தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுவனும் திருடர்களும்

Go down

சிறுவனும் திருடர்களும்  Empty சிறுவனும் திருடர்களும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 28, 2011 5:54 pm

ஒரு மலைக் கிராமத்தில் நிறையக்
குடும்பங்கள் வசித்து வந்தன. அங்கே ராமன் எனும் பணக்காரர் ஒருவரும்
இருந்தார். திருடர்களின் தொல்லையால் அந்தக் கிராமமே சிரமப்பட்டு வந்தது.
தினமும் திருடர்கள் அங்குள்ள வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைத்
திருடிச் சென்றனர். காவலர்கள் திருடர்களைப் பிடிக்க எவ்வளவுதான் முயற்சி
செய்தாலும் அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. திருடர்கள் சுலபமாகத் தப்பிச்
சென்றனர்.

ராமனுக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டில் நிறையப் பணியாட்கள் வேலை
செய்தனர். ஒரு நாள் அவர் வீட்டில் திருடர்கள் வந்து திருடப்போவதாக
அவருக்குச் செய்தி கிடைத்தது. ராமன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்று எல்லா பணியாட்களிடமும் சொல்லி வைத்தார்.

அடுத்த நாள் இரவு ஒரு சிறுவன் ராமனின் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு
யாருமில்லை. அவன் பணியாட்களிடம் கேட்டான்:""ஐயா, எனக்கு மிகுந்த பசியாக
இருக்கிறது. உண்பதற்குச் சிறிது உணவு கொடுங்கள். சாப்பிட்டுவிட்டு, இரவு
இங்கே தங்கி நாளைக் காலையில் நான் சென்றுவிடுகிறேன்.''

இவன் திருடர்களின் கையாளாக இருப்பானோ என்று சந்தேகப்பட்ட பணியாட்கள் அவனைத்
திட்டினார்கள். சத்தம் கேட்டு அங்கே வந்த ராமன் விஷயமறிந்தார். பிறகு அவர்
சிறுவனிடம் சொன்னார்:

""தம்பி ஊரே திருடர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் உன்னை
இங்கே இரவு தங்க வைப்பது சிரமம். நீ இங்கே சாப்பிட்டுக்கொள். ஆனால் நீ
வெளியேதான் தங்கிக்கொள்ள வேண்டும்.''

சிறுவன் அங்கே போதுமான அளவு உண்டான். பிறகு வெளியே வந்தான். அந்த இரவு
நேரத்தில் எங்கே செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே ராமன் வீட்டு
வாசலில் இருந்த ஒரு மரத்தில் ஏறி பாதுகாப்பாக சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

நள்ளிரவானது. திருடர்கள் ராமனின் வீட்டிற்கு வந்தார்கள். அவரது வீட்டுக்
கதவை உடைத்தார்கள். மரத்தின் மேலிருந்த சிறுவன் ஓசை கேட்டு கீழே
பார்த்தான். "எனக்கு உதவியவரின் வீட்டைக் கொள்ளையடிக்கப் பார்க்கிறார்களே!
இவர்களைச் சும்மாவிடக்கூடாது...' என்று நினைத்தான் அவன். உடனே
ஓசையெழுப்பாமல் கீழே இறங்கிச் சென்றான். சில நிமிடங்களுக்குள் காவலர்களை
அழைத்து வந்தான். ராமனின் வீட்டை முற்றுகையிட்ட காவலர்கள் திருடர்களை
சுலபமாகப் பிடித்தனர்.

ராமன் காவலர்களுக்கு நன்றி சொன்னார். அப்போது தலைமைக் காவலர் சொன்னார்:
""எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம். எங்களை அழைத்து வந்தவன் இந்தச்
சிறுவன்தான். நீங்கள் இவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்...''

ராமன் சிறுவனைப் பார்த்தார். இந்த நல்ல பையனைப்போய் சந்தேகப்பட்டு இரவு
நேரத்தில் வெளியே அனுப்பிவிட்டோமே என்று வருந்தினார். அவர் அவனுக்கு
அறிவுச்செல்வன் என்று பெயரிட்டு தன் வளர்ப்பு மகனாக்கிக்கொண்டார்.

அறிவுச்செல்வன் அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளியில் இப்போது நன்றாகப் படித்துவருகிறான்.

இளம் படைப்பாளி:
எஸ்.தர்மேஸ்வரன்,
எட்டாம் வகுப்பு "அ' பிரிவு,
பிஷப் ஹீபர் மேனிலைப் பள்ளி,
திருச்சி - 8.

[You must be registered and logged in to see this image.] தினமணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum