தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முல்லாவின் நகைச்சுவைகள்.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,''இந்த ஆண்டு நான் குடிக்க மாட்டேன்,''என்று சபதம் செய்தார்.அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது.அவர் கடையைத் திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க மகிழ்ச்சி.''முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது அருந்தலாம்.''என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய் மது அருந்தினார்.
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
Last edited by தோழி பிரஷா on Fri Mar 11, 2011 8:38 am; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு சென்று,நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக் கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.எனவே முல்லா அவனிடம் சொன்னார்,''நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம் என்று எண்ணாதே.நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.''அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்,''நீங்கள் நால்வருமா?''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.''அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா கடை வீதிக்கு தன கழுதை மீதேறி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே ஒரு பணக்காரன் தன குதிரையில் வந்து கொண்டிருந்தான்.முல்லாவைப் பார்த்து அவன் கிண்டலாக,''முல்லா,கழுதை எப்படியிருக்கிறது?''எனக் கேட்டான்.முல்லா அமைதியாக சொன்னார்,''கழுதை குதிரையின் மீது சென்று கொண்டிருக்கிறது
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லாவிடம் ஒருவர் வந்து,''நீங்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள்.எனக்கு கண்ணில் மிகுந்த வலி.அதற்கு தகுந்த மருந்தினைக் கூறுங்களேன்.''என்று நயந்து கேட்டார்.முல்லா சொன்னார்,''முன்பொரு முறை எனக்கு பல்லில் வலிவந்தது.அப்போது நான் வலித்த பல்லைப் பிடுங்கி விட்டேன்.''வந்தவர் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
அந்த ஊரில் முல்லா ஒருவரைத் தவிர யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு ஏழை முல்லாவிடம் வந்து வெளியூரிலிருக்கும் தன தங்கைக்குக் கடிதம் எழுதித் தரச் சொன்னான்.முல்லா சொன்னார்,''முடியாது.எழுதினால் கால் வலிக்கும்.''வந்தவன் திகைத்து,'அது எப்படி?'என்று கேட்டான்.முல்லா சொன்னார்,''என்னுடைய கையெழுத்தை என்னைத் தவிர யாராலும்படிக்க முடியாது.உன் சகோதரிக்கு நான் கடிதம் எழுதிக் கொடுத்தால்,அதைப் படித்துக் காட்ட,நான் உன் சகோதரியின் ஊருக்கு நடந்து தானே செல்ல வேண்டும்? அவ்வளவு தூரம் நடந்தால் கால் வலிக்காதா?''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஒரு நாள் முல்லா ஒரு பணக்காரரிடம் சென்று தனக்கு ஒரு பெரிய தொகை கடனாகக் கேட்டார்.அவ்வளவு பணம் எதற்கு என்று அவர் கேட்டார்.உடனே முல்லா,''நன் யானை வாங்கப் போகிறேன்,''என்றார்.பணக்காரர் சொன்னார் ,''உன்னிடமோ பணம் இல்லை என்கிறாய்.யானை வாங்கினால் உன்னால் அதை வைத்து பராமரிக்க முடியாது.''முல்லா சொன்னார்,''நான் உங்களிடம் கேட்டது பணம் தான்.அறிவுரை கேட்கவில்லை.'
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
மாலை நேரம்.மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க வந்தார்.அவருடன் வெகு நேரம் பேசினார்.நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை.முல்லா சொன்னார்,''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்.''நண்பரும் ஒப்புக்கொண்டார்.நண்பருக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் முல்லா.பின் திரும்பி வந்து பார்த்தபோது நண்பரைக் காணவில்லை.சிறிது நேரம் சென்றபின் நண்பர் மழையில் நனைந்து கொண்டே வந்தார்.''அடடா,மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?''என்று முல்லா அவரைக் கேட்டார்.நண்பர் நிதானமாகச் சொன்னார்,''இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதை என் மனைவியிடம் சொல்லிவிட்டு,அதனால் சமைக்க வேண்டாம் என்று வீட்டிற்குப் போய் சொல்லி வந்தேன்.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா தன் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்.கழுதை மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது .அது சந்தை வழியாக சென்று கொண்டிருந்தது.''முல்லா,எங்கே வேகமாகப் போகிறீர்?''என்று வழியில் சிலர் கேட்டனர்.முல்லா சொன்னார்,''என்னைக் கேட்காதீர்கள்.என் கழுதையைக் கேளுங்கள்.''''இது என்ன வேடிக்கையாயிருக்கிறது?''என்று அவர்கள் கேட்டனர்.முல்லா சொன்னார்,''இதில் வேடிக்கை ஒன்றுமில்லை.இது ஒரு வீம்பு பிடித்த கழுதை.நான் சொல்லும் பாதையில் இது போகாது.முரண்டு பிடிக்கும்.எனவே நான் தனியாக இருக்கும்போது இதை உதைத்து நான் விரும்பும் இடத்துக்குக் ஓட்டிச் செல்கிறேன்.ஆனால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். என் கழுதையை என்னாலேயே அடக்க முடியவில்லை என்று கேலி பேசுகிறார்கள்.கூட்டத்தைக் கண்டதும் கழுதையும் அதிகப் பிடிவாதம் பிடிக்கிறது.இதிலிருந்து ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கூட்டம் உள்ள இடத்தில் கழுதை போகும் இடத்துக்கே நான் போகிறேன்.தனியாக இருக்கும்போது அதை நான் ஒரு வழி பண்ணி விடுகிறேன்.கூட்டம் இருக்கும் இடத்தில் அதன் போக்கிற்குப் போக விடுவதால்,குறைந்த பட்சம் நான் அதன் எஜமானனாக இருக்கிறேன் என்ற போலித் தோற்றத்தை எல்லோர் முன்னிலையில் ஏற்படுத்திக் கொள்கிறேன்.'
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா தன குருவிடம் சொன்னார்,'' .இதோ,இவர்களெல்லாம் உங்களது சீடர்கள்.உங்கள் உபதேசப்படி இவர்கள் நடப்பதில்லை.அது தான் எனக்கு ஒரே வருத்தம்.''குரு கேட்டார்,''என்னுடைய எந்த உபதேசத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை?''முல்லா சொன்னார்,''எதுவானாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு உபதேசித்தீர்கள்.நான் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இருந்தாலும் இவர்கள் யாருமே என்னுடன் குடியைப் பகிர்ந்து கொள்வதில்லை.அதனால் நான் தனியே குடிக்க வேண்டியிருக்கிறது.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா,ஒரு நாள் இரவு,ஒரு மனிதன் தனக்கு கொஞ்சம் பணம் தர விரும்புவதைப்போலக் கனவு கண்டார்.அவன் மிகவும் தாராளமாக இருந்தான்.ஆகவே முல்லா,ஒரேயடியாக ஆயிரம் ரூபாய் கொடு என வலியுறுத்தினார்.அந்த ஆளோ ஐநூறு ரூபாய் வாங்கிக்கொள் என்றான் பின் அறுநூறு வாங்கிக்கொள் என்றான்.ஆனால் முல்லா முழுதாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்.அவன் பெருந்தன்மையானவனாகத் தெரிவதால் ஆயிரம் ரூபாய் தரச் சம்மதிக்கலாம் எனக்கருதினார்.எனவே ஏன் குறைக்க வேண்டும்?கடைசியில் அந்த ஆள் 950 ரூபாய் தர சம்மதித்தான்.ஆனால் முல்லாவோ ஆயிரத்திலிருந்து இறங்கவில்லை.'ஆயிரம் ரூபாய் தான்'என்று சப்தம் போட்டுச் சொன்ன முல்லா விழித்துக்கொண்டார்.கண்களைத் திறந்தார்.ஆளும் இல்லை பணமும் இல்லை.உடனடியாக அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னார்,''கோவிச்சுக்காதே.900,......800,.......700,.....600,....''ஆனால் அங்கு யாரும் இல்லை .
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா கால் நடை மருத்துவரிடம் போனார்.''என் குதிரை ரொம்பவும் சோம்பேறி ஆகிவிட்டது.ஓடவும் மாட்டேங்குது ,நடக்கவும் மாட்டேங்குது.ஒரு சக்திவாய்ந்த மருந்தைக் கொடுத்து அதை ஓடச் செய்யுங்கள்.''என்று மருத்துவரிடம் சொன்னார்.மருத்துவர் சொன்னார்,''இதற்கு ஒரு கசப்பான மருந்து இருக்கிறது.ஆனால் நேரடியாகக் கொடுத்தால் குதிரை குடிக்காது.எனவே இந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொள்.இந்த மருந்தை குழாயில் நிரப்பு.குழாயின் ஒரு முனையை குதிரையின் வாய்க்குள் வை. மறுமுனையை உன் வாயில் வைத்துக்கொள்.பின் மருந்து குதிரையின் தொண்டைக்குள் இறங்கும்படியாக ஊதிவிடு.''
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால் பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால் பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லாவின் புகழ் மீது பொறாமை கொண்ட சில பேர் முல்லா,மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும்
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.
சித்தாந்தங்களோ அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.
சித்தாந்தங்களோ அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஒரு நாள் மாலை.வீட்டின் முன் பகுதியில் முல்லா இங்கும் அங்கும் அமைதியின்றி நடந்து கொண்டிருந்ததை அவர் மனைவி கவனித்து என்ன விஷயம் என்று கேட்டாள்.''பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய நூறு தினார் கடனை நாளைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியுள்ளது.கையில் ஒரு தினார்கூட இல்லை.என்ன செய்வதென்றே புரியவில்லை.''என்றார் முல்லா.;அவரிடம் இந்த மாதம் தர முடியாது என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே?' என்றார் அவர் மனைவி.மனைவியின் அறிவுரையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றவர் திரும்ப வரும்போது உற்சாகமாக இருந்தார் .மனைவி கேட்டார்,''நீங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டாரா?''முல்லா சொன்னார்,''பாவம்,இப்போது அவன் அமைதியின்றி வீட்டின் முன் பகுதியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறான்.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது.அது புறாவைப் போல இருக்கும்.முல்லா இதற்குமுன் இப்பறவையைப் பார்த்ததில்லை.அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும்,வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை ''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா?ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,''என்று கூறிக்கொண்டே,அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார்.வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.பின் திருப்தியாக,''இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,''என்றார்.மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம்.நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால்,அது சரியா,தவாறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சிக்கிறோம்.பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல,நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம்.நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்;அதை நம்மால் பொறுத்தக்கொள்ள முடிவதில்லை.நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இதனால் தான் பிரச்சினைகளே.நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்ப்போமே
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
மேல் மாடியில் இருந்தவர்கள் எப்போதும் இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.கீழ்ப் பகுதியில் இருந்த முல்லா,''ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?எங்களால் தூங்க முடியவில்லை.''என்றார்.மேல் மாடியில் இருந்தவர்கள் சொன்னார்கள்,''நாங்கள் வாடகை கொடுக்கிறோம்;என்ன வேண்டுமானாலும் மேல் மாடியில் செய்வோம்.நீ யார் அதைக் கேட்க?'' உடனே முல்லா,கீழே வந்து வீட்டின் கீழ்ப் பகுதியைக் கடப்பாரையால் இடிக்க ஆரம்பித்தார்.உடனே மேல் மாடிக்காரர்கள் கேட்டார்கள்,''கீழ் பகுதியை இடித்தால் மேல் பகுதியும் விழுந்து விடுமே?ஏன் இடிக்கிறீர்கள்?''முல்லா சொன்னார்,''கீழ்ப் பகுதிக்கு நான் வாடகை கொடுக்கிறேன்;கீழ்ப் பகுதியில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.அதைக் கேட்க நீ யார்?''மேல் மாடிக்காரர்கள் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்தார்கள்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால் கடவுள் அருள் பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லாவிடம் ஒரு கொழுத்த ஆடு இருந்தது.சிறுவர்கள்,அதை வெட்டி விருந்து வைக்கச் சொல்லி முல்லாவை நச்சரித்தனர்.முல்லாவிற்கு மனம் இல்லை.சிறிது நாள் போகட்டும் என்றார்.சிறுவர்களோ விடவில்லை.''முல்லா,நாளை உலக அழியப் போவது உனக்குத் தெரியாதா?அதனால் இன்றே விருந்தை வைத்துக் கொள்ளலாம்.''என்றனர். முல்லா உடனே உல்லாசப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்து,அங்கு சென்று ஆட்டை வெட்டினார்.முல்லா சமைக்க ஆரம்பிக்கும் முன் சிறுவர்கள் அங்கிருந்த குளத்தில் குளிக்கப் போனார்கள்.முல்லா சமைக்க ஆரம்பித்தார்.சிறுவர்கள் குளித்து வந்த பின் பார்த்தால்,அவர்களின் ஆடைகளைக் காண வில்லை.முல்லாவிடம் அது பற்றி விசாரித்தனர்.முல்லா சொன்னார்,''அடே,உலகம் நாளை அழியப் போகிறது. உங்களுக்கு ஆடைகள் எதற்கு?எனவே உங்கள் ஆடைகளை அடுப்பில் போட்டு தான் சமையல் செய்தேன்.''முல்லாவை ஏமாற்ற நினைத்த சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
மன்னர் கண்ணாடியில் தன அசிங்கமான தோற்றம் கண்டு சிறிது நேரம் அழுதார்.இதைக் கண்டு பின்னால் இருந்த முல்லாவும் அழத் தொடங்கினார். அரசர் அழுகையை நிறுத்திய பின்பும் முல்லா நிறுத்தவில்லை.''எனக்காக வருத்தப்பட்டு நானே கொஞ்ச நேரம் தானே அழுதேன்?நீ ஏன் விடாமல் அழுகிறாய் முல்லா?''என்று கேட்டார் அரசர்.'கண்ணாடியில் ஒரு நிமிடம் உங்கள் முகத்தைப் பார்த்ததற்கே அழுதீர்களே?நான் உங்களைக் காலம் பூராவும் பார்க்கிறேனே,அதற்காகத்தான் கொஞ்சம் அதிகமாக அழுகிறேன்.' என்றார் முல்லா.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஒரு மன்னனிடம் இருந்த அறிவாளி சாகும்தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.அடக்கம் தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.அரசனும்தூதர்களை அனுப்பி அடக்கமான ஒருவரை தேடிப் பிடிக்கக் கூறினான்.இதைக் கேட்ட பணக்காரரான முல்லா,தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து,தூதர்கள் வரும் போதுமீன் வலையை சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.தூதர்கள் கேட்டார்கள்,'நீ பணக்காரனாய் இருந்தும் ஏன்இந்த மீன் வலையை சுமக்கிறாய்?'
முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''
'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு வேலையில் அமர்த்தப்பட்டார்.
அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''
முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''
'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு வேலையில் அமர்த்தப்பட்டார்.
அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா வீட்டில் இல்லாத பொது திருடன் ஒருவன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடிக் கொண்டு போய் விட்டான்.திருடியது யார் என பொறுமையாய்க் கண்டு பிடித்த முல்லா அத்திருடன் வீட்டுத் திண்ணையில் போய் படுத்துக் கொண்டார்.திருடன் காரணம் கேட்க,''என் பொருட்கள் எங்கிருக்கிறதோ அது தானே என் வீடு?''என்று எதிர்க் கேள்வி கேட்டார் முல்லா.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
மதுக் கடையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் முல்லா.அவர் ஒரு கோழை.ஆனால் மது அவருக்கு துணிச்சலைத் தந்தது.அப்போது அங்கு கொலைகாரன் போல் தோற்றமளித்த ஒருவன் வந்தான்.சுய நினைவில் இருந்தால் முல்லா அஞ்சி ஓடியிருப்பார்.ஆனால் மதுவின் துணையால் அவருக்கு அறவே அச்சம் இல்லை.அஞ்சாது அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த முரடன் அவர் காலின் மேல் ஓங்கி மிதித்தான்.முல்லாவுக்குக் கோபம் வந்தது.வெகுண்டெழுந்து கேட்டார்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்?இது வேண்டுமென்றா அல்லது வேடிக்கைகாகவா?''முரடன் ஓங்கி மிதித்ததில் முல்லாவுக்கு போதை இறங்கி விட்டது.சுய நினைவுக்கு வந்து விட்டார்.அந்த இடைவெளிக்குள் முரடனைககேள்விகேட்டுவிட்டார்.அந்தஆள்சொன்னான்,'காரியமாத்தாண்டா,'
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
வாரச் சந்தையில் மலிவான விலையில் கழுதை விற்பது முல்லாவின் வழக்கம்.அந்த ஊர்ப் பணக்காரருக்கு முல்லா எப்படி குறைவான விலையில் விற்கிறார் என்பது புரியவில்லை.எனவே அவரிடம் கேட்டார்,''எனக்கோ கழுதை வளர்க்க செலவேதுமில்லை.கழுதைகளைக் கவனிக்க அடிமைகள் இருக்கிறார்கள்.என் விவசாயிகள் கழுதைகளுக்கு உணவைக் கொடுத்து விடுகிறார்கள்.இருந்தும் என்னால் உன் அளவிற்கு என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடியவில்லையே,''முல்லா சொன்னார்,'நீங்கள் உங்கள் கழுதைகளை வளர்ப்பதற்கான உணவையும் உழைப்பையும் திருடுகிறீர்கள்.நானோ கழுதை களையே திருடி விடுகிறேன்.அவ்வளவுதான்.'
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஒரு நாள் இரவில் முல்லாவின் மனைவிக்கு பசியெடுத்தது.ஏதாவது தின்னக் கிடைக்குமா என்று பார்த்த போது ஒரு நாய் பிஸ்கட் தான் கிடைத்தது.அதை சாப்பிட்டதில் அது நன்றாகத் தான் இருந்தது.மறு நாள் அதை நிறைய வாங்கி வரச்சொல்லி முல்லாவிடம் சொன்னாள்.முல்லா கடையில் நிறைய நாய் பிஸ்கட் வாங்கினார்.கடைக்காரன்,''உங்கள் நாய் சிறியது தானே?இவ்வளவு எதற்கு?''என்று வினவினான்.
'நாய்க்கு அல்ல.என் மனைவிக்கு,'என்றார் முல்லா.
''ஐயோ,இது நாய்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.இதில் மெல்லக் கொல்லும் விஷம் இருக்கிறது.உங்கள் மனைவி இதை சாப்பிட்டால் செத்துப் போவார்.''என்றார் கடைக்காரர்.
ஆறு மாதங்களுக்குப் பின் முல்லாவின் மனைவி இறந்து போனார்.''நான் அப்போதே சொன்னேன்,நீங்கள் கேட்கவில்லை,''என்றான் கடைக்காரன்.
'இல்லை அந்த பிஸ்கட் அவளைக் கொல்லவில்லை.கார்களுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியதால் காரில் அடிபட்டு இறந்து விட்டாள்,'என்றார் முல்லா.
சூழ்நிலை எப்படியிருந்தாலும் உங்கள் முடிவிலேயே நீங்கள் நிலைத்து நின்று விடுகிறீர்கள்.அது உங்கள் ஆணவத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்து விடுகிறது.அதன் மேல் உங்கள் மனம் நின்று கொள்கிறது.
'நாய்க்கு அல்ல.என் மனைவிக்கு,'என்றார் முல்லா.
''ஐயோ,இது நாய்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.இதில் மெல்லக் கொல்லும் விஷம் இருக்கிறது.உங்கள் மனைவி இதை சாப்பிட்டால் செத்துப் போவார்.''என்றார் கடைக்காரர்.
ஆறு மாதங்களுக்குப் பின் முல்லாவின் மனைவி இறந்து போனார்.''நான் அப்போதே சொன்னேன்,நீங்கள் கேட்கவில்லை,''என்றான் கடைக்காரன்.
'இல்லை அந்த பிஸ்கட் அவளைக் கொல்லவில்லை.கார்களுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியதால் காரில் அடிபட்டு இறந்து விட்டாள்,'என்றார் முல்லா.
சூழ்நிலை எப்படியிருந்தாலும் உங்கள் முடிவிலேயே நீங்கள் நிலைத்து நின்று விடுகிறீர்கள்.அது உங்கள் ஆணவத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்து விடுகிறது.அதன் மேல் உங்கள் மனம் நின்று கொள்கிறது.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்...
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» ரஸித்த நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்...
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» ரஸித்த நகைச்சுவைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum