தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
3 posters
Page 1 of 1
'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
'இது'...இப்படி இருந்தால்...இதில், "இது" என்பது 'எது' என்றால் அதுதான் நீங்கள் இங்கே பார்ப்பது..! சகல வசதிகளுடன் கூடிய பெரிய கட்டிடம். இது ஆஸ்ட்ரியாவில் கட்டப்பட்டு உள்ளது..!
இதில், யார் யார் எல்லாம் வசிக்கலாம்? அரசு யாரை அனுமதிக்கிறதோ அவர்கள் மட்டுமே இங்கே தங்கலாம். வெறும் 205 பேருக்கு மட்டுமே இங்கே தங்க அனுமதியாம். அதனால், இங்கே இடம் பெற கடும் போட்டி. வெயிட்டிங் லிஸ்டில் நின்று ஆவலுடன்..!
மிக அழகிய முறையில் நிறைய பொருட்ச்செலவுடன் கண்கவர் கண்ணாடி மாளிகையாக அனுபவித்து கட்டி இருக்கிறார்கள். மிக உன்னத வேலைப்பாடுகளுடன் நவீன முறையில் அதி நுட்ப கட்டடக்கலையுடன் நிறைய பொறியியல் வல்லுனர்களின் சிந்தனையின் ஒரு செயல் வடிவமாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
இரு கண்ணாடிச்சுவர் கட்டிடங்களுக்கு இடையே ஒரு கண்ணாடி பாலம் கட்டி, அங்கு நின்ற வாறே நகரை சுற்றிப்பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல சுகமான வசதியை இங்கே தங்கி இருப்பவர்கள் அணுபவிப்பார்கள்.
இதன் உள்ளே மிகரம்மியமான முறையில் சோபா செட்டுகள், நாற்காலிகள், மேசைகள் எல்லாம் போட்டு... குரோட்டன்ஸ் செடித்தொட்டிகள் வைத்து மிக நேர்த்தியுடன் வடிவமைத்துள்ளார்கள்.
இங்கே தங்கி இருப்பவர்கள் வெளியே அவ்வப்போது 'வாக்கிங்' போக-வர... மிக நல்ல பாதைகள், இதமான சூழல், என்று மனதை கொள்ளை கொள்ளும் இடமாக இது உள்ளது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
இக்கட்டிடத்தில் மிக உயர் ரக அரங்கம் ஒன்றும் உள்ளது. மிகச்சிறந்த பிரபல பேச்சாளர்கள் இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அவ்வப்போது இவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்கள். இதே மேடையின் பின்புற திரையில் அவ்வப்போது திரைப்படங்களும் திரையிடப்படும். மிக அதிநவீன ஒலி, ஒளி அமைப்புகளுடன் கூடிய சிறந்த அரங்கம்.
மிகவும் உயர்தரமான ஒளி விளக்குகளுடன் அமைந்த அதிநவீன கூடைப்பந்தாட்ட உள்ளரங்கு மைதானம் ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்கள் தங்கள் விளையாட்டுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதியாக உள்ளது.
அந்த விளையாட்டு பிடிக்க வில்லை என்றால் தனக்குப்பிடித்த நண்பருடன் இங்கே தங்கி இருப்பவர்கள் மேசை டென்னிஸ் ஆடலாம். போரடித்தால் அங்கேயே அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
நம் உடல்நலனில் அக்கறை கொண்டு உடலை கட்டுமஸ்தானாக வைத்திருக்க, தசைகளை நன்கு முறுக்கேற்ற மிகவும் உயர்தர அதிநவீன 'ஜிம்' ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்களுக்காக உள்ளது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
இப்படியெல்லாம் விளையாடி, உடற்பயிற்சி செய்துவிட்டு ஓய்வாக பால்கனியில் அமர்ந்து சூடாய் காஃபி சாப்பிட்டிக்கொண்டே தன்முன்னே தெரியும் இயற்கையான சூழலில் மெய்மறந்து இதுபோல இங்கே தங்கி இருப்பவர்கள் அமர்ந்திருக்கலாம்.
மிக நல்ல தரமான உயர்தர உணவுகள் தரப்படுகின்றன. அரட்டை அடித்துக்கொண்டே உண்டு மகிழலாம். பொதுவாய் இங்கு இல்லாமல் வெளியே இருப்போர், கடைகளில் வாங்கும் சரக்குகள், காய்கறிகள், பழங்கள் இவை பழசாக இருக்கக்கூடும். ஆனால், இங்கே அதற்கு வேலையே இல்லை. மிக மிக ஃப்ரஷ் அயிட்டங்களே இங்கே வாங்கப்படுகின்றன. சமைக்கப்படுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் ருசி எல்லாமே அமோகம்..!
அப்படியே சாப்பிட்டுவிட்டு இந்த காரிடாரில் காலாற நடந்து வந்தால்... அப்படி நடந்து வரும்போது கால் வலித்தால் உடனே சற்றுநேரம் அமர்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆங்காங்கே மிக அழகிய உள்ளம் கவரும் மெத்தை திண்ணைகள். அதுவும் போரடித்தால் அவரவர் தம் அறைக்கு சென்று நன்றாய் தூங்கலாம்.
சரி... இங்கே தங்கி இருப்பவர்களின் மனதைக்கவர்ந்தவர்களுக்கு இங்கே இடமில்லாத நிலையில் அவர்களுடன் எப்படி கொஞ்சி குலாவி படுத்துறங்கி மகிழ்ந்திருப்பது? அதற்கும் இந்த நிர்வாகம், விரும்பும்போது விரும்பியவர்களுடன் 'மகிழ்ச்சியாக' அவரவர் அறைகளிலேயே இவர்கள் இருக்க அனுமதி அளிக்கிறது..!
பொதுவாக இங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு தனி அறைக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளன. அறையை நன்றாக நோட்டமிடுங்கள். ஒன்று உங்கள் கண்ணை உறுத்தலாம். அறைக்கதவு..! அது ஏன் வெளியில் உள்ளவர்கள் உள்ளே பார்க்ககூடியதாய் உள்ளது..? மேலும் அந்த கண்ணாடி கதவின் வெளிப்புறம் எதற்கு கம்பி ஜன்னல்..? ஏதோ ஒன்று உங்களுக்கு தோன்றுகிறதா..?
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
அது சரிங்க... இந்த இடத்தின் பெயர் என்னங்க.. என்கிறீர்களா...? நீங்களே படிங்களேன்...! ஆஸ்திரிய மொழியில்... " Justizzentrum Leoben "... என்றால் ...(திருட்டு, கற்பழிப்பு போன்ற) "சிறு குற்றங்களை(!?) செய்த குற்றவாளிகளுக்கான சிறை" என்று அர்த்தமாம்..! ஆக,இது ஒரு ஜெயில்..! நம்புங்க சகோ.! குற்றவாளிகளுக்கான கட்டிடம்தான் நீங்கள் இதுவரை பார்த்தது.!
...a 5 STAR grade 'JAIL'(?) of Austria...!!!
ஆஸ்திரியாவில் உள்ள இந்த சிறையில், பெருங்குற்றம் செய்தவர்களுக்கு இடம் இல்லை..! 'இது'...---அதாவது சிறை, இப்படி இருந்தால், 'அது '...அதாங்க...(திருட்டு, கற்பழிப்பு போன்ற)சிறுகுற்றங்கள்(!?) கூடுமா..? குறையுமா..? 'குற்றத்துக்கு தண்டனை குறைந்தாலே குற்றங்கள் கூடும்' எனும்போது, குற்றம் செய்தவருக்கு சொகுசு வாழ்க்கை எனும் வெகுமதியையும் அளித்தால் என்னாகும்..? இதை பார்ப்பவர்களுக்கு, 'அங்கே போய் நாமும் தங்கவேண்டும்' என்ற ஆசை வருமா? வராதா?
இன்றைய உலகில் பொதுவாக அனைத்து குற்றங்களும் மிக அதிகமாக நடக்கும் நாடு அமெரிக்கா என்றாலும் ஆஸ்திரியாவிற்கு இதில் 22-ம் இடம்தான்..! கொலை, மாந்திரிகம்(?), பிறர் மீது தாக்குதல், child abuse போன்ற 'பெருங்குற்றங்கள்' ஆஸ்திரியாவில் குறைவு. ஏனெனில், இவைக்கு அதிக ஆண்டுகள் சிறை..! அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெருகிறவர்களுக்கு இந்த "சொகுசு மாளிகையில்" தங்க அனுமதி இல்லை என்பதால்..! அதேநேரம், திருட்டு மற்றும் பாலியல் வன்புணர்வு என இரண்டிலும் உலகில் ஆஸ்திரியா இரண்டாமிடம்..! காரணம், இவை இரண்டுக்கும் மிக குறைந்த தண்டனை..! அதனால், இந்த சொகுசு மாளிகையில் தங்கவும் அனுமதி..! (குற்றம் முதல் முறை என்றால்... தண்டனை ஏதும் இல்லை..!)
இந்த காரணத்தினால்தான், இன்றைய உலகில் திருட்டு, பாலியல் வல்லுறவு ஆகியன மிக அதிகமாக நடக்கும்(இரண்டாம்)நாடு ஆஸ்திரியா..! ஆனாலும், இதேபோன்ற சிறைச்சாலைதான் மற்ற பெரியகுற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கும் தரப்பட வேண்டும் என்று இந்நாட்டின் 'மனிதஉரிமை'(?!) அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. அதாவது, பாதிக்கப்பட்ட நல்லவனின் வரிப்பணத்திலேயே, அவனை அப்பாதிப்புக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கை..! பலே..! ஆஸ்திரிய அரசும், நீதிமன்றமும் இக்கருத்துக்களை அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
எனில், சிறைச்சாலை என்பது... இப்படி சொகுசாக இருந்தால் இனி சந்தேகமேயின்றி ஆஸ்திரியாதான் குற்றங்களுக்கு வருங்கால நம்பர் ஒன்..!
ஆஸ்திரிய நீதிமன்றத்தின் ஒரு சில வினோத தீர்ப்புகள் உங்கள் பார்வைக்கு..!
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்ட 26 வயது காமுகன் ஒருவனை கோர்ட் விடுதலை செய்தது..! காரணம், அவன் 'அச்சிறுமிக்கு வயது 16-க்கு மேல் இருக்கும் என்று நினைத்து வன்புணர்வு செய்துவிட்டேன்' என்று கூறியதால்..! (இல்லாவிட்டால் child abuse என்று பெருங்குற்றம் ஆகிவிடுமே..!)
சிறைவாசிகள் விரும்பியவாறு நீலப்படங்கள் பார்க்க அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது கோர்ட்.
தன்னை பாலியல் வன்புணர்வு செய்த, அதற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற கொடூர குற்றவாளியைப்பற்றி ஊடகத்துக்கு பேட்டி அளித்தது கண்டு கோபமடைந்தவன் சிறையிலிருந்தவாறே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். அவனுடைய மானம்(!?) பாதிக்கப்பட்டதற்காக அப்பெண்ணுக்கு 200 யூரோ தண்டத்தொகை கட்டுமாறு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த மண்ணாய்ப்போக வேண்டிய "மானம் மிக்கவனுக்கு"(?) இது, ஆஸ்திரிய கோர்ட் அளித்த, இவனுடைய, 21-வது கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையாம்...!!!!!!!!!!!!!!!!!!!!!
திருட்டுக்கு தண்டணையாக திருடியவரின் கையை வெட்டச்சொல்கிறது இஸ்லாம். "கையா, திருட்டா... எது முக்கியம்...?" என்று திருடர்கள் யோசிக்கும்போது, திருட்டு தானாக ஒழிந்துவிடும். இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..! 'கை' -- 'விலைமதிக்க முடியாதது' என்று திருடர்கள் முடிவெடுத்தால்..!
பாலியல் வல்லுறவு செய்தவனுக்கு மரணதண்டனை அளிக்கச்சொல்கிறது இஸ்லாம். "உயிரா... மனஇச்சையா... எது முக்கியம்...?" என்று காமகொடூரன்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதுதான் பெண்களுக்கான உண்மையான மகளிர் தினம்..!
"கைவெட்டு, தலைவெட்டு இதெல்லாம் மனித உரிமைக்கு எதிரானது அல்லவா..?" , "குற்றவாளிகள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமையில் முன்னுரிமைகள்"---முற்றிலும் இவை நமது தவறான புரிதல்..!
மாறாக,
பாதிக்கப்பட்டவர்களுக்கே மனித உரிமையில் முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும். குற்றம் செய்யாதவர்கள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமைகள். அவர்களுக்கே அனைய்ய்ய்ய்ய்ய்த்து உரிமைகளிலும் முன்னுரிமைகள்..!---இதுவே மிகச்சரியான சரியான புரிதல்..!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?
என்னங்க கொடுமையா இருக்கு ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?
» இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» இப்படி இருந்தால் நாட்டில பிரச்சினையே வராது....
» நாம் பயன்படுத்தும் சுட்டெலி இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» அமெரிக்கா மோகம் குறையுமா?
» இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» இப்படி இருந்தால் நாட்டில பிரச்சினையே வராது....
» நாம் பயன்படுத்தும் சுட்டெலி இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» அமெரிக்கா மோகம் குறையுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum