தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

4 posters

Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by dhilipdsp Fri Mar 16, 2012 1:49 am

இயல், இசை, நாடகத்தோடு, அறிவியல் தமிழ் நான்காம் தமிழாக வளர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. உலகில் பல மொழிகள் இருந்தாலும் அறிவியல் எல்லா மொழிகளையும் இணைக்கிறது. பழந்தமிழர் அறிவியலில் முன்னோடியாக இருந்தனர். இன்றைய தமிழர் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயரிட்டுக்கொள்வதோடு தம் பங்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவது அவலத்திற்குரிய ஒன்றாகும்.

அறிவியலின் முன்னோடியாக இருந்த தமிழன்..

இன்று அறிவியலின் பின்னோடியாக மாறியதற்கு அடிப்படைக் காரணம் தாய்மொழியான தமிழைப் புறக்கணி்த்ததே ஆகும்.

தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளத் தமிழர்கள் இரண்டு கத்திகள் வைத்திருக்கிறார்கள்.

தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.

தமிழில் என்ன இருக்கிறது…. விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக்கொண்டிருக்கும் போது இந்த தமிழ் என்னும் தள்ளுவண்டியால் யாது பயன் என்று சலித்துக்கொள்கிறவர்களின் கையில் சாணைபிடித்த் கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்பட வேண்டியவை.

துருப்பிடித்த கத்தியைத் தூக்கி நிற்பவர்களே! உங்களைக் கேட்கிறேன்- தமிழுக்கு ஏன் தாழ்பாள் போடுகிறீர்கள்?

வானத்துக்கு ஏன் வரப்பு கட்டப் பார்க்கிறீர்கள்?

வைர வைடூரியங்கள் வைத்திருக்கும் தமிழின் கருவூலத்தில் ஒரு கம்யூட்டர் வைக்க இடமில்லையா?

எல்லாப் பொருளும் இதன் பாலுள“ என்று நாம் திருக்குறளைச் சொல்லியதையே திருத்தியாகவேண்டும்.

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி" என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே!

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி… என்ற குறளை வைத்து, ஏகே 47 அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே!

"வலவன் ஏவா வான ஊர்தி" என்பதை வைத்து ஏவுகளையுகத்தைத் தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான் என்று இன்பக்களி கொள்கிறவர்களே!

உங்களைக் கேட்கிறேன் -



தொப்பையே கர்ப்பமென்று எண்ணி மகிழ்ந்திருந்தால் நம் வீ்ட்டில் தூளியாட முடியுமா?

தமிழ் பக்தியாளர்களே!

நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க முடியாது ; இறங்கி வாருங்கள்!

நம்மை விட்டுவிட்டு பூமி விரைவாய் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கிவேயில்லை.

உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.

நமது இனமும் அலையில் காலை நனைத்திருக்கிறது் என்று கூட சொல்லமாட்டேன்.

அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது. என்று சொல்லுவேன்.

உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் வி்ண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.

நாம் குறைந்தபட்சம் அந்தப் பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமைா?

தமிழைக் காவியமொழி என்று சொல்லியே கழித்துவிடாதீர்கள்

தமிழை நீதி மொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.

தமிழ் நீட்சி கொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராக இல்லை.

சற்றே தமிழுக்குச் சுதந்திரம் கொடுங்கள்.



தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.



அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.

துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.



தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.

முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.



நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.



ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவே இல்லை.

பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.

ஆனால் உலகத்தில் விரல்விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல்விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.

ஊர்ச்சொற்கள் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.

பக்தி இலக்கியத்திலும் கூட விஞ்ஞானத்திற்குப் பங்களிப்பு செய்யக்கூடியது தமிழ்.

ஆரவாரமில்லாத பழமைதான் நிகழ்காலத்திற்கும் அஸ்திவாரம்.

வளர்வதற்குத் தமிழ் தயாராக இருக்கிறது வளர்ப்பதற்குத் தான் தமிழன் தயாராகயில்லை. இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சுளுக்கு இன்னும் எடுக்கப்படவேயில்லை.

அய்யகோ மாறாத மரபாளர்களே!



இன்னும் எத்தனை நாளைக்குத் தான் திருக்குறளையும், தேவாரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பீர்கள்?

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் “கொல்“ “அரோ“ என்னும் செத்துப்போன அசைச்சொற்களை பெய்த தகவல் பலகைகலாய் அகவல் எழுதுவீர்கள்?

சோதனைக் குழாய்க் குழந்தைக்குமா நீங்கள் பிள்ளைத்தமிழ் பாடுவீர்கள?

நமக்குக் கனவுகாணக் கூடத் தெரியவில்லை.

நம்பிக்கையின் மீது கூட நம்பிக்கையில்லை.



கம்பன் மறைந்தபோது சரஸ்வதி இன்றோடு மங்கல நூல் இழந்து போனாள் என்று ஒரு புலவன் புலம்பியதை நயமாகக் கொள்ளமுடியுமே தவிர நியாயமாகக் கொள்ளமுடியாது.



தமிழ் யாரோடும் முடிந்துவிடுவதில்லை.

மேதைகளும்,ஞானிகளும், யோகிகளும், அறிஞர்களும், கவிஞர்களும், சேமித்துவைத்த தமிழை நாம் செலவு செய்யவேண்டும்.

அந்தச் செலவிலிருந்து புதிய வரவு காணவேண்டும்.

இந்தச் சூளுரையோடு திரும்பிப்பார்க்கிறேன்.

மனசு சுருங்கிப் போகிறது.

அறிவியலுக்கென்று தமிழில் எல்லோரும் அறியும் ஏடுகள் இல்லை.

சில ஏடுகள் தவிர, அறிவியலுக்குப் பக்கங்கள் ஒதுக்கப் பத்திரிக்கைகள் இல்லை.



அழுத்துப் போன கருத்துக்களுக்கும், புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.



நம்மவர்கள் ஒரு கருத்தை மொழிபெயர்த்து முடிப்பதற்குள் அதன் முடிவே மாறிவிடுகிறது.

பழைய தமிழில் நாரெடுத்து புதிய விஞ்ஞானத்தில் பூத்தொடுத்து இந்த இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற நாளுக்கு ஏங்குகிறேன்.

நம் வரலாறு வணக்கத்திற்குரியது

உலகப் பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்தோம். உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்தோம்.

அவர்களுக்கு இல்லாததை நாம் கொடுத்தோமே.. நமக்கு இல்லாத நவீன உலகத்தை நாம் இறக்குமதி செய்தோமா?

முத்துக்களையும் மிளகையும் ஏற்றுமதி செய்த இனம் இன்று போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதா?



ஒன்று சொல்கிறேன்

ஓடிக்கொண்டே இருக்கிற உலகம் நம்மைத் திரும்பிப்பார்க்காது.

திரும்பிப்பார்த்தாலும் அதற்குத் தெரிகிற தூரத்தில் இப்போது நாம் இல்லை.

இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விஞ்ஞான விளக்கை ஏற்றிவையுங்கள்.

துருப்பிடித்துப்போன படைப்பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில் தம்மைத் துலக்கிக்கொள்ளட்டும்.

புலன்களை நீவிவிடுகிற பொழுதுபோக்கிலிருந்து விஞ்ஞான சாதனங்கள் சற்றே விடுபடட்டும்.



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,



இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.

ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.



நம்வாழ்க்கை வாக்கியம் இனி இதுவாகத்தான் இருக்கவேண்டும்



ஓ விஞ்ஞானமே!

அறிவு கொடு!

ஏ தமிழா!

உணர்வு கொடு!
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 16, 2012 2:29 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by Manian Fri Mar 16, 2012 2:33 pm

தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர் தமிழன் விழிப்புணர்வு சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் (கூடங்குளம் - முல்லை பெரியார் - தமிழ் ஈழம் ) தன் தலை காட்டாதது ஏன் தோழர் ?
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by dhilipdsp Fri Mar 16, 2012 2:46 pm

Manian wrote:தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர் தமிழன் விழிப்புணர்வு சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் (கூடங்குளம் - முல்லை பெரியார் - தமிழ் ஈழம் ) தன் தலை காட்டாதது ஏன் தோழர் ?
ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால்,
அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து
கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய
பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு
கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட
பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட
எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர்
கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட
எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், இலங்கை வரலாற்றை, இலங்கை மண்ணை புரிந்து
கொள்ளாத தமிழப் பெருமக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை நான் சொல்ல
விரும்புகின்றேன். உண்மையில் சொல்லப் போனால் இலங்கை என்பது பழைய கடற்கோளால்
மூழ்கிப் போன லெமூரியா கண்டத்தின் ஓர் எச்சம். மூன்றாம் கடற்கோளில்
மூழ்கிப் போனது குமரிக் கண்டம். அதற்கு இலக்கியச் சான்று இருக்கின்றது.
அங்கு மூழ்கிப் போன தீவு குமரிக்கண்டம், நாவரந்தீவு, லெமூரியா கண்டம் அது
பிளவுப்பட்டுப் போய் ஒதுங்கிய மூழ்கிய, மலையின் மூழ்காத உச்சிதான் இலங்கைத்
தீவு. அந்த லெமூரியா கண்டம்தான், அந்தக் குமரிக் கண்டம் தான் ஆதித்தமிழன்
பிறந்த பூர்வீக மண். ஆகவே தமிழன் தோன்றிய மண் அந்த மண். தமிழன் அவன்
தொப்புள்கொடி மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால் அந்த மண்ணில்
பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மன்னாரில்
இருக்கக்கூடிய பாறையும், மதுரையில் இருக்கக்கூடிய பாறையும்
ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுச் செய்யபட்டபோது ஒரு பூகோளம் என்ற முடிவு
எடுக்கப்பட்டது. மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே
நிலத் தொடர்ச்சி என்று பூகோளம் சொல்கின்றது. வரலாறு சொல்கின்றது, பூகோளம்
சொல்கின்றது. ஆனால் அங்கு தமிழன் இருக்க இடத்திற்கு போராடிக்
கொண்டிருக்கின்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். இந்திய
அரசே!, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு
வார்த்தை! ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை
வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில்,
இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான்.
நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய்! நிலா பூமியிலிருந்து 3
இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ!
16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலங்கையை கவனிக்காதிருப்பதில் என்ன
நியாயமென்றுக் கேட்கின்றோம். இங்கு 16 கிலோமீற்றரில் தமிழன் செத்துக்
கொண்டிருக்கின்றான். தமிழச்சி செத்துக்கொண்டிருக்கிறாள்.


கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக
விடமாட்டோம்
இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண்.
இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே
மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது
என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை
ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன
என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை
வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது
கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை
இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில்
வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக
உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக
விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை
கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம்
அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில்
இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா.
சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை
தொடங்கவேண்டும்.
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by Manian Fri Mar 16, 2012 2:49 pm

இப்போதாவது - இப் பெருமகனுக்கு தோன்றியதே ....மிக தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ...தொடருங்கள்
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by dhilipdsp Fri Mar 16, 2012 4:19 pm

Manian wrote:இப்போதாவது - இப் பெருமகனுக்கு தோன்றியதே ....மிக தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ...தொடருங்கள்
  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... 446419
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 16, 2012 7:01 pm

நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க முடியாது ; இறங்கி வாருங்கள்!
  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... 509975   தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... 509975   தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... 509975
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

  தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ... Empty Re: தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum