தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Today at 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Today at 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:24 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

6. சொல்வளம்
கவிஞன் எவ்வளவுதான் கற்பனை வளம் மிக்கவனாயினும் அதனைச் சொல்லாக வடிக்கும் போது ஏற்ற சொல்வளம் இல்லையானால் அக்கற்பனை வளத்தால் பெரும் பயன் விளையாது. நம் சங்கப் பாடல்களாகட்டும் பிற்காலத்துக் காவியங்களாகட்டும் பொருளாழம் மிக்குச் சந்த நமம் பொருந்தி நெஞ்சில் தேனாகத் தித்தித்துக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம். அந்த வரிசையில் நம் கவிஞர் வைரமுத்து அவர்களையும் நிறுத்திச் சுவைத்திடுவோம்.
பூவை என்பது கிளி, குயில், நாகணவாய்ப்புக், பெண், காயா எனப் பல பொருள் தரக் கூடியது. பூ என்ற சொல்லுக்கு இன்னும் மிகுதியான பொருள் உண்டு. பூ என்பதோடு இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்த்தால் பூவினை எனப் பொருள் கொள்ளும். நம் கவிஞர் பூவை என்ற சொல்லை இரண்டு வகையிலும் கையாள்வார். பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்தல் என்பது இருவேறு பொருள் தரும் ஒரே சொல்லைக் கொண்டு பொருளாழம் கொண்ட நிலையில் கையாள்வது அவருடைய சொல்வளம் ஆகும்.
பூவை கையில் பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டத் தந்த கையில் மணம்
வீசுது இன்னும். (1 - 9)
சொல்லழகு மட்டுமல்லாது ‘பின்னும் - இன்னும்’ என இயைபுத் தொடை அமைந்து மேலும் பாடல் மெருகு பெறுகிறது.
இரவு நேரம் காதலர்க்கு இன்பத்தையும் தரும்; துன்பத்தையும் தரும். துன்பத்தைத் தரும் இரவு விடிந்துவிட வேண்டும் என்றும், இன்பத்தைத் தரும் இரவு விடியக் கூடாது என்றும் எதிர்ப்பார்ப்பது அவர்க்கு இயற்கை. எல்லாக் கவிஞர்களும் பாடுவார்கள். சொல் விளையாட்டு ஏதுமின்றி வள்ளுவன் ‘நீடுக மன்னோ இரா’ என்று எளிமையாகப் பாடி நம் நெஞ்சைத் தோட்டான். நம் கவிஞரோ சொல் விளையாட்டையும் சேர்த்து அதே கருத்தைக் கொஞ்சம் மாறுபடத் தருவார்.
தூங்கிய சூரியனே
இரவைத் தொடாதே. (1 - 9)
இரவில் சூரியன் உறங்கி விட்டானாம். அவன் இரவைத் தொட்டுவிடக் கூடாது. விடிந்து விடுமே! இரவைத் ‘தூங்கிய சூரியன்’ என்றும் விடியலை ‘சூரியன் தொட்ட இரவு’ என்றும் கவிஞர் கையாண்ட முறை தேனூறிய பலாச்சுளை.
கடற்கரையில் காதலனின் காலடித் தடத்தை அலை வந்து அழித்து விடுகிறது. அவள் மனமோ துடிக்கிறது. இதைச் சொல்லும் கவிஞர் ‘கடலுக்கு ஈரமில்லை’ என்று பாடுவார். கடலில் நீருக்குப் பஞ்சமா? ஈரமில்லாமலா போய் விடும்? ஆனால் ஈரம் என்ற சொல்லுக்கும் மிகுதியான பொருள் உண்டு. அதாவது ‘பல பொருள் ஒரு சொல்’ என இலக்கணம் கூறும். அப்பல பொருள்களில் ‘அன்பு, குளிர்ச்சி, நனைதல், பண்பு’ என்ற பொருள்களும் அடங்கும். இங்கே கவிஞர் கடலுக்கு, ‘அன்பு இல்லை’ என்று சொல்கிறாரா? இல்லை ‘பண்பு இல்லை’ என்று சொல்கிறாரா? எப்படிச் சொன்னாலும் சுவை தான்.
கடலுக்குக் கூட ஈரமில்லையோ?
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ?
(1 - 11)
இதைக் கேட்பதற்கு இங்கு யாருமில்லையே. கடலிடத்தில் சென்று யார் நியாயம் கேட்க முடியும்? கவிஞரின் ஆதங்கம் நமக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் கடலுக்குப் புரிய வேண்டுமே! அதற்குத் தான் ஈரம் இல்லை - இரக்கம் இல்லை.
பொருளாழம் கொண்ட சொற்கள் மட்டும் தானா? சந்தமும் சொந்தம் கொண்டாடுகிறதே.
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம். (1 - 20)
உந்தன் - சிந்தும் - சந்தம் - உந்தன் - சொந்தம். சந்தம் நடைபோடுகிறது.
வீரத்தைச் சொல்லுகின்ற போதும் அதற்தேற்ற அடுக்கடுக்கான சொல்லழகைக் கையாள்கிறார்.
வேலெடுப்போம் காலெடுப்போம் கையெடுப்போம்.
(1 - 21)
இத்தொடரிலும் எடுத்தல் என்பதை ‘எடுத்தல்’ என்ற பொருளிலும் ‘நீக்குதல்’ என்ற பொருளிலும் பயன்படுத்துகிறார்.
பாலுக்கும் கதவுக்கும் என்ன தொடர்பு? நமக்குத் தெரியவில்லை. கவிஞர் தெரிய வைக்கிறார். கையில் கண்ணாடி வளையல்கள் நிறைந்து தான் இருந்தன. காலையில் எழுந்து பார்க்கும் போது குறைந்து போயிருந்தன. ஏன்? முதலில் அச்சமாகத் தான் இருந்தது. விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது. விடிந்தபோது எண்ணெய் அப்படியே இருந்ததே. எண்ணெய் எரியவில்லையா? ஏன்? இப்படிப் பல வினாக்கள் கேட்கும் அளவில் தான் கவிஞர் பாடல் எழுதியுள்ளார். அது சுவையானதாக இருந்த போதிலும் கவிஞர் கையாண்ட இயைபுத் தொடைச் சொற்கள் மேலும் இன்பம் ஊட்டுவனவாகவே அமைந்துள்ளன.
கையில் பாலிருக்கும்
கதவுக்குத் தாவிருக்கும்
கண்ணாடி வளையல் இவ
கையெல்லாம் நெறஞ்சிருக்கும்
எந்திரிச்சுப் பாக்கையிலே
எண்ணிக்கை குறைஞ்சிருக்கும்
முதன் முதலாப் பார்க்கும்போது
அச்சமாக இருக்கும் - ஆனா
விடியும் போது விளக்கில் எண்ணெய்
மிச்சமாக இருக்கும். (1 - 23)
இதை இலக்கணம் முற்றெதுகை எனக் குறிப்பிடும்.
எதுகைக்காக மட்டுமல்லாமல் சொல் ஆழத்தையும் அமைத்துக் காட்டுவார்.
மஞ்சக் குளிக்கும் பிஞ்சுப் பொழுதில்
நெஞ்சு நெனைக்காதோ? (1 - 26)
மஞ்சள் பூசிடும் சிறிது நேரத்திலும் அவனை நெஞ்சு நினைக்கிறது. பொழுதில் கூடப் பிஞ்சுப் பொழுது எனக் குறிப்பிடும் போது நம் மனம் எங்கேங்கோ அலைகிறதே.
தாலி ஒன்று ஏறாமலேயே தூளி ஒன்று வரப் போகிறது. சமுதாயம் என்ன சொல்லும்? அவளோ தூய்மையான பன்னீர் எனினும் கண்ணீர் பெருக் கெடுக்கிறது. இப்பாடலில் கவிஞர் கையாண்ட இயல்பான சொற்கள் தாலி, தூளி, பன்னீரு, கண்ணீரு ஆகியவைகள். எனினும் நெஞ்சிலே பாரத்தைக் கூட்டுகின்றன.
தாலி ஒண்ணு இல்லாமத்
தூளி வரப் போகுதுன்னு
சுத்தமுள்ள பன்னீரு
கொட்டுதம்மா கண்ணீரு. (1 - 36)
எளிய சொற்களாலும் இதயத்தைப் பிழிய வைக்க இயலும் என்பதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு.
எளிய சொற்கள் தாம். ஆனால் உடலில் வெப்பத்தை எழுப்பி விடும் சொற்கள். இங்கே எதுகையும் உண்டு; ஆழமும் உண்டு.
பனிவிழும் மலர்வனம் - உன்
பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் - தடு
மாறும் கனி மரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை. (1 - 41)
இப்பாடல் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கது.
காலம் என்ற ஒரு சொல். கவிஞரின் கையால் புது மெருகு பெறுகிறது.
அட கால் காலமாக நாங்கள் காலமாகவோ?
(1 - 54)
காலம் என்பதும் காலமாகுதல் என்பவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றதைச் சுவைத்தின்புறலாம்.
மாலை நேலத்தைக் (கதிரவன்) சாயும் காலம் என்று கூறுவது மரபு. இதனைப் பேச்சு வழக்கில் நாயங்காலம் என்று கூறுவர். இந்தப் பேச்சு வழக்கையும் இலக்கிய வழக்கையும் இணைத்து ஒரே சொல்லை இருவிதமாகப் பாடுவார்.
இது சாயங்காலமா?
மடி சாயுங்காலமா? (1 - 92)
மாலை நேரம். மடியில் தலை வைத்துப் படுக்கும் நேரத்தை இவ்வாறு கூறுகிறார்.
பிடி என்பது பெண் யானையைக் குறிக்கும். இதற்குப் பிடித்தல் என்ற பொருளும் உண்டு. அவள் இடை ஒரு பிடிக்குள் அடங்கும் இளமை பொருந்திய பெண் யானை என்று சொன்னாலும் இளைய கொடி எனச் சொன்னாலும் இளைய கொடி எனச் சொன்னாலும் பொருத்தமாகத் தான் இருக்கிறது.
இடையொரு பிடி எனுமொரு இளையகொடி
(1 - 95)
சின்னச் சின்னத் தொடர்களிலும் கூட இயைபுத் தொடை அமைத்தப் பாடலைச் சுவைப்படச் செய்வது கவிஞனின் கை வந்த கலை.
விழிகள் மீனோ?
மொழிகள் தேனோ?
நிலவின் மகளே நீ தானோ?
பூக்களின் மேலே
தேவதை போலே
நீத்தி வரும் முகிலோ?
......
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் தரை நிலவு. (1 - 101)
பிறை நிலவு தலை நிலவாகிவிட்ட புதுமை சுவையே.
கல் பட்டால் வலிக்கும். சொல் பட்டாலும் வலி நிற்கும். ஆனால் கல்லெனும் சொல் வலிக்காமல் நம் நெஞ்சில் நிற்க வைக்கிறார் கவிஞர்.
வானத்திலே ஒரு கல் - கருக்கல்
பூமியிலே ஒரு கல் - வழுக்கல்
அரிசியிலே ஒரு கல் - புழுக்கல்
வெற்றிலையில் ஒரு கல் - அழுகல் (1 - 137)
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாவதில்லை. ஆனால் நம் கவிஞர் வாரி இறைத்த ‘கல்’ எங்எல்லாம் வைரக்கற்களே. இப்பாடல் கவிஞரின் சொல் வளத்துக்கு மேலும் ஒரு மைல் கல்லாகும்.
சிந்தனை செய்பவனே மனிதன். இல்லாதவன் செம்மறியாடு தானே. முன்னது ஓடிய பாதையிலே பின்னது ஓடிக்கொண்டே இருக்கும். சிந்தனை தேவையில்லை. இதைச் சொல்லும் போதும் சிந்தையில் உறைக்கும்மாறு சொல்லாடுவார்.
சிந்தனை செய்வது இல்லை - இது
செம்மறியாட்டுச் சந்தை. (1 - 157)
இங்கே சிந்தனையற்றது சந்தைக்குப் போய் விடுகிறது.
பள்ளியறை என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும் இலக்கணத்திலடங்கும். பள்ளி என்றாலும் அறை என்றாலும் ஒரே பொருள் தான். பள்ளி என்பதற்குப் பல பொருள் இருந்தாலும் இங்கே கவிஞர் காட்டியிருப்பது இரண்டு பொருள்கள் மட்டுமே. ஒன்று உறக்கம். மற்றது கல்விக் கூடம். இது உறங்கும் இடமா? இல்லை கல்விக் கூடமா? கல்விக் கூடமாகக் கூட மாறலாம். இவ்வாறெல்லாம் பொருள் தருமாறு அமைத்துள்ளார்.
அழகிய பள்ளியறை இது
பள்ளியறை பள்ளி அறையா? (1 - 176)
ஊறுதல் என்னும் வினைப்பெயர் ‘ஊறும்’ எனப் பெயரெச்சமாக வருவதுண்டு. அதனையே வினை முடிபாகவும் கொண்டு கவிஞர் அமைந்திருப்பது இலக்கணச் சுவையை மட்டும் தரவில்லை; காதலர்க்கு இன்பச் சுவையையும் தருவது.
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
(1 - 195)
ஊறும் வாய் - பெயரெச்சம்.
வாய்ஊறும் - செய்யும் என்னும் வினைமுற்று.
வாயூறுபவர்க்கு வாயோரம் வாயூறத்தானே செய்யும்.
மீண்டும் நெஞ்சைத் தொடுகின்ற சொல் அமைப்பு. ஆராரோ பாடி தன் குழந்தையைத் தூங்க வைப்பாள் தாய். அது குழந்தையை உறங்க வைப்பதற்காக மட்டும் பாடிய பாட்டாகத் தெரியவில்லை. உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் ‘ஆராரோ’வாக அமைந்து விட்டது.
ஒப்புக்குச் சொன்னேன் ஆராரோ
ஊமைக்குச் சொந்தம் யார் யாரோடு? (2 - 29)
ஆராரோவும் யார் யாரோவும் ஓசையளவில் இன்பம் பயக்கின்றன.
தருமை, தரணும், சரணம் இத்தாளத்திற்கேற்ப சொற்கள் போலத் தோன்றினாலும் இயைபுத் தொடையாக அமைந்து செவி இன்பம் பயப்பன.
நித்தம் இந்தத் தருணம்
இன்பம் கொட்டித் தரணம்
என்றும் சரணம் சரணம் (2 - 41)
எதுகைத் தொடையும் இயைபுத் தொடையும் ஒருங்கே அமைந்து சந்தச் சுவை தரும் வரிகள் இவை.
மொட்டுக் கட்டும் அழகு
மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு. (2 - 41)
இதே போன்று இயைபுத் தொடையாக அமைந்தாலும் டண்ணகரத்தையும் றன்னகரத்தையும் மாற்றி அமைத்து, கேட்பதற்கு ஒரே சொல் போலவும் ஊன்றிக் கவனித்தால் மாறுபட்ட கருத்தம் தோன்றிடுமாறு பாடிய பாடலும் சுவைபயப்பதே.
காத்திருந்தேன் கணவா
காண்பதெல்லாம் கனவா (2 - 50)
காதற் கணவனை விளித்தக் காண்பதெல்லாம் கனவா என்பது கேட்பது சொல்லின்பம்.
வெறும் சொல்லை இயைபாக அமைத்தச் செவிக்க இன்பம் ஊட்டினாலும் இதிலும் காதல் சுவை விளங்குமாறு பாடுகிறார்.
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வச்சான். (2 - 67)
இயைபு மட்டுமில்லாமல் பல பொருள்களைத் தரக்கூடிய ‘கன்னம்’ என்ற சொல்லைக் கவிஞர் இருவேறு பொருளில் அமைந்திருப்பதும் பொருள் நயமுடையது.
மற்றுமொரு இயைபு இன்பம் அமையப் பாடிய பாடல் சொல் இன்பத்தை மட்டும் தரவில்லை. ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது.
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை (2 - 72)
தன் நாதனை எண்ணி வேதனைப்படும் ஒரு குயிலின் பாடல் இது.
வரிசையாக அமைந்துள்ள இயைபு செவிக்கு இன்பம் பயக்கும் நேரத்தில் இத்தனைச் சொற்கள் கவிஞருக்கு ஓடிவந்து கைகொடுக்கும் சிறப்பை நினைத்த வியப்படைகிறோம்.
கண்கள் காதல் சின்னம்
கன்னம் ரோஜாக் கிண்ணம்
பசி தீர்ந்து போகும் வண்ணம்
பரிமாற வேண்டும் இன்னும்
அள்ளித் தந்தேன் முத்தம்
உள்ளே ஏதோ சத்தம்
விழி மூடவில்லை நித்தம்
இரவோடு என்ன யுத்தம்? (2 - 74)
எத்தனை எத்தனை சொல் விளையாட்டு? அத்தனையும் முத்துக்களே.
பெற்றத் தந்ததும் கற்றுத் தந்ததும் காதல் தான் என்று பாடும் கவிஞர் தெளிவான சொற்களை மட்டும் கையாண்டு உண்மையை எடுத்துக் காட்டுவார்.
ஆதாம் ஏவாள்
உலகுக் கெல்லாம்
கற்றுத் தந்தது காதல்
உன்னை என்னை
அன்னை தன்னைப்
பெற்றுத் தந்தது காதல். (2 - 91)
இதுவும் ஓர் எளிய இனிய சொல் விளையாட்டே.
தமிழர் தம் பழங்கலைகளில் ஒன்றான கூத்து தொடங்குவதற்கு முன்னதாக, கோமாளி ஒருவன் அனைவரையும் வரவேற்று உட்காரச் சொல்லுவான். இன்றைய சினிமாவிற்குக் கூத்துக் கலை தான் அடிப்படை. எனவே சினிமாவின் பயன்பாடுகளைப் பற்றிச் சொல்ல வந்த கவிஞர் பழமையை மறக்காமல் கூத்தின் தொடக்க வரவேற்பையே முதலில் பாடத் தொடங்குவார். அதிலும் சந்தம் விளையாடுகிறது.
வந்தனம் வந்தனம்
வந்த சனமெல்லாம்
குந்தணும் குந்தணும் (2 - 95)
கிராமியப் பேச்சு வழக்கிலே இருந்தாலும் இப்பாடல் கவிஞரின் சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
‘மாதங்களில் நான் மார்கழியாவேன்’ என்று கண்ணன் கீதையிலே பாடினான். கவிஞர் இங்கே மார்கழியை வேறு வகையில் அமைத்துப் பாடுவார். மார்கழி மட்டுமல்ல பிற மாதங்களையும் கூட சேர்த்துக் கொள்வார்.
விழி இரண்டும் கார்த்திகையோ?
இரு கன்னம் மார்கழியோ?
உடலெங்கும் சித்திரையோ?
அடி நெஞ்சில் ஐப்பசியோ? (2 - 101)
கார்த்திகையும் மார்கழியையும் சித்திரையையும் அந்தந்த மாதப் பருவ மாற்றத்திற்குப் பொருந்துமாறு பாடியவர் ஐப்பசியை மட்டும் மாறுபடப் பாடிவிட்டார். ‘ஐ’ என்பது மிகுதி. நெஞ்சில் மிகுதியான பசியோ எனக் காதல் மிகுதியைக் காட்டுவது அவருடைய சொல்வளந்தானே.
பித்தம் ஏறுவது இரக்கத்தில் தானே. அதையும் சத்தமிட்டுச் சொல்லழகு ஊட்டுவார்.
நித்தம் மித்தம் ஏறும்
என் ரத்தம் சத்தம் போடும். (2 - 115)
எப்படியும் எதுகைக்குக் குறைவில்லை.
எதுகையுடன் இயைபும் சேர்ந்து வேகத்தோடு சொற்கள் வெளிவருவதையும் பார்க்கிறோம்.
அன்னைக்கி வழக்கப் பார்ததுப்புட்டா
இன்னைக்கிக் கணக்கத் தீத்துப்புட்டா
கண்ணுக்குக் கண்ணென்னும்
பல்லுக்குப் பல்லென்னும்
கண்ணகி கொணத்தக் காட்டிப்புட்டா (2 - 126)
பேச்சு வழக்குத் தான். எனினும் வஞ்சம் தீர்க்கும் படலத்தையும் வஞ்சனையின்றி அழுகுடன் தீட்டி விட்டார்.
நாட்டின் அவலத்தைப் பற்றிப் பேசும் போது கூட எதுகையும் மோனையும் கொப்புளித்தன.
பிச்சை தான் எல்லாமே பிச்சை தான்.
கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான்.
(2 - 133)
இன்றைய சமதாயத்தைப் படம் பிடித்தக் காட்ட இதலினும் சொல் ஏது?
அவனுக்கும் அவளுக்கும் என்ன ஊடல்? சுவைபடச் சொற்கள் பிறக்கின்றன.
குடிக்கல் பால் செம்பிருக்கு
குடிச்சா வீண் வம்பிருக்கு
தவிக்கும் செல்லையா
தள்ளித்தான் நில்லையா (2 - 135)
ஊடல் பல வகையாக வெளிப்படும். எப்படியாயினும் ‘உப்பமைந்தற்றால் புலவி’ என வள்ளுவன் கூறுவது போல அளவோடு ஊடல் இருக்க வேண்டும். இங்கே கவிஞர் சொற்களையும் அதற்கேற்றாற்போலவே அமைத்துள்ளார்.
கவிஞர் காய்கறிகளையும் விட்டு வைக்கவில்லை.
சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா
நீ பாத்துக்கோ
சின்னக்கா பெரியக்கா யாரக்கா
நீ வாங்கிக்கோ
எல்லாமே இருக்குக்கா
இல்லாத கா ஆப்பிரிக்கா. (2 - 175)
சொல்லழகு மட்டுமல்ல, ‘அக்கா, நீ வாழ்க’ என்ற பொருள்பட வாழக்கா என்று சொல்லுவதும், இல்லாத கா ஆப்பிரிக்கா எனச் சொல்லி நம்மைச் சிரிக்க வைப்பதும் நன்றாகவே இருக்கிறது.
வெறும் சொல்லழகு மட்டுமல்லாமல் ஆழ்ந்த பொருளையும் உணர்ச்சித் துடிப்பையும் ஊடல் களிப்பையும் எளிய சொற்களையே அடுக்கிப் பாமரனுக்கும் புரிய வைத்திருக்கிறார். ஏறத்தாழ, கவிஞரின் எல்லாப் பாடல்களிலுமே அவர் தம் சொல்வளம் வெளிப்படுகிறது. அவர் நினைத்தபடிச் சொற்கள் வந்து வீழ்கின்றன என்றே நமக்குத் தோன்றுகிறது.
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum