தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
டைக்கோ பிராஹே
Page 1 of 1
டைக்கோ பிராஹே
பதினாறாம் நூற்றாண்டு டென்மார்க் தேசத்தின் கவர்னராக இருந்தவர் பிராஹே. இவர் தனது தம்பியான ஜொயர்கென் என்பவருக்கு 1540 -
ல் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். அது ஒரு விசித்திரமான வாக்குறுதி.
தனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனை தம்பிக்கு தத்துத்தருவேன் என்பது அது. 1546 - ல் பிராஹேக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பிராஹே வாக்குறுதியை மறந்துவிட்டார். 1550 -
ல் இரண்டாவது ஒரு மகன் பிறந்தான். டென்மார்க் மன்னர் இரண்டாம்
பெர்டினாண்டின் நீச்சல் பயிற்சியாளராக இருந்த பிராஹே தம்பி ஜொயர்கென்
அண்ணனின் முதல் குழந்தையைக் கடத்தி கொண்டு போய்விட்டான். கடத்தப்பட்ட அந்த
குழந்தைதான் டைக்கோ பிராஹே (Tycho Brahe).
டைக்கோவிற்கு
தனிமை நிறைந்த வாழ்வு. கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு
வயதிருக்கும்போது வளர்ப்புத்தந்தை ஜொயர்கென் அரசரை குளிர்ந்த கடலில்
குதித்து காப்பாற்றியபோது ஏற்பட்ட நிமோனியா நோய்க்கு பலியாகி போனார்.
ஜொயர்கென் செல்வந்தனாய் இருந்ததால் டைக்கோவின் உயர்வுக்கு அச்செல்வம்
பயன்பட்டது. தனிமையில் பெரும் பொழுதை களிக்க வேண்டியதிருந்தபோது டைக்கோ
வானத்து கோள்களையும், நட்சத்திரங்களையும் நண்பனாக மாற்றிக் கொண்டார். டைக்கோவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. வானத்தின் மாற்றங்களை, கோள்களின் அசைவுகளை குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம். 1563 - ல் சனி கிரகமும், வியாழன் கிரகமும் அருகே காட்சியளித்த அதிசய நிகழ்வை பதிவு செய்தார்.
டைக்கோ ஆசைப்பட்டு படித்தது வழக்கறிஞர் தொழிலுக்கு. ஆனாலும், அவருக்கு வானவியல் மீது தீராத ஈடுபாடு இருந்தது.
1562 - ல் டைக்கோவின் வானவியல் ஆய்வு பயணம் துவங்கியது. 1576 வரை பயணம் தொடர்ந்தது. ஜெர்மனி சென்று அங்குள்ள லிபிளிக்‚(LEIPZIG). விட்டன்பெர்க் (Witten berg) மற்றும் ரோஸ்டாக் பல்கலைக்கழகங்களில் படித்தார். அங்கேயே பணிபுரிந்தார். பேஸ்லி (Basle) அக்ஸ்பெர்க் (Augsburg) மற்றும் கேசல் (Kassel) போன்ற அறிஞர்களோடு இணைந்து பணிபுரிந்தார். 1566 - ல் ரோஸ்டாக்கில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது நடந்த விபத்தில் தனது மூக்கை உடைத்துக் கொண்டார். எனவே, செயற்கை மூக்கைப் பொருத்திக் கொண்டார்.
1572 - ஆம் வருடம் நவம்பர் மாதம் 11 -
ஆம் நாள் டைக்கோவின் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். நள்ளிரவு நேரம்
மொட்டை மாடிக்குச் சென்ற டைக்கோ வெகுநேரம் ஆகியும் கீழே இறங்கவில்லையே
என்று பயந்துபோய் அவரது வேலையாள் தயங்கியபடியே மாடிக்கு வந்தான் அங்கே
டைக்கோ ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தார். அதுவரை யாரும் கண்டிராத
அதிசயத்தைக் கண்டு டைக்கோ துள்ளி குதித்துக் கொண்டிருந்தார். ஆம்!
அன்றுதான் சூப்பர் நோவா என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை டைக்கோ
முதன்முதல் கண்டு களிப்படைந்தார். வெள்ளியை விடவும் அதிக ஒளியுள்ள அந்த
நட்சத்திரம் பூமியை விட்டு வெகு தொலைவில் எங்கோ இருக்க வேண்டும் என்று
டைக்கோ எண்ணினார்.
டைக்கோ தனது புதிய நட்சத்திரக் (STELLA NOVA) கண்டுபிடிப்பை 1573 - ல் புத்தகமாக வெளியிட்டார். அது அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அரிஸ்டாட்டிலின் மாற்றமற்ற நிலையான வானம் கொள்கையை இப்புத்தகம் தகர்த்தெறிந்தது. டைக்கோ உற்சாகத்தோடு பணிபுரிந்தார். பல்கலைக்கழகங்கள் அவரை உரையாற்ற அழைத்தன.
டைக்கோ தனது ஆராய்ச்சியைத் தொடர நிலையான வானவியல் ஆய்வகத்தை (Observatory) அமைக்க எண்ணினார். டென்மார்க்கின் மன்னரான இரண்டாம் ஃபிரடரிக் (Fredrik-II) அவருக்கு உதவ முன்வந்தார். வென் (Hven) என்கின்ற குட்டித்தீவை டைக்கோவுக்கு அளித்து அதில் ஆய்வகத்தை அமைக்க பொருள் உதவியும் செய்தார். 8-8-1576 - ல் டைக்கோ பிரமாண்டமான ஒரு ஆய்வகத்தை அமைத்தார். அது யுரானிபோர்க் (Uraniborg) என்று அழைக்கப்பட்டது. தனிமையான தீவு என்பதால் டைக்கோவின் ஆய்வுக்கு அது ஏற்ற இடமாக இருந்தது. எண்ணற்ற உதவியாளர்களும், மாணவர்களும் அவருக்குக் கிடைத்தார்கள். அவரது ஆய்வு வெகு விமர்சையாக நடந்தது. 12 வருடங்கள் அவரது பணி தங்குதடையின்றி நடந்தது. 1588 - ல் அவருக்கு சோதனை ஆரம்பித்தது.
ஆதரித்து வந்த மன்னர் இரண்டாம் ஃபிரடரிக் மரணமடையவே, நான்காவது கிறிஸ்டியன் (Christian-IV) டென்மார்க்கின் புதியமன்னராக 1597 - ல் பதவி ஏற்றார். டைக்கோவுக்கு இவர் கொடுத்த தொல்லைக்கு அளவேயில்லை. எனவே, டைக்கோ வென் தீவைவிட்டு ஓடவேண்டி வந்தது. பல இடங்களுக்கு ஓடினார். இறுதியில் 1599 - ல் ப்ராக் (Prog)
நகருக்கு அருகில் குடியேறினார். அங்கு வானவியல் பார்வைக் கூடத்தை
அமைத்துக் கொண்டார். மறுபடியும் துவக்கத்திலிருந்து தனது பணியை ஆரம்பிக்க
வேண்டியது வந்தது. அப்போது 1600 - ல் வானவியல் ஆய்வாளர் டைக்கோவுக்கு ஒரு ஆத்மார்த்த சீடன் கிடைத்தான்.
கோள்களின் பாதையைக் கண்டறிய பெரும் முயற்சி செய்த டைக்கோ ஒரு வருடத்திற்கு 365 1/4
நாட்கள் என்பதை முதல்முதலாக கண்டறிந்து வெளியிட்டார். அவரின்
கண்டுபிடிப்புகளைவிட மேலானது அவர் தனக்கு உதவியாளராக பிற்காலத்தில்
வானவியலின் பேரரசனாக விளங்கிய ஜொகன்ஸ் கெப்ளர் (Johannes Kepler) ஐ நியமித்தது தான். தளர்ந்து போயிருந்த டைக்கோ தனது ஆத்மார்த்த சீடனிடமே தனது அனைத்து பொறுப்புகளையும், ஆய்வுக் கூடத்தையும் ஒப்படைத்துவிட்டு மறு ஆண்டே (1601 - ல்) காலமானார்.
இவர் எழுதிய (De Magnete) காந்தத்தின் மேல் என்ற நூல் 1600 - ல் வெளியான போது இவர் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. இவரது முடிவுபெறாத கண்டுபிடிப்புகள் 1651 - ல் மாற்று உலகத்தின் புதிய தத்துவம் என்ற பெயரில் புத்தகமாக இவரது சகோதரர் முறைகொண்ட ஒருவரால் வெளியிடப்பட்டது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|