தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
3 posters
Page 1 of 1
மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.
2050ல் உலகின் மக்கள் தொகை 9.1 பில்லியன் அளவுக்கு அதிகமாகும். இன்றைக்கு இருப்பதை விட 70 சதவீதம் அதிக உணவுப் பொருள் தேவைப்படும். என்ன செய்வீர்கள் ? விவசாய நிலங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. ஒரே வழி இது தான். மரபணு மாற்று விதைகள். இல்லையேல் உங்கள் நாடு பட்டினியில் மடியும். என்றெல்லாம் உருட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது அமெரிக்கா.
சரி அதென்ன மரபணு மாற்று விதைகள். வேறுவேறு தாவரங்களின் டி.என்.ஏக்களில் உள்ள தேவையான மரபணுக்களை வெட்டி எடுத்து புதிய விதை தயாரிப்பது. இதை ரீ காம்பினண்ட் டி.என்.ஏ தொழில் நுட்பம் என்கிறார்கள். கேட்பதற்கு “வாவ்..” எனத் தோன்றும் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இது இயற்கை விதிகளுக்கே முரணானது. இரண்டாவது இந்த தாவரங்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான விஷத் தன்மையும் உண்டு. இவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
ஒருவகையில் இந்த மரபணு விதைகளில் இருப்பது தடுப்பு மருந்து டெக்னிக் என்று கூட சொல்லலாம். நோய்க்கான கிருமியைக் கொண்டு நோய்த்தடுப்பு செய்வது போல, பூச்சிக்கான மருந்தை விதையில் செலுத்தி பூச்சி தாக்காத விதைகளை உருவாக்குவது. இதன் எதிர்விளைவு என்ன தெரியுமா ? பூச்சிகள் இன்னும் அதிகம் வீரியமாகும். அப்படி வீரியமாகும் போது சாதாரண பயிர்கள் இருப்பதையும் இழக்க வேண்டியது தான்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையில் பி.டி (Bacillus thuringiensis ) கத்தரி தான் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதற்கு மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவான GEAE அங்கீகாரம் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இதை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மேஹோ எனும் நிறுவனம். எப்படி அரசு பி.டி கத்தரிக்கு அனுமதி வழங்கியது என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. “அமெரிக்காவின் கரம் இனிமேல் இந்திய வயல்களிலெல்லாம் விளையாடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின. இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின. இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!
கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின. இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின. இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!
கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
இந்த கத்தரி பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும். விதைகளுக்காக மேலை நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் உண்டு. இன்று கத்தரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால் இயற்கை விவசாயம் என்னவாகும் ? மகரந்தச் சேர்க்கையினால் நல்ல தாவரங்களும் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் இணைகையில் என்ன நேரும் என்பதெல்லாம் இன்னும் புதிர் தான். ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் டன் எனுமளவில் இருக்கிறது நமது கத்தரி விவசாயம். இதில் எவ்வளவு பெரிய பாதிப்பை இந்த விதைகள் உண்டாக்கப் போகின்றன என்பது திகிலாகவே இருக்கிறது.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.
இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.
இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அங்கலாய்க்கிறது அமெரிக்கா. எப்படியாவது அகல பாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பெரியண்ணனுக்குக் கிடைத்திருப்பது தான் மரபணு விதை எனும் மந்திர வித்தை. அமெரிக்கா சொன்னால் ஆமாம் சாமி போடுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் இருந்தால் பிரச்சினையே இல்லையே. என்பது தான் எதிர்ப்பவர்களின் ஆவேசக் குரல்.
என்னதான் வானவில் வார்த்தைகளைக் கூறினாலும் அயர்லாந்து மரபணு விதைக்கான கதவை இறுக மூடிவிட்டது. “பேசினது போதும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டது அந்த அரசு. மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபலும் ஒட்டப்போகிறார்கள். பால் பொருட்களைக் கூட மரபணு மாற்றப்படாத தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம். மரபணு திகில் அயர்லாந்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு இந்த சிறு உதாரணமே போதும்.
அயர்லாந்தின் இந்த முடிவை உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. தங்களால் செய்ய முடியாததை அயர்லாந்து செய்திருக்கிறதே எனும் வியப்பும் ஒரு காரணம். அயர்லாந்து மட்டுமல்ல உலகின் புத்திசாலி நாடுகள் பலவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி , பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன.
ஏற்கனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன. அமெரிக்காவின் அடுத்த மரபணுகுண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. பெரியண்னன் விடுவாரா ? மீண்டும் மீண்டும் ஜப்பானை வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்து கூட கொள்கையில் உறுதியாய் இருக்கிறது. எங்களுக்கு எந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளும் வேண்டாம். பயிர்களும் வேண்டாம் என அரசு தீர்மானமே போட்டு விட்டது. எந்த ஏற்றுமதி உணவுப் பொருளோ, இறக்குமதிப் பொருளோ மரபணு மாற்றப்படாதது எனும் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஏன் நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாய் பிடிகொடுத்து பேசவில்லை !

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்றால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. யூ.கே உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஆய்வுகளில் இறங்கும் என அவர்கள் அறிவித்திருக்கின்றனர். அறிவிப்பை வெளியிட்டது 1660 முதல் லண்டனில் இயங்கும் பழம் பெரும் ராயல் சொசைட்டி அமைப்பு. இனிமேல் ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட்கள் செலவில் ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். அதுவும் தொடர்ச்சியாய் பத்து ஆண்டுகளுக்கு. அதில் மரபணு மாற்று விதைகளுக்கும் ஒரு இடம் உண்டாம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கோ பயிர்களுக்கோ ஐரோப்ப யூனியன் (இ.யு) எந்த விதமான அதிகாரப் பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. எனினும் ராயல் சொசைடியின் இந்த அறிவிப்பு சர்வதேசக் குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.
இந்த அறிவிப்பை யூ.கேவின் ஏ.பி.சி (அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி கவுன்சில் ) வரவேற்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு தான் உலகிலேயெ மிக முக்கியமானது என திருவாய் மலர்ந்திருக்கிறார் இதன் தலைவர் ஜூலியன் லிட்டில். உலகெங்கும் ஏற்கனவே 13 மில்லியன் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த மரபணு மாற்று பயிர்களை இன்னும் தடை செய்வதில் அர்த்தமில்லை என்பது இவர் வாதம்.
பச்சைக் கொடி கும்பலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை அமைச்சர் டோனி பர்க். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் அதிக உணவை எப்படி உற்பத்தி செய்வது ? அறிவியலின் கரம் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.
உலகின் வறுமைக்கு ஒரே தீர்வு மரபணு மாற்று விதைகள் தான் என அமெரிக்கா கிழிந்த டேப் மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மட்டுமே தீர்வு என்பதில் நாடுகள் ஒன்றுபடவில்லை. கடந்த ஆண்டு யூஎன் நடத்திய ஆய்வில் 60 நாடுகள் பங்கேற்றன. மரபணு மாற்றம் உலக வறுமைக்குத் தீர்வல்ல என்பது தான் அவர்களுடைய முடிவு !
இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை பொய்க்கிறது. விவசாய நிலங்கள் அழிகின்றன. எனவே இருக்கும் கொஞ்ச நிலத்தில் அதிகம் விளைய வேண்டும். மழை இல்லாவிட்டாலும் விளைய வேண்டும். உரம் இல்லாவிட்டாலும் விளைய வேண்டும், பூச்சி தாக்காமல் வளர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எனது மரபணு விதைகள் தான். என “வாலிப வயோதிக அன்பர்களே “ ரேஞ்சுக்கு அமெரிக்கா திரும்பத் திரும்ப பல்லவி பாடுகிறது. உண்மையில் இந்த விதைகளின் விலைகளைக் கேட்டால் நமது வறுமையை ஒழிக்க வந்ததாய் தெரியவில்லை. அமெரிக்க வறுமையை ஒழிக்க வந்ததாய் தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்க நிறுவனமான மோன்சேண்டோவின் பணம் கறக்கும் வித்தை. அதற்குப் பலியாகி விடக் கூடாது. நமது ஊரில் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் கத்தரி விதையை 150க்கு விற்கும் வியாபார தந்திரம். என்கிறார் தமிழ்நாட்டிலுள்ள இந்திய விவசாயிகள் சங்க ஜெனரல் செக்ரிடரி ஆர்.வி கிரி

உணவைப் பொறுத்தவரை உலகெங்கும் அதற்கு ஒரே விளைவு தான். அமெரிக்கன் தின்று சாகாத மரபணு பயிர் இந்தியனை அழிக்கும் என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்கர் உண்டால் விஷம், உகாண்டா உண்டால் அமிர்தம் என ஒரே பயிர் இரண்டு முகம் காட்ட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 500 டன் சோயாவை ஆண்டு தோறும் உண்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லை. உலகில் 26 நாடுகள் ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்திருக்கின்றன. அவர்களெல்லாம் அழிந்து விடவில்லை என கணக்குகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.
உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர்.
இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார்.
உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர்.
இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
உணவுப் பற்றாக்குறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதற்குக் காரணம் என்ன ? நிச்சயமாய் உலகில் ஏற்பட்டுள்ள விதைப் பற்றாக்குறை அல்ல. உலகிலுள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் தேவையான விதைகள் உலகில் உண்டு. அப்படி இருக்க எதற்கு இந்த செயற்கை விதைகள் என்பது ஓங்கி ஒலிக்கும் ஒரு கேள்வி. வறுமையையும், ஊட்டச்சத்து குறைவையும் ஒழிப்பேன் என களத்தில் குதிக்கின்றன விதைகள். உண்மையில் இயற்கையை விட்டு விலகிச் செல்லச் செல்லத் தான் வறுமையிலும், நோயிலும் தான் விழுகிறோம்.
மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.
இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?
உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.
நன்றி : பசுமை விகடன்
மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.
இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?
உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.
நன்றி : பசுமை விகடன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிரட்டும் மரபணு பயிர்கள்!!!!!!?????
ம்ம்ம்... இதுதான் இந்தியாவின் பசுமைப்புரட்சி...
கண்மூடித்தனமாக இதை ஆதரித்தவர்களேல்லாம் இன்று கோடீஸ்வரராகி விட்டார்கள். நம்பி விதைத்த அடித்தட்டு விவசாயி மட்டும் இன்னும் வறுமையில். அவன் நிலம் கூட அவனை கைவிட்டுவிட்டது.
இனியேனும் நாம் விழித்துக்கொள்ள வேண்டும் தோழர்களே...

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» மிரட்டும், நிவேதா!
» அரசாங்கத்தை மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ்
» சிந்தனை சிகிச்சை - 4
» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
» மரபணு சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum