தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Today at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

3 posters

Go down

உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  Empty உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

Post by சங்கவி Mon Oct 18, 2010 8:44 pm

கணனியில் ஏதோ வேலையாக இருக்கிaர்கள். திடீரென்று கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இயக்கமேதுமற்று உறைந்து (freeze) விடுகிறது. அல்லது நீலத் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழை செய்திகளைக் காண்பிக்கிறது. இந்த இரு வகையான சிக்கலும் எல்லாக் கணனிப் பயனர்களும் வழமையாக எதிர்கொள்பவைதான்.
இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவைதான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற்
கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்கலாம்.

கணனி உறைந்துவிட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமல் போவது ஒரு பொதுவான அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்தது போல் டாஸ்க் பாரில் ஒட்டிக்கொண்டிருக்கும் மறுபடி முன்னர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதும் கணனி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அறிகுறி.

சில வேளைகளில் This Program Performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது. (Not Responding) போன்ற பிழைச் செய்திகளை விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செயற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணனி தானாக அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

நீலத் திரை மரணம் (blue Screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும் இந்த நிலையை Crash க்ரேஷ் எனப்படுகிறது.

குறைபாடுகளுள்ள அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள், மற்றும் கணனி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணனி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முக்கிய காரணங்களாகும்.

இவற்றுள் நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவான ஒரு காரணியாகும். கணனி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும். கணனி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக சுமை ஏற்றும்போது கணனி தற்காப்பு நடவடிக்கையாக க்ரேஷ் ஆகிவிடுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணனி உறைந்து விடுவதற்கான பொதுவான காரணமாகும். அதனால் நீங்கள் பயன்படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கணனியின் நினைவகச் சுமையைக் குறைத்துவிடும்.

சில எப்லிகேசன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணனி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.

கணனி எதிர்பாராத விதமாக க்ரேஷ் ஆகும்போது கணனியில் இயக்கமே நின்றுவிடும். கணனியைப் பழுது பார்க்கு முன்னர் கணனி க்ரேஷ் ஆவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வது நன்மை பயக்கும். அதன் முதல் படியாக கணனியை ரீபூட் (reboot) செய்ய வேண் டும். கணனி முறையாக ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.

உடனடியாக ரீபூட் ஆக வில்லையானால் கணனியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட் க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட் ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் எப். 8 விசையை அழுத்துவதன் மூலம் கணனியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மேனுவை வரவழைத்து சேப் மோடில் நுழையலாம்.

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணனியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேசனுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும்.

இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணனி தடுமாறுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகிவிடுகிறது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும் போது கூட கணனி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.

இவ்வாறான சகந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசளை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl+ Alt+ Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நிறுத்தி விடலாம்.

டாஸ்க் மெனேஜர் மூலமாகவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt+ Delete விசைகளை அழுத்துங்கள். கணனி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.

ரீபூட் ஆக வில்லையெனின் கணனியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படியும் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணனியிலுளள பவர் பட்டனை ஐந்து வினாடிகள தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டே இருங்கள் கணனி முழுமையாக சட்டவுள் ஆகிவிடும்.

கணனி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாததது. அதனால் கணனியில் முக்கியமான பைல்களை நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க மறந்து விடாதீர்க்கள்.
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  Empty Re: உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

Post by உதுமான் மைதீன் Tue Oct 19, 2010 3:59 am

உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  548321 உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  548321
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  Empty Re: உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 19, 2010 10:43 am

மிகவும் பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?  Empty Re: உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum