தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புத்தரும் சிறுவனும்

2 posters

Go down

புத்தரும்  சிறுவனும் Empty புத்தரும் சிறுவனும்

Post by karumalaithamizhazhan Sat Oct 25, 2014 10:57 am

புத்தரும்   சிறுவனும்
     பாவலர் கருமலைத்தமிழாழன்
 
ஒருசமயம்   புத்தரவர்   மரத்தின்   கீழே
            ஒருமனமாய்த்   தியானத்தில்   அமர்ந்தி   ருந்தார்
தருநிழல்தான்   என்றாலும்   கோடைக்   காலம்
            தந்தவெப்பம்   தாளாமல்   உயிரி   னங்கள்
பெருந்தணலில்   இருப்பதுபோல்   தவித்த   போது
            பெருந்தவத்து   ஞானியுமே   தாங்கி  டாமல்
திருவுடல்தான்    சோர்வடைய   வியர்வை   கொட்ட
            திறந்தவெளி    மண்மீது   மயங்கி   வீழ்ந்தார்
 
ஆடுமேய்க்கும்    சிறுவனவன்   அந்தப்   பக்கம்
            ஆடுகளை   மேய்த்தபடி   வந்த   போது
நாடுபோற்றும்   புத்தரவர்    மயங்கி   ருந்த
            நலிந்தகாட்சி   கண்டருகில்   சென்று   பார்த்தான்
காடுவாழும்   கீழ்ச்சாதிக்   காரன்   நானோ
            கண்ணியவான்   உடல்தொட்டுப்   பார்த்தல்   தீட்டு
ஈடுயிணை    அற்றவரின்   தூய்மை   கெட்டே
            இங்குள்ளோர்   ஏசுவரென்    றஞ்சி   நின்றான்
 
மயங்கிருக்கும்   அவரைவிட்டுப்   போவ   தற்கும்
            மனமின்றி   ஏதுசெய்தால்    தெளிவா   ரென்றே
அயல்நின்று   சிந்தித்து   நீர்தெ   ளித்தால்
            அவர்மயக்கம்   தெளியுமென்றே   முடிவு   செய்து
இயல்பான   தாழ்ந்தமனப்   பான்மை   யாலே
            இனியஉடல்   தொட்டிடாமல்    செய்ய  எண்ணி
முயன்றாட்டை    இழுத்துவந்து   முகத்தின்    நேரே
            முன்நிறுத்திக்   காம்பில்பால்   கறந்து  விட்டான்
 
 
 
 
புத்தர்தாம்   கண்விழிக்கக்   கரங்கள்   கட்டிப்
            புறமொதுங்கி   அச்சிறுவன்   எதிரே   நின்றான்
சத்தியத்துப்   புத்தரவர்   எழுந்த   மர்ந்து
            சாந்தமாகத்   தாகத்தைத்   தணிப்ப  தற்கே
உத்தமனாம்   சிறுவன்நீ   பால்க  றந்தே
            உன்கரத்தால்   எனக்களிப்பாய்   என்று   கேட்க
இத்தரையில்   கீழ்ச்சாதிச்   சிறுவன்   நானோ
            இனியபாலைத்   தருவதுதீட்   டென்று  ரைத்தான்
 
உயர்சாதிக்   காரரான   உங்க   ளுக்கே
            ஊரில்கீழ்ச்   சாதியென்றன்   கையால்  தந்தால்
உயர்ந்தவுங்கள்   தூய்மைக்கே   களங்கம்   சேர்க்கும்
            உலுத்தனென்ற   பாவமுமே   சேரும்  என்றே
அயல்நின்று   சிறுவனவன்   சொன்ன   சொல்லை
            அமைதியாகக்   கேட்டபுத்தர்   சிரித்த  வாறு
மயல்நெஞ்சில்   கொண்டுள்ளாய்   அறியா   மையால்
            மதியற்றார்   உரைத்தசொற்கள்    இவைக  ளென்றார்
 
கீழ்ச்சாதி   மேல்சாதி   என்ப   தெல்லாம்
            கீழோர்கள்   கட்டிவைத்த   பொய்யின்  மூட்டை
ஊழ்வினையால்   வந்ததன்று   அறிவி   ருந்தும்
            உய்த்துணரா   அறிவிலிகள்   உதிர்த்த   சொற்கள்
ஆழ்ந்திங்கே   சிந்தித்தால்   அனைவ   ருக்கும்
            அவர்தம்மின்   உடல்ரத்தம்   சிவப்பு   ஒன்றே
வாழ்கின்ற   வாழ்க்கைதான்   உயர்வு   தாழ்வை
            வழங்குகின்ற   உண்மையினை   அறிவாய்  என்றார்  
 
 
 
 
 
 
 
அறநெறியை   நீதியினைப்   கடைப்பி  டித்தே
            அதன்வழியில்   நடப்பவனே   உயர்ந்த   சாதி
மறநெறியை   விட்டன்பும்   கருணை   யோடும்
            மற்றவரை   அணைப்பவனே   உயர்ந்த   சாதி
பிறப்புதனில்   உயர்வென்றும்   தாழ்வு   என்றும்
            பிரிவொன்றும்   இல்லையிதை   உணர்தல்   வேண்டும்
புறத்தினிலே   நாம்சூட்டி   வைத்தி  ருக்கும்
            புரையிதனை   அறுத்தெறிய   வேண்டு   மென்றார்
 
உணர்விழந்த   போதெனக்கே    கருணை   யோடே
            உதவியநீ   உண்மையிலே   உயர்ந்த   சாதி
உணவுதனை   நீதந்தால்   அமுத   மாகும்
            உன்கரத்தால்   பால்கறந்து   தருவாய்   என்றார்
மனவிருள்தான்   அகன்றிடவே   மகிழ்ச்சி   யோடு
            மறுப்பின்றிப்   பால்கறந்து   சிறுவன்   தந்தான்
தனதுதாகம்   தீரப்பால்   குடித்த  புத்தர்
            தலைதடவிச்   சிறுவனையே  வாழ்த்திச்   சென்றார்
 
 
                                    *************
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

புத்தரும்  சிறுவனும் Empty Re: புத்தரும் சிறுவனும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 28, 2014 9:43 pm

அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum