தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒருநாள் ஒருஇரவு...

3 posters

Go down

ஒருநாள் ஒருஇரவு... Empty ஒருநாள் ஒருஇரவு...

Post by RAJABTHEEN Sun Mar 06, 2011 11:56 pm

என்னங்க என்ன‌ங்க எழுந்திருங்க..என்று என்மனைவி செல்வி என்னை எழுப்பினாள்.
என்னடி இந்த நடுராத்திரியில எழுப்புற.. மத்ததை நாளைக்கு பாத்துக்கலாம்..
எனக்கு டயடா இருக்கு, காலையில சீக்கிரமா ஆபீஸ் போகணும் என்றபடி மறுபுறம்
திரும்பி படுத்தேன். அய்ய ஆசையப்பாரு., அருணுக்கு பால்பவுடர்
தீர்ந்துபோச்சி, அழ ஆரம்பிச்சிட்டான், போய் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல ஒரு
செரிலாக் வாங்கிட்டுவாங்க.. செல்வி மறுபடியும் எழுப்பினாள். சே உன்தொல்லை
தாங்கலைப்பா, என்று எரிச்சலோடு படுக்கையைவிட்டு எழுந்து சட்டையை
மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

மணி பனிரெண்டு ஆயிருச்சி; நாலுதெரு
நடந்து போகணுமே என்று எரிச்சலோடு வீட்டைவிட்டு கிளம்பினேன். அய்யயோ
தெருவிளக்கெல்லாம் அணைந்திருக்கே., இந்த முனிஸிபாலிட்டியில விளக்கை
சரிபண்ணுறேன்னு இப்ப அப்போன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க. ஆஹா இன்னக்கி
ரொம்ப இருட்டாஇருக்கே.. அமாவாசையா இருக்குமோ.. என்று நினைத்தபடியே
நடந்துவந்துகொண்டிருந்தேன்.

ஆ இந்ததெருவ கடந்துபோகணுமே.. போன
ரெண்டுவாரத்துக்கு முன்னாடி செத்துபோன மாரியம்மா ஆவியா நடமாடுதான்னு ஒரு
கேள்வி. கல்யாணமான இரெண்டாவது நாளே புருசனை பிடிக்காம ஒரே சண்டையாம். சண்டை
முத்திப்போயி ஒருநாள் மண்னெண்ணைய ஊத்திக்கிட்டு தற்கொலை
பண்ணிக்கிட்டாளாம். நிறைவேறாத ஆசையோட செத்துப்போனா ஆவியா அலைவாங்களாமே..
அப்படியாங்க..

மனசுல லேசான ஒருபயம்.,இருந்தாலும் வெளிக்காட்டலாமா;
நாங்கல்லாம் யாரு புறாவுக்கே பெல்லடிச்சவங்களாச்சே.. நானெல்லாம்.. இப்படியே
சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப இதுபோதும். தைரியத்துடன் நடக்க
ஆரம்பித்தேன். பையன் அழுதுக்கிட்டு இருப்பானே., சீக்கிரமா பால்பவுடர்
வாங்கிட்டுபோகணும் என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நாலுதெருவும்
கடந்து மெயின்ரோட்டுக்கு வந்தாச்சி. கடையில் செரிலாக் 2 டப்பா வாங்கினேன்.
மறுபடியும் வேறொரு நாள் தூக்கத்துல செல்வி அலையவிட்டிர‌க்கூடாது பாருங்க
அதான் 2 டப்பா.

என்னாச்சி இந்த மனுசனை இன்னும் காணலை. கடையில
பால்பவுடர் வாங்கப்போனாரா இல்ல கடையையே விலைக்கு வாங்கப்போனாரா.. அருண்வேற
அழுதுக்கிட்டே இருக்கானே என்னாச்சின்னு தெரியலியே.. நீ அழாதடா என்செல்லம்.
அப்பா இப்போ வந்திருவாரு.. ஆரோரோ ஆரிராரோ என்செல்லம் கண்ணுறங்கு..
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஒருநாள் ஒருஇரவு... Empty Re: ஒருநாள் ஒருஇரவு...

Post by RAJABTHEEN Sun Mar 06, 2011 11:57 pm

அருண் அழுதுக்கிட்டு இருப்பானே.. நடையில் வேகம் கூட்டினேன். ஆஹா 4வது தெருவ
கடந்து மூணாவது தெருவுல வந்துகொண்டிருந்தேன். அடுத்த தெரு மாரியம்மா தெரு.
இப்போது மனதுல உள்ள பயபூதம் முழுச்சிகிருச்சி. அடடா இன்னக்கி
நான்வீட்டுக்கு போனாமாதிரிதான். ஊவ்வ் ஊவ்வ்வ்... தூரத்தில் நாயோ நரியோ
ஊளையிடுத சத்தம். மெல்ல ஒரு சிலிர்ப்பு. சில்லுன்னு காற்று வீசியது.
மாரியம்மா தெருவுக்கு வந்தாச்சி.. மெதுவா வீசின காத்து இப்போ வேகமாக
வீசியது. மரங்கள் வேகமாக ஆடின. கிளைகள் ஒடிந்து என்மேல் விழுவதுபோல அருகில்
வந்து பயமுறுத்தியது. மனதில் திக்திக். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ
தெரியலியே..

அருகில் இருந்த வீட்டுகளின் ஜன்னலெல்லாம் டப்..டப்..
டபடப.. டபடப.. வேகமாக அடித்தது. அதேசத்தம் என் மனதிலும்.. மறுபடியும்
வேகவேகமா ஜன்னல்களின் சத்தம். இப்போது பயத்தில் நடையில் வேகம். தூரத்தில்
வெள்ளை வெளெறென ஒரு உருவம் தோன்றி மறைந்தது. அது மாரியம்மாவாத்தான்
இருக்கும். நாய் மறுபடியும் ஊளை ஊவ்வ்வ்.. ஊவ்வ்வ்.. ரோட்டில் கிடந்த‌
குப்பையெல்லாம் என்முகத்தில்.. தட்டிவிட்டுக்கொண்டே நடந்தேன். பின்னால்
திரும்பினால் மறுபடியும் அதே உருவம் தோன்றி மறையுது. ஆஹா துரத்த
ஆரம்பிச்சிருச்சே.. வேகமாக ஓடினேன். மாரியம்மா தெருவை கடந்து எங்கத்தெரு..
பின்னால் யாரோ துரத்துவது போல இருந்தது. பின்னால் திரும்பிபார்க்காமல்
ஓடினேன். தடதட சத்தம். என்னை பிடித்துவிடுவது போல இருந்தது. முதுகில் யாரோ
அடிப்பதுபோல டமடம.. டமடம.. சத்தம்.

ஓட்டமும் நடையுமாக
வந்துகொண்டிருந்தேன். தூரத்தில் என்மனைவி வீட்டுவாசலில்.. அடடா அடடா..
செல்வி பேய்வருவது தெரியாமல் வீட்டுவாசலில் நிற்கிறாளே.. செல்வி..
வீட்டுக்குள்ள ஓடிவிடு ஓடிவிடு பேய்வருது பேய்வருது.. என்று கத்த
ஆரம்பித்தேன். என்னஇது.. நான் கத்தியும் உள்ளே போகாமல் நிற்கிறாளே..
மறுபடியும் கத்த ஆரம்பிக்க.. வெறும் காத்துதான் வருது.. ஆஹா.. தொண்டை
வற‌ண்டுவிட்டதுபோல.. நாக்கு பே..பே..பே...

என்னங்க.. என்னங்க..
சீக்கிரம்வாங்க.. மழை தூத்துகிறதுகூட தெரியாம மெய்மறந்து வாரீங்களே.. என்ற
செல்வி என்னை அணைத்தபடி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஒருநாள் ஒருஇரவு... Empty Re: ஒருநாள் ஒருஇரவு...

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 12:01 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒருநாள் ஒருஇரவு... Empty Re: ஒருநாள் ஒருஇரவு...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 12:06 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒருநாள் ஒருஇரவு... Empty Re: ஒருநாள் ஒருஇரவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum