணர்வு தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. என்னை மூடி வைக்கச் சொல்ல எந்தச் சட்டத்திற்கும் அதிகாரமில்லை. எனக்கு முத்தமிட்டு என்னைக் கொள்ளை கொண்டு போ. இந்த இன்பத்தில் ஆண் பெண் என வேறுபாடு எதற்கு?
முத்தமா - என்னை
மூடி வைக்க வேண்டுமென்று சட்டமா? - வந்து
கொள்ளை கொண்டு போங்கள் என்ன குற்றமா?
இதில் ஆணென்ன பெண்ணென்ன சும்மா? (2-196)
பசிப்பது இயற்கை. இரசிப்பது இளமை. உலகில் காற்று மறைந்து போய் விடலாம். காதல் மறைந்து போகுமா? போகவே போகாது.
பசிப்பது இயற்கையின் ஏற்பாடு
ரசிப்பது இயமையின் சாப்பாடு
காற்றே இல்லாமல் பூமி நின்றாலும்
காதல் நின்றுவிடுமா? (2 - 200)
ஏக்கம்
காதலில் இன்ப உணர்வுகள் முதன்மையானவை. அத்துடன் நின்று விடுவதில்லை. அது கிடைக்கத் தாமதமான போது ஏக்கம் வளர்வது அடுத்த நிலை. ஏக்கமும் கூட இன்பமோ?
ஏக்கத்தில் கூட நியாயமான ஏக்கம் என்றும், நியாயமில்லாத ஏக்கம் என்றும் பிரிக்க இயலுமா? குழந்தை பெற்ற ஒருத்தி தன் மகனை மட்டுமே கவனிக்கிறாள்; கணவனைக் கண்டுகொள்வதில்லை. அவன் வாய்விட்டே தன் குறையைச் சொல்கிறான்.
என் மகனை மட்டும் உபசரிச்சா
எனக்கு என்னாச்சு? (1 - 35)
விரக வேதனையில் குமைந்து போகும் ஒருத்தி தன் உயிரை எரிக்கின்ற நெருப்பை அணைக்க வருவது அவன் பொறுப்பு என வாய்விட்டே சொல்கிறாள். ஏக்கம் வரும்போது வெட்கத்துக்கு என்ன வேலை?
உயிருக்குள் ஏரிகினற் நெருப்பு - வந்து
அணைப்பது இனி உந்தன் பொறுப்பு. (1 - 59)
அவன் அணைத்துக் கொண்டால் அந்த நெருப்பு அணைந்து போய்விடுமோ?
தண்ணீரில் தான் குளிக்கிறாள் அந்தப் பசுங்கிளி. ஆனால் காதல் நெருப்பு எரிகிறதே. தண்ணீரும் செந்நீராக மாறுகிறது. குளிர்மிக்க மார்கழி இரவு நீண்டு கொண்டே போகிறதே. நீ ஓடி வா. வந்து என் நெஞ்சுத் தீயை ஆற்று என்று கூறி ஏங்குகிறது அக்கிளி.
குளிக்கும் ஓர்கிளி
கொதிக்கும் நீர்த்துளி
கூதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி. (1 - 104)
அவள் ஒரு கோடியிலும், அவன் மற்றொரு கோடியிலுமாக வாழ்கிறார்கள். காதலர் இருவரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். அழுது அழுது கண்ணீர் அருவிபோல் ஓடுகிறதே. உன் முந்தானை ஓரத்திலே என்னை முடிந்து வைத்துக் கொள்ள கூடாதா என ஏங்குகிறான்.
அருவி போல அழுகுறனே
அறிந்து கொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் ஆகாதோ? (1 - 135)
அவளும் ஏங்கித்தான் கிடக்கிறாள். எப்போது அவன் தாலி வாங்கி வருவான்; அவன் கால் பட்ட மண்ணை எடுத்து எப்போது பல் துலக்கலாம் என்று தவிக்கிறாள்.
வக்கணையாத் தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ? - உங்க
பாதம்பட்ட மண்ணெடுத்து - நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ? (1 - 135)
அவள் பெயரை யாரேனும் அழுத்தமாகச் சொன்னால் போதும்; அவள் அழுது விடுகிறாள். அவன் பாதம் பதிந்து மண்ணைத் தொட்டுக் கோயில் கட்டிக் குமிபிடுவதற்கும் அவள் தயாராக இருக்கிறாள். அவன் வரவில்லையே.
அன்பே எந்தன் பெயரையாரும்
அழுத்திச் சொன்னால் அழுதிடுவேன் - உன்
பாதம் பதிந்த மண்ணைத் தொட்டுக்
கோயில் கட்டித் தொழுதிடுவேன். (1 - 145)
அவள் மனம் ஏங்கித் தவிக்கிறது. அவள் கிடந்து உறங்கும் படுக்கை முள்ளால் செய்யப்பட்டுள்ளது. உறங்குவது எப்படி?
ஏங்கும் நெஞ்சமே - இன்று
என்ன செய்வது?
தூங்கும் மஞ்சமோ - பாவம்
முள்ளில் செய்தது. (1 - 161)
அவள் சிறகடித்துப் பறக்க நினைக்கிறாள். ஆனால் சிறகும் இல்லை; வானமும் இல்லை. பாவம் கண்ணீரும் வற்றிவிட்டது. அது வந்தால் அழுவது சுகமாயிற்றே. எரிமலையில் நிற்பது போல் அவள் துடிக்கிறாள். ஆனாலும் முகத்தைப் புன்னகை பூக்கச் செய்து பொய்முகம் காட்டுகிறாள்.
எங்கே என் வானம்
சிறகைக் காணோம்
கண்ணீர் கூட என்னை இன்று
கைவிட்டதோ?
பாரம் எங்கே தீரும்?
இந்த நேரமும்
நான் சிரிக்கிறேன்
எரிமலைகளில் பூப்பறிக்கிறேன். (1 - 162)
மேகம் நிறைந்து கிடக்கிறது. ஆனால் வானம் எங்கே போயிற்று? அவள் வானமான அவன் சென்ற வழிபார்த்து அந்தப் பூ ஏக்கத்துடன் வாடி நிற்கிறது.
பூ மேகம் இங்கே
ஆகாயம் எங்கே?
நீ சென்ற வழிபார்த்து
வாடும் உன் பூ இங்கே. (1 - 174)
தலைவனைக் காணாமல் ஏங்கித் தவிக்கிறாள் தலைவி. கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுத் தலையணை கூட ஈரமாகி விடுகிறது. உள்ளந்தொட்ட மன்மதன் இன்னும் வரக்காணவில்லையே. அவனிடத்திலிருந்து செய்தி வராதா, நெஞ்சம் ஆறாதோ என ஏங்கித் தவிக்கிறாள்.
காணவேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேடவேண்டும் எந்தன் ஜீவனை
உள்ளந் தொட்டமன்மதா
என்னை விட்டுச் செல்வதா?
உன் சேதி வாராதா?
உள் நெஞ்சம் ஆறாதா? (1 - 183)
காதல் ஆறுதலுக்காகக் காத்துக் கிடக்கிறான் அவன். மெத்தையை வாங்கியவன் தூக்கத்தினை வாங்க மறந்துவிட்டானே. அவன் உள்ளே அழுகிறான். வெளியே சிரித்துக் கொள்கிறான். ஒர வகையில் இதுவும் வேடந்தானே.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல
உள்ள அழுகுறேன்; வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான்; வெளுத்து வாங்குறேன். (2-3)
அவள் பாடிக்கொண்டே இருக்கிறாள்; அவனைத் தேடிக் கொண்டே இருக்கிறாள். அவன் கண்களில் நீர் வருகிறது. அவனுடைய தேர் வரும்; இணைவோம் என்று ஏங்கிக் காத்திருக்கிறாள்.
இந்நேரம் உன்னைத் தேடினேன்
என்னோடு என்ன லீலையோ?
எந்தன் கண்ணில் நீர்வரும்
என்று உந்தன் தேர்வரும்
இணைய வேண்டும் இருவரும். (2 - 72)
அவள் சீவி முடித்துச் சிங்காரித்துக் கூந்தலில் பூ வைக்கிறாள். ஆனால் அவன் நெஞ்சிலே நெருப்பை அல்லவா வைத்து விடுகிறாள். காதல் நெருப்பில் கடலே தீப்பற்றி எரியும் போது கற்பூரம் என்னவாகும்? அவன் தான் கற்பூரம் போன்றவனாயிற்றே. காதல் தீ கற்பூரத்தை மிச்சமில்லாமல் எரித்துவிடுமோ?
உன் கூந்தலில் பூ வைக்கிறாய்
என் நெஞ்சிலே தீ வைக்கிறாய்
காதல் நெருப்பில்
கடலும் எரியும்போது
கர்ப்பூரம் என்னாவது? (2 - 157)
சோகம்
காதலில் ஏக்கம் முற்றிச் சோகமாக மாறுவதுண்டு. ஏக்கத்தில் கூட இன்பம் உண்டு. ஆனால் சோகம் என்பது பெரும் பிரிவாக, கையறு நிலையாக மாறும் போதுதானே.
ராகமின்றிச் சங்கீதமில்லை. அதுபோல் அவள் இன்றி அவன் இல்லை. சாவு ஒன்று தான் அவர்கள் காதலின் எல்லையோ?
ராகங்கள் இன்றிச் சங்கிதமில்லை,
சாவொன்றுதானா நம்காதல் எல்லை?
என் நாதமே வா. (1 - 20)
சிறை வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் காதலுக்கும் சிறை வைக்க இயலுமா? அரைக்க அரைக்கச் சந்தனம் மணக்குமே. தண்ணீரில் வாழும் தாமரை மண்ணில் வீழ்ந்து விட்டதோ? அவள் வாழ்க்கை இனி கண்ணீர்த் தீவு தானோ?
மண்ணில் வீழ்ந்ததோ பாவம்
தண்ணீர்த் தாமரை
கண்ணீர்த் தீவிலே வாழும்
காதல் தேவதை. (1 - 165)
காதல் கதையின் சிறப்புகள் கதையாகவே இருக்க வேண்டுமா? வாழ்க்கை நிதரிசனத்தில் அதற்கு வேலை இல்லையா? அவன் எதிர்பார்த்து வந்தவள் இல்லையே. அழுதழுது கண்ணீர் வற்றுகிறது. அவளை எண்ணி எண்ணி அவன் மனம் கூடச் சோர்ந்து போகிறது. அவன் உடல் உயிரைச் சுமந்து செல்கிறது. வெறும் நடைப்பிணமாக வாழ்கிறான்.
கண்ணீர் இல்லை - வழி
காய்கின்றது
உன்னை எண்ணி - மனம்
ஓய்கின்றது.
உடல் சுமந்து - உயிர்
போகின்றது. (1 - 170)
அவள் கண்களில் தேங்கிய கண்ணீரில் கூட அவன் பிம்பம்தான் தெரிகிறது. அந்தப் பூவின் நெஞ்சில் பூகம்பம் ஏற்படுகிறது. திரி தீர்ந்துபோன பின்பு தீபம் சுடர் விட்டு எரியாது. அப்படித்தான் அவள் வாழ்கிறாள். உயிராகிய அவன் போன பின்பு அவள் உடம்பு வெற்றுடம்புதானே.
தேங்கும் கண்ணீரில்
உந்தன் பிம்பம்
பூவின் நெஞ்சில்
பூகம்பம்
சுடரோடு எரியாது
திரிபோன தீபம்
உயிர்போன பின்னாலும்
உயிர் இங்கு வாழும். (1 - 175)
அவள் அவனைப் பார்க்க ஏங்குகிறாள். அவர்கள் காதல் தடை செய்யப்பட்டு விட்டது மட்டும் அன்று, அவளுக்குச் சமாதியும் கட்டப்படுகிறது. உயிரோடு சாவுதற்குள் ஒருமுறை அவனைப் பார்த்து விட்டால் போதுமே.
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றிப் பார்ப்பதோ?
நெஞ்சில் இன்று போர்க்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாவு மூன்று அங்குலம். (1 - 181)
இந்தச் சமுதாயம் இருக்கிறதே, இருக்கும் போது ஏற்கமாட்டார்கள். ஆவி போன பின்பு அழுது அன்பைக் காட்டிக் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். அவன் ஆசையோடு ஓடி வந்தான். ஆனால்... ஆனால்... அவளைச் சுமந்த தோள்களில் அவளின் தேரைச் சுமந்தான்.
தான் சுமந்த
தோள் இரண்டில்
தேர் சுமந்தான்
திசையை மறந்தான்.
ஆவி போன பின்பு - இங்கு
அழுது பார்க்கும் அன்பு
சோகமே ஆறுமா? (1 - 188)
காத்திருந்து காத்திருந்து என்ன பயன்? தோற்றுப் போன காதல் இனி எழுந்து நிற்கவா போகிறது? தேர் முறிந்து போன பின்பு தெய்வம் வந்து பயனென்ன? பாறாங்கல்லில் முட்டிக்கொண்ட முட்டைக்கு இனி என்ன வேதாந்தம் பேச வேண்டி இருக்கிறது? அதன் காவல் முடிந்து போய்விட்டதே.
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வத்திப் போனதென்ன?
தேர்முறிந்து போன பின்னே
தெய்வம் வந்து லாபமென்ன?
...
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம். (2 - 34)
அவர்கள் காதல் இனிமையாகத்தான் தொடங்கியது. ஆனால் முடிவு மாறி விட்டதே. நனவாக வந்து கனவாகிப் போன பின் அந்தப் பெண்மையின் நிலை என்ன? அவள் கன்னங்கள் இரண்டும் கண்ணீர் பாய்ந்து பாய்ந்து புண்ணாகி விட்டனவே.
நனவாக வந்து கனவாகிப் போனால்
தளிர் போன்ற பெண்மை தாளாது
கன்னங்கள் எங்கும் கண்ணீரின் காயம்
தாங்காத பெண்மை தூங்காதோ? (2 - 48)
அவள் நடந்து வந்த பாதையைப் பார்த்துப் பார்த்து அழுகிறான். ஒருமுறை அழுது கண்ணீர் விட்டபோதே கம்மாய்க்கரை தாங்காமல் உடைந்து பெருக்கெடுத்தது. அலை மீறிப் போய்விட்டதே.
ஒரு தரம் கண்ணீர் விட
ஓடஞ்சதே கம்மாய்க்கர
ஒன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர (2 - 56)
கவிஞர் அவர்களின் பாடல்களில் மிகுதியும் காதல் பாடல்களே நிறைந்துள்ளன. காதலின் இன்பம், பிரிவு, ஏக்கம், சோகம் எனப் பலப்பல உணர்வுகளையும் அழுகுறப் பாடியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவர்களைப் பற்றி எனக்குள்ளும் ஒரு மதிப்பீடு உண்டே. ஆம். இதோ!
கவிஞனின் பார்வையிலே வைரம் இல்லை. அனிச்சத்தின் மென்மை வெட்கம் போல வழிகிறது. நோக்கு-அதில்-மன்மதம் வழிகிறது. சொற்கள் என்னவோ முத்துக்களே.
அவரை வைரமுத்து என்பதை விட மன்மதமுத்து என்றால் மிகப் பொருந்துமே.
அவளோ
மரபுக் கவிதை
அவனோ
மரபை மணந்த புதுக்கவிதை
ஆனால்
மரபை மறந்த பூபாளம்
முத்துக்கோத்த
மோகன ராகம்
தத்தி வரும்
தென்றற் சுகம்.
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல் Empty Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 16, 2011 11:10 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 27. தொலைக்காட்சித் தொடர்கள்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -34. பழமொழிகள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum