தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு குழவியின் குரல்...
+8
அ.இராமநாதன்
RAJABTHEEN
நிலாமதி
செய்தாலி
கவிக்காதலன்
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
12 posters
Page 1 of 1
ஒரு குழவியின் குரல்...
[You must be registered and logged in to see this image.]
புவனமெங்கும் பெய்தமழையில்
நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும்
வெள்பனியைப் போன்றவளவள்...!
மயிலிறகால் வருடினாலும்
கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல
மென்மையான அன்பைக்
கொண்டவளவள்...!
நட்பும் , காதலும் அவளின்
தாய்மைக்கு ஈடுகொடுக்க
இயலாமல் தலைதெறிக்க ஓடும் !
ஏனென்று காரணம் விளங்கவில்லை ,
எனக்கும் உனக்குமான
அன்புக்கால அட்டவணை
என் ஆறுவயதிலேயே
அழிந்துபோனது.....
அணைக்கக் கூட அரவணைப்பற்ற
அன்பர்களெல்லாம் எனக்கு
அயலார்களாகவே தோன்றிய
தருணமது....!
உன் அன்பை எனக்கு
இறந்துதான் உணர்த்தவேண்டும்
என்று நினைத்தாயா ?
காலதேவனின் கைகளில் சிக்கி
என்னை கவலைக்கடலில்
ஆழ்த்திச் சென்றாயே ?
நீ இருந்து நான் பெற்ற
இன்பங்களை விட,
நீ இறந்து நான் பெற்ற
துன்பங்கள் தான்
நெடுந்தூரமாய்ப் பயணிக்கின்றன...
என்னிரவின் தூக்கங்கள்
அனைத்தும் துக்கத்தின்
விளிம்பிலேயே நின்றுகொண்டு
வரமறுத்தன.....
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துத் தூங்கும் எனக்கு
தென்றல் காற்று மூச்சுத்
திணறியது...!
தூக்கத்தில் உன் சேலைநுனியைத்
தேடித்திரியும் என் கைகள்
இன்று இருட்டில் தேடித்
துழாவித் துவண்டு போயின....!
நிதம் காலை காக்கைக்குச்
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர் .....
என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை....!
தினம் இரவில்
வானத்தைப் பார்த்தே
கண் அயர்கிறேன் ...
நீ நிலவாக வருவாயா?
மேகமாக விரிவாயா ?
விண்மீனாய் திரிவாயா ?
என்ற ஏக்கத்தில்.....
அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!
புவனமெங்கும் பெய்தமழையில்
நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும்
வெள்பனியைப் போன்றவளவள்...!
மயிலிறகால் வருடினாலும்
கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல
மென்மையான அன்பைக்
கொண்டவளவள்...!
நட்பும் , காதலும் அவளின்
தாய்மைக்கு ஈடுகொடுக்க
இயலாமல் தலைதெறிக்க ஓடும் !
ஏனென்று காரணம் விளங்கவில்லை ,
எனக்கும் உனக்குமான
அன்புக்கால அட்டவணை
என் ஆறுவயதிலேயே
அழிந்துபோனது.....
அணைக்கக் கூட அரவணைப்பற்ற
அன்பர்களெல்லாம் எனக்கு
அயலார்களாகவே தோன்றிய
தருணமது....!
உன் அன்பை எனக்கு
இறந்துதான் உணர்த்தவேண்டும்
என்று நினைத்தாயா ?
காலதேவனின் கைகளில் சிக்கி
என்னை கவலைக்கடலில்
ஆழ்த்திச் சென்றாயே ?
நீ இருந்து நான் பெற்ற
இன்பங்களை விட,
நீ இறந்து நான் பெற்ற
துன்பங்கள் தான்
நெடுந்தூரமாய்ப் பயணிக்கின்றன...
என்னிரவின் தூக்கங்கள்
அனைத்தும் துக்கத்தின்
விளிம்பிலேயே நின்றுகொண்டு
வரமறுத்தன.....
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துத் தூங்கும் எனக்கு
தென்றல் காற்று மூச்சுத்
திணறியது...!
தூக்கத்தில் உன் சேலைநுனியைத்
தேடித்திரியும் என் கைகள்
இன்று இருட்டில் தேடித்
துழாவித் துவண்டு போயின....!
நிதம் காலை காக்கைக்குச்
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர் .....
என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை....!
தினம் இரவில்
வானத்தைப் பார்த்தே
கண் அயர்கிறேன் ...
நீ நிலவாக வருவாயா?
மேகமாக விரிவாயா ?
விண்மீனாய் திரிவாயா ?
என்ற ஏக்கத்தில்.....
அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
வார்த்தைகள் மனதை வருடுகிறது... அருமையான கவி வரிகள் வாழ்த்துக்கள் வ். வனிதா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு குழவியின் குரல்...
அம்மாவின் அன்பையும், அவருக்கான ஏக்கத்தையும் அருமையாக பிரதிபலிக்கிறது கவிதை.
தூக்கத்தில் சேலைநுனியைத் தேடித்திரியும் கைகளில் என் பால்யகாலத்தை நினைவு கூர்கிறேன்.
ஒப்புமை மட்டுமல்ல... இட்டு நிரப்பபடமுடியாத இடமும் அம்மாவினுடையது.
//கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல //
//நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும் வெள்பனி//
அம்மாவின் இயல்பை இதைவிட அருமையாய் வேறெப்படியும் சொல்லமுடியாது.
//அன்புக்கால அட்டவணை// வார்த்தைப் பிரயோகத்தையும் ரசித்தேன்.
கடைசி வரிகள் அம்மாவுக்கான ஏக்கத்தின் உச்சம்...
ஏக்கமுள்ள அத்தனை பேருக்கும் இது நிறைவேறட்டுமே....
தூக்கத்தில் சேலைநுனியைத் தேடித்திரியும் கைகளில் என் பால்யகாலத்தை நினைவு கூர்கிறேன்.
ஒப்புமை மட்டுமல்ல... இட்டு நிரப்பபடமுடியாத இடமும் அம்மாவினுடையது.
//கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல //
//நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும் வெள்பனி//
அம்மாவின் இயல்பை இதைவிட அருமையாய் வேறெப்படியும் சொல்லமுடியாது.
//அன்புக்கால அட்டவணை// வார்த்தைப் பிரயோகத்தையும் ரசித்தேன்.
கடைசி வரிகள் அம்மாவுக்கான ஏக்கத்தின் உச்சம்...
ஏக்கமுள்ள அத்தனை பேருக்கும் இது நிறைவேறட்டுமே....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஒரு குழவியின் குரல்...
ஏக்கம் இருக்காதா பின்ன ? எங்க அம்மா பா !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
பாராட்டிய நெஞ்சங்கள் யாவற்றிர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
[You must be registered and logged in to see this image.]வ.வனிதா wrote:ஏக்கம் இருக்காதா பின்ன ? எங்க அம்மா பா !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு குழவியின் குரல்...
படிக்கும்போது மனசு என்னமோ கனத்துபோய்விட்டது...!
அருகில் அம்மா இல்லாத மகளின் உணர்வுகள் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது...!
//அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!//
ஆசை நிறைவேறட்டும்...
அருகில் அம்மா இல்லாத மகளின் உணர்வுகள் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது...!
//அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!//
ஆசை நிறைவேறட்டும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒரு குழவியின் குரல்...
*நிதம் காலை காக்கைக்குச்
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர் .....
*என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை....
*அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
*இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!
உண்மையில் இந்த வரிகளை படிக்கையில் எனக்கு மெய்சிலிர்த்தது
மிக அருமையான படைப்பு தோழி
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர் .....
*என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை....
*அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...
*இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!
உண்மையில் இந்த வரிகளை படிக்கையில் எனக்கு மெய்சிலிர்த்தது
மிக அருமையான படைப்பு தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு குழவியின் குரல்...
இது படைப்பல்ல தோழரே ! என் மன வலிகள் ! என் வாழ்வில் உண்மையாக நடந்தவை நடப்பவை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
வ.வனிதா wrote:இது படைப்பல்ல தோழரே ! என் மன வலிகள் ! என் வாழ்வில் உண்மையாக நடந்தவை நடப்பவை !
வரிகளுக்கு உண்மையில் உயிர் இருப்பதை மறந்துவிட்டேன் மன்னிக்கவும் தோழி
உங்களின் துக்கமும் ஏக்கமும் என்னால் உணரமுடிகிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு குழவியின் குரல்...
ஏக்கத்திற்கு விரைவில் விடிவு பிறக்கும் தோழி [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு குழவியின் குரல்...
தாய்மை விலை மதிபில்லாத்து ...........பாராட்டுக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு குழவியின் குரல்...
யதாத்தமான கவிவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுகிறேன் உங்களை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஒரு குழவியின் குரல்...
யதார்த்தமான் ஒரு நல்ல கவிதை...நன்றி
--------------------------------------------------
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'என் அன்னை' என்ற
கவிதையில் கடைசி வரிகள் இவை:-
(பகிர்தலுக்காக)
[You must be registered and logged in to see this image.]
=======================================
அம்மா..
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாக அகற்றின
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக்கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர் கொண்டேன்.
என் அன்னையே நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாத் தீரப்பு நாளில்
--------------------------------------------------
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'என் அன்னை' என்ற
கவிதையில் கடைசி வரிகள் இவை:-
(பகிர்தலுக்காக)
[You must be registered and logged in to see this image.]
=======================================
அம்மா..
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாக அகற்றின
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக்கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர் கொண்டேன்.
என் அன்னையே நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாத் தீரப்பு நாளில்
Last edited by அ.இராமநாதன் on Tue Mar 01, 2011 10:49 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு குழவியின் குரல்...
[You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'என் அன்னை' என்ற
கவிதையில் கடைசி வரிகள் இவை:-
(பகிர்தலுக்காக)
[You must be registered and logged in to see this image.]
=======================================
அம்மா..
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாக அகற்றின
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக்கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர் கொண்டேன்.
என் அன்னையே நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாத் தீரப்பு நாளில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு குழவியின் குரல்...
அ.இராமநாதன் wrote:ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'என் அன்னை' என்ற
கவிதையில் கடைசி வரிகள் இவை:-
(பகிர்தலுக்காக)
[You must be registered and logged in to see this image.]
=======================================
அம்மா..
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாக அகற்றின
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக்கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர் கொண்டேன்.
என் அன்னையே நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாத் தீரப்பு நாளில்
நெஞ்சில்பதிந்த வரிகள் மிகவும் அழாகாக உள்ளது
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு குழவியின் குரல்...
அருமையான வரிகள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
ஒரு குழந்தையின் குரல் அருமை பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு குழவியின் குரல்...
வார்த்தை எனும் அமுதைக் கொடுத்து
கவிதை எனும் மழையாய்
இங்கே
உங்கள் கவி வரிகள்
அனைத்தும் அருமை
தொடரட்டும்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
கவிதை எனும் மழையாய்
இங்கே
உங்கள் கவி வரிகள்
அனைத்தும் அருமை
தொடரட்டும்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: ஒரு குழவியின் குரல்...
நன்றி தோழரே! மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு குழவியின் குரல்...
வரிகள் வெண்பஞ்சு போன்று மென்மையாக உள்ளது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» குப்பைதொட்டியிலிருந்து குரல்.......
» குரல்!!!!!!!!!!!
» புது குரல்
» இளைஞனின் இதய குரல்
» தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
» குரல்!!!!!!!!!!!
» புது குரல்
» இளைஞனின் இதய குரல்
» தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum